சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

உங்கள் துணையை தேர்ந்தெடுப்பது எப்படி ? Khan11

உங்கள் துணையை தேர்ந்தெடுப்பது எப்படி ?

Go down

உங்கள் துணையை தேர்ந்தெடுப்பது எப்படி ? Empty உங்கள் துணையை தேர்ந்தெடுப்பது எப்படி ?

Post by *சம்ஸ் Sun 20 Mar 2011 - 22:26

உங்கள் துணையை தேர்ந்தெடுப்பது எப்படி ? 74
நீங்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தைத் திருமணம் என்ற பந்தத்தில் இணைத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
உங்கள் வாழ்க்கையில் உங்களோடு இணைந்துக் கொள்ளப் போகும் ‘லைப் பார்ட்னர்’ அமைவதைப் பொறுத்தே உங்கள் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. உங்களவர் எப்படிப்பட்டவராக இருந்தால் உங்கள் வாழ்க்கை சிறக்கும்?
அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு மனதளவில் நீங்கள் எப்படியெல்லாம் தயாராக வேண்டும் என்பது பற்றி பார்க்கலாமா? இதோ உங்களுக்கான குறிப்புகள்:
* நான் திருமணத்திற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முற்றிலும் தயாராக இருக்கிறேன் என்ற எண்ணம் முதலில் உங்களுக்கு ஏற்பட வேண்டும். அந்த எண்ணம் ஏற்பட்ட பிறகே உங்களுக்கு வாழ்க்கைத் துணையைத் தேடுவதற்கு சம்மதிக்க வேண்டும்.
* உங்களது வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், சம்பளம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றிய உங்களது விருப்பங்களில் தெளிவாக இருக்க வேண்டும்.
* ஒருவருடைய கல்வி மற்றும் சம்பளம் இரண்டும்தான் தம்பதியரிடையே ஈகோ பிரச்சினை ஏற்படக் காரணமாகிறது. எனவே உங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணை எப்படிப்பட்ட கல்வித் தகுதி உடையவராய் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.
* வரப்போகும் வாழ்க்கைத் துணையிடம் உள்ள குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள், பொழுது போக்குகள் மற்றும் சிந்தனைகள் உங்கள் ரசனையுடன் ஒத்துப்போகுமா என்பதை கவனிக்கவேண்டியது முக்கியம்.
* பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமாக இருந்தால், தங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையின் குடும்பப் பின்னணி, வரதட்சணை, அந்தஸ்து ஆகியவை கவனிக்கப்படுகிறது. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி அவர் எப்படிப்பட்டவர், நமக்கு ஏற்ற துணையாக இருப்பாரா என்பதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். அப்படிப்பட்ட வாழ்க்கைதான் இனிமையாக இருக்கும்.
* உங்களுக்குப் பிடித்த மாதிரி பார்ப்பதற்கு வசீகரமாக இல்லாவிட்டாலும், ‘பரவாயில்லை’ என்று சொல்லும் அளவிற்காவது பார்க்க வேண்டும்.
* வாழ்க்கைத் துணை அழகாக இருந்து அவரிடம் நல்ல குணம் இல்லாவிட்டால் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. எனவே அழகை விட குணத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
* நீங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை முதலில் உங்கள் பெற்றோரிடம் தெரியப்படுத்துங்கள். பெற்றோர் உங்களுக்குப் பிடித்த மாதிரி தேர்ந்தெடுத்தால்தான் உங்கள் வாழ்க்கையில் எந்த மனக் கசப்பும் நேராது. வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.
* நீங்கள் காதலராக இருந்தால் அப்போதே பொருத்தமான தேர்வு விஷயத்தில் பாதி பிரச்சினை தீர்ந்தாக எண்ணிக் கொள்ளலாம். நல்ல அழகு, படிப்பு, நல்ல குணாதிசயம் போன்ற அனைத்து பொருத்தங்களும் காதலின்போதே தெரியவருவதால் உங்களுக்குள் யார் பெரியவர் என்ற பிரச்சினைக்கு பெரும்பாலும் வாய்ப்பில்லாது போய்விடுகிறது.
* என்னதான் இருந்தாலும் நீங்கள் 100 சதவீதம் எதிர்பார்ப்பது போன்ற வாழ்க்கைத் துணை கிடைப்பது கடினம். ஆதலால் நீங்கள் எதிர்பார்த்த அதிக பொருத்தங்களுடன் கூடிய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதுடன், அட்ஜஸ்ட் செய்யும் மனப் பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* நீங்கள் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதைத் திருமணத்திற்கு முன்பே உங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அதனால் திருமணத்திற்குப் பிறகு எந்தக் குழப்பங்களும் ஏற்படாது. நாம் மனம் விட்டுப் பேசுவதில் முக்கியமான விஷயம், நம்மைப் பற்றிய எந்த விஷயத்தையும் மறைத்துவிடாமல் சொல்லிவிடும்போது பிளாஷ்பேக் திருப்பங்களுக்கு வாய்ப்பில்லாது போய்விடுகிறது.
* நீங்கள் காதலராக இருந்தால் எதிர்காலத்தில் உங்களது வாழ்க்கைத் துணையின் இயல்பான குணத்தைக் கண்டுபிடிப்பது கடினம். உங்கள் வாழ்க்கைத் துணையின் நிஜமான குறைபாடுகள் போகப்போகத்தான் தெரியவரும். வாழ்க்கையில் இணைந்த உடனேயே இவர்களின் இயல்பானது வெளிப்பட்டு பல்வேறு பிரச்சினைகள் உருவாகும். இதுதான் காதல் திருமணத்தின் தோல்விக்கு அடிப்படை.
* வாழ்க்கை பந்தத்தில் இவருடன் இணைந்தால் சரி வராது என மனதில் பட்டுவிட்டால் திருமணம் வரை போகாமல் முதலிலேயே பக்குவமாக உறவை முறித்துக் கொள்ள வேண்டும்.
* நிச்சயதார்த்தத்திற்கு முன்பே உங்களது வருங்கால வாழ்க்கைத் துணையுடன் தொலைபேசி மூலமாகப் பேசுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதில் கண்ணியமாக உங்களது விருப்பு வெறுப்புகளை அவருக்கு தெரியப்படுத்துங்கள். அவருடைய விருப்பு மற்றும் வெறுப்புகளையும் புரிந்துக் கொள்ளுங்கள்.
* உடை விஷயங்கள் சிலருக்குப் பிடிக்கும். சிலருக்குப் பிடிக்காது. உங்களது வாழ்க்கைத் துணை எந்த மாதிரியான உடை உடுத்த வேண்டும் என்று நினைப்பதைப் பற்றி முதலில் பேசுங்கள். உடை கலாச்சாரத்தை மாற்றுவதற்கு பெரும்பாலும் யாரும் முன்வருவதில்லை. ஆனால் உங்களது விருப்பத்தை முதலிலேயே சொல்லி விடுங்கள்.
* உங்களுக்கு எந்தத் துறையில் விருப்பம் என்பதைப் பற்றியும், உங்களது லட்சியம் என்ன என்பது பற்றியும் பேசுங்கள். உங்களுக்கு உள்நாட்டு வேலை மற்றும் வெளிநாட்டு வேலைகளில் உள்ள விருப்பத்தைப் பற்றியும் பேசுங்கள்.
* ஜாதகம் பற்றிய நம்பிக்கை இருந்தால் அதில் தெளிவாக இருக்க வேண்டும். ஜாதகம் பார்க்காமல் திருமணத்தை முடித்துவிட்டு ஏதாவது பிரச்சினை வந்தால் ஜாதக பொருத்தம் சரியில்லை என முக்கி முனங்கக் கூடாது. இப்படிப்பட்டவர்கள் ஜாதகத்தை முதலிலேயே பார்ப்பது நல்லது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் துணையை தேர்ந்தெடுப்பது எப்படி ? Empty Re: உங்கள் துணையை தேர்ந்தெடுப்பது எப்படி ?

Post by *சம்ஸ் Sun 20 Mar 2011 - 22:26

* சிலர் முதலில் பார்த்துவிட்டுப் பிடிக்காமல் அல்லது வேறு ஏதாவது காரணங்களினால் வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்விடுவார்கள். பின்னர் திரும்பவும் தொடர்பு ஏற்படுத்தி பேச்சுக்கு முன் வரலாம். இது பிரச்சினையை ஏற்படுத்தும். எனவே வேண்டாம் என்று சொல்லிவிட்டால் கடைசி வரை அதைக் காப்பாற்ற வேண்டும்.
* பெண் பார்க்கச் செல்லும்போது நிறைய நண்பர்களை அழைத்துச் சென்று, ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி அவர்களுக்குப் பிடித்தால் தனக்கும் பிடித்த மாதிரி என்ற முடிவு எடுப்பதை விட்டு விடுங்கள். வாழப்போவது நீங்கள். எனவே உங்களுக்குப் பிடித்த மாதிரி தேர்ந்தெடுங்கள்.
* பெற்றோர் அல்லது மற்றவர் நிர்பந்தத்திற்குப் பணிந்து வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.
* நீங்கள் திருமணத்திற்குத் தயாராகும் பொழுது உங்கள் ‘தொட்டால்சிணுங்கி’ குணத்திற்கு விடை கொடுத்து விடுங்கள். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களது வாழ்க்கைத் துணையை தைரியமாக தேர்ந்தெடுங்கள்.
* திருமணம் வேண்டாம் என்று சொல்பவர்கள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். ஏனெனில் அவர்களுக்கு சொல்ல முடியாத பிரச்சினைகள், சில பலகீனங்கள் அல்லது திருமணத்தின் மீது தவறான நம்பிக்கைகள் இருக்கும். எனவே அவர்களிடம் மனம் விட்டுப் பேசி அவர்களது கஷ்டங்களை அறிந்துக் கொள்ளுங்கள். உங்களால் தீர்க்க முடியாவிட்டால் கவுன்சலிங் அழைத்துச் சென்று ஆலோசனை பெறுங்கள்.
* திருமணத்திற்கு முன்பே உங்களது வாழ்க்கைத் துணையின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
* உங்களது வாழ்க்கைத் துணை வேலைக்கு சென்று கொண்டிருந்தால், திருமணத்திற்குப் பிறகு வேலைக்கு செல்லலாமா, வேண்டாமா என்பதை முதலிலேயே தெரிவித்து விடுங்கள். இப்படி செய்வதால் திருமணத்திற்குப் பிறகு ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
* சிலர் அமைதியான சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு எப்பொழுதும் குறைசொல்லும் அல்லது கோபப்படுகின்ற வாழ்க்கைத் துணை அமைந்து விடுவார்கள். இது திருமணத்திற்குப் பிறகு நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
எனவே உங்கள் வாழ்க்கைத் துணை எப்படிப்பட்ட சுபாவம் உடையவர் என்பதை முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் திருமணத்துக்கு சந்தோஷமாய் சம்மதம் சொல்லுங்கள். இன்னும் என்ன யோசனை? உங்களுக்குப் பொருத்தமான துணையை சந்தோஷமாகத் தேர்வு செய்ய வேண்டியது தானே.

நன்றி தமிழ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum