Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
டொவினோ தாமஸின் “அன்வேஷிப்பின் கண்டேதும்” விமர்சனம்..!
Page 1 of 1
டொவினோ தாமஸின் “அன்வேஷிப்பின் கண்டேதும்” விமர்சனம்..!
--
டார்வின் குரியகோஸ் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடித்துள்ளப்
படம் 'அன்வேஷிப்பின் கண்டேதும்' . அர்த்தனா பினு, சித்திக்,
இந்திரன்ஸ், ஷம்மி திலகன் , பாபு ராஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில்
நடித்துள்ளார்கள்.
கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான இப்படத்தின் விமர்சனத்தைப்
பார்க்கலாம்.
கதை.
1980 களில் கேரள மாநிலத்தில் கோட்டையத்தில் இருக்கும் காவல்
நிலையத்தில் தொடங்குகிறது படம். இந்த காவல் நிலையத்தில் புதிய
சப் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்படுகிறார் ஆனந்த் நாராயணன்
( டொவினோ தாமஸ்). மிகுந்த கனவுகளுடனும் லட்சியத்துடனும் இந்த
வேலையில் அவர் சேர்ந்திருக்கிறார் என்பதை நாம் பார்க்கிறோம்.
அதே ஊரில் இளம்பெண் ஒருவர் காணாமல் போக அதை விசாரிக்கத்
தொடங்குகிறார். இந்த விசாரணையின் ஒரு கட்டத்தில் கிறிஸ்தவ
ஆலையத்தின் பாதிரியாரை விசாரிக்க வேண்டிய நிலைக்கு விசாரணை
செல்லும் போது உயர் அதிகாரிகள் ஆனந்த் நாராயணனை இந்த
விசாரணையை விட்டு விலக்கி தங்கள் கையில் எடுத்துக் கொண்டு பொய்
குற்றவாளியை வைத்து வழக்கை முடிக்கத் திட்டமிடுகிறார்கள்.
தன்னுடைய விடாப்பிடியான முயற்சியால் உண்மையான குற்றவாளியை
கண்டுபிடிக்கும் ஆனந்த் இந்த கேஸை முடிக்கும் நிலையில் ஒரு
முக்கியமான திருப்பம் ஏற்படுகிறது. இதனால் ஆனந்த் மற்றும் அவருடன்
இருக்கும் மூன்று பேர் உட்பட நான்கு பேரும் தற்காலிகமாக பணிநீக்கம்
செய்யப்படுகிறார்கள். முதல் பாதி முடிகிறது.
முதல் பாதியில் இருக்கும் அதே விறுவிறுப்பு இரண்டாம் பாதியிலும்
தொடர்கிறது. தங்களது தண்டனை காலம் முடிந்து திரும்பும் இந்த நால்வர்
தங்களது மேல் இருக்கும் கெட்ட பெயரை நீக்க அவர்களுக்கு இன்னொரு
வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ஆறு வருடங்களுக்கு முன் இறந்து போன
பெண் ஒருவரின் வழக்கை விசாரிக்க இவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
இந்த வழக்கில் குற்றவாளிகளை இவர்கள் கண்டு பிடித்தார்களா. என்பதே
மீதிக் கதை.
விமர்சனம்
நீ ஒன்றை தேடுகிறாய் என்றால் அது நிச்சயம் உனக்கு கிடைக்கும் என்பது
இந்தப் படத்தின் டைட்டிலுக்கு அர்த்தம். முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி
இரண்டும் தனித்தனியாக இரண்டு படங்களின் கதைக்களங்களாக
அமைந்துள்ளது இப்படம்.
ஒவ்வொரு கதையிலும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் உள்ளது. இரண்டு
கதைகளை விசாரணை செய்யும் விதங்களும் சுவாரஸ்யமாக கையாளப்
பட்டிருக்கின்றன். அதற்கேற்றபடி டொவினோ தாமஸ் மற்றும் பிற நடிகர்கள்
நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை ஒரு சில
காட்சிகளுக்கு சுவாரஸ்யம் கூட்டுகிறது.
என்ன மைனஸ்
விறுவிறுப்பான ஒரு த்ரில்லரான படமாக எத்தனையோ அம்சங்கள் படத்தில்
இருக்கின்றன. அதே நேரத்தில் டொவினோ தாமஸ் நடித்துள்ள ஆனந்த்
கதாபாத்திரம் இன்னும் கூட விஸ்தீரனமாக எழுதப்பட்டிருக்கலாம். இரண்டு
வெவ்வேறு கதைகளை கொண்ட இப்படம் ஒரு படமாக முழுமை பெற தவறி
விடுகிறது.
மற்ற கதாபாத்திரங்கள் படம் முழுவதும் கதாநாயகனுடன் இருந்தும்
அவர்களுக்கு பெரிய அளவில் எந்த பங்கும் இருப்பதில்லை. கதாநாயகனால்
மட்டுமே வழிநடத்தப்படும் படத்தில் இன்னும் கூட உணர்ச்சிகளுக்கு இடம்
கொடுத்திருக்கலாம். இயக்குநர் செய்த ஒரு நல்ல விஷயம் பெயருக்கு ஒரு
காதலியை ஹீரோவுக்கு வைக்காமல் விட்டது.
வழக்கமான த்ரில்லர் படங்களை விட அன்வேஷிப்பில் கண்டேதும் படம்
எதார்த்தத்துடன் ஒன்றியதாக இருக்கிறது. கதை நடக்கும் நிலம் ஒளிப்பதிவாளர்
அதை காட்சிப்படுத்தும் விதம் பார்வையாளர்களை ஒரு முழுமையான
த்ரில்லரை எதிர்பார்த்து ஆயத்தமாக்குகின்றன.
ஆனால் கதை அந்த அழுத்தம் இல்லாதது ஏமாற்றம் தான்.
-
tamil.abplive.com/
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ராட்சசி -விமர்சனம் – விமர்சனம்
» டி 3- விமர்சனம்
» நெடுநல்வாடை – விமர்சனம்
» எல்.ஜி.எம்.- விமர்சனம்
» ஹரா விமர்சனம்
» டி 3- விமர்சனம்
» நெடுநல்வாடை – விமர்சனம்
» எல்.ஜி.எம்.- விமர்சனம்
» ஹரா விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum