Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
-------------
திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள
முறப்பநாடு திருத்தலத்தில் உள்ளது அருள்மிகு கயிலாசநாதர்
திருக்கோயில். இது நவகயிலாயத் திருத்தலங்களில் ஒன்றாகும்.
நவக்கிரகங்களில் குரு பகவானுக்குரிய தலமாகவும் இது
வணங்கப்படுகிறது. சூரபத்மன் வழியில் வந்த அசுரன் ஒருவன்
முனிவர்களுக்கு பெருந்தொல்லை கொடுத்து வந்தான்.
அவனிடமிருந்து தங்களை காத்தருளும்படி முனிவர்கள் பலரும்
இத்தல இறைவனிடம் முறையிட்டனர். அதன்பேரில் சிவபெருமான்
முனிவர்களுக்கு அருள் புரிந்ததால் இத்தலம், ‘முறைப்படி நாடு’
என்று வழங்கப்பட்டு பின்னர் முறப்பநாடு என்றானது.
சோழ மன்னன் ஒருவனுக்கு குதிரை முகத்துடன் ஒரு பெண் குழந்தை
பிறந்தது. அதைக் கண்டு கவலை கொண்ட மன்னன், தனது மகளின்
குதிரை முகம் மாற வேண்டி பல்வேறு திருக்கோயில்களுக்குச் சென்று
சிவபெருமானை வணங்கி வழிபட்டான்.
சிவபெருமான் மன்னன் முன்பு தோன்றி, ‘முறப்பநாடு சென்று
அங்குள்ள தாமிரபரணி நதியில் நீராடு’ என்று ஆசி வழங்கினார்.
சிவபெருமானின் திருவுளப்படி மன்னன் தனது மகளோடு இத்தலம்
வந்து தட்சிண கங்கை தீர்த்தக் கட்டத்தில் நீராடினான்.
என்ன ஆச்சரியம்! அந்த மன்னனின் மகள் குதிரை முகம் நீங்கி மனித
முகம் கொண்டு மிகவும் அழகாக விளங்கினாள். மன்னன் மகளின்
குதிரை முகத்தை இக்கோயிலில் உள்ள நந்தி ஏற்றுக் கொண்டது.
இக்கோயில் நந்தி குதிரை முகத்துடன் காட்சி அளிப்பதை இன்றும்
காணலாம்.
உடனே மன்னன் மனம் மகிழ்ந்து சிவபெருமானுக்கு இங்கு ஒரு கோயில்
கட்டியதாக வரலாறு கூறுகிறது.
நவ கயிலாயத்தில் எந்தக் கோயிலுக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு
இந்த ஆலயத்திற்கு உள்ளது. சிவபெருமான் குரு பகவானாக அமர்ந்து
அருள்பாலிக்கும் சிறப்பு இந்தக் கோயிலுக்கு மட்டுமே உண்டு.
புண்ணிய நதியாம் தாமிரபரணி ஆறு காசியில் உள்ள கங்கை போன்று
வடக்கில் இருந்து தெற்கு நோக்கி இங்கு செல்கிறது. இதனால் இந்த
இடத்திற்கு தட்சிண கங்கை என்று பெயர்.
இங்கு நீராடுவது காசியில் நீராடுவதற்கு சமம் என்று கூறுவார்கள்.
அது மட்டுமல்லாது புராணச் சிறப்பு பெற்ற தசாவதார தீர்த்தக்கட்டம்
இங்கு உள்ளது. அதாவது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்கள் இந்தக் கோயிலில் உள்ளது.
இத்தலத்தில் சுவாமி கயிலாசநாதராகவும் அம்பிகை சிவகாமியாகவும்
அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இத்தல இறைவனை
வழிபட்டால் திருவாரூர் மாவட்டம், ஆலங்குடியில் உள்ள குரு பகவானை
வழிபட்டதற்கு சமமாகும்.
இங்குள்ள இறைவனையும் அம்பாளையும் வழிபட திருமணத்தடை
நீங்கும். நல்ல குடும்பம் அமையும். உடல் ஆரோக்கியம் கிட்டும்.
-
நன்றி- ஆர்.ஜெயலட்சுமி - கல்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்…..
» இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட அமெரிக்க கோடீஸ்வரர்
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
» பகவான் மகாவீரர் அவதரித்த நாள்
» சிரித்தார் நந்தி...!! .
» இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட அமெரிக்க கோடீஸ்வரர்
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
» பகவான் மகாவீரர் அவதரித்த நாள்
» சிரித்தார் நந்தி...!! .
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum