சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

புகை.....பகை.. Khan11

புகை.....பகை..

3 posters

Go down

புகை.....பகை.. Empty புகை.....பகை..

Post by *சம்ஸ் Thu 17 Mar 2011 - 13:58

புகை.....பகை.. Epdiirunthanan...2
அப்படியானால் இது உங்களுக்குத்தான்.

புகையிலையில் உள்ள நிகோடின் பல்வேறு விதமான நோய்களுக்கு அச்சாரம் போடுகிறது. குறிப்பாக, புற்றுநோய் Êஏற்பட புகைப்பழக்கம் முக்கியமான காரணம். அதனால் அப்பழக்கத்தைத் தவிர்த்துவிடுவதே நல்லது.

உலக சுகாதார நிறுவனம் (who) புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு எதிராக உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர்தான் இப்பழக்கத்திற்கு மனிதர்கள் அடிமையாகின்றார். அதனால், போதிய ஆலோசனைகள் கொடுத்து புகைப்பழக்கத்தை நிறுத்த முடியும் என்பது நிபுணர்களின் நம்பிக்கை. அவ்வாறு அதிலிருந்து அவர்கள் விடுபட்டது _ புகைபிடிக்கும் பழக்கம் குறித்தும் சிலரிடம் கருத்து கேட்டோம்.

ராஜேந்திரன், ஆட்டோ ஓட்டுனர்:

பதினான்கு வயதிருக்கும்போதே நான் புகைபிடிக்க ஆரம்பித்துவிட்டேன். அதனால் நான் பெரியவன் ஆகிவிட்டதாக நினைத்தேன். தினமும் இரண்டு முதல் மூன்று பாக்கெட்டுகள் வரை சிகரெட் பிடிப்பேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புகை.....பகை.. Empty Re: புகை.....பகை..

Post by *சம்ஸ் Thu 17 Mar 2011 - 13:59

குளிக்கும்போது மட்டும்தான் சிகரெட் பிடிப்பதில்லை. மற்ற சமயங்களில் ஊதித் தள்ளிக் கொண்டிருப்பேன்.

ஒருமுறை எனக்குப் பயங்கர நெஞ்சுவலி. துடித்துப் போய்விட்டேன். வீட்டிலிருந்தவர்களும் பயந்து போய்விட்டனர். உடனே மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர். டாக்டர் பரிசோதித்துவிட்டு, இனிமேலும் தொடர்ந்து புகைபிடித்தால், உயிருக்கு ஆபத்து என்று சொன்னார். அதன்பின்னர் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டேன்.

முத்துகிருஷ்ணன், தனியார் வங்கி அதிகாரி:

பதினேழு வயதில் சிகரெட் பிடிக்கத் துவங்கிய நான், இருபத்திரண்டு வயதுவரை அந்தப் பழக்கத்துக்கு அடிமையாக இருந்தேன். எனது அப்பாவுக்கும் புகைபிடிக்கும் பழக்கம் உண்டு. ஐம்பது வயதிலேயே அவர் நுரையீரல் புற்று நோயால் இறந்து போனார். அதற்குக் காரணம் சிகரெட் பிடித்தது என்பது எனக்குத் தெரியவந்தது.

இருப்பினும் என்னால் உடனடியாக இப்பழக்கத்தை விட முடியவில்லை. அதனால் டாக்டர் அட்வைஸ் எடுத்துக்கொண்டேன். அவர்தான் நான் சிறுகச் சிறுக பழக்கத்தைவிட ட்ரெயினிங் கொடுத்தார். எப்பொழுதும் கையில் பேப்பர், க்ளிப்கள், பந்து போன்றவற்றை வைத்துக்கொண்டேன். அதன்பிறகு எட்டு ஆண்டுகள்வரை புகைபிடிக்காமல் இருக்கிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புகை.....பகை.. Empty Re: புகை.....பகை..

Post by *சம்ஸ் Thu 17 Mar 2011 - 13:59

அதனால் உடல் எடை கூடியிருக்கிறது. சுறுசுறுப்பாக இருக்கிறேன். பணியில் வேகம் கூடுகிறது. நிம்மதியாக இருக்கிறேன். அவ்வப்போது தியானம் செய்வதால் எண்ணத்தை ஒருமுகப்படுத்தவும் முடிகிறது.

அரவிந்தன், விற்பனைப் பிரதிநிதி:

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்தப் பழக்கம் உண்டானது. எப்பொழுதெல்லாம், போர் அடிக்கிறதோ, அப்போதெல்லாம் புகை பிடிப்பேன். சில சமயங்களில் ஒரு நாளைக்கு ஆறு பாக்கெட்டுகள் சிகரெட்வரை காலி செய்திருக்கிறேன்.

ஆனால் திருமணப் பேச்சுவார்த்தைத் துவங்கியபொழுது அப்பழக்கத்தை விட்டுவிட எண்ணினேன். எனது புகைப் பழக்கத்தால் சந்ததிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று நினைத்தேன்.

ஆனால் உடனடியாக என்னால் இப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. முதலில் சிகரெட் பழக்கம் உள்ள எனது நண்பர்களைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். யாரேனும் புகைபிடித்துக் கொண்டிருந்தால் அங்கிருந்து அகன்றுவிடுவேன். சூயிங்கம் போன்ற ஏதேனும் ஒரு பொருளை வாயில் போட்டு மென்று தின்னத் தொடங்கினேன். அதைத் தொடர்ந்து புகைபிடிக்கும் பழக்கம் அறவே இல்லாமல் ஆயிற்று.

புகைப்பழக்கம் இருந்தபோது, அடிக்கடி உடற் சோர்வு ஏற்படும். வேலையில் கவனமின்மை, அடிக்கடி தலைவலி போன்ற உபாதைகள் உண்டாகும். அப்பழக்கத்தை விட்டபிறகு எந்த உடல் உபாதைகளும் வருவதில்லை. எனது வாரிசுகளுக்கும் உடல் ஊனமோ, குறைபாடுகளோ கிடையாது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புகை.....பகை.. Empty Re: புகை.....பகை..

Post by *சம்ஸ் Thu 17 Mar 2011 - 13:59

முகுந்தன், அலுவலக உதவியாளர்:

நண்பர்கள் சிகரெட் பிடிப்பதைப் பார்த்துத்தான் நானும் பிடிக்க ஆரம்பித்தேன். முதலில் புகை உள்ளே சென்றபோது லேசாக இருமல் வந்தது. நண்பர்கள்தான் தைரியம்(!) கொடுத்து பிடிக்க வைத்தார்கள். எனக்குக் குழந்தை கிடையாது. தத்தெடுத்த எனது மகன் வாழ்க்கையை நினைத்து, இந்தக் கெட்ட பழக்கத்தை விட்டுவிட்டேன். இதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு. தத்தெடுத்து பல வருடங்கள் கழித்து எனக்கு ஒரு மகள் பிறந்தாள். அவள் ஒரு ‘ப்ரீமெச்சூர் பேபி’. அதற்கு எனது புகைப்பழக்கம்தான் காரணம் என்று டாக்டர்கள் கூறினார்கள்.

அப்பழக்கத்தை விட்டபிறகு இருமல் வருவதில்லை. குழந்தைகளுக்கு நாமே ‘ரோல் மாடல’£க இருக்க வேண்டும். அதனால் புகைபிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதை விட்டுவிடுவது நல்லது.

புகை பிடிக்கும் பழக்கத்தை மறக்க சில யோசனைகள்:

றீ ‘புத்தாண்டு முதல் அல்லது வரும் பெர்த்டேயிலிருந்து சிகரெட் பிடிப்பதை நான் நிறுத்திவிடுவேன்’ என்று நண்பர்களிடம் சிலர் சவால் விடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் புத்தாண்டும் வந்து பார்த்டேயும் வந்து போயிருக்கும். சிகரெட் பிடிப்பதை மட்டும் நிறுத்தியிருக்க மாட்டார்கள். இப்படி கெடு வைத்து நிறுத்த முயற்சிப்பவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது கடினம்.

புகை பிடிப்பதை நிறுத்தப்போகிறேன் என்று இந்நிமிடத்தில் இருந்து தூக்கிப்போட வேண்டும். மறுநாள் காலை சிகரெட் பிடிக்கவேண்டும் என்ற அரிப்பு எழும். அந்த நிமிடங்களை வன்முறையாகத்தான் அடக்கியாள வேண்டும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புகை.....பகை.. Empty Re: புகை.....பகை..

Post by *சம்ஸ் Thu 17 Mar 2011 - 13:59

சிகரெட் பிடிக்கவேண்டும் என்ற சிந்தனை எழும்போதெல்லாம் ‘முடியாது’ என்று உங்களுக்கு நீங்களே வேகமாக மறுக்கவேண்டும். மனம் சமாதானமடையும்.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் அந்த உந்துதல் எழும். இன்று ஒருநாள் மட்டும் பிடிப்போம். நாளையிலிருந்து விட்டுவிடுவோம் என்ற எண்ணம் தலை தூக்கும். ‘உனக்கு சிகரெட் இல்லை. முடியாது, நீ எப்படிக் கெஞ்சினாலும் உனக்கு சிகரெட் கிடையாது. உனக்குத் தரப்படாது’’ என்று உங்கள் மனதோடு நீங்களே போராட வேண்டியதிருக்கும். அந்த நிமிடத்திற்கு நீங்கள்தான் ஜெயிப்பீர்கள். உடனே, காலையில் முக்கியமாகப் பார்க்கவேண்டிய வேலை என்ன என்று தேடிப்போய்விட வேண்டும். மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் ஓய்வு கிடைக்கலாம். மதிய உணவு சாப்பிட்டபின் சிகரெட் பிடித்துப் பழகியதால், அந்த ஓய்வு நேரத்தில் சிகரெட் பிடிக்கலாம் என்ற எண்ணம் எழும்.

கொஞ்சமும் மசிந்து கொடுக்கக் கூடாது. ஓய்வு நேரத்தில் ஏதாவது வேலையைத் தேடி ஓடுங்கள். உறவினரையோ, குடும்பத்தாரையோ, மேலதிகாரிகளையோ மரியாதைக்குரியவர்களையோ சந்திக்கும் வேலையாகக் கூட அதை உருவாக்கிக் கொள்ளுங்கள். மரியாதைக்காக அவர்களைச் சந்திக்கும்போது புகை பிடிக்க வேண்டாம் என்று மனம் சொல்லும். இப்படி ஏதாவது ஒரு வேலைக்குள் நீங்கள் உங்களைச் சிக்க வைத்துக் கொண்டாலே பிற்பகல் எண்ணத்தை நீங்கள் தூக்கி எறிந்து விடலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புகை.....பகை.. Empty Re: புகை.....பகை..

Post by *சம்ஸ் Thu 17 Mar 2011 - 14:00

அன்றைய இரவுதான் உங்களைப் படுத்தி எடுக்கும். ஒரே ஒரு ‘தம்’ மட்டும் இழுத்துக்கொள்வோம் என்று மனம் சொல்லும். புகை நாற்றத்தில் ஊறிய வாய் நமநமக்கும். ரத்தத்துடன் கலந்துவிட்ட நிகோடின் உங்களுக்கு எதிராக மனத்தைத் தூண்டிவிடும். எப்படியாவது ஒரே ஒரு சிகரெட் இன்று இரவு மட்டும். நாளையிலிருந்து வேண்டாம் என்றெல்லாம் நீங்களே கூட நினைக்கக்கூடும்.

அடக்குங்கள். உங்களையும் உங்கள் மனதையும். அன்று இரவு கழிந்துவிட்டது. இரண்டாம் நாள் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணம் தலை தூக்க ஆரம்பிக்கும். ‘முடியாது. வேண்டாம்’ என்று அடக்கிவிட்டு அன்றைய பிரச்னைகளில் அலுவல்களில் வழக்கத்துக்கு முன்பே இறங்கிவிடுங்கள்.

மூன்றாம் நாள், நான்காம் நாள் என்று ஒரு எட்டு நாளைக்கு அடக்கிப் பாருங்கள். அடங்கியிருங்கள். நீங்கள் எட்டு நாள் வெற்றி பெற்ற மமதையில் இருப்பீர்கள். எட்டு நாள்தான் ஒரு மனிதனின் பழக்கவழக்கத்திலிருந்து மாறும் காலக்கெடு. எட்டு நாள் கடந்துவிட்டால் (ஒரு சிகரெட் கூட, ஒரு தம் கூட இழுக்காமல்) உங்களால் சிகரெட் பழக்கத்தை முற்றிலும் நிறுத்தமுடியும். இது உறுதி.

செயின் ஸ்மோக்கர் என்பதால் ரத்தத்தில் உள்ள நிக்கோடின் எப்படியும் சிகரெட் பிடிக்க வைத்துவிடும் என்றெல்லாம் நண்பர்கள் உசுப்பேற்றுவார்கள். அவர்களை அலட்சியப்படுத்துங்கள். எட்டு நாளைக்குப் பிறகு உங்களால் வாழ்நாள் முழுவதும் சிகரெட் பிடிக்காமல் இருக்க இந்த அடக்கியாளும் உத்தி உதவும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புகை.....பகை.. Empty Re: புகை.....பகை..

Post by *சம்ஸ் Thu 17 Mar 2011 - 14:00

இவையன்றி கீழே உள்ள சில யோசனைகள் உங்களுக்கு உதவக்கூடும்.

றீ மற்றவர்கள் புகை பிடித்துக்கொண்டு இருந்தால், அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள். புகை அலர்ஜி என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.

றீ சூயிங்கம், நிகோடின் பேட்ஜ்கள் போன்றவற்றை உபயோகிக்கலாம். மூக்கு வழியாக உள்ளிழுக்கும் ‘ஸ்பிரே’யைப் பயன்படுத்தியும் புகைப்பழக்கத்தைத் தவிர்க்கலாம். இவற்றைப் பயன்படுத்த ஆரம்பித்த பின்னர், பயன்களை முழுமையாக உணரமுடியும்.

றீ சிகரெட்டிற்குப் பதிலாக, காபி, டீ, ஜூஸ் போன்ற பானங்களைக் குடிக்கலாம். புகை பிடிக்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கும்போது இவற்றை அருந்தலாம்.

றீ குழந்தைகளுடன் விளையாடலாம். கொஞ்ச தூரம் நடக்கலாம். கைகளில் ‘க்ளோவுஸ்’ மாட்டிக்கொண்டால் சிகரெட் பிடிக்கவேண்டும் என்ற உந்துதல் வராது.

றீ காலையில் யோகா, மாலை வாக்கிங், முற்பகல் மந்திர ஜபம், பிற்பகல் தியானம் என்று ஒரு வரையறுக்கப்பட்ட வாழ்க்கை முறையை நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்டால் நிச்சயம் புகை பிடிப்பதை மறக்க முடியும்.

றீ எல்லாவற்றையும்விட புகை பிடிப்பதால் ஏற்படும் தொந்தரவு, சந்ததியினருக்கு வரும் பிரச்னைகள் ஆகியவற்றை மனதில் கொண்டு, இந்த தொந்தரவு நமக்கு அவசியம்தானா என்று விலகிவிடுவது உத்தமம். புகை ஒரு விஷம் என்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டால் விடுதலை நிச்சயம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புகை.....பகை.. Empty Re: புகை.....பகை..

Post by மீனு Thu 17 Mar 2011 - 14:25

திருந்தாத ஜென்மங்கள் என்றும் திருந்தாது புகை.....பகை.. 480414
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

புகை.....பகை.. Empty Re: புகை.....பகை..

Post by நண்பன் Thu 17 Mar 2011 - 16:42

சிறந்த கட்டுரைக்கு நன்றி ரசிகன்
முதல் நீங்கள் புகைத்தலை விடுங்கள் :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புகை.....பகை.. Empty Re: புகை.....பகை..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum