Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
யுத்த சத்தம் - விமர்சனம்
Page 1 of 1
Re: யுத்த சத்தம் - விமர்சனம்
யுத்த சத்தம் விமர்சனம்: கௌதம் கார்த்திக், பார்த்திபன், எழில் கூட்டணி...
ஆனாலும் ஏன் இப்படி?
-
-
ஷூட் எடுக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக படத்தில் ஆங்காங்கே
பாடல்கள் வருகின்றன. War decibel, போதை இசை, டிஜிட்டல் டிரக்
என நாவலில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விஷயங்கள் படத்தில் காமெடிக்
காட்சிகளைப் போல் இருக்கின்றன.
காவல் நிலையத்தின் முன் ஒரு பெண் கொடூரமாகக் கொலை செய்யப்
படுகிறார். அந்தக் கொலைக்கான காரணத்தையும், கொலையாளியையும்
ஒரு இன்ஸ்பெக்டரும், அந்தப் பெண்ணின் காதலரும் தனித்தனியாய்
தேடுகிறார்கள். இறுதியில் யார் வில்லன் என்பதுதான் எழில்
இயக்கியிருக்கும் 'யுத்த சத்தம்' படத்தின் கதை.
காவல் நிலையத்துக்கு ஒரு பெண் புகார் தர வருகிறார். ஆனால், காவல்
நிலையத்திலேயே வைத்து அவரைக் கொலை செய்கிறது ஒரு கும்பல்.
ஏற்கெனவே மன அழுத்தத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டர் பார்த்திபன்,
தன் காவல் நிலையத்தில் நடந்த கொலையால் அதீத மன அழுத்தத்துக்கு
ஆளாகிறார்.
பார்த்திபனுக்கு ஒரு பிளாஷ்பேக், கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு
ஒரு பிளாஷ்பேக், கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும், அவரின்
காதலருக்கும் ஒரு பிளாஷ்பேக். காவல் நிலையத்தில் இருக்கும் ஏட்டுகளுக்கு
ஒரு பிளாஷ்பேக் என நம்மை தெளிய வைத்து தெளிய வைத்து பிளாஷ்பேக்
சொல்லி அயர்ச்சிக்குள்ளாக்குகிறது இந்த 'யுத்த சத்தம்'.
படத்தின் ஒரே ஆறுதல் பார்த்திபன்தான். அவருக்கான வசனங்களை
அவரே எழுதிக்கொண்டாரா தெரியவில்லை. ஜாலியாகப் பேசி நடித்துக்
கொடுத்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இல்லை
என்றாலும், ஏனோதானோவென செல்லும் கதையில் அவர் பேசும்
ஒன்லைனர்கள்தான் கொஞ்சம் சிரிக்க வைக்கின்றன.
கௌதம் கார்த்திக்கும் படத்தில் நடித்திருக்கிறார் அவ்வளவே. ரோபோ சங்கர்
தொடர்ந்து எல்லா படத்திலும் பெண்களிடம் வழிவதை மட்டுமே
கதாபாத்திரமாக நடித்துவருகிறார். அதை காமெடி என அவராவது நம்புகிறாரா
எனத் தெரியவில்லை. படத்தின் நாயகிக்கும் நாயகனுக்கும் காதல் வர, கதை
ஊட்டிக்கெல்லாம் போகிறது. நமக்குத்தான் சென்னையிலே முடித்துக்
கொள்ளலாமே பாஸ் எனத் தோன்றுகிறது.
கோலிவுட் இயக்குநர்களுக்கு IT வேலைக்கும் பிபிஓ வேலைக்கும் வித்தியாசம்
தெரியாது என்பதைக் கடந்த சில ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம்.
இந்தப் படத்தில் ஒருபடி மேலே போய், IT வேலையில் இரு கம்பெனிகள்
டெண்டர் விடுவதைப் போல, எதிர் கம்பெனி பணியாளர்களை வேவு
பார்க்கிறார்கள். வேவு பார்க்கும் பெண்மணியோ வீட்டுப் பணியாள் எனக்
காவல்துறையிடம் நாடகமாடுகிறார்.
'இதற்கு இல்லையா ஒரு எண்டு' என்பதாக நீள்கின்றன அந்தக் காட்சிகள்.
நாவலைப் படமாக்குவதெல்லாம் நல்ல விஷயம்தான். அதே சமயம் குறைந்த
பட்சம் சில வேலைகள் எப்படிப்பட்டது என்பதை யாரிடமாவது கேட்டுத்
தெரிந்துகொண்டு காட்சிகள் அமைப்பது நல்லது. அபத்தமாகவும்
செயற்கையாவும் படம் முழுக்க அத்தனை காட்சிகள் வந்து விழுந்து கொண்டே
இருக்கின்றன.
இமானின் இசையில் பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றாலும்,
பின்னணி இசையில் த்ரில்லருக்கான உழைப்பு தெரிகிறது. இன்னும் எத்தனை
நாளைக்கு ஆள் மாறாட்ட அடல்ட் காமெடிகளை படைப்பாளிகள் எழுதிக்
கொண்டிருப்பார்கள் எனத் தெரியவில்லை. அவை காமெடியாகவும் இல்லை
என்பது அடுத்த விஷயம்.
ஷூட் எடுக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக படத்தில் ஆங்காங்கே பாடல்கள்
வருகின்றன. War decibel, போதை இசை, டிஜிட்டல் டிரக் என நாவலில்
அதிர்ச்சிக்குள்ளாக்கும் விஷயங்கள் படத்தில் காமெடிக் காட்சிகளைப் போல்
இருக்கின்றன.
எழில் அவர் ஏரியாவான காமெடியிலிருந்து விலகி ஒரு த்ரில்லர் செய்ய
வேண்டும் என நினைத்தது ஆரோக்கியமான விஷயம் தான். ஆனால் அது
த்ரில்லராகவும் இல்லாமல், காமெடியாகவும் இல்லாமல் இருப்பதால் எவ்விதமான
உணர்ச்சிகளையும் கடத்த மறுக்கிறது.
நன்றி-விகடன்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ,,,,,,,,,,,,சத்தம் ..............வரும்.
» ராட்சசி -விமர்சனம் – விமர்சனம்
» ஆத்மாவின் அழுகை சத்தம்
» நடிகைகள் வீட்டில் கெட்டிமேளச் சத்தம்
» மணி சத்தம் கேட்டால் 'சோறு'...
» ராட்சசி -விமர்சனம் – விமர்சனம்
» ஆத்மாவின் அழுகை சத்தம்
» நடிகைகள் வீட்டில் கெட்டிமேளச் சத்தம்
» மணி சத்தம் கேட்டால் 'சோறு'...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum