Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
4 நாயகிகள்.. வித்தியாசமான கதை.. ஒரே படத்தில் புகழின் உச்சிக்குச் சென்ற பி.யூ.சின்னப்பா!
Page 1 of 1
4 நாயகிகள்.. வித்தியாசமான கதை.. ஒரே படத்தில் புகழின் உச்சிக்குச் சென்ற பி.யூ.சின்னப்பா!
-
உதயகிரி அரசனும், அரசியும் ஒருநாள் நிலா வெளிச்சத்தில்
ஓய்வாக அமர்ந்திருக்கையில் தங்களின் மகன்களிடம்,
அவர்களுக்கு இன்பத்தைத் தரக்கூடியது எது என்று கேட்க,
வேட்டையாடுவதும், பகைவர்களை வென்று, அவர்களை
சிறைபிடித்து வருவதும் என மூத்த இரு மகன்களும் கூற,
இளையவன் ப்ரதாபன், நான்கு உலகத்தைச் சேர்ந்த
இந்திரகுமாரி, நாககுமாரி, வர்ணகுமாரி அக்னிகுமாரி
ஆகியோருடன் மகிழ்ந்திருப்பதே இன்பம் தரக்கூடியது
என்கிறான்.
பெண்கள் விஷயத்தில் காதல் மன்னனாக இருப்பவர்களை
ஜகதலப்ரதாபன் என்று அழைப்பதை கேட்டிருப்போம்.
ப்ரதாபன் என்பவனின் ஜகதல வித்தைகளால் உருவானது
இந்தப் பெயர். இதை வைத்தே ஒரு திரைப்படம் 1944 இல்
வெளிவந்தது.
கே.எஸ்.நாராயண ஐயங்கார், எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு
இருவரும் இணைந்து பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் சார்பில்
முக்கியமான திரைப்படங்களை தயாரித்தனர்.
1941 இல் இவர்கள் தயாரித்த ஆரியமாலா திரைப்படம்
பி.யூ.சின்னப்பாவை முன்னணி நாயகனாக நிலைநிறுத்தியது.
அதன்பின் 1943 இல் தியாகராஜ பாகவதரை வைத்து தயாரித்த
சிவகவி திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெற்றது.
இந்த வெற்றிகளைத் தொடர்ந்து 1944 இல் பி.யூ.சின்னப்பாவை
வைத்து ஜகதலப்ரதாபன் படத்தை எடுத்தனர். ஸ்ரீராமுலு நாயுடு
படத்தை இயக்கினார்.
உதயகிரி அரசனும், அரசியும் ஒருநாள் நிலா வெளிச்சத்தில்
ஓய்வாக அமர்ந்திருக்கையில் தங்களின் மகன்களிடம்,
அவர்களுக்கு இன்பத்தைத் தரக்கூடியது எது என்று கேட்க,
வேட்டையாடுவதும், பகைவர்களை வென்று, அவர்களை சிறை
பிடித்து வருவதும் என மூத்த இரு மகன்களும் கூற, இளையவன்
ப்ரதாபன், நான்கு உலகத்தைச் சேர்ந்த இந்திரகுமாரி, நாககுமாரி,
வர்ணகுமாரி அக்னிகுமாரி ஆகியோருடன் மகிழ்ந்திருப்பதே
இன்பம் தரக்கூடியது என்கிறான்.
தந்தையின் முன்பே இப்படியொரு தகாத விஷயத்தை
கூறுகிறானே என்று கோபமாகும் மன்னன், சொன்னது தவறு
என்று மன்னிப்புக்கேள், இல்லை, மகன் என்றும் பார்க்காமல்
சிரச்சேதம் செய்துவிடுவேன் என்று கூறி சென்றுவிடுகிறார்.
மகன் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை, கணவன் சிரச்சேதம்
செய்யாமல் விடப்போவதில்லை என்பதை உணர்ந்த மகாராணி,
மகனை நாட்டைவிட்டு போகும்படி கூற, ப்ரதாபனும் நாட்டைவிட்டு
வெளியேறி, விசித்திரன் என்பவனின் நட்பை பெறுகிறான்.
அவர்கள் இருவருக்கும் ஒளவை வடிவில் இருக்கும் காளி
அடைக்கலம் தருகிறாள். அவளது ஆடு, மாடுகளை மேய்க்கும்
பொறுப்பை ப்ரதாபன், விசித்திரன் இருவரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஒருநாள் இந்திரகுமாரி உள்பட நான்கு தேவகன்னிகைகள்
குளிப்பதை ப்ரதாபன் பார்க்கிறான். காமம் ஏறி இந்திரகுமாரியின்
சேலையை எடுத்துக் கொண்டு அவன் ஓட, பின்னாலேயே வரும்
இந்திரகுமாரி அவனை சிலையாக்கிவிடுகிறாள்.
விஷயம் அறிந்த ஒளவை, அவனை மீண்டும் மனிதனாக்குவதுடன்,
மறுநாள் இந்திரகுமாரி குளிக்கையில் அவளது சேலையை எடுத்துக்
கொண்டு திரும்பிப் பார்க்காமல் வரும்படி கூறுகிறாள். ப்ரதாபனும்
அப்படியே செய்கிறான். சேலையில்லாமல் இந்திரலோகம் செல்ல
முடியாத இந்திரகுமாரி ப்ரதாபனை தொடர்ந்து வருகிறாள்.
ஒளவை ப்ரதாபனை குழந்தையாக மாற்றிவிட, இந்திரகுமாரி அந்த
குழந்தையை ஆசையுடன் கொஞ்ச, அது ப்ரதாபன் என தெரிய
வருகிறது. இருவரும் திருமணம் முடித்து, அங்கிருந்து விடை
பெறுகிறார்கள்.
காட்டில் வேட்டைக்கு வரும் விச்வரஞ்சிதபுரத்து அரசன், ப்ரதாபனை
தனது சேவகனாக்கிக் கொள்கிறான். ப்ரதாபனின் மனைவி
இந்திரகுமாரியின் அழகு அவனது கண்ணியத்தை மறைக்கிறது.
அவளை எப்படியும் அடைவது என மந்திரியின் துணையுடன்
ஆலோசனை செய்கிறான். ப்ரதாபனை தேவையில்லாத வேலைகள்
கூறி பல உலகங்களுக்கும் அனுப்பி வைக்கிறான்.
அப்படி செல்லும் ப்ரதாபன் வர்ணகுமாரி, நாககுமாரி, அக்னிகுமாரி
ஆகியோரை திருமணம் செய்து வெற்றியோடு திரும்புகிறான்.
இந்த நான்கு தேவகன்னிகைகளும் சேர்ந்து மனோரஞ்சிதம் என்ற
அழகிய நகரை நிர்மாணிக்கிறார்கள்.
வறிய நிலையில் இருக்கும் ப்ரதாபனின் தாய், தந்தை மற்றும் ச
கோதரர்கள் அவனுடன் வந்து இணைந்து கொள்கிறார்கள்.
ப்ரதாபன் இந்திரகுமாரியிடமிருந்து திருடிய சேலையை தனது
தாயிடம் கொடுப்பதை அவனது மனைவிகள் பார்க்கிறார்கள்.
தங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் ப்ரதாபன் இவ்விதம் செய்வதாகக்
கருதி, அந்த சேலையின் உதவியால் நால்வரும் தேவலோகம்
செல்கின்றனர். ப்ரதாபனும் அவனது குடும்பமும் மறுபடி வறுமைக்குத்
திரும்புகிறார்கள்.
ப்ரதாபன் இந்திலோகம் சென்று, பல சோதனைகளில் வெற்றியடைந்து,
மீண்டும் தனது நான்கு மனைவிகளுடன் பூமிக்குத் திரும்பி அவர்களுடன்
சந்தோஷமாக வாழ்வை கழிப்பது கதை.
இதில் ப்ரதாபனாக பி.யூ.சின்னப்பாவும், விசித்திரனாக
என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்தனர். இந்திரகுமாரி, நாககுமாரி,
வர்ணகுமாரி, அக்னிகுமாரி அகிய வேடங்களில் முறையே சரோஜினி,
ஜீவரத்தினம், ஜெயலட்சுமி, வரலட்சுமி ஆகியோர் நடித்தனர்.
பேபி கமலாவின் நடனம் படத்தின் பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று.
இந்தப் படத்தின் வெற்றி பி.யூ.சின்னப்பாவை புகழின் உச்சியில்
கொண்டு சேர்த்தது.
1944 ஏப்ரல் 13 இதே நாளில் வெளியான ஜகதலப்ரதாபன் இன்று
79 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
-நன்றி: நியூஸ் 18 தமிழ்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ‘வாடிவாசல்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருக்கும் இரண்டு நாயகிகள்
» டிராகன் படத்தில் இணையும் தெலுங்கு -மலையாள நாயகிகள்.. கல்லூரி கலாட்டா செய்ய காத்திருக்கும் பிரதீப்!
» புகழின் சிகரத்தை தொட்ட முதல் எழுத்தாளர் "கல்கி"
» விக்ரமுடன் இரட்டை நாயகிகள்
» வித்தியாசமான உருவாக்கப்படங்கள்
» டிராகன் படத்தில் இணையும் தெலுங்கு -மலையாள நாயகிகள்.. கல்லூரி கலாட்டா செய்ய காத்திருக்கும் பிரதீப்!
» புகழின் சிகரத்தை தொட்ட முதல் எழுத்தாளர் "கல்கி"
» விக்ரமுடன் இரட்டை நாயகிகள்
» வித்தியாசமான உருவாக்கப்படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum