Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வெள்ளை மோகம் பிடித்தவர்களே! இதைப்படியுங்கள் முதலில்.
5 posters
Page 1 of 1
வெள்ளை மோகம் பிடித்தவர்களே! இதைப்படியுங்கள் முதலில்.
வெள்ளை நிற மோகம் கொண்டு அலைபவர்களுக்கு இரா.இளவரசன் வானம் எனக்கொரு போதி மரம் எனும் அவரது வலைப்பதிவில் நெத்தியடியாக பதிவிட்டிருக்கிறார்.
அப்பதிவை அவரது அனுமதியுடன் நன்றி தெரிவித்து இங்கே மீளவும் பிரசுரம் செய்கிறோம். 4தமிழ்மீடியா குழுமம்
ஒரு விளம்பரம். அதுல நேர்முகத்தேர்வு நடக்குது. ஒரு எல்லாந்தெரிஞ்ச விளக்கெண்ணய் இன்னொருத்தன் கிட்ட கேள்வியா கேக்குறான். கடைசிலதான் தெரியுது கேள்வி கேட்டவன் தான் இன்ட்டெர்வ்யூக்கு வந்தவனாம், பதில் சொன்னவன் interview எடுக்குறவனாம்! என்னடான்னு பாத்தா ஒரு (fairness cream) சிகப்பழகு க்ரீம் போட்டதுனால இவரு 'பாஸ்'(pass) ஆயிட்டாராம் interviewல!
அட ......... இது தெரிஞ்சா நான் காலேஜுக்கே போயிருக்க மாட்டேனேடா. வீட்லயே உக்காந்து முகரைல cream பூசிட்டு interviewக்கு போயிருப்பேனே! அப்படி எந்த கம்பனிலடா வெள்ளையா இருக்குறவனா பாத்து வேலைக்கு எடுக்குறான்? சரி வெள்ளையா இருந்தா வேலை கொடுப்பான்னா, வெண்குஷ்டம் வந்தா தான் அந்த கம்பனில ப்ரொமோஷன் கொடுப்பாய்ங்களா? கிரகம் என்ன விளம்பரம்டா இது? உங்க கற்பனைத் திறனுக்கு அளவே இல்லையாடா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை மோகம் பிடித்தவர்களே! இதைப்படியுங்கள் முதலில்.
இன்னொரு விளம்பரம். நடிகர் சூர்யா என்ற அமெரிக்கர் ஒரு shopping mallல ஸ்டைலா நடப்பாரு. உடனே பொம்பளைப் புள்ளைங்கள்லாம் அவரையே பாக்கும். இதைப் பார்த்துட்டு ஒரு கேனையன் "இந்த குள்ளனையெல்லாம் ஃபிகர் பாக்குதே. நம்மளப் பாக்கலையே. கலர்தான் காரணமோ?"னு நினைச்சுக்கிட்டு ஏதேதோ fairness cream வாங்கிப் போட்டுப் பாப்பான். உடனே சூர்யா என்ற மூணறையடி அமெரிக்கர், "இதைப் போடுப்பா. நான் இதைப் போட்டுத்தான் ஃபிகர் கரக்ட் பண்றேனு" சொல்லி ஒரு சொரி மருந்தைக் கொடுப்பாரு. அவன் அதை முகரைல தடவுனவுடன எல்லா புள்ளைங்களும் அவனைப் பாக்கும்! அடங்கொக்கா மவனே... அந்தப் புள்ளைங்க சூர்யாவைப் பார்த்ததே "யாருடா இவன்? மூணு அடில குள்ள மனிதன் போறானே"னு நினைச்சு ஆச்சரியமா பாத்ருக்குங்க. இவய்ங்க நம்மகிட்ட சிகப்பழகு அது இதுனு புருடா வுட்றாய்ங்க!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை மோகம் பிடித்தவர்களே! இதைப்படியுங்கள் முதலில்.
ஒரு நடிகனுக்கு கொஞ்சமாச்சும் பொறுப்புணர்ச்சி வேணாமா? பெப்சி குடிக்க சொன்ன. குடிச்சோம்! சிமெண்ட் வாங்க சொன்ன. வாங்குனோம்! கிரகம்.. சரவணா ஸ்டோர்க்கு போக சொன்ன. போனோம்! அடப் பாவி இப்ப கண்டதை மூஞ்சில தடவ சொல்லி, "தடவுனாதான் ஃபிகர் பாக்கும்"னு ஒரு புரளிய கிளப்புறியே, இது நியாயமா? ஐந்தரை அடிக்கு மேல் உயரமாக இருக்கும் ஆண்கள் தான் அழகு, அதற்கு கீழ் இருக்கும் ஆண்கள் எல்லாம் அசிங்கமானவர்கள்னு ஒரு விளம்பரம் போட்டா இந்தாளுக்கு நல்லாருக்குமா?
பேசாம வில் ஸ்மித், ஒபாமா, பிரய்ன் லாரானு ஆளுக்கு ஒரு fairness cream கொடுத்து வெள்ளையாக சொல்லிட்டோம்னா எல்லாரும் வெள்ளைக்காரன் ஆயிருவோம். அப்புறம் இனப் பிரச்சினையே இருக்காதுல்ல! இந்த ஐடியா நெல்சன் மண்டேலா, லூதர் கிங், மால்கம்X க்கு எல்லாம் தெரியாமப் போச்சு. தெரிஞ்சுருந்தா எல்லாரும் போராட்டமெல்லாம் பண்ணாம ஆளுக்கு ஒரு fairness cream வாங்கி தடவிட்டுப் போயிருப்பாய்ங்க!
நம்மாளுங்களை செருப்பால அடிக்கனும். "வெள்ளையா ஆகனும்னா தினமும் காலை, மாலை உணவுக்குப் பின் அரை லிட்டர் ஃபினாயிலைக் குடி"னு சொன்னாக் கூட நம்ம ஊர் புள்ளைங்க குடிக்குங்க. அந்த அளவுக்கு அடிமைப் புத்தி, inferiority complex.
அதுங்களை சொல்லி குற்றமில்ல. ஒரு வெள்ளையான பொண்ணும், மாநிறமான பொண்ணும் சேர்ந்து டிவி பாக்குதுங்கனு வைங்க. அதுல என்ன காட்றாய்ங்க? வெள்ளையா இருக்க பொண்ணு, கருப்பா இருக்க பொண்ணுகிட்ட "கவலைப் படாத. இதைப் போட்டீனா நீயும் என்ன மாதிரி வெள்ளைய, அழகா ஆயிருவ. வேலை கிடைக்கும். நல்ல மாப்பிள்ளை கிடைக்கும். அது இது"னு சொன்னா அந்த கருப்பான புள்ளைக்கு தாழ்வு மனப்பான்மை வருமா வராதா? நந்திதா தாஸ் பாத்ருக்கீங்களா? அவங்களை விட என்ன அழகு வேணும்? கீழ இருக்க வீடியோ பாருங்க. கருப்பா இருக்க புள்ளைய வேணும்னே அசிங்கமா காட்டனும்னு எட்டு முழ சேலைய கிழவி மாதிரி சுத்திவிட்டுட்டு, அப்புறம் cream போட்டதுனால வாய்ப்பு கிடைச்ச மாதிரி காட்டிருப்பாய்ங்க! இதெல்லாம் ஒரு விளம்பர யுக்தியா? அசிங்கமா இல்ல!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை மோகம் பிடித்தவர்களே! இதைப்படியுங்கள் முதலில்.
வெள்ளையா இருக்குறது ஒரு வியாதி. அதுனாலதான் வெள்ளைக்காரன் நேரம் கிடைக்கிறப்பல்லாம் வெயில்ல அம்மணமா உக்காந்து Sun bathங்குற பேருல அந்த குறைபாட்டை சரி பண்ணிக்கிறான். இல்லேனா அவன் தோல் சுருங்கி சுண்ணாம்பு மாதிரி ஆயிரும். இந்த பிரச்சினை நமக்கு இயற்கையாவே நம்ம நிறத்தால இல்லாம இருக்கு. அது இந்த அரைகுறைகளுக்குத் தெரியாம வெள்ளையாக அலையுதுங்க! வெள்ளைக்காரனோட skin texture பாருங்க. பக்கத்துல பாத்தா அறுவெறுப்பா இருக்கும்.
அதுமட்டும் இல்ல. எந்த கருமத்த எவ்வளவு பூசினாலும், நம்ம கலரை மாத்த முடியாது. அது விஞ்ஞான ரீதியா நிரூபிக்கப்பட்ட ஒன்று. நம்ம தோல் நிறம், நம்ம கருவா உருவாகுறப்பவே தீர்மானிக்கப்படுது, DNAல பதிவும் செய்யப்பட்டுறது. குங்குமப்பூ, அரளிப்பூனு எதைத் தின்னாலும் வயித்துல இருக்க குழந்தையோட நிறம் மாறாது. வெட்டிச் செலவும், வீண் side effectsசும் தான் மிச்சம்.
அதுமட்டும் இல்ல. எந்த கருமத்த எவ்வளவு பூசினாலும், நம்ம கலரை மாத்த முடியாது. அது விஞ்ஞான ரீதியா நிரூபிக்கப்பட்ட ஒன்று. நம்ம தோல் நிறம், நம்ம கருவா உருவாகுறப்பவே தீர்மானிக்கப்படுது, DNAல பதிவும் செய்யப்பட்டுறது. குங்குமப்பூ, அரளிப்பூனு எதைத் தின்னாலும் வயித்துல இருக்க குழந்தையோட நிறம் மாறாது. வெட்டிச் செலவும், வீண் side effectsசும் தான் மிச்சம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை மோகம் பிடித்தவர்களே! இதைப்படியுங்கள் முதலில்.
அது என்னாங்கடா எந்த மாதிரி பொண்ணு வேணும்னு கேட்டா, நல்ல கலரா சிகப்பா வேணும்னு கேக்குறீங்க? ஒரு பொண்ணு வேணாம் தம்பி, ரெண்டா கட்டிக்கனு ரெண்டு வெள்ளைப் பன்னியைக் கொண்டு வந்தா கட்டிக்கிவீங்களாடா?
நம்ம போயி வெள்ளைக்காரன் கிட்ட, "உன் தோல் ஏன்பா வெள்ளையா இருக்கு? இதைத் தடவு மாநிறமா அழகா ஆயிருவ"னு சொன்னா, செருப்பை சாணில முக்கி அடிப்பான். ஆனா அவன் வந்து நம்மகிட்ட, "என்னப்பா இது? உன் தோல் கருப்பா இருக்கு? இதைத்தடவு வெள்ளையா ஆயிருவ"னு சொன்னா பல்லைக் காட்டிக்கிட்டு வாங்கித் தடவுறோம். ஒரு படத்துல தல கவுண்டரு சொரி மருந்த திம்பாரே, அது மாதிரி. இதுக்கு பேருதான் அடிமைப் புத்திங்குறது. நம்மகிட்டயே காசை வாங்கி நம்ம இனத்தையே அசிங்கப்படுத்துறான், நமக்கும் அது கொஞ்சம் கூட உறைக்காம சொந்தக் காசுல சூன்யம் வச்சுகிட்டே இருக்கோம்!
நல்லா சொல்றேன் கேட்டுக்கங்க. Fair and lovely, fair and handsome, fairever னு எந்தக் கருமத்த பூசுனாலும் தோல் வெள்ளையா ஆகவே ஆகாது. சொரி புடிச்சு தான் அலையனும். ஆனா வெள்ளையாக மாற வேற சில சுலபமான வழிகள் இருக்கு,
1)தொடர்ந்து 72 மணி நேரம் தண்னீரில் மூச்சுவிடாமல் மூழ்கியிருக்க வேண்டும். தோல் நல்ல வெள்ளை நிறத்தில் மாறும். உடம்பு உப்பி பொலிவு பெறும். ஆனா என்ன? உன் ஆத்தானால கூட உன்னை அடையாளம் கண்டு புடிக்க முடியாது.
2) கொதிக்குற சுண்ணாம்பில் தினமும் முகம் கழுவி வரவும். முதல் நாளிலேயே நல்ல முன்னேற்றம் தெரியும்.
3) பிளேட் ஒன்றை எடுத்துக்கொண்டு தோலை சுரண்ட வேண்டும். அடித்தோலுக்கு முன்னேற முன்னேற தோலின் நிறம் மாறிக்கொண்டே வரும். ரத்தம் வந்தால் கம்பனி பொறுப்பல்ல..
அதனால மக்களே... வெள்ளையாத்தான் ஆவேன். அதான் எனக்கு பெருமைன்னு இன்னும் நினைச்சீங்கன்னா, மேற்கண்ட வழிகளைத் தவிர வேறு வழி கிடையாது. மத்த மானமுள்ளவர்களுக்கு நான் என்ன சொல்றேன்னா, கருப்பாவோ மாநிறமாவோ இருப்பதற்காக எந்த வகையிலும் தாழ்வுமனப்பான்மை அடைய தேவையில்லை. ஏன்னா வெள்ளையா இருக்குற காரணத்துனால வெள்ளைப் பன்றி உயர்ந்ததும் இல்ல. கருப்பா இருக்குறதுனால யானை தாழ்ந்ததும் இல்ல.
குறிப்பு: வெண்குஷ்டம் என தலைப்பில் நகைச்சுவைக்காகவே குறிப்பிட்டுள்ளேன். வெண்புள்ளிகள் என்பதே அந்த நோயின் சரியான பெயர். மேலும் அது பிறருக்கு பரவுகிற நோய் அல்ல.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வெள்ளை மோகம் பிடித்தவர்களே! இதைப்படியுங்கள் முதலில்.
:];: :];:மீனு wrote: ##* :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெள்ளை மோகம் பிடித்தவர்களே! இதைப்படியுங்கள் முதலில்.
சிறப்பாவும் நகைச்சுவையாகவும் உள்ளது ரசிகன்
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வெள்ளை மோகம் பிடித்தவர்களே! இதைப்படியுங்கள் முதலில்.
@.நிலா wrote:சிறப்பாவும் நகைச்சுவையாகவும் உள்ளது ரசிகன்
ரம்ஷீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 6
Similar topics
» எங்கும் வெள்ளை எதிலும் வெள்ளை சேனையில்
» சினிமாவிலேன் மோகம்.....
» சமூக வலைத்தளங்களின் மோகம்.
» சிவகார்த்திகேயன் ஒரு பண மோகம் பிடித்த பேய் : பரபரப்பு தகவல்.!!
» பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க
» சினிமாவிலேன் மோகம்.....
» சமூக வலைத்தளங்களின் மோகம்.
» சிவகார்த்திகேயன் ஒரு பண மோகம் பிடித்த பேய் : பரபரப்பு தகவல்.!!
» பெண்களே! சீரியல் மோகம் பிடித்து திரியாதீங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum