சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Khan11

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Empty பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:32

First topic message reminder :

1] இறைமறை வசனங்கள் - நபிமொழிச் சான்றுகள்

[சான்று 1:1] இறைவசனம்

وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ ...

"(நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கு அவர்கள்தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் (இயல்பாக) வெளியே தெரிபவற்றைத்தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். மேலும், தமது முக்காடுகளை(நீட்டி)த் தம் மார்பின்மேல் போட்டு(மறைத்து)க் கொள்ளட்டும் ..." (அல்குர்ஆன் 24:31)

இந்த இறைவசனத்தின் மூலத்தில் ஆளப்பட்டுள்ள கும்ரு ( خُمْرُ ) எனும் அரபுச்சொல், கிமார் ( خِماَرٌ ) எனும் சொல்லின் பன்மையாகும். அதற்கு, தலையை மறைக்கும் துணி (ஸ்கர்ஃப்/மஃப்ளர்) என்பது பொருளாம்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:49

சான்று [3:2] ஹதீஸ் :

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ الثَّقَفِيُّ حَدَّثَنَا يَعْقُوبُ يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيَّ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ح وَحَدَّثَنَاه قُتَيْبَةُ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ عَنْ أَبِيهِ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ قَالَ جَاءَتْ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ جِئْتُ أَهَبُ لَكَ نَفْسِي فَنَظَرَ إِلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَعَّدَ النَّظَرَ فِيهَا وَصَوَّبَهُ ثُمَّ طَأْطَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ فَلَمَّا رَأَتْ الْمَرْأَةُ أَنَّهُ لَمْ يَقْضِ فِيهَا شَيْئًا جَلَسَتْ فَقَامَ رَجُلٌ مِنْ أَصْحَابِهِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنْ لَمْ يَكُنْ لَكَ بِهَا حَاجَةٌ فَزَوِّجْنِيهَا ...

ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு என்னையே அளிக்க வந்துள்ளேன்'' என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அப்பெண்ணை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டுப் பார்வையைத் தாழ்த்தியபின் தமது தலையைத் தொங்கவிட்டுக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன் விஷயத்தில் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண்மணி (அந்த அவையில்) அமர்ந்துகொண்டார்.

அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு இப்பெண் தேவையில்லையென்றால், இவரை எனக்கு மணமுடித்துவையுங்கள்'' என்றார் ... அறிவிப்பாளர்: ஸஹ்லிப்னு ஸஅத் அஸ்ஸாயிதீ (ரலி) - முஸ்லிம் 2785.

அந்த அவையில் இருந்த நபித்தோழர்கள் உட்பட அனைவரும் பார்க்கும் வண்ணம் முகத்திரை இன்றியே அப்பெண் அங்கு வந்திருக்கிறார் என்பதை, அவரைப் பார்த்து விரும்பிய நபித்தோழரின் சொற்களிலிருந்து அறிய முடிகிறது. திறந்த முகத்துடன் அவைக்கு வந்த அப்பெண்ணை நிமிர்ந்து பார்த்த நபி (ஸல்), "முகத்தை மூடிக்கொள்" என்று கட்டளையிடவில்லை.

பின்னர், அப்பெண்ணை விரும்பிய நபித்தோழருக்கு அவர் மனனமிட்டிருந்த குர்ஆன் வசனங்களை மஹராக்கி, நபி (ஸல்) அவர்கள் மணம் செய்து கொடுத்தார்கள்.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:50

சான்று [3:3] ஹதீஸ் :

وعن عمار بن ياسر رضي الله عنهما: أن رجلاً مرت به امرأة فأحدق بصره إليها. فمر بجدار، فمرس وجهه، فأتى رسول الله -صلى الله عليه وسلم-، ووجهه يسيل دمًا. فقال: يا رسول الله إني فعلت كذا وكذا. فقال رسول الله -صلى الله عليه وسلم-: "إذا أراد الله بعبد خيرًا عجل عقوبة ذنبه في الدنيا، وإذا أراد به غير ذلك أمهل عليه بذنوبه، حتى يوافي بها يوم القيامة، كأنه عَيْر

ஒருவர், ஒரு பெண்ணைக் கடந்து செல்லும்போது (அவளது அழகால் ஈர்க்கப்பட்டு) அவள்மீது வைத்த பார்வையை எடுக்காமல் நடந்து சென்றதில் ஒரு சுவரில்போய் முட்டிக் கொண்டார். அவரது முகம் முழுக்க இரத்தமானது. அந்த இரத்தக் கோலத்தோடு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, தான் நடந்து கொண்டதைப் பற்றி விவரித்தார். அதற்கு, "அல்லாஹ் தன் அடியாருக்கு நலன் நாடினால் அவருடைய பாவத்துக்கு இவ்வுலகிலேயே விரைவாக அவரைத் தண்டித்து விடுகிறான். அவ்வாறின்றி மறுமை விசாரணைவரையில் அப்பாவத்துக்குத் தவணை அளிக்க விரும்பினால் அவரைக் கழுதையைப்போல் (பாவப்பொதி) சுமக்க வைத்து விடுகிறான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அம்மார் பின் யாஸர் (ரலி) - அஸ்ஸவாயித் 10/192.

அந்த அழகி, முகத்திரை அணியாமல் பொதுவிடத்துக்கு வந்திருந்தால் மட்டுமே இந்நிகழ்வு சாத்தியமாகும்.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:50

சான்று [3:4] ஹதீஸ் :

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ الْمِصْرِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْهَادِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏يَا ‏ ‏مَعْشَرَ ‏ ‏النِّسَاءِ تَصَدَّقْنَ وَأَكْثِرْنَ ‏ ‏الِاسْتِغْفَارَ فَإِنِّي رَأَيْتُكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ فَقَالَتْ امْرَأَةٌ مِنْهُنَّ ‏ ‏جَزْلَةٌ ‏ ‏وَمَا لَنَا يَا رَسُولَ اللَّهِ أَكْثَرَ أَهْلِ النَّارِ قَالَ تُكْثِرْنَ اللَّعْنَ ‏ ‏وَتَكْفُرْنَ ‏ ‏الْعَشِيرَ ‏ ‏وَمَا رَأَيْتُ مِنْ نَاقِصَاتِ عَقْلٍ وَدِينٍ أَغْلَبَ لِذِي ‏ ‏لُبٍّ ‏ ‏مِنْكُنَّ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ وَمَا نُقْصَانُ الْعَقْلِ وَالدِّينِ قَالَ أَمَّا نُقْصَانُ الْعَقْلِ فَشَهَادَةُ امْرَأَتَيْنِ تَعْدِلُ شَهَادَةَ رَجُلٍ فَهَذَا نُقْصَانُ الْعَقْلِ وَتَمْكُثُ اللَّيَالِي مَا تُصَلِّي وَتُفْطِرُ فِي رَمَضَانَ فَهَذَا نُقْصَانُ الدِّينِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு நாள் உரையாற்றும்போது), "பெண்கள் சமுதாயமே! தான தர்மங்கள் (அதிகம்) செய்யுங்கள்; அதிகமாகப் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை (விண்ணேற்றத்தின்போது) நான் கண்டேன்" என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த புத்திசாலியான ஒரு பெண்மணி, “நரகவாசிகளில் அதிகம் பேராக நாங்கள் இருப்பதற்கான காரணம் என்ன? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), "நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனிடம் நன்றி இல்லாதவர்களாக நடந்து கொள்கிறீர்கள்; அறிவிலும் மார்க்கத்திலும் குறைபாடுள்ளவர்களாகவும் அறிவிற் சிறந்தோரைக்கூட (கவர்ச்சியால்) வீழ்த்தக் கூடியவர்களாகவும் (பெண்களான) உங்களைப் போன்று வேறு யாரையும் நான் பார்த்ததில்லை" என்று பதிலளித்தார்கள்.

அப்பெண்மணி, "அறிவிலும் மார்க்கத்திலும் எங்களுடைய குறைபாடு என்ன? அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), "அறிவிலுள்ள குறைபாடு யாதெனில், ஓர் ஆணின் சாட்சியத்திற்கு இரு பெண்களின் சாட்சியம் நிகர் என்பது (பெண்களின்) அறிவிலுள்ள குறைபாடாகும். (மாதவிடாய் ஏற்படும்) பல நாட்கள் அவள் தொழுவதில்லை; ரமளானில் (மாதவிடாய் ஏற்பட்டால்) நோன்பு நோற்பதுமில்லை. இது (பெண்களின்) மார்க்கத்திலுள்ள குறைபாடு" என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) - முஸ்லிம் 114.

நபி (ஸல்) அறிவுரை கூறியது ஒரு பெருநாளின் தொழுகைக்குப் பின்னர் என்று மேற்கண்ட ஹதீஸைப் போன்ற ஸஹீஹ் முஸ்லிமின் கீழ்க்காணும் இன்னொரு அறிவிப்புத் தெளிவாக்குகிறது:

صحيح مسلم بشرح النووي - فقامت امرأة من سطة النساء سفعاء الخدين فقالت لم يا رسول الله قال لأنكن تكثرن الشكاة وتكفرن العشير قال فجعلن يتصدقن من حليهن يلقين في ثوب بلال من أقرطتهن وخواتمهن

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ يَوْمَ الْعِيدِ فَبَدَأَ بِالصَّلَاةِ قَبْلَ الْخُطْبَةِ بِغَيْرِ أَذَانٍ وَلَا إِقَامَةٍ ثُمَّ قَامَ مُتَوَكِّئًا عَلَى بِلَالٍ فَأَمَرَ بِتَقْوَى اللَّهِ وَحَثَّ عَلَى طَاعَتِهِ وَوَعَظَ النَّاسَ وَذَكَّرَهُمْ ثُمَّ مَضَى حَتَّى أَتَى النِّسَاءَ فَوَعَظَهُنَّ وَذَكَّرَهُنَّ فَقَالَ تَصَدَّقْنَ فَإِنَّ أَكْثَرَكُنَّ حَطَبُ جَهَنَّمَ فَقَامَتْ امْرَأَةٌ مِنْ سِطَةِ النِّسَاءِ سَفْعَاءُ الْخَدَّيْنِ فَقَالَتْ لِمَ يَا رَسُولَ اللَّهِ قَالَ لِأَنَّكُنَّ تُكْثِرْنَ الشَّكَاةَ وَتَكْفُرْنَ الْعَشِيرَ قَالَ فَجَعَلْنَ يَتَصَدَّقْنَ مِنْ حُلِيِّهِنَّ يُلْقِينَ فِي ثَوْبِ بِلَالٍ مِنْ أَقْرِطَتِهِنَّ وَخَوَاتِمِهِنَّ

அத்துடன், "அல்லாஹ்வின் தூதரிடம் கேள்வி கேட்ட பெண், உப்பிய-கருத்த கன்னங்களை உடையவராக இருந்தார்" என்று அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) குறிப்பிட்டுள்ள மேற்காணும் ஹதீஸ் தரும் கூடுதல் தகவலின் அடிப்படையில், பெருநாள் தொழுகைக்குப் பொது இடத்துக்கு வந்த அந்த நபித்தோழி, முகத்தை மறைத்துக் கொண்டு வரவில்லை என்று விளங்க முடிகிறது. முகத்தை மூடியிருந்தால் கன்னங்களைக் கண்டு, அதன் நிறத்தைப் பிறருக்கு எடுத்துக்கூற முடியாது. அப்பெண்மணிக்கு விளக்கமளித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவரை முகத்தை மூடிக்கொள்ளுமாறு கட்டளையிடவில்லை.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:51

சான்று [3:5] ஹதீஸ் :

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும் பின்னும் எதையும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால் (ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி (ஸல்) விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் (கழட்டிப்) போடலானார்கள். அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி) - புகாரீ 964.

இந்த ஹதீஸ், அந்நியரான பிலால் (ரலி) தம் ஆடையை ஏந்திக் கொள்ள, நபித்தோழியர் தம் ஆபரணங்களைக் கழட்டிப் போட்டனர் என்று புகாரீயில் பதிவாகியுள்ளது.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:52

சான்று [3:6] ஹதீஸ் :

"... நான் நபி(ஸல்) அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் இருப்பது குற்றமா?" என நான் கேட்டதற்கு, "அவளுடைய தோழி தன்னுடைய உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : உம்மு அதிய்யா (ரலி) - புகாரீ 324.


இந்த ஹதீஸின் கேள்வி-பதில் இரண்டும் வெளியில் செல்லும்போது 'மேலங்கி'யைப் பற்றியே பேசுகிறது. 'முகத்திரை'யைப் பற்றிக் கேள்வியிலும் பதிலிலும் எவ்விதக் குறிப்பும் இல்லையாதலால், பெண்கள் வெளியில் செல்லும்போது கூடுதலாக மேலங்கிதான் தேவையே அன்றி முகத்திரையன்று என்பதை விளக்குகிறது.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:52

சான்று [3:7] ஹதீஸ் :

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا فُلَيْحٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الصُّبْحَ بِغَلَسٍ فَيَنْصَرِفْنَ نِسَاءُ الْمُؤْمِنِينَ لَا يُعْرَفْنَ مِنْ الْغَلَسِ أَوْ لَا يَعْرِفُ بَعْضُهُنَّ بَعْضًا

நபி (ஸல்) அவர்கள் ஸுபுஹுத் தொழுகையை இருட்டில் தொழுவார்கள். இறைநம்பிக்கையுள்ள பெண்கள் (அவர்களுடன் தொழுதுவிட்டுத் தம் இல்லம்) திரும்புவார்கள். இருட்டின் காரணத்தால் அவர்கள் (யாரென) அறியப்பட மாட்டார்கள். அவர்கள் ஒருவரையொருவர் அறிய மாட்டார்கள். அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) - புகாரீ 872.

மேற்காணும் ஹதீஸில், இருளின் காரணத்தால் நபித்தோழியரை அறிய முடியாது எனக் குறிப்பிட்டிருப்பதால், பகலாக இருந்தால் அறிந்து கொள்ள முடியும் என விளங்க முடிகிறது.

இந்த ஹதீஸை,

وَقَالَ الْبَاجِيُّ : هَذَا يَدُلُّ عَلَى أَنَّهُنَّ كُنَّ سَافِرَاتٍ إِذْ لَوْ كُنَّ مُتَنَقِّبَاتٍ لَمَنَعَ تَغْطِيَةُ الْوَجْهِ مِنْ مَعْرِفَتِهِنَّ لَا الْغَلَسُ

"பள்ளிக்கு வந்து போகும் பெண்கள் முகத்திரை (நிகாப்) அணிந்து கொண்டிருக்கவில்லை என்பதற்குச் சான்றாகக் கொள்ளலாம்" என அல்பாஜி (ரஹ்) கூறுவதாக, புகாரீயின் விரிவுரையில் இமாம் அஸ்கலானீ (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:52

சான்று [3:8] ஹதீஸ் :

حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا نُوحُ بْنُ قَيْسٍ الْحُدَّانِيُّ عَنْ عَمْرِو بْنِ مَالِكٍ عَنْ أَبِي الْجَوْزَاءِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَتْ امْرَأَةٌ تُصَلِّي خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَسْنَاءَ مِنْ أَحْسَنِ النَّاسِ فَكَانَ بَعْضُ الْقَوْمِ يَتَقَدَّمُ حَتَّى يَكُونَ فِي الصَّفِّ الْأَوَّلِ لِئَلَّا يَرَاهَا وَيَسْتَأْخِرُ بَعْضُهُمْ حَتَّى يَكُونَ فِي الصَّفِّ الْمُؤَخَّرِ فَإِذَا رَكَعَ نَظَرَ مِنْ تَحْتِ إِبْطَيْهِ

அல்லாஹ்வின் தூதரின் (ஒரு) தொழுகையின் (கடைசி) வரிசையில் பெண்களுள் பேரழகுப்பெண் ஒருத்தி தொழுதாள். முன்வரிசைகளில் இருந்த ஆண்களில் சிலர் அவளைப் பார்க்கும் ஆவலில் கடைசி வரிசைக்கு வந்தனர். ருகூஉக்குச் செல்லும்போது தம்மிரு முழங்கால்களின் இடையினூடாக அவளைப் பார்த்தனர்... அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி) - திர்மிதீ 3122.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:53

சான்று [3:9] ஹதீஸ் :

وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى وَتَقَارَبَا فِي اللَّفْظِ قَالَ حَرْمَلَةُ حَدَّثَنَا وَقَالَ أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ حَدَّثَنِي يُونُسُ بْنُ يَزِيدَ عَنْ ابْنِ شِهَابٍ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ أَنَّ أَبَاهُ كَتَبَ إِلَى عُمَرَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَرْقَمِ الزُّهْرِيِّ يَأْمُرُهُ أَنْ يَدْخُلَ عَلَى سُبَيْعَةَ بِنْتِ الْحَارِثِ الْأَسْلَمِيَّةِ فَيَسْأَلَهَا عَنْ حَدِيثِهَا وَعَمَّا قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ اسْتَفْتَتْهُ فَكَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ يُخْبِرُهُ أَنَّ سُبَيْعَةَ أَخْبَرَتْهُ أَنَّهَا كَانَتْ تَحْتَ سَعْدِ بْنِ خَوْلَةَ وَهُوَ فِي بَنِي عَامِرِ بْنِ لُؤَيٍّ وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا فَتُوُفِّيَ عَنْهَا فِي حَجَّةِ الْوَدَاعِ وَهِيَ حَامِلٌ فَلَمْ تَنْشَبْ أَنْ وَضَعَتْ حَمْلَهَا بَعْدَ وَفَاتِهِ فَلَمَّا تَعَلَّتْ مِنْ نِفَاسِهَا تَجَمَّلَتْ لِلْخُطَّابِ فَدَخَلَ عَلَيْهَا أَبُو السَّنَابِلِ بْنُ بَعْكَكٍ رَجُلٌ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ فَقَالَ لَهَا مَا لِي أَرَاكِ مُتَجَمِّلَةً لَعَلَّكِ تَرْجِينَ النِّكَاحَ إِنَّكِ وَاللَّهِ مَا أَنْتِ بِنَاكِحٍ حَتَّى تَمُرَّ عَلَيْكِ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرٌ قَالَتْ سُبَيْعَةُ فَلَمَّا قَالَ لِي ذَلِكَ جَمَعْتُ عَلَيَّ ثِيَابِي حِينَ أَمْسَيْتُ فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَأَفْتَانِي بِأَنِّي قَدْ حَلَلْتُ حِينَ وَضَعْتُ حَمْلِي وَأَمَرَنِي بِالتَّزَوُّجِ إِنْ بَدَا لِي قَالَ ابْنُ شِهَابٍ فَلَا أَرَى بَأْسًا أَنْ تَتَزَوَّجَ حِينَ وَضَعَتْ وَإِنْ كَانَتْ فِي دَمِهَا غَيْرَ أَنْ لَا يَقْرَبُهَا زَوْجُهَا حَتَّى تَطْهُرَ

"என் தந்தையான அப்துல்லாஹ் பின் உத்பா, உமர் பின் அப்தில்லாஹ் பின் அர்கம் அஸ்ஸுஹ்ரீ அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், அல் அஸ்லமிய்யாவின் மகள் ஸுபைஆ (ரலி) அவர்களிடம் சென்று, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்டது பற்றியும் அதற்கு நபி (ஸல்) அளித்த தீர்ப்பு என்ன என்பது பற்றியும் (விபரம்) கேட்டு எழுதுமாறு பணித்திருந்தார்கள். (அதன்படி, ஸுபைஆ அவர்களிடம் சென்று) உமர் பின் அப்தில்லாஹ் (கேட்டறிந்து, என் தந்தை) அப்துல்லாஹ் பின் உத்பா அவர்களுக்கு(ப் பின்வருமாறு பதில்) செய்தி அனுப்பினார்கள்" என்று உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) கூறினார்கள் :

அல்ஹாரிஸின் மகள் ஸுபைஆ (ரலி), பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தைச் சேர்ந்தவரும் பத்ருப் போராளியுமான ஸஅத் பின் கவ்லா (ரலி) அவர்களை மணம் புரிந்திருந்தார்.

விடைபெறும் ஹஜ்ஜின்போது ஸஅத் (ரலி) இறந்து விட்டார்கள். அப்போது ஸுபைஆ (ரலி) நிறைமாத சூலியாயிருந்தார். ஸஅத் (ரலி) இறந்து (இரண்டொரு இரவு) குறுகிய காலத்துக்குள் ஸுபைஆ (ரலி) பிரசவித்து விட்டார். (பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப்போக்கிலிருந்து ஸுபைஆ (ரலி) தூய்மையான பின்னர், பெண்பேச வருபவர்களுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார்.

அப்போது, பனூ அப்தித் தார் குலத்தவரான அபுஸ் ஸனாபில் பின் பஅக்கக் (ரலி), ஸுபைஆ (ரலி) அவர்களிடம் வந்து, ''திருமணம் புரியும் ஆசையில் பெண்பேச வருபவர்களுக்காக உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை நான் காண்கின்றேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறந்த ஒரு பெண் அவனது இறப்புக்குப்பின் காத்திருக்க வேண்டிய 'இத்தா' காலமாகிய) நான்கு மாதம் பத்து நாட்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு)மணம் புரிந்து கொள்ள முடியாது'' என்று கூறினார்கள்.

ஸுபைஆ (ரலி) கூறுகிறார்கள்:

இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து நான் மாலைநேரத்தில் (வெளியில் செல்லும்போது அணியும்) எனது உடையை உடுத்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அவர்களிடத்தில் இது பற்றிக் கேட்டேன். அதற்கு, "நீ பிரசவித்து விட்டபோதே (மணம் புரிந்து கொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாய். நீ விரும்பினால் (மறு)மணம் செய்துகொள்" என்று நபி (ஸல்) அவர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள் - புகாரீ 3991.

ஸுபைஆ (ரலி) கண்ணுக்கு சுர்மா இட்டிருந்ததாகவும் கையில் மருதாணி பூசியிருந்ததாகவும் அதை அந்நியரான அபுஸ்ஸனாபில் பார்த்துவிட்டு நபியவர்களிடம் வந்து கூறியதாவும் அஹ்மதில் இடம்பெற்றுள்ள 26166, 26167 எண்ணிட்ட ஹதீஸ்கள் தெளிவு படுத்துகின்றன. "நான்கு மாதம் பத்து நாட்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு)மணம் புரிந்து கொள்ள முடியாது'' என்று அறிவுறுத்துவதிலிருந்து அபுஸ்ஸனாபில் (ரலி), ஸுபைஆ (ரலி) அவர்களைத் திருமணம் பேசும் நோக்கில் அங்குச் செல்லவில்லை என்பதை அறிய முடிகிறது. கண்ணுக்கு சுர்மா இட்டு, கைகளில் மருதாணி இட்டு, அதை அந்நியரான அபுஸ்ஸனாபில் (ரலி) பார்க்கும் வகையில் தோற்றமளித்த ஸுபைஆ (ரலி) அவர்களைப் பற்றி அவர் விவரித்துக் கூறிய பின்னரும் நபி (ஸல்), விதவை ஸுபைஆ (ரலி) அவர்களைக் கண்டிக்கவில்லை என்பது இங்குக் கவனிக்கத் தக்கது.

எனவே ஒரு முஸ்லிம் பெண் தனது முகத்தையும் தனது முன் கையையும் வெளிப்படுத்திக் கொள்ள இந்த ஹதீஸ் தெளிவான ஆதாரமாக அமைந்துள்ளது. மேலும் இந்நிகழ்வு, ஹிஜாபுடைய வசனம் அருளப்பெற்று ஐந்தாண்டுக்குப் பின்னர், ஹஜ்ஜத்துல் விதாவுக்கும் பின்னர் நடந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:54

எனில்,

அல்லாஹ்வின் தூதருடைய காலத்துப் பெண்கள் யாருமே முகத்திரை(நிகாப்) அணிந்து முகத்தை மூடிக் கொண்டிருந்த ஹதீஸே இல்லையா எனும் கேள்வி எழும்.

[4] நபித்தோழியரின் முகத்திரை(நிகாப்)

சான்று [4:1] ஹதீஸ் :

மக்கத்து வெற்றியை அடுத்து, நபி (ஸல்), ஆண்களிடம் பைஅத் பெற்ற பின்பு பெண்களிடம் பைஅத் வாங்கினார்கள். அப்போது நபி (ஸல்) ஸஃபாவின் மீது அமர்ந்திருந்தார்கள். அதற்குக் கீழே உமர் (ரலி) அமர்ந்திருந்தார்கள். நபி (ஸல்) ஒவ்வொரு விஷயமாகக் கூற, அதனை உமர் (ரலி) அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்நேரத்தில் அபூஸுஃப்யானின் மனைவியான ஹிந்த் பின்த் உத்பா, நபியவர்களிடம் வந்தார். உஹுதுப் போரில் வீரமரணம் எய்திய ஹம்ஸா (ரலி) உடைய உடலைச் சின்னாபின்னமாக்கிய தனது செயலுக்கு நபி (ஸல்) என்ன செய்வார்களோ என்று அஞ்சியதால் தன்னை முழுதும் மறைத்துக் கொண்டு வந்தார் ஹிந்த். நபி (ஸல்) "நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டீர்கள் என்று எனக்கு வாக்குத் தரவேண்டும்" என்று கூற, உமர் (ரலி) பெண்களுக்கு அதை எடுத்துரைத்தார்கள். அடுத்து, "நீங்கள் திருடக் கூடாது" என்றார்கள். அதற்கு, "அபூஸுஃப்யான் ஒரு கஞ்சன். நான் அவருடைய பொருளில் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாமா?" என ஹிந்த் வினவினார். "நீ எதனை எடுத்துக் கொண்டாயோ அது உனக்கு ஆகுமானதே" என்று அபூஸுஃப்யான் (இடைமறித்துக்) கூறினார்.

நபி (ஸல்) அவ்விருவரின் உரையாடலைக் கேட்டுப் புன்னகை புரிந்தவர்களாக, "நிச்சமாக, நீ ஹிந்த்தானே?" என்று கேட்டார்கள். அதற்கவர், "ஆம்! நான் ஹிந்த்தான். சென்றுபோன என்னுடைய பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வும் தங்களைப் பொறுத்தருள்வான்!" என்று கூறினார். - ரஹீக்.

புகாரீயின் (5364) அறிவிப்பில், "உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக்கொள்!" என்று நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள் என்ற குறிப்பு உள்ளது.

நபி (ஸல்) மீதிருந்த அச்சத்தின் காரணமாக ஹிந்த், தம்மை முழுதும் மூடிக் கொண்டு அவைக்கு வந்தார் என்ற செய்தி, காரணத்துடன் பதிவாகியுள்ளது. அச்சம் தீர்ந்த நிலையில் ஹிந்த் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் என்ற ஒரு செய்தியும் பதிவாகியுள்ளது.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:54

சான்று [4:2] ஹதீஸ் :

குரைஷியரின் தலைவனான அபூஜஹல் இஸ்லாத்தின் தலையாய எதிரியாகத் திகழ்ந்தவன். பத்ருப் போரில் அவன் கொல்லப்பட்ட பின்னர் அவனுடைய மகனான இக்ரிமா குரைஷியருக்குத் தலைமை ஏற்கத் தக்கவராகக் கருதப்பட்டார். அகழிப் போரில் அலீ (ரலி) அவர்கள் காட்டிய வீரதீரத்துக்கு முன்னால் நிற்கமுடியாமல் இக்ரிமா அஞ்சி ஓடிப்போனார்.

( وَقَدِمَ عَلَى رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَامَ الْفَتْحِ ) لِمَكَّةَ ( فَلَمَّا رَآهُ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَثَبَ ) بِمُثَلَّثَةٍ فَمُوَحَّدَةٍ ، قَامَ بِسُرْعَةٍ ( فَرَحًا ) بِهِ ، بِفَتْحِ الرَّاءِ وَكَسْرِهَا ( وَمَا عَلَيْهِ رِدَاءٌ ) لِاسْتِعْجَالِهِ بِالْقِيَامِ حِينَ رَآهُ ( حَتَّى بَايَعَهُ ) وَفِي التِّرْمِذِيِّ مِنْ حَدِيثِهِ : " قَالَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَوْمَ جِئْتُهُ : مَرْحَبًا مَرْحَبًا بِالرَّاكِبِ الْمُهَاجِرِ " . وَعِنْدَ الْبَيْهَقِيِّ عَنِ الزُّهْرِيِّ : " فَوَقَفَ بَيْنَ يَدَيْهِ وَمَعَهُ زَوْجَتُهُ مُنْتَقِبَة ...

மக்கத்து வெற்றியின்போது, நபி (ஸல்), தம்மைத் தண்டிப்பார்கள் என்று அஞ்சி, மக்காவை விட்டே ஓடிப்போய் யமனில் ஒளிந்து கொண்டார் இக்ரிமா. மக்கத்து வெற்றியின்போது நபி (ஸல்) அவர்களின் 'பொது மன்னிப்பு' அறிவிப்பைக் கேள்விப்பட்டு, முஸ்லிமாகிவிட்ட இக்ரிமாவின் மனைவியான உம்மு ஹகீம் (ரலி), தம் கணவரை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துக் கொண்டு வந்தபோது முகத்திரை(நிகாப்) அணிந்து கொண்டு வந்தார் என்ற செய்தி, இபுனு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) வழியாக பைஹகீயில் பதிவாகி உள்ளது.

இதுபோக, கூடுதல் நாணத்தின் காரணமாகவும் பெண்கள் முகத்தை மூடிக் கொண்டு வெளியில் வந்த ஹதீஸும் அதற்கு நபித்தோழர்களின் விமர்சனமும் உண்டு:

ரோமர்கள் மதீனாவின்மீது படையெடுக்கும் முயற்சியில் இருப்பதாக நபி (ஸல்) கேள்விப்பட்டார்கள். அவ்வேளை கைபரில் யூதர்களின் அட்டகாசங்கள் அதிகரித்திருந்தன. அவர்களை அடக்குவதற்காக நபி (ஸல்), முஸ்லிம் படைவீரர்களுடன் கைபருக்குப் புறப்பட்டுச் சென்று கைபரை வெற்றி கொண்டார்கள். கைபரை நபி (ஸல்) வெற்றி கொண்டுவிட்ட செய்தியறிந்து ரோமர்கள் தம் மதீனப் படையெடுப்பைக் கைவிட்டனர் என்று வரலாறு கூறுகிறது.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:54

சான்று [4:3] ஹதீஸ் :

عون المعبود شرح سنن أبي داود - كِتَاب الْجِهَادِ - ابنك له أجر شهيدين قالت ولم ذاك يا رسول الله قال لأنه قتله أهل الكتاب

بَاب فَضْلِ قِتَالِ الرُّومِ عَلَى غَيْرِهِمْ مِنْ الْأُمَمِ

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَلَّامٍ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ عَنْ فَرَجِ بْنِ فَضَالَةَ عَنْ عَبْدِ الْخَبِيرِ بْنِ ثَابِتِ بْنِ قَيْسِ بْنِ شَمَّاسٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ جَاءَتْ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَالُ لَهَا أُمُّ خَلَّادٍ وَهِيَ مُنْتَقِبَةٌ تَسْأَلُ عَنْ ابْنِهَا وَهُوَ مَقْتُولٌ فَقَالَ لَهَا بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِئْتِ تَسْأَلِينَ عَنْ ابْنِكِ وَأَنْتِ مُنْتَقِبَةٌ فَقَالَتْ إِنْ أُرْزَأَ ابْنِي فَلَنْ أُرْزَأَ حَيَائِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْنُكِ لَهُ أَجْرُ شَهِيدَيْنِ قَالَتْ وَلِمَ ذَاكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ لِأَنَّهُ قَتَلَهُ أَهْلُ الْكِتَابِ

கைபர் போரில் கொல்லப்பட்ட ஒரு முஸ்லிம் வீரரின் தாயான உம்மு கல்லாத் (ரலி) என்பவர், தம் மகனின் நிலையை அறிந்து கொள்ள முகத்திரை(நிகாப்) அணிந்து கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவைக்கு வந்தார். நபித்தோழர்களுள் சிலர், "மகனின் நிலையை அறிந்து கொள்வதற்கு வந்திருக்கும் நீ, முகத்தை மறைத்துக் கொண்டு வந்திருக்கிறாயே!" என்று கேட்டனர். அதற்கு, "என் மகனைப் பற்றிய சோகம் போதாதென்று எனது வெட்கத்தை விடும் சோகத்தையும் நான் அடைவதற்கில்லை" என்று அந்தத் தாய் கூறினார். (அவரை அடையாளம் தெரிந்து கொண்டு) "உன் மகன் இரு அறப்போராளிகளின் நன்மையை அடைந்து விட்டார்" என்று நபி (ஸல்) கூறினார்கள். "அது எப்படி?" என்று அந்தத் தாய் வினவ, "வேதம் வழங்கப்பட்டவர்களால் அவர் கொல்லப்பட்டதால்" என்று நபி (ஸல்) விடை பகர்ந்தார்கள். அறிவிப்பாளர் : தாபித் இபுனு கைஸ் (ரலி) - அபூதாவூத் 2482.

கைபர் போர் ஹிஜ்ரீ 7இல் நடைபெற்றது. அதாவது ஹிஜாபுடைய வசனம் அருளப்பெற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்.

ஹிஜாபுடைய வசனத்தின் மூலமாக 'பெண்கள் முகத்தை மூடிக்கொண்டுதான் வெளியில் வரவேண்டும்' என்பது சட்டமாக்கப்பட்டிருந்தால் நபித்தோழர்கள், "முகத்தை ஏன் மூடிக்கொண்டு வந்திருக்கிறாய்?" என்ற ஒரு கேள்வியைக் கேட்டிருக்கவே முடியாது. அப்படியே கேட்டாலும் நபித்தோழர்களுடைய கேள்விக்கு உம்மு கல்லாத் (ரலி) அவர்களின் பதில் "ஹிஜாபுடைய வசனமான அல்லாஹ்வின் வேதச்சட்டப்படி நான் முகத்திரை அணிந்து வந்திருக்கிறேன்" என்பதாக இருந்திருக்கும். ஆனால், உம்மு கல்லாத் (ரலி) அவர்களின் பதில் அவருடைய சொந்த விருப்பத்தைத்தான் வெளிப்படுத்துகிறது.

இதுபோன்ற இன்னபிற நபித்தோழியர் பற்றிய அறிவிப்புகள் சில உள. அவை அனைத்தும் அவர்தம் சொந்த விருப்பங்களைத் தெரிவிக்கின்றனவேயன்றி, குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் அமைந்த சட்டத்தைச் சுட்டி நிற்கவில்லை.

ஹிஜாபுடைய வசனம் அருளப்பட்டு ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஹஜ்ஜத்துல் விதா நடைபெற்றது. அந்த ஹஜ்ஜின்போது நடந்த நிகழ்வை இங்குக் குறிப்பிடுதல் பொருத்தமாக இருக்கும்:


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:55

சான்று [4:4] ஹதீஸ் :

"இறைத்தூதர் அவர்களே! இஹ்ராம் அணிந்திருக்கும்போது எந்த ஆடைகளை நாங்கள் அணிய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?' என்று ஒருவர் எழுந்து கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் சட்டைகளையும் கால்சட்டைகளையும் தலைப்பாகைகளையும் தொப்பிகளையும் அணியாதீர்கள்! ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கரண்டைக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக் கொள்ளட்டும்! குங்குமப் பூச்சாயம், வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த எதனையும் அணியாதீர்கள்! இஹ்ராம் அணிந்த பெண், முகத்திரை அணியக் கூடாது; அவள் கையுறைகளையும் அணியக் கூடாது!" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் - இப்னு உமர் - புகாரீ 1838

இந்த ஹதீஸில், நாம் ஆழ்ந்து சிந்தித்துப் பெறத்தக்க சட்டம் ஒன்றுள்ளது. இயல்பு வாழ்வில் அனுமதிக்கப்பட்ட சில நடைமுறைகளும் உடைகளும் இஹ்ராமின்போது தடை செய்யப்படும். காட்டாக, தைக்கப்பட்ட உடைகள், தலைப்பாகை, தொப்பி ஆகியன ஆண்களுக்கு இஹ்ராமின்போது தடை செய்யப் பட்டவையாகும். அதற்கு எதிராக, இயல்பு வாழ்வில் ஹராமாக்கப்பட்ட எதுவும் இஹ்ராமின்போது ஹலால் ஆகிவிடாது. இயல்பு வாழ்க்கையில் அனுமதிக்கப்பட்டவைதாம் இஹ்ராமிலும் அனுமதிக்கப்படும். இயல்பு வாழ்வில் பெண்கள் தம் முகத்தையும் கைகளையும் வெளிக்காட்டுவது தடுக்கப்பட்டது எனில் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராமின்போது ஹலாலாக்க மாட்டார்கள். "இஹ்ராமின்போது பெண்கள் முகத்திரை அணியக்கூடாது; கையுறைகள் அணியக்கூடாது" எனும் அல்லாஹ்வின் தூதரின் கட்டளையிலிருந்து பெண்களின் முகமும் கைகளும் கட்டாயம் மறைக்கப்பட வேண்டியவை அல்ல; இயல்பு வாழ்வில் அவை அனுமதிக்கப் பட்டவைதாம் என்ற தெளிவு நமக்குக் கிடைக்கிறது.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:56

முடிவுரை

முஸ்லிம் சமுதாயப் பெண்கள் எப்போதும் முகத்தைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்று நிறுவுவதற்காக இக்கட்டுரை எழுதப்படவில்லை என்பதை இங்கு அழுத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எல்லா நாட்டினருக்கும் எந்தக் காலத்தவருக்கும் இயைந்த சட்டங்களைத் தன்னுள்ளே கொண்டிலங்கும் இஸ்லாம், இந்தக் காலத்தில் முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தெளிவான தீர்வு வைத்திருக்கிறதா? எனும் வினாவோடு, சமகால முஸ்லிகளின் பழக்க-வழக்கங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இஸ்லாத்தின் வேர்களைத் தேடும் முயற்சியே இக்கட்டுரை.

அவற்றுள் தலையாய வேர்:

"... அவர்கள் (கண்ணியத்திற்கு உரியவர்களாக) அறியப்படுவதற்கும் (பிறரின்) தொல்லைக்கு உள்ளாகாமல் இருப்பதற்கும் இஃது ஏற்றதாகும் ..." (அல்குர்ஆன் 33:59).

யாரென்று அறியப்பட முடியாத, முகம் உட்பட முழுதும் மறைத்துக் கொள்ளும் 'புர்கா' உடையை ஓர் ஆண் அணிந்து கொண்டால், 'பெண்களுக்கு மட்டும்' இயக்கப்படும் பேருந்துகளிலோ ரயில்பெட்டிகளிலோ பயணிக்கலாம். மாட்டிக் கொள்ளும்வரை பெண்களோடு கலந்து குறும்புகள் செய்யலாம்.

மொத்த சமுதாயத்தையும் சீரழிக்க வந்துள்ள சின்னத்திரை சீரியல்களைப் பார்த்து, 'ஓடிப்போகும்' கலாச்சாரம் தற்போது தமிழகத்தில் பெருகி வருவதை யாரும் மறுக்க முடியாது. முகத்தை முழுமையாக மறைக்கும் நிகாப் அணிந்து கொண்டால், எந்தப் பெண்ணும் எந்த ஆணுடனும் எங்கு வேண்டுமானாலும் நடந்தும் போகலாம்; ஓடியும் போகலாம்.

நீதிமன்றத்துக்கு அபராதம் கட்டுவதற்காக வருகின்ற வாடிக்கை விபச்சாரிகள், கண்ணியம் என்பதாக நாம் கருதும் முகத்தை மூடும் புர்காவை அணிந்து கொண்டு வந்து போகின்றனர்.

உண்மையோ பொய்யோ, இராக்கில் தற்கொலைப் படையினரான ஆண்கள், பெண்கள் பயன்படுத்தும் முகம் மறைக்கும் புர்காவைப் பயன்படுத்திக் கொண்டு, குண்டு வெடிக்கச் செய்வதாகச் செய்திகளில் படிக்கிறோம்.

இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்துக்காக, சங்கீதா என்ற சகோதரி "100 கிலோ வெடிகுண்டுடன் நடமாடும் தீவிரவாதி ஆயிஷா" என்று நான்காண்டுகளுக்கு முன்னர் சித்தரிக்கப் பட்டதையும் அவரைத் தேடுதவதாகக் கூறிக்கொண்டு, "எல்லாத்தையும் தெறந்து காட்டு" என்று நம் முதல்வரின் காவல்துறை, பர்தா அணிந்து கொண்டு வெளியில் வந்த முஸ்லிம் பெண்களை மிரட்டி இழிவு செய்ததையும் நாம் இன்னும் மறந்துவிடவில்லை.

நம் முதல்வரின் மாவட்டமான திருவாரூருக்குள் அடங்குகின்ற, 'முஸ்லிம் ஊர்கள்' என்றே அறியப்படுகின்ற மூன்று ஊர்களுள் ஒன்றில் 6-12 வகுப்புகள்வரை பெண்கள் மட்டும் பயிலும் ஓர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. அப்பள்ளியின் நிர்வாகம், "தலையில் முக்காடு போட்டுக் கொண்டு மாணவிகள் பள்ளிக்கு வரக்கூடாது" என்று அண்மையில் கண்டிப்பான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. ஏனெனில், பயிலும் மாணவிகளுள் முக்காலே மூணுவீசம் நம் பெண்பிள்ளைகள் என்றாலும் நிர்வாகம் பிறமதத்தவர் கையில். கல்வி இயக்குநரும் மாவட்ட ஆட்சித் தலைவரும் அவர்களின் கையில்.

பல அமைப்புகளின் இடைவிடாத போராட்டத்துக்குப் பின்னர் - குறிப்பாக, மக்கள் செல்வாக்குப் பெருகி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலையீட்டுக்குப் பின்னர் - வெகு அண்மையில் நம் பெண்பிள்ளைகள் 'முக்காடு' போட்டுக் கொண்டு பள்ளிக்குச் செல்வதற்கு அனுமதி கிடைத்திருக்கிறது.

கல்வி கற்றுக் கொள்வதற்காக நம் பெண்கள் படும்பாடு நம் தமிழகத்தோடு நின்றுவிடவில்லை. ஒருகாலத்தில் உலகம் முழுவதற்குமான கிலாஃபத்தாக - இஸ்லாமியப் பேரரசாக விளங்கி, பின்னர் (1920இல்) அந்நிய ஏகாதிபத்தியத்தின் அடிவருடியான முஸ்தஃபா கெமாலால் 'மதசார்பற்றதாக' மாற்றப்பட்ட துருக்கியில், பல்கலைக் கழகத்தில் பயில வேண்டுமெனில், "பெண்கள் தம்தலையில் முக்காடு போடக்கூடாது" என்ற 'ஸெக்யூலர்' சட்டம் இன்றைய தேதிவரை நடப்பில் உள்ளது (allowing headscarves at universities by taking into consideration religious belief grounded a public law regulation on religious principles and therefore contradicted the principle of secularism). ஒரு பெண் கல்வி பயிலுவதற்கு அவள் தலையில் இடும் முக்காடு எவ்வாறு தடைக்கல்லாக இருக்கிறது? இது முட்டாள் சட்டமன்றோ? என் நம்பிக்கையோடு வாழும் வாழ்க்கையே எனக்கு உகந்தது (I don't feel I have to comply with what the state says. This is my faith - and I want to live by my faith) எனும் மாணவிகளின் எதிப்புக்குரல் இப்போது அங்கு வலுவடைந்து வருகிறது.

நம் சமுதாயம் - அதிலும் பெண் சமுதாயம் கல்வியில் எவ்வளவு பின்தங்கிக் கிடக்கின்றது? நம் பெண்மக்களுக்கு இன்னும் என்னென்ன வழிகளில் கல்வியூட்டலாம் என்று கவலையும் சிந்தனையும் கொண்டு, அதற்கான வழிமுறைகளை நாம் முன்னெடுக்க வேண்டும். அறப்போர்களில் பங்கு பெற்ற அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் இனத்தை "அறைக்குள் பூட்டி வைத்தே கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும்" என்பதுபோல் ஒரு சகோதரர் தெரிவித்திருந்த கருத்து உண்மையில் வருத்தத்தைத் தந்தது!
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:58

ஹிஜாப் என்பது உடலையோ முகத்தையோ மறைத்துக் கொள்ளும் உடை/துணி மட்டுமன்று. ஹிஜாப் ஆடை என்பது பெண்களின் ஒட்டுமொத்த ஒழுக்கத்துக்கான பகுதிகளுள் ஒன்று.

பார்க்கும் பார்வைக்கு ஹிஜாப் இருக்கிறது:

"(நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கு அவர்கள்தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் கூறுவீராக! ..."(24:31).

பேசும் பேச்சுக்கு ஹிஜாப் இருக்கிறது:

"... எனவே, நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி வாழ்வோராயின், (அந்நியருடன் பேசும்) பேச்சில் குழைவு காட்டாதீர்! ..." (33:32).

நடந்து செல்லும் நடைக்கும் ஹிஜாப் இருக்கிறது:

"... தங்களின் மறைவான அலங்காரங்கள் அறியப்படுவதற்காகத் தங்கள் கால்களை(த் தரையில்) தட்டி(க்காட்டி) நடந்து செல்லக்கூடாது ..." (24:31).


'ஹிஜாப்' என்ற பெயரில் முழுக்க உடையணிந்தும் எல்லாம் வெளியில் தெரியப் பொதுவில் வைத்து பவனிவரும் நவநாகரிக நங்கையரை நாம் இன்று நேரில் காண்கிறோம். நபி (ஸல்) அன்றே கூறினார்கள்:


صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا

"நரகவாசிகளுள் இருபிரிவினரை நான் பார்த்ததில்லை. மாட்டுவாலைப் போன்ற சாட்டைகளைக் கையில் வைத்துக் கொண்டு மனிதர்களை அடிப்பவர்கள் (முதல் வகையினர்). ஆடை அணிந்தும் நிர்வாணமான பெண்கள் (இரண்டாம் வகையினர்) அவர்கள் தம் பக்கம் (ஆண்களை) ஈர்க்குமாறு தோள்களைச் சாய்த்து(த் தளுக்கிக் குலுக்கி) நடந்து செல்வர். அசைந்தாடும் ஒட்டகத்திமில் போன்ற தலை(முடி)யைக் கொண்ட அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணம் இத்துணை இத்துணை பயண தூரத்தில் கமழ்ந்து கொண்டிருக்கும். ஆனால், அதன் வாடையைக்கூட அவர்கள் நுகரமாட்டார்கள்" - அறிவிப்பாளர் அபூஹுரைரா, முஸ்லிம் 3972(4316) தலைப்பு : (َنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ) "ஆடையணிந்தும் நிர்வாணமான, தோள்களைச் சாய்த்து(த் தளுக்கிக் குலுக்கி) நடக்கும் பெண்கள்".

முழுக்க ஆடை அணிந்திருந்தாலும்

உடல் தெரியும் மெல்லிய ஆடைகள் ஹிஜாப் ஆகாது.

இறுக்கமாக அணிந்து, திரட்சி காட்டுவது ஹிஜாப் ஆகாது.

ஆபாசமான வடிவமைப்பு ஆடைகள் ஹிஜாப் ஆகா.

அரைகுறையாகத் தலைமூடுதல் ஹிஜாப் ஆகாது.

காதைத் திறந்து தலைமூடுதல் ஹிஜாப் ஆகாது.

சில ஊர்களில் புழக்கத்தில் உள்ள 'அரைத் துப்பட்டிகள்' ஹிஜாபைச் சேர்ந்தவையல்ல.

அந்நிய ஆண்களின்முன் தோன்றும்போது பெண்கள்தம் நடை, உடை, பாவனை ஆகிய அனைத்திலும் நல்லொழுக்கத்தை வெளிப்படுத்துதலே நிறைவான கண்ணிய ஹிஜாப் ஆகும்.


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Apr 2011 - 20:58

இதுவரை நாம் படித்த குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், வரலாற்று/சமகால நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து இரண்டு முடிவுகளை நம்மால் பெற முடிகிறது:

பருவமெய்திய முஸ்லிம் பெண்கள் அந்நிய ஆடவர்முன் தோன்றும்போது முகத்தை மறைத்துக் கொள்வது இஸ்லாத்தில் கட்டாயமில்லை.

தானாக விரும்பி முகம் முழுவதையுமோ கண்கள் தவிர்த்தோ திரையிட்டுக் கொள்வது பெண்களின் தனிப்பட்ட விருப்பம், உரிமை, சுதந்திரம்.

முற்றாக அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!


பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by *சம்ஸ் Thu 28 Apr 2011 - 22:30

சிறந்த ஹதீஸ் தொகுப்புக்கு நன்றி சிகரம் ://:-:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்  - Page 2 Empty Re: பர்தாவின் அவசியம் பற்றிய ஆதாரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum