Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மிகச்சிறிய கிரகம்-புளூட்டோ
3 posters
Page 1 of 1
மிகச்சிறிய கிரகம்-புளூட்டோ
சூரியனில் இருந்து ஒன்பதாவதாக அமைந்திருக்கும் கிரகம், புளூட்டோ. இதுதான் சூரியக்குடும்பத்திலேயே மிகச்சிறிய கிரகமாகும். அதேபோல், சூரியக்குடும்பத்தின் கடைசி எல்லையில் இருக்கும் கிரகமும் இது தான். புளூட்டோவைப் பற்றிய சில தகவல்களை இங்கு காண்போம்.
கண்டுபிடிப்பு
சூரியனில் இருந்து எட்டாவதாக அமைந்திருக்கக் கூடிய நெப்டின் கிரகத்திற்கு அப்பால் ஒரு கிரகம் இருக்கக் கூடும் என்ற உண்மையை எடுத்துரைத்தவர், பெர்சிவல் லோவல். இவர், அமெரிக்காவைச் சேர்ந்த வானியல் அறிஞர். செவ்வாய்க் கிரகம் குறித்து பல்வேறு ஆய்வு களை மேற்கொண்டவர். இவர் இறந்து (1916) 14 ஆண்டுகளுக்குப் பிறகு தான் `புளூட்டோ’ கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, 1930-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந் தேதி இந்தக் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டறிந்தவர், வானியல் ஆராய்ச்சியாளரான கிளைட் டாம்பே. மிகச்சிறிய கிரகமாக இருந்தாலும், பெரிய நீள்வட்டம் போட்டு சூரியனைச் சுற்றி வருகிறது. இது சூரியனுக்கு 440 கோடி கிலோமீட்டர் அருகாமையிலும், 730 கோடி கிலோமீட்டர் தூரத்திலும் நீள்வட்டம் போடுகிறது.
எட்டாவது கிரகம் சில சமயங்களில், நெப்டினின் சுற்றுப்பாதையைத் தாண்டி சூரியனுக்கு அருகில் வந்து விடுகிறது இந்தக் கிரகம். அதுபோன்ற சமயங்களில் நெப்டினே சூரியனில் இருந்து தொலைவில் இருக்கும் கிரகமாகக் கருதப்படும். கடந்த 1979-ம் ஆண்டு ஆண்டிலிருந்து 1999-ம் ஆண்டு வரை புளூட்டோ இப்படி இருந்ததால், நெப்டின் தான் கடைசி கிரகமாக இருந்தது. பின்னர் வழக்கம்போல தூரத்துக்குச் சென்றுவிட்டது புளூட்டோ. சூரியனைச் சுற்றும் காலம்புளூட்டோ, ஒருமுறை சூரியனைச் சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் காலம், 248 ஆண்டுகள். இதில் 228 ஆண்டுகள் ஒன்பதாவது கிரகமாகவும், 20 ஆண்டுகள் எட்டாவது கிரகமாகவும் இருக்கும். இப்படி எட்டாவது இடத்துக்கு புளூட்டோ வரும்போது, நெப்டினின் பாதையில் குறுக்கிட்டாலும், இரண்டின் சுற்றுப்பாதைகளும் மிகப்பெரியவை என்பதால், இதுவரை இவை இரண்டும் மோதிக்கொள்ளும் ஆபத்து ஏற்பட்டதில்லை. ஆய்வு செய்வதற்காக இதுவரை எந்த விண்கலமும் அனுப்பப்படாத கிரகம், புளூட்டோ. ஆராய்ச்சியாளர்கள் இதனை `மிகவும் மர்மமான கிரகம்’ என்றே வர்ணிக்கின்றனர்.
புளூட்டோவின் துணைக் கிரகம், காரோன். இது 1978-ம் ஆண்டு அமெரிக்க ஆராய்ச்சியாளரான ஜேம்ஸ் கிறிஸ்டி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது புளூட்டோவில் இருந்து சுமார் 12 ஆயிரத்து 200 மைல் தொலைவில் உள்ளது. காரோனின் விட்டம், சுமார் ஆயிரத்து 200 கிலோமீட்டர். புளூட்டோ மற்றும் காரோன் ஆகிய இரண்டும் ஒரே அளவுடையவை. இவை இரண்டும் இரட்டைக் கிரகங்கள் போல, ஒன்றையொன்று பார்த்தவாறு சுற்றி வருகின்றன. புளூட்டோ, இரண்டு மாறுபட்ட பகுதிகளால் ஆனது. ஒரு பகுதியில் பனியும், பனி இல்லாத மற்றொரு பகுதியையும் கொண்டது. பனிப்பகுதி, உறைந்த நைட்ரஜனால் ஆனது. மேலும், சிறிதளவு உறைந்த கார்பன் மோனாக்சைடு, மீத்தேன் ஆகியவற்றையும் அந்த பனிப்பகுதி பெற்றுள்ளது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மிகச்சிறிய கிரகம்-புளூட்டோ
பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி
ராஜா- புதுமுகம்
- பதிவுகள்:- : 358
மதிப்பீடுகள் : 0
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மிகச்சிறிய கிரகம்-புளூட்டோ
சிறந்த பதிவிற்க்கு நன்றி நன்றி சரண்யா :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» புளூட்டோ 9வது கிரகம் இல்லை - அது குட்டி கிரகம்
» கண்டம் - கண்டம் - 12 நாட்கள்! கிரகம் - கிரகம் - 1.3 விநாடிகளே!
» மிகச்சிறிய மீன்தொட்டி
» மிகச்சிறிய கேமரா
» 3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்.
» கண்டம் - கண்டம் - 12 நாட்கள்! கிரகம் - கிரகம் - 1.3 விநாடிகளே!
» மிகச்சிறிய மீன்தொட்டி
» மிகச்சிறிய கேமரா
» 3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum