Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
"தனித்துவம்" காப்போம் ; "சுயமிழத்தல்" தவிர்ப்போம்.
4 posters
Page 1 of 1
"தனித்துவம்" காப்போம் ; "சுயமிழத்தல்" தவிர்ப்போம்.
காலங்காலமாக தவறு என்று அறியாமல் இந்த சமூகம் செய்துகொண்டிருக்கும் ஒரு விடயத்தைப் பற்றி அலசுவது இப்பதிவின் நோக்கம்.
ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து முழுமையாக அறிவு விருத்தியை அடைகின்றவரை ஒவ்வொரு விடயத்தையும் தன்னை சுற்றி உள்ளவர்களிடமிருந்தே கற்றுக்கொள்கிறது. ஆரம்பத்தில் தொடுகை, பின்னர் பார்வை, பின்னர் கேட்டல் என்று படிப்படியாக தன் சுய உணர்வுகளால் உலகை ஆராய அல்லது அறிந்து கொள்ள முயற்சி செய்கிறது. அதன் பின்னர் தன்னை சுற்றியுள்ளவர்கள், தனக்கு வேண்டப்பட்டவர்கள் என்று அடையாளப்படுத்தப்படுபவர்களின் அறிவுரைகள், மூலம் கற்றுக்கொள்கிறது. இந்த படிமுறை வழியே தான் நாம் ஒவ்வொருவரும் இந்த உலகை கற்றுக் கொண்டோம், கற்றுக்கொண்டிருக்கிறோம்.
அந்த வகையில் ஒரு மனிதனுடைய ஆளுமை விருத்தியிலும் மேற்சொன்ன காரணிகளே செல்வாக்கு செலுத்துகின்றன. ஒரு மனிதன் இந்த உலகத்தில் தனக்கு ஏற்படக்கூடிய சவால்களை இலகுவாக வெற்றி கொண்டு தன் தனித்துவத்தை நிலைநாட்ட வேண்டிய ஆளுமையை கொண்டிருக்கவில்லை என்றால் அவன் குழந்தைப்பருவத்திலிருந்து வளர்ந்த சூழல் அவனை அவ்வாறு தயார் செய்யவில்லை என்பது தான் பொருள். பொதுவாக எம் தமிழ்ச்சமூகம் குழந்தை வளர்ப்பில் போதிய கவனமெடுத்துக் கொள்வதில்லை என்ற கசப்பான உண்மையையும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அந்தவகையில் எம் சமூகத்தில் பரவலாக அவதானிக்க கூடிய ஒரு விஷயம் தான் "பின்பற்றுதலை" ஊக்குவித்தல்.
பொதுவாகவே எமக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும் நிலையில் இருக்க கூடிய எல்லோருமே (அது பெற்றோராகட்டும், ஆசிரியர்களாகட்டும், நலன்விரும்பிகளாகட்டும்) காலங்காலமாக பின்பற்றலைத்தான் ஊக்குவிக்கிறார்களே அன்றி தனித்துவத்திற்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அகிம்சை என்றால் காந்தியைப் பின்பற்று, தேசப்பற்று என்றால் சந்திரபோஸ் ஐ பின்பற்று, வீரம் என்றால் எல்லாளனை பின்பற்று என்று தொடங்கி, பக்கத்து வீட்டு பையன் போல் நன்றாகப் படி, வேணுதன் போல் கெட்டவனாய் இராதே என்பது வரைக்கும் இன்னொருவரை முன்னுதாரணப்படுத்தி பின்பற்ற சொல்வதேயே நடைமுறையாக கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் இது ஆரோக்கியமானதா.....? என்றால் நிச்சயமாக இல்லை என்பதே பதிலாக முடியும்.
அவனைப்போல் செய், இவனைப்போல் செய் என்று சிறுவயதிலிருந்தே இசைவாக்கப்பட்ட ஒரு குழந்தையால் யார் போலவும் இல்லாது தனித்துவமாக எவ்வாறு செயற்பட முடியும்...? இதனுடைய விளைவு எவ்வளவு பாரதூரமானது தெரியுமா....?
இந்த மனநிலை மட்டும் தமிழர்களிடம் இல்லாமல் இருந்திருந்தால் வெள்ளைக்காரன் கண்டு பிடிக்கும் சாதனங்களுக்கு தமிழில் பெயர் வைப்பது எப்படி என்பதை சிந்திப்பதற்குப் பதிலாக அந்த சாதனத்தை விட சக்திவாய்ந்த தொழினுட்பத்தை எப்படி உருவாக்கலாம் என்றல்லாவா என்சமூகம் சிந்திதுக்கொண்டிருக்கும்....? ஒரு சிறிய உளவியல் மாற்றம் எவளவு பெரிய சமூக மாற்றத்திற்கு தடை போடுகிறது பாத்தீர்களா...?
அகிம்சைக்கு காந்தியையும், வீரத்திற்கு எல்லாளனையும் பின்பற்ற சொல்பவர்கள் ஒரே ஒரு விடயத்தை சிந்தித்தால் போதும் , திருந்தி விடுவார்கள். அகிம்சைக்கு காந்தியைத்தான் பின்பற்ற வேண்டு மென்றால் காந்தி யாரைப் பின்பற்றி இருப்பார்...? தேசப்பற்றுக்கு சந்திரபோஸ் தான் முன்னுதாரணம் என்றால் சந்திபோசுக்கு முன்னுதாரனமாக இருந்தவர் யார்.....?
இனிமேலாவது சிந்திப்போம் உறவுகளே...!
இந்த பூமியில் பிறந்த எல்லா மனிதனுமே தனித்துவமானவன். ஒருவரைப் போல இன்னொருவர் இல்லை. ஒருவரைப்போல இன்னொருவர் செயற்படவும் வேண்டாம். உங்கள் வீடுகளிலுள்ள குழந்தைகளுக்கு மற்றவர்களைப் பற்றி கூறும்போது அவரிடமுள்ள நல்ல, கெட்ட விடயங்களை பற்றி கூறுங்கள், ஆனால் அவரைப்போல இரு, இவரைப்போல இராதே என்று திணிக்காதீர்கள்.
தானாக முடிவெடுத்து தனித்துவமாக செயலாற்றக்கூடிய ஆளுமை மிகு மனிதர்களே எதிர்காலத்துக்குத் தேவை. அடியொற்றி நடக்கும் அடிமைகள் அல்ல.

Re: "தனித்துவம்" காப்போம் ; "சுயமிழத்தல்" தவிர்ப்போம்.
ஆரம்பமே மிகவும் சிறந்த தகவல் பகிர்வுக்கு நன்றி
மிகவும் அவசியமான அனைவரும் படிக்க வேண்டிய தகவல் நன்றி உறவே தொடருங்கள் இணைந்திருங்கள் நன்றி.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: "தனித்துவம்" காப்போம் ; "சுயமிழத்தல்" தவிர்ப்போம்.
மிகவும் சிறந்த பதிவு
நன்றி வேணுதன்.
அது சரி எனக்கு ஒன்னுமட்டும் புரியல நீங்க கெட்டவரா? :)

ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: "தனித்துவம்" காப்போம் ; "சுயமிழத்தல்" தவிர்ப்போம்.
ஏன்மா சரண்யா இப்படி ஒரு கேள்வி :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: "தனித்துவம்" காப்போம் ; "சுயமிழத்தல்" தவிர்ப்போம்.
மிகவும் அவசியமான அனைவரும் படிக்க வேண்டிய தகவல் நன்றி பகிர்விற்க்கு :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஆயுளை நீட்டிப்போம், புகைப்பதை தவிர்ப்போம்...: நுரையீரல் காப்போம்..
» உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!
» தனித்துவம்..!
» பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்ப்போம்...
» தலைக்கனம் தவிர்ப்போம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum