Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கனடாவில் உருவான தமிழ்ப்படம் ஹை 5 – சென்னையில் பாடல் வெளியீடு
Page 1 of 1
கனடாவில் உருவான தமிழ்ப்படம் ஹை 5 – சென்னையில் பாடல் வெளியீடு
பேஸ்கட் ஃபிலிம்ஸ் அண்ட் கிரியேசன்ஸ் (Basket Films & Creations) தயாரிப்பில் முழுக்க முழுக்க புதுமுகங்களின் நடிப்பில், இயக்குநர் பாஸ்கி டி.ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஹை 5 (Hi 5).
விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு,டிசம்பர் 5 ஆம் தேதியன்று படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…….
டிரெய்லர் பார்க்கும் போது மிக நீண்ட காலம் கழித்து ஒரு ஆங்கிலப் படம் பார்த்த உணர்வு வருகிறது. கனடாவில் எடுத்துள்ளார்கள். ஒரு நல்ல கருத்தைச் சொல்ல வந்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நடிகர்கள் யாரும் புதிய முகங்கள் போல் தெரியவில்லை. நன்றாக நடித்துள்ளனர். இந்தக்குழுவிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
எழுத்தாளர் அஜயன் பாலா பேசியதாவது……
இந்தப்படம் அன்பைப்பற்றிய படமாகத் தெரிகிறது. நல்ல எண்ணங்களால் வாழ்பவர்களே நீண்ட காலம் வாழ்கிறார்கள், மறைந்தும் வாழ்கிறார்கள். அதே போல் நல்ல எண்ணங்களால் இப்படத்தை எடுத்துள்ளார்கள். இந்தப்படத்தில் கிராமமும் இருக்கிறது, நகரமும் இருக்கிறது.
இப்படம் வயதானவர்களின் வலியைச் சொல்கிறது. இன்று உலகம் முழுக்கவே வயதானவர்களைப் பார்த்துக் கொள்ள ஆளில்லை என்ற பிரச்சனை தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படம் அதைப்பற்றிப் பேசுவது மகிழ்ச்சி. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள் என்றார்.
பாடகர் கானா பாலா பேசியதாவது…..
ஒரு பாடகரான என்னை மேடைக்கு அழைத்ததற்கு நன்றி. படத்தை நன்றாக எடுத்துள்ளார்கள்.பாடல்கள் நன்றாக வந்துள்ளது. படத்தைச் சிறப்பாக உருவாக்கிய குழுவிற்கு எனது வாழ்த்துகள். தந்தைக்கும் மகனுக்குமான கதை. அனைவருக்கும் பிடிக்கும் எல்லோருக்கும் நன்றி என்றார்.
தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது……
இந்த மேடை அழகாக இருக்கிறது. ஒரு காலத்தில் உறவுகளைப் போற்றியது தமிழ்நாடு. இப்போது ஒரே வீட்டில் ஆளுக்கொரு ரூமில் இருக்கிறார்கள் வயதனாவர்களை யாரும் கவனிப்பதில்லை. அந்த வலியை இந்த சினிமா சொல்கிறது. வாழ்த்துகள். வாரிசு படம் தெலுங்கில் தியேட்டர் கிடைக்கவில்லை என கவலைப்படுகிறார்கள்.
தெலுங்கில் கிடைக்காவிட்டால் உனக்கென்ன கவலை. இங்கே இலட்சக்கணக்கில் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் இங்கேயா அந்தப்படத்தை எடுத்தார்கள். இங்கே இந்த மாதிரி சின்னப் படம் தான் ஓட வேண்டும். நல்ல கதையைச் சொல்லும் இந்தப்படம் ஓட வேண்டும். இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
தயாரிப்பாளர் இயக்குநர் பாஸ்கி டி.ராஜ் பேசியதாவது…….
இப்படம் எடுப்பதற்கு உதவிய அனைத்துக் கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் இங்கு வந்து எங்களை வாழ்த்திய பிரபலங்களுக்கும் நன்றி. முதியவர்கள் இரண்டாம் குழந்தைப்பருவத்தில் இருப்பவர்கள் ஆனால் வீட்டில் உள்ளவர்கள் அவர்களைப் புரிந்து கொள்வதில்லை.
முதியவர்களைப் புரிந்து கொள்ளச் சொல்வது தான் இந்தப்படம். சிறுவர்களின் பார்வையில் இப்படத்தைச் சொல்லியுள்ளோம்.படத்தைப் பார்த்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
சண்டைப்பயிற்சி இயக்குநர் ஜாக்குவார் தங்கம் பேசியதாவது….…
நம் நாட்டில் ஆயிரம் வருடம் வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது மிக முக்கியம். ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் 100 ஆண்டுகள் கடந்தும் வாழலாம். மதுப்பழக்கம் இல்லாமல் வாழுங்கள்.
இந்தப்படம் ஒரு முதியவரின் சொத்தை அடைவதற்காக அவரது பிள்ளைகள் ஏமாற்றும் கதையைச் சொல்கிறது.
இந்த நிலை உலகம் முழுக்க இருக்கிறது. பெற்ற அம்மா அப்பாவைப் போற்ற வேண்டும். அம்மா அப்பாவை வணங்குபவன் தான் வாழ்வில் ஜெயிக்க முடியும். இந்த ஹை5 படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.
இயக்குநர் பேரரசு பேசியதாவது….…
சினிமாவில் இளைஞர்களைக் காட்டி வெற்றி அடைவது எளிதானது ஆனால் வயதானவர்களைக் காட்டி வெற்றி அடைவது கஷ்டம் ஆனால் அதில் நீங்கள் சாதிப்பீர்கள். முதுமைக்காலம் தான் நம் வாழ்வில் முக்கியமானது நாம் அந்தக் காலகட்டத்தில் தான் நமக்குப் பிடித்ததைச் செய்ய ஆணைப்பட்டு வாழுகிறோம். முதுமைக் காலத்தின் வலிகளைச் சொல்லும் படத்தைத் தரும் இந்தப் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்
இவ்வாறு அவர் பேசினார்.
–
நன்றி: சினிமாவலை.காம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மே 1ம் தேதி மங்காத்தா பாடல் வெளியீடு
» எள்ளுவய பூக்கலையே' பாடல் உருவான விதம்: ரகசியம் பகிரும் யுகபாரதி
» காவலன் பாடல் வெளியீடு தமிழ்நாட்டிலேயே நடக்கட்டும்.!!
» ஜீவாவின் -ரௌத்திரம் படப் பாடல் குறுந்தகடு வெளியீடு
» பிரபுதேவா நடித்துள்ள 'பஹீரா' படத்தில் இருந்து பாடல் வெளியீடு
» எள்ளுவய பூக்கலையே' பாடல் உருவான விதம்: ரகசியம் பகிரும் யுகபாரதி
» காவலன் பாடல் வெளியீடு தமிழ்நாட்டிலேயே நடக்கட்டும்.!!
» ஜீவாவின் -ரௌத்திரம் படப் பாடல் குறுந்தகடு வெளியீடு
» பிரபுதேவா நடித்துள்ள 'பஹீரா' படத்தில் இருந்து பாடல் வெளியீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum