சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தானம் தருவதற்கு தேவையானது Khan11

தானம் தருவதற்கு தேவையானது

3 posters

Go down

தானம் தருவதற்கு தேவையானது Empty தானம் தருவதற்கு தேவையானது

Post by veel Mon 25 Apr 2011 - 17:07

தானம் தருவதற்கு தேவையானது மனமா? அல்லது பொருளா ?

ஒரு முறை தர்மம் செய்வதில் கர்ணன் சிறந்தவனாக இருப்பதை கண்ணபரமாத்மா சிறப்பித்து கூறவும் அருகில் இருந்த அர்ஜுனனுக்கு மிகவும் கோபம் வந்தது அதனால் அர்ஜுனன் கூறினான்,

கண்ணா,அடுத்தவர் பொருளை கர்ணன் தானம் செய்வதை புகழ்கிறாயே, கர்ணன் என்ன தனது பொருளையா கொடுத்தான்? துரியோதனனின் சொத்தை தானே தானம் தந்தான், என்னிடமும் மற்றவர் பொருள் இருந்தால் நானும் செய்வேன், நான் என்ன யார் வேண்டுமானாலும் தானம் செய்வார்கள் என்று ஏளனம் செய்தான்.

அதைகேட்ட கண்ணன், அர்ஜுனா, நீ சொல்வது சரியல்ல, தானம் தருவதென்பது பொருளால் அல்ல மனத்தால் தரவேண்டும். அதை உயிராக பெற்றவன் கர்ணன், அவன் தானத்தால் உயர்ந்தவன் அவனை ஏளனம் செய்யாதே என எடுத்துரைத்தார்.

அதை கேட்டு சிரித்த அர்ஜுனன், கண்ணா, நீ என்ன சொன்னாலும் மாற்றான் பொருளை தானம் தருவதற்கு மனம் எதற்கு? நீ கொடு நான் தானம் செய்து காட்டுகிறேன் பார் என பதிலுரைத்தான்.

இதனை கேட்ட பரமாத்மா, அர்ஜுனா, இதோ உன் முன்னால் இரண்டு வெள்ளியால் உருவான மலைகளை உருவாக்குகிறேன் இவற்றை இன்று சூர்ய அஸ்தமனத்திற்கு முன் உன்னால் தானம் தரமுடியுமா ? என கேட்டார்.

அதற்கென்ன, அதற்கு முன்பாகவே நான் தானம் தந்து முடிப்பேன் கண்ணா, ஆனால் அதற்குப்பின் என் முன்னால் தானம் தருவதில் கர்ணன் தான் சிறந்தவன் என் சிறப்பித்து கூறக்கூடாது என அர்ஜுனன் கூறினான்.

அப்படியே ஆகட்டும் என கூறி அந்த இடத்தில் இரண்டு வெள்ளிமலைகளை கண்ணபரமாத்மா உருவாக்கி விட்டு சூர்ய அஸ்தமன காலம் வந்து பார்ப்பதாக சொல்லி சென்றார்.

அர்ஜுனனும் அந்த வெள்ளி மலைகளின்மீது ஒரு அம்பை எய்து வெள்ளிமலைகளை சிறு சிறு துண்டுகளாக்கி வைத்து எல்லோருக்கும் பறையறிவிக்க செய்து தானம் தர முற்பட்டான் மக்கள் பெருமளவில் வந்து வாங்கிச் சென்றார்கள்.

சூர்ய அஸ்தமனமாக ஓரிரு நாழிகைகளே இருக்கும் சமயத்தில் கண்ண பரமாத்மா அங்கு வந்தார். அப்பொழுது அந்த வெள்ளிமலை இரண்டிலும் பாதிக்கும் மேல் அப்படியே இருந்தது.

என்ன அர்ஜுனா, அஸ்தமனத்திற்கு இரண்டு நாழிகையே இருக்கிறது மலைகளில் பாதி அப்படியே இருக்கிறதே என கேட்டார்.

அதற்கு அர்ஜுனன், கண்ணா, என்னிடம் விசேஷமான அஸ்திரங்கள் இருந்தமையால் நான் இவ்வளவாவது கொடுத்தேன், கர்ணனிடம் கொடுத்திருந்தால் அவனிடம் விசேஷ அஸ்திரங்களும் இல்லை, இன்னும் மலையையே வெட்டி முடித்திருக்கமாடான் என்று சொல்லி சிரித்தான்.


அப்படியா சொல்கிறாய் அர்ஜுனா, இப்போது பார் இன்னும் இரண்டு நாழிகை இருக்கிறது அதற்குள் இந்த மலையை கர்ணன் எப்படி தானம் தருகிறான் பார்க்கிறாயா ? என்று சொல்லி, யாரங்கே! நான் அழைத்ததாக சொல்லி கர்ணனை அழைத்து வாருங்கள் என்றார்.


அடுத்த சில நொடிகளில் கர்ணன் வந்து சேர்ந்து பரமாத்மா எதற்கு என்னை அழைத்தீர்கள் என பணிவுடன் வினவினான்.

அதற்கு கண்ணன், ஒன்றுமில்லை கர்ணா, இந்த இரண்டு வெள்ளிமலைகளை தானம் தரவேண்டும் அதுவும் சூர்ய அஸ்தமனத்திற்குள் முடிக்கவேண்டும் உன்னால் முடியுமா ? என கேட்டார்.

எந்த மலைகள் என கர்ணன் கேட்டான்,

இதோ இந்த மலைகள்தான் இந்த மீதமிருந்த இரண்டு வெள்ளிமலைகளை கண்ணன் கர்ணனுக்கு காட்டினார்.

உடனே கர்ணன், யாரங்கே! இங்கே இரண்டுபேர் வாருங்கள் என அழைத்து வந்த இரண்டு பேரிடமும் இந்த வெள்ளிமலைகளை ஆளுக்கு ஒன்றாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினான்.

பிறகு கண்ணனைப் பார்த்து, கண்ணா,வேறு ஏதாவது இருக்கிறதா என பவ்யமாக வினவினான்.

ஒன்றுமில்லையப்பா, நீ சென்று வா என் கர்ணனை வழியனுப்பி வைத்தார் கண்ணன்.

அர்ஜுனா, இந்த மலை உன்னுடையது இல்லை ஆனாலும் உனக்கு பரந்த மனம் இல்லாததால் மலையை துண்டுகளாக்கி தானம் செய்தாய், ஆனால் கர்ணன் வந்தான் இரண்டு மலையையும் சர்வ சாதாரணமாக அள்ளி தந்து விட்டு வேறு என்ன என்று கேட்கிறான் இதற்குதான் சொன்னேன் தானம் தருவதற்கு பொருள் பிரதானம் அல்ல மனம் வேண்டும் புரிந்ததா என்றார்.
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

தானம் தருவதற்கு தேவையானது Empty Re: தானம் தருவதற்கு தேவையானது

Post by மீனு Mon 25 Apr 2011 - 17:10

மனம் இருந்தால் போதும் சிறந்த தகவலுக்கு நன்றி வேல்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

தானம் தருவதற்கு தேவையானது Empty Re: தானம் தருவதற்கு தேவையானது

Post by நண்பன் Mon 25 Apr 2011 - 21:16

மீனு wrote:மனம் இருந்தால் போதும் சிறந்த தகவலுக்கு நன்றி வேல்
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தானம் தருவதற்கு தேவையானது Empty Re: தானம் தருவதற்கு தேவையானது

Post by veel Wed 27 Apr 2011 - 16:10

மீனு wrote:மனம் இருந்தால் போதும்

மிக்க நன்றி :,”,:
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

தானம் தருவதற்கு தேவையானது Empty Re: தானம் தருவதற்கு தேவையானது

Post by veel Wed 27 Apr 2011 - 16:12

நண்பன்,,நன்றிகள்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

தானம் தருவதற்கு தேவையானது Empty Re: தானம் தருவதற்கு தேவையானது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum