சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 12:04 am

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 8:02 pm

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 7:50 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 2:27 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 2:19 pm

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 11:23 am

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 11:12 am

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 11:06 am

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 10:39 am

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 10:32 am

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri May 10, 2024 7:22 pm

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri May 10, 2024 8:39 am

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri May 10, 2024 8:36 am

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu May 09, 2024 6:49 pm

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu May 09, 2024 2:24 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm

» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am

» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am

» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am

சுடர் விளக்கு. Khan11

சுடர் விளக்கு.

Go down

சுடர் விளக்கு. Empty சுடர் விளக்கு.

Post by ஹம்னா Sun Jul 03, 2011 6:30 pm

மஞ்சள் நிற பூக்கள் பாய் விரித்தது போல் கொட்டிக் கிடந்த கொன்றை மரத்தடியில் சோர்வுடன் அமர்ந்தாள் நந்தினி.
காலை நேரம், இயல்பான சுறு சுறுப்புக்கு பதில் சோம்பல் மண்டிக் கிடந்தது.
எல்லாம் மனச் சோர்வுதான்.கல்லூரியே வெறிச்சோடிக் கிடந்தது. இங்கொன்றும் அங்கொன்றுமாக மாணவிகள் மரத்தடியில் அரட்டை கச்சேரி நடத்திக் கொண்டிருந்தனர்.
'எனக்கு மட்டும் ஏனிப்படி?' கவலையுடன் கடிகாரத்தை பார்த்தாள். எட்டு மணியானது.
எப்படியும் பதினோரு மணிக்குத்தான் ரிசல்ட் அதுவரைக்கும் என்ன செய்வது? கையிலிருந்த புத்தகத்தை பிரித்து படிக்கத் தொடங்கினாள்.
இடையிடையே ஆசிரியர் மதியழகனின் கோப முகம் மனக்கண்ணில் வந்து போனது. கூடவே அன்று நடந்த நிகழ்ச்சியும்.
மதியழகன் எப்போதுமே புரியும்படி நடத்தவே மாட்டார். அவருக்கே புரிந்தால்தானே மற்றவர்களுக்கு புரியவைக்கமுடியும். அதைப்பற்றிக்கூட அவள் கவலைப்படவில்லை.
ஆனால் அவரிடம் பாரபட்சம் உண்டு.
வகுப்பின் முதல் நாளே காவ்யா சொன்னாள் "ஏய் நந்து, இந்த ஆள் சரியான வழிசல் கேசு தெரியுமா?" என்று.
அதற்குத் தகுந்தாற்போல் இருந்தது அவரது நடவடிக்கைகளும். அந்த வகுப்பில் படிக்கும் மாணவிகள் அவரிடம் சிரித்துப் பேசினால்தான் மரியாதை. எனவே அந்த வகையில் மோகினிக்குத்தான் அவரது வகுப்பில் முதல்மரியாதை.
நந்தினிக்கு அதெல்லாம் பிடிப்பதில்லை.இதனால் வகுப்பிலேயே முதல் மதிப்பெண் பெரும் நந்தினி அவரிடம் சிரித்துப் பேசவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அவரிடம் பலமுறை அவமானப்பட நேர்ந்தது.

ஒரு சின்ன தவறு செய்தாலும் அதற்கு வகுப்பறையே பார்க்கும் வண்ணம் கத்தல், அதுவும் அன்று எல்லை மீறிப் போய்விட்டது.
மாதாந்திர தேர்வுக்கான விடைத்தாள்களை அன்று கொடுத்துக்கொண்டு வந்தார்.
"நந்தினி"
"எஸ் சார்"
"இதெல்லாம் ஒரு மார்க்கா? எண்பத்தொன்பது மார்க் வாங்கியிருக்கே? நீயெல்லாம் எங்கே கலேஜ் பஸ்ட் வரப்போறே சான்சே இல்லை" என்றார் அலட்சியமாக.அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை.
"மோகினி , வாம்மா பரவாயில்லையே நல்ல மார்க் வாங்கியிருக்கே. கீப் இட் அப்" என்று சிரித்தபடி எழுபத்தைந்து மார்க் வாங்கிய மோகினிக்கு பாராட்டு கொடுக்கவும் நந்தினிக்கும் கோபம் வந்துவிட்டது.
"நான் கண்டிப்பா காலேஜ் பஸ்ட் வரத்தான் போறேன் நீங்க வேணா பாருங்க." என்றாள்.
"ஒ சவாலா...என்கிட்டயேவா அதை நானும் பாக்கறேன். எப்பிடியும் பிரக்டிகல் மார்க் இருக்கில்லே? அதை நான் தானே போடணும்" என்று கருவியபடி சென்றுவிட்டார்.
பிரக்டிகல் எக்சாம்.
'எவ்ளோ கஷ்டமாய் கேள்வி வந்தாலும் விடக்கூடாது' தீர்மானத்துடன் சென்றாள்.
தொடங்கியது தேர்வு. அவளுக்கு வந்த கேள்வி மிகக் கடினமானது. இருந்தாலும் நல்லமுறையில் செய்து முடித்து நிமிர்ந்த போது, அவளையே பார்த்துக் கொண்டிருந்த மதியழகன் தானாகவே அங்கே வந்தார்.
"என்ன முடிச்சுட்டியா?"
"எஸ் சார் , எக்சிகுஷன் பாருங்க" என்றபடி செய்து காட்டினாள்.
"இட்ஸ் ஓகே , நீ கெளம்பலாம். ஆனா இவ்ளோ லேட்டாவா செய்வே? மோகினி அரைமணிநேரத்துக்கு முன்னாடியே முடிச்சுட்டா தெரியுமா? தியரி எக்சாம்ல எப்படியும் மோகினிதான் முதல் மார்க் வாங்குவா. பத்து நாளா அவ ராத்திரி கூட தூங்காம படிக்கறா.தெரியுமா." என்று எரிகிற கொள்ளியில் எண்ணெய்யை ஊற்றினார்.

இனி படிப்பு படிப்புதான் , இந்த ஆள் முகத்துல கரியைப் பூசாம விடக்கூடாது. புத்தகத்தில் ஒருபக்கம் விடாமல் படித்துமுடித்தாள்.
தேர்வும் முடிந்து இன்று ரிசல்ட்.
நேரம் செல்லச் செல்ல கல்லூரி வளாகத்தில் கூட்டம் அலைமோதியது.
"ஹாய் நந்தினி, என்ன இங்கே நின்னுக்கிட்டிருக்கே ? சீக்கிரம் வா ரிசல்ட் போட்டுட்டாங்களாம்" என்றபடி வந்தாள் காவ்யா.
ரிசல்ட் பார்த்தால் நந்தினிதான் முதல் மாணவி.
'இப்போ என்ன செய்வார் இந்த மதியழகன்? முதல்ல இதை அவர்கிட்ட போயி சொல்லணும்.., ஆனால் இது என்ன? பிரக்டிகல் மார்க் நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது, முழு மதிப்பெண் போட்டிருந்தார் மதியழகன். அப்படிஎன்றால் ?"
"ஏய் காவ்யா எங்கடி மதிசார்"
"லேப் ல தான் இருப்பார்"
நந்தினி ஓடிப்போய் அவரது முன்னே நின்றாள்.
"வாம்மா கல்லூரி முதல் மாணவியே, உன்னால் இந்த கல்லூரிக்கும் பெருமை எனக்கும் பெருமை" என்றார் சிரித்தபடி.
என்ன, பேசுவது அவரா? நம்பமுடியாமல் பார்த்தாள்.
"என்ன அப்படிப் பாக்கறே? நீ ஒரு சிறந்த மாணவின்னு இந்த ஆசிரியனுக்கு நல்லாவே தெரியும். ஆனா சுடர்விளக்கா இருந்தாலும் தூண்டுகோல் ஒன்னு வேணுமில்லையா..நீ சுடர்விளக்கு ,நான் தான் அந்த தூண்டுகோல். உனக்குப் புரிஞ்சிருக்கும்ன்னு நெனைக்கிறேன்" என்றார்.
இப்போது புரிந்தது, குருவை ஏன் தெய்வத்துக்கு சமமாக பெரியோர்கள் கூறினார்கள் என்று.
நந்தினிக்கு முன்னால் தெய்வத்துக்கு நிகராக உயர்ந்து நின்றார் மதியழகன், ஆனால் சரியாகப் பார்க்க முடியாமல்தான் அவளது கண்ணீர் திரையிட்டு மறைத்தது.

ரோஜா.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum