சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இந்த 9 விதிகள் உங்கள் வாழ்க்கை தரத்தை நிச்சயம் உயர்த்தும்! Khan11

இந்த 9 விதிகள் உங்கள் வாழ்க்கை தரத்தை நிச்சயம் உயர்த்தும்!

Go down

இந்த 9 விதிகள் உங்கள் வாழ்க்கை தரத்தை நிச்சயம் உயர்த்தும்! Empty இந்த 9 விதிகள் உங்கள் வாழ்க்கை தரத்தை நிச்சயம் உயர்த்தும்!

Post by rammalar Sat 15 Apr 2023 - 12:00

வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்றுதான். ஆனால் நாம் வாழும் முறையில்தான் நமது வாழ்க்கையின் அர்த்தம் அடங்கியிருக்கிறது. வாழ்க்கையை ரசனையாக வாழவும், நினைத்த செயல்களை செய்து முடிக்கவும் வெற்றியாளர்கள் சொல்லும் 9 எளிய விதிகள் என இவற்றைப் பட்டியலிடுகிறார்கள். அது இங்கே அப்படியே…!
1.இலக்கை தீர்மானியுங்கள் !
இந்த 9 விதிகள் உங்கள் வாழ்க்கை தரத்தை நிச்சயம் உயர்த்தும்! Main-qimg-57ac78727cf459d2e9798e0211878844
தோட்டா எவ்வளவு வேகமாக இருந்தாலும், அதனை சரியாக செலுத்த துப்பாக்கி அவசியம். அந்த துப்பாக்கிதான் இலக்கு. குறைந்த காலத்திட்டங்கள் மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் என இரண்டு விதமாக உங்கள் இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
குறைந்தகால இலக்காக, பணி உயர்வு பெறுவது, நீண்டநாள் கனவுகளை நிறைவேற்றுவது என சின்னச்சின்ன விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நீண்டகால இலக்காக, உங்களின் லட்சியங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். குறைந்தகாலத் திட்டங்களை அதற்குரிய கால இடைவெளிகள் செய்து முடித்து விட்டோமோ? என சுயபரிசோதனை செய்து கொண்டால், அடுத்தமுறை அதற்கேற்றபடி திட்டமிடலாம்.
நீண்டநாள் லட்சியங்களை வருடத்திற்கு ஒருமுறை எந்தளவு நீங்கள் அதனை நெருங்க முடிந்தது எனப்பார்த்து அடுத்த ஆண்டு, அதற்கேற்ப திட்டமிடுங்கள். நாம் இன்று விதைப்பதைதான் நாளை அறுவடை செய்ய முடியும் !
2.ககபோ !
இந்த 9 விதிகள் உங்கள் வாழ்க்கை தரத்தை நிச்சயம் உயர்த்தும்! Main-qimg-975a6ee12afb30a0cd1f6fbb832c050a
காதலோ, கஷ்டமோ எதுவும் கடந்து போகும். எனவே கடந்த காலத்தில் உங்கள் வாழ்க்கையில் நடந்த, மோசமான விஷயங்களை நினைத்து வருந்துவதை விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சந்தோஷமாக இருங்கள். நாம் என்ன செய்தாலும், கடந்த காலத்தை மாற்ற முடியாதே?
பின்னர் ஏன் அதை நினைத்து வருந்த வேண்டும்? இன்றைக்கு நீங்கள் செய்யும் விஷயங்கள்தான் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும். அவற்றில் மட்டும் கவனம் இருக்கட்டும். கடந்த கால அனுபவங்கள் தந்த பாடங்கள் மட்டும் போதும் நமக்கு!
3. கை கொடுக்கும் நம்பிக்கை !
இந்த 9 விதிகள் உங்கள் வாழ்க்கை தரத்தை நிச்சயம் உயர்த்தும்! Main-qimg-5beac5b8e2d4c23ca581c8a6f8234cca
நம்பிக்கையின் வெற்றியே முழுவதுமாக நம்புவதில்தான் இருக்கிறது. உங்களால் எதுவும் முடியும் என்கிற கர்வமில்லாத, முழு நம்பிக்கை மிக அவசியம். அனுபவமும், திறமையும்தான் இந்த துணிச்சலைத் தரும். அதனை அதிகமாக்குங்கள். “சிறகிருந்தால் போதும், சிறியதுதான் வானம்” என்பது கவிஞர் வைரமுத்துவின் வரி. அந்த சிறகு உங்கள் நம்பிக்கைதான்.
4.அடக்கம் அவசியம் !
இந்த 9 விதிகள் உங்கள் வாழ்க்கை தரத்தை நிச்சயம் உயர்த்தும்! Main-qimg-b2b23aef1ef9e8dddf4358b9fb42babf
வெற்றிகளும், பொறுப்புகளும் வர வர அடக்கமும் வரவேண்டும். பணிவுதான் தலைமைப்பண்புக்கு முதல் தகுதி. அந்தப்பணிவை தலைவன் ஆனாலும் விட்டுவிடாதீர்கள்.
தற்புகழ்ச்சி, சுயவிளம்பரம் இதெல்லாம் நீங்கள் நிச்சயம் வெறுக்க வேண்டியவை. எத்தனை பேரும், புகழும் வந்தாலும், அத்தனையும் “எல்லாபுகழும் இறைவனுக்கே” என சொல்லும் பண்பு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மட்டுமல்ல.. உங்களுக்கும் அவசியம்.
5. மாத்தியோசி !
இந்த 9 விதிகள் உங்கள் வாழ்க்கை தரத்தை நிச்சயம் உயர்த்தும்! Main-qimg-e1a81e5716eec65763f1060c4ca00b1d
“மரம் வெட்டுவதற்கு எனக்கு 9 மணிநேரம் கொடுத்தால், 6 மணிநேரம் நான் எனது கோடரியை கூர் செய்வேன்”- இதைச்சொன்னது ஆபிரகாம் லிங்கன். ஸ்மார்ட்வொர்க் (smartwork) என்பதற்கு இது ஒரு சரியான உதாரணம்.
திட்டமிடப்படாத கடின உழைப்பு முனைமழுங்கிய கோடரியை வைத்து 9 மணி நேரம் மரம் வெட்டுவது போலத்தான். எனவே நீங்கள் செய்யும் பணிகளில் இந்தப்பார்வை மிகவும் முக்கியம். இப்படி கிரியேட்டிவாக பணிசெய்தால், அலுவலகம் எப்படிப்பிடிக்காமல் போகும்?
6.சேமிப்பு !
இந்த 9 விதிகள் உங்கள் வாழ்க்கை தரத்தை நிச்சயம் உயர்த்தும்! Main-qimg-d2149f67a401c791a229da47cfc017ce
“உங்களுக்குத் தேவையற்ற பொருட்களை எல்லாம் வாங்கிக் குவித்தால், உங்களுக்கு தேவையானதை எல்லாம் ஒருநாள் விற்க நேரிடும்”- இப்படி மிரட்டுவது பொருளாதார நிபுணரும், சிறந்த தொழிலதிபருமான வாரன் பஃபெட். சேமிப்பும், ஒருவகையில் உங்களின் லாபம்தான். சேமிப்பும் ஒரு வருமானம்தான். எனவே சரியான திட்டமிடலுடன் சேமிப்பு ரொம்ப முக்கியம்.
7. நேர மேலாண்மை !
இந்த 9 விதிகள் உங்கள் வாழ்க்கை தரத்தை நிச்சயம் உயர்த்தும்! Main-qimg-d609e3f8e348879212577e296f0eb2d9
நீங்கள் எவ்வளவு செலவு செய்தாலும், உங்களின் கடந்த ஒரு நொடியை கூட உங்களால் திரும்பப்பெற முடியாது. அப்படியெனில் அதன் மதிப்பு எவ்வளவு என யோசித்துப் பாருங்கள்.
எந்த விஷயத்தையும் நாளை என தள்ளிப்போடாமல், “தள்ளிப்போடாதே..” என இன்றே முடித்து விடுங்கள். ஒரு நொடியில் நீங்கள் எடுக்கும் முடிவு கூட, மிகப்பெரிய வெற்றிகளை உங்களுக்காக வைத்துக்கொண்டு காத்திருக்கலாம்.
8.குழுவாகச் செயல்படுங்கள் !
இந்த 9 விதிகள் உங்கள் வாழ்க்கை தரத்தை நிச்சயம் உயர்த்தும்! Main-qimg-c5753c976c34b0ac3a9875b9861d9274
இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன் ஆன, சச்சின் இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் அல்ல. ஆனால் தோனி ? சொல்லவே வேண்டாம். உங்களது திறமை என்பது வேறு. குழுவாக இணைந்து பணியாற்றுவது என்பது வேறு. இந்த திறமையால்தான் சிறந்த கேப்டன் எனக்கொண்டாடப்படுகிறார் தோனி.
அடுத்தவர் கருத்துக்கு மதிப்பளியுங்கள். அடுத்தவர் கருத்துக்கு காதுகொடுங்கள். அவர்களின் சிரமங்களுக்கு கைகொடுங்கள். பிறகு உங்களை விட சிறந்த டீம் லீடர் யாரும் இருக்க முடியாது.
9. கற்றுக்கொள்ளுங்கள்.. கற்றுக்கொண்டே இருங்கள்..!
இந்த 9 விதிகள் உங்கள் வாழ்க்கை தரத்தை நிச்சயம் உயர்த்தும்! Main-qimg-e005f2cf5472846a72698ba76d19e7a7
வாழ்க்கையில் எப்போதும் கற்றுக்கொண்டே இருங்கள். ஏனெனில் வாழ்க்கை எப்போதும் கற்றுக்கொடுப்பதை நிறுத்தாது. உலகம் தன்னை தினந்தோறும் மாற்றிக்கொண்டே இருக்கும். அதற்கேற்ப நாமும் நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பங்கள், உங்கள் துறையில் வந்திருக்கும் புதுமைகள் என எப்போதும் அப்டேட்டாக இருங்கள். இல்லையெனில் நீங்கள் பழசாகத் தெரிவீர்கள்.
-ஞா.சுதாகர்
நன்றி: விகடன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum