சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பீட்ரூட் குழம்பு
by rammalar Today at 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Today at 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Today at 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Today at 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Today at 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Yesterday at 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Yesterday at 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Yesterday at 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா? Khan11

சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?

Go down

சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா? Empty சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?

Post by rammalar Sun 30 Jun 2024 - 21:59

சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா? Kalkionline%2F2024-06%2F77a6ed39-a402-4d19-aaa7-2db3aeff2a80%2FUntitled_design___2024_06_30T221341_946

---
நம் வாழ்வில் ஏதேனும் சிக்கல் நேரும்பொழுது அன்று வரை 
முட்டாளாக இருந்தவர் கூட சிறிய சிந்தனையின் மூலம் பெரிய 
சிக்கலிலிருந்து விடுபட்டு வருவார்கள். 


அதைக் கண்டு நாமே சில நேரங்களில் ஆச்சரியப்பட்டிருப்போம். 
அதேபோல் இங்கு ஒரு சாமானியனின் சிந்தனை எப்படிச் செயல்
பட்டுப் பல பரிசுகளைப் பெறச் செய்தது என்பதைப் பற்றி இதில் 
பார்ப்போம்.


முன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு 
வந்தான். அவனுக்கு மீன் என்றால் உயிர். ஒரு நாள் மீனவன் ஒருவன் 
மிகவும் பெரிய மீன் ஒன்றை அரசவைக்குக் கொண்டு வந்து 
அரசனிடம் தந்தான். அந்த மீனைக் கண்டு மகிழ்ந்த அரசன் 
மீனவனுக்கு உடனே 100 பொற்காசுகள் பரிசு அளிக்குமாறு 
கட்டளையிட்டான்.


பக்கத்திலே அமர்ந்திருந்த அரசிக்கு இந்தச் செயல் பிடிக்கவில்லை. 
அரசனைப் பார்த்து, “நாளைக்கே நம் வீரர்கள் யாரேனும் 
செயற்கரிய வீரச் செயல் செய்து வந்தால் நீங்கள் வழக்கம்போல் 
100 பொற்காசுகள் பரிசு அளிக்கலாம்.


 ஆனால், பரிசு பெறுபவர், ஒரு மீனவனுக்குக் கொடுத்ததைத்தானே 
அரசர் நமக்கும் தந்துள்ளார் என்று நினைப்பான். அதனால் அந்த 
மீனவனுக்குக் கொடுத்த பரிசை ஏதேனும் சொல்லித் திரும்ப 
வாங்கிக் கொள்ளுங்கள்” என்றாள்.


“நீ சொல்வது சரிதான். ஆனால், கொடுத்த பரிசை மற்றவர் குறை 
சொல்லாதபடி எப்படித் திரும்ப வாங்குவது?” என்று அரசன் 
கேட்டான். “அந்த மீன் ஆணா அல்லது பெண்ணா என்று கேளுங்கள். 
அவன் ஆண் என்று சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்று 
மீனைத் திருப்பித் தந்து விடுங்கள். பெண் என்று சொன்னால் ஆண் 
மீன் வேண்டும் என்று சொல்லுங்கள் என்றாள் அரசி.”
-
அரசனுக்குத் தனது மனைவியின் அறிவுரை மிகவும் நல்லதாகவே 
பட்டது. மீனவனைக் கண்டு, “நீ கொண்டு வந்த மீன் ஆண் மீனா? 
பெண் மீனா?' என்று கேட்டான். அதற்கு அந்த மீனவன் பணிவாக, 
“அரசே இது ஆணும் அல்ல பெண்ணும் அல்ல. பொதுவான மீன்” 
என்றார். 


மீனவனிடம் இருந்து தான் சற்றும் எதிர்பாராத பதில் வந்ததைக் 
கண்ட அரசன் பெரிதும் மகிழ்ந்தான். அந்த மகிழ்ச்சியில் அவனுக்கு 
மேலும் 100 பொற்காசுகளைத் தரும்படி கட்டளையிட்டான்.


“ஐயோ 100 பொற்காசுகள் கொடுத்ததே அதிகம். அதைத் திரும்ப 
வாங்குங்கள் என்றால், மேலும் 100 பொற்காசுகள் தந்துவிட்டீர்களே” 
என்று கோபத்துடன் சொன்னாள் அரசி. “நான் மகிழ்ச்சி அடையும் 
போதெல்லாம் 100 பொற்காசுகள் பரிசு தருவது வழக்கம். இப்போது 
அவன் சொன்ன பதிலால் மகிழ்ச்சி அடைந்ததால் அவனுக்குப் பரிசு 
தந்தேன்” என்றான் அரசன். 


இரண்டு பொற்காசுப் பைகளையும் பெற்றுக் கொண்ட மீனவன், 
அரசனை வணங்கி விடைபெற்றான் பையில் ஓட்டை இருந்ததால் 
திரும்பிச் செல்லும்போது ஒரு பொற்காசு கீழே விழுந்தது. இதைப் 
பார்த்த மீனவன், அந்தக் காசு எங்கே உள்ளது என்று தேடிக் கண்டு
பிடித்து பையில் போட்டுக் கொண்டான்.


இதை அரசனும் அரசியும் பார்த்துக் கொண்டு இருந்தனர். உடனே 
அரசி, “நீங்கள் அவனுக்கு 200 பொற்காசுகள் பரிசு தந்தீர்கள். ஒரு 
பொற்காசு கீழே விழுந்தால் என்ன? எவ்வளவு பேராசை அவனுக்கு. 
இதையே காரணம் காட்டி அவனுக்குக் கொடுத்த பரிசைத் திரும்ப
வாங்கிக் கொள்ளுங்கள்” என்றாள். 


அரசனுக்கும் தனது மனைவி சொன்னது சரி என்றே பட்டது. 
மீனவனை அழைத்து, “கீழே விழுந்த ஒரே ஒரு காசை ஏன் அவ்வளவு 
கடினப்பட்டு தேடினாய். 200 பொற்காசுகள் கொடுத்தது உனக்கு 
நிறைவில்லையா?” என்று கோபத்துடன் கேட்டான் அரசன்.


மீண்டும் அரசனைப் பணிவுடன் வணங்கிய மீனவன், “அரசே 
அந்த ஒரு பொற்காசுக்காகத் தேடவில்லை. இந்தப் பொற்காசின் 
ஒரு பக்கத்தில் உங்கள் உருவமும் மற்றொரு பக்கத்தில் நம் அரசின் 
சின்னமும் இருந்தது. யார் காலிலும் இக்காசு பட்டுவிட்டால், 
பெருமை மிகுந்த தங்களை அது அவமதிப்பதாக ஆகும் அல்லவா? 
அதனால்தான் தேடினேன் அரசே” என்று பதில் சொன்னான். 


சாமர்த்தியமாகப் பதில் அளித்த மீனவனுக்கு மேலும் 
100 பொற்காசுகள் அளித்து மகிழ்ந்தான் மன்னன்.


இதைப் பார்த்த அரசி, ‘மேலும் ஏதாவது யோசனை கூறினால் 
இன்னும் நூறு பொற்காசுகளைக் கொடுக்க வேண்டி இருக்கும். 
இதோடு போகட்டும்” என்று விட்டு விட்டாள்.


தெளிந்து யோசிக்கும் திறன் மட்டும் இருந்து விட்டால், மூளையை 
வைத்து மூலதனம் பெறும் முடி சூடா மன்னர்களாக வலம் 
-
நன்றி- கல்கி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24743
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum