சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

வயிற்றுக்கான யோகாசனம் Khan11

வயிற்றுக்கான யோகாசனம்

5 posters

Go down

வயிற்றுக்கான யோகாசனம் Empty வயிற்றுக்கான யோகாசனம்

Post by யாதுமானவள் Mon 11 Jul 2011 - 1:32

ஜீரண மண்டலத்தைத் தூண்டி ஜீரண சக்தியைச் சீர்படுத்தும் யோகாசனங்கள் பல உள்ளன அவற்றில் சிலவற்றை உங்களது கவனத்திற்குத் தருகிறோம். சுருக்கமான செய்முறையும் விளக்கவுரையும் தருகின்றோம்.

யோகாசனங்களைக் கற்றுத் தேர்ந்த ஆசிரியர் மூலம் பயில்வதே மிகச் சிறந்த பயனைத் தரும். இருப்பினும் நீங்களே அதிகம் சிரமப்படாமல், உடலை வெகுவாகக் கஷ்டப்படுத்தாமல், தளர்ந்த நிலையில் முயற்சிக்கக் கூடியவையே இவை. முயற்சி செய்துபார்க்கலாம்.

கும்மராசனம் (பூனை)
இந்த ஆசனம் வயிற்றுப் பகுதி, பின்புறம், முதுகு, தண்டுவடம் போன்ற பகுதிகளை உறுதிப்படுத்தக் கூடியது. இது ஜீரண சக்தியைத் தூண்டக் கூடியது. நரம்பு மண்டலம் மற்றும் தசைகளை வலுப்படுத்தவும் செய்கிறது.
நிலை 1: முழங்காலில் நின்று கொண்டு உடம்பை முன்புறமாக வளைத்து
தரையில் கைகளை ஊன்ற வேண்டும்.
நிலை 2: முழங்காலை சரியாக இடுப்புப் பகுதிக்குக் கீழாகவும் கைகளை
சரியாக தோள்களுக்குக் கீழாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
நிலை 3: மூச்சை வெளியில் விட்டபடி தலையைக் குனிந்து முதுகை மேலே
உயர்த்தி அடிவயிற்றை உள்ளே இழுக்கவும்.
நிலை 4: மூச்சை உள்ளிழுத்து மெதுவாக அடிவயிற்றைத் தளர்த்தி முதுகை
சமப்படுத்தி தலையை நிமிர்ந்து மேலே பார்க்கவும்.
நிலை 5: தொடர்ந்து 4 மற்றும் 5 ஐ மாறி மாறி முடிந்தவரை செய்து பின்
தளர்த்தவும்.

பாய்வ கோனாசனா
இந்த ஆசனா இடுப்பு, பின்புறம் அடிவயிறு போன்ற பகுதிகளை வலுப்படுத்தக் கூடியது. ஜீரண உறுப்புக்களை சீராக இயக்கச் செய்கிறது. கால்களுக்கு வலுச் சேர்க்கின்றது. சுவாசமண்டலப்பிரச்சனைகளுக்கும். உதவி புரிகின்றது.
நிலை 1: சமமான தரையில் இரு கால்களையும் முடிந்தவரை பிரித்து வைத்துக்
கொண்டு இரு கைகளையும் இருபுறம் தூக்கி கழுத்து அளவிற்கு
வைத்துக் கொள்ள வேண்டும். (மூச்சை உள்ளிழுத்த நிலையில்).
நிலை 2: பின் மூச்சை வெளியே விட்டு ஒரு புறம் கால் முட்டியை மட்டும்
மடக்கி உடம்பை அந்தப்புறம் வளைக்க வேண்டும்.
நிலை 3: இரு கைகளையும் கீழே போட்டு ஒரு புறம் வளைந்த
முட்டிக்காலுடன் நிற்க வேண்டும். பின் எதிர்புறம் உள்ள கையை
தலைக்கு மேலே மூச்சை உள்ளே இருந்த வண்ணம் கையை உயர்த்த
வேண்டும்.
நிலை 4: உடம்பையும் ஒரே புறமாக ஒரு சாய்க்க வேண்டும்.
நிலை 5: மூச்சை மெதுவாக வெளியே விட்டு மெதுவாக முதல் நிலைக்கு வர
வேண்டும்.
நிலை 6: பின் இது போல மறுகாலின் முட்டியை வளைத்து இருந்து கையை
மேலே தூக்கி பின் தளர்த்தவும்.
நிலை 7: முடிந்தவரை இரு புறமும் மாறி மாறி செய்திடல்.

திரிகோனாசனா
இந்த ஆசனமும் கால்களுக்கும் பின்புறத்திற்கும் வலுவூட்டக் கூடியவை இது உடலின் வளை திறனை அதிகப்படுத்தக் கூடியது. வயிற்று உபாதைகளை சீர்படுத்தக் கூடியது. வயிற்றின் செயல்பாட்டையும் ஜீரணசக்தியையும் உந்தக் கூடியது. இது மார்பகங்களை விரிவுபடுத்தக் கூடிய ஆசனமாகும்.
நிலை 1: சம தரையில் நேராக நின்று முடிந்தவரை கால்களை அகற்றி
வைத்துக் கொள்ளவும்.
நிலை 2: மூச்சை உள்ளே இழுத்து இரு கைகளையும் இருபுறமும் தோள்
அளவிற்கு உயர்த்தவும்.
நிலை 3: மூச்சை வெளியே விட்டு இடது புற காலை இடப்புற கையால்
உடம்பை பக்கவாட்டில் வளைந்து தொடவும்.
நிலை 4: மூச்சை உள்ளே இழுத்து நெஞ்சை பெரிதாக்கி மேலே ஒரு கையும்
கீழே ஒரு கையும் ஒரே கோட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்
நிலை 5: மூச்சை வெளியே விட்டு முகத்தை மேலே திருப்பி மேலே
உயர்த்தியுள்ள கையைப் பார்க்கவும்.
நிலை 6: பின் தளர்ந்து 2 ஆம் நிலைக்கு வந்து முதல் நிலையை அடையவும்.
நிலை 7: பின் ஒரு சில விநாடிகள் விட்டு விட்டு மறுபுறம் இதே நிலைகளை
முயற்சிக்கவும்.

உத்தானாசனா
இந்த ஆசனம் அடிவயிறு குடல், மலத்துவாரம் போன்றவற்றை வலுப்படுத்தும் உடலுக்கு புத்துணர்வை பரவச் செய்திடும். கால்களை வலுப்படுத்திடும்.
நிலை 1: சம தரையில் வலுவாக நின்று கொள்ளவும்.
நிலை 2: மூச்சை உள்ளே இழுத்து கைகளை மடக்காமல் தலைக்கு மேலே
உயர்த்தவும்.
நிலை 3: மூச்சை வெளியே விட்டு உடலை மடக்கி தரையில் கால்களுக்குப்
பக்கத்தில் கையை ஊன்றவும். (முழங்கால் கைகள்ஆகியவற்றை
வளைக்காமல் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்).
நிலை 4: ஒரு சில விநாடிகள் அப்படியே இருந்துவிட்டு பின் தளர்த்தி முதல்
நிலைக்கு வரவும்.
நிலை 5: மாறி மாறி முடிந்தவரை இதனை தொடர்ந்து செய்திடலாம்.

பரசவோடானாசனா
இந்த ஆசனம் இடுப்புப் பகுதிக்கு நல்ல வளையும் திறனைக் கொடுக்கும். அடிவயிற்றின் உட்புறச் செயல்பாடுகளைத் தூண்டுகிறது. சிறுகுடல் பெருங்குடல் போன்றவற்றை வலுப்படுத்திடும்.
நிலை 1: சம தரையில் நன்றாக நின்று கொள்ள வேண்டும்.
நிலை 2: கால்களை சிறிது அகற்றி விரித்து வைத்துக் கொண்டு இரு
கைகளையும் பின்புறமாகக் கட்டிக்கொள்ள வேண்டும்.
நிலை 3: கால்களை சிறிது முன்னும் பின்னுமாக வைத்துக் கொண்டு மூச்சை
உள்ளே இழுக்கவும்.
நிலை 4: மூச்சை வெளிவிட்டு விட்டு அப்படியே (கைகள் பின்புறம்
கட்டியபடி). குனிந்து முடிந்தவரை காலைத் தொடவும் அல்லது
தொட முயற்சிக்கவும்.
நிலை 5: பின் மூச்சை உள்ளே இழுத்து 2 ஆம் நிலைக்குத் திரும்பி பின் முதல்
நிலையை அடையவும்.
நிலை 6: இதே போல மறுபக்கமும் செய்யவும் பின் சிறிது இடைவெளி விட்டு
மாறி மாறி செய்யவும்.

இவை தவிர, கீழ்க்கண்ட ஆசனங்களும் ஜீரண மண்டல கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்கும்.
1. பசியை தூண்ட – பஸ்சி மோத்தாசனம், புஜங்காசனம், சலபாசனம் தனுராசனம், மத்ஸ்யாசனம், மகராசனம்
2. மலச்சிக்கலுக்கு – பாவனமுக்தாசனா, பஸ்சிமோத்தாசனம், புஜங்காசனம் சலபாசனம், தனுராசனம், சர்வாங்காசனம், அர்த்த மத்ஸ்யேன்திர ஆசனம்
3. வாய்வு / உப்புசம் – பாவனமுக்தாசனம், வஜ்ராசனம், அர்த்தமத்ஸ்யேன்திர ஆசனம்,
புஜங்காசனம்
4. அதிக அமில சுரப்பு – சர்வாங்காசனம், புஜங்காசனம், தனுராசனம் பஸ்சிமோத்தாசனம்,
மத்ஸ்யேந்திர ஆசனம்.
5. அஜீரணம், இதர ஜீரண கோளாறுகள் – எல்லா நிர்க்கின்ற நிலை ஆணங்கள்,
6. சர்வாங்காசனம், மத்ஸ்யாசனம், புஜங்காசனம், சலபாசனம், கூர்மாசனம், மயூராசனம்.
7. வாய் துர்நாற்றத்திற்கு – சர்வாங்காசனம், மத்ஸ்யாசனம், சிம்ஹாசனம் மத்ஸ்யேந்திராசனம்.
8. வயிற்று பூச்சிகளுக்கு – சர்வாங்காசனம், ஹாலசனம், மத்ஸ்யாசனம், பஸ்சிமோஸ்தாசனம், மத்ஸ்யேன்திராசனம்.
9. மஞ்சள் காமாலை – சர்வாங்காசனம், மத்ஸ்யாசனம், தனுராசனம்,

குறிப்பு
1. மேற்கண்ட ஆசனங்களுடன், சூர்ய நமஸ்காரம், பிராணாயாமம் செய்வது நல்லது.
2. எல்லா ஆசனங்களின் முடிவில் “சவாசனம்” செய்வது நல்லது.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

வயிற்றுக்கான யோகாசனம் Empty Re: வயிற்றுக்கான யோகாசனம்

Post by Atchaya Mon 11 Jul 2011 - 13:17

சூர்ய நமஸ்காரம் மூன்று வாரங்கள் செய்த பின், யோகா ஆரம்பிப்பது நல்லது. ://:-:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வயிற்றுக்கான யோகாசனம் Empty Re: வயிற்றுக்கான யோகாசனம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 11 Jul 2011 - 13:19

இதுவரை யோகா செய்தில்லை இனிமேல் செய்ய முயற்சிக்கிறேன் நன்றி பகிர்வுக்கு


வயிற்றுக்கான யோகாசனம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வயிற்றுக்கான யோகாசனம் Empty Re: வயிற்றுக்கான யோகாசனம்

Post by யாதுமானவள் Mon 11 Jul 2011 - 13:22

நான் இவ்வளவு நாள் செஞ்சிருன்தவ இப்போதான் விட்டேன்... சோம்பல் தான் காரணம். மறுபடி ஆரம்பிக்கணும்..
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

வயிற்றுக்கான யோகாசனம் Empty Re: வயிற்றுக்கான யோகாசனம்

Post by முனாஸ் சுலைமான் Mon 11 Jul 2011 - 13:23

சாதிக் wrote:இதுவரை யோகா செய்தில்லை இனிமேல் செய்ய முயற்சிக்கிறேன் நன்றி பகிர்வுக்கு
பகிர்வுக்கு நன்றி யோகா செய்யனும் ஆனால் செய்ய முடியல ஏன் தெரியுமா? சாதிக்..... ஒன்னும் புரியல
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வயிற்றுக்கான யோகாசனம் Empty Re: வயிற்றுக்கான யோகாசனம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 11 Jul 2011 - 13:24

யாதுமானவள் wrote:நான் இவ்வளவு நாள் செஞ்சிருன்தவ இப்போதான் விட்டேன்... சோம்பல் தான் காரணம். மறுபடி ஆரம்பிக்கணும்..

அதனாலதான் குண்ண்ண்ணடா இருக்கிங்களா அக்கா


வயிற்றுக்கான யோகாசனம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வயிற்றுக்கான யோகாசனம் Empty Re: வயிற்றுக்கான யோகாசனம்

Post by யாதுமானவள் Mon 11 Jul 2011 - 13:25

ஆமா....
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

வயிற்றுக்கான யோகாசனம் Empty Re: வயிற்றுக்கான யோகாசனம்

Post by நண்பன் Mon 11 Jul 2011 - 13:35

சாதிக் wrote:
யாதுமானவள் wrote:நான் இவ்வளவு நாள் செஞ்சிருன்தவ இப்போதான் விட்டேன்... சோம்பல் தான் காரணம். மறுபடி ஆரம்பிக்கணும்..

அதனாலதான் குண்ண்ண்ணடா இருக்கிங்களா அக்கா
பார்த்தா அப்படி தெரியலயே சாதிக் அக்கா குண்டா? :,;: :,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வயிற்றுக்கான யோகாசனம் Empty Re: வயிற்றுக்கான யோகாசனம்

Post by யாதுமானவள் Mon 11 Jul 2011 - 13:38

அடடா... டாபிக் மாறிபோச்சே ...
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

வயிற்றுக்கான யோகாசனம் Empty Re: வயிற்றுக்கான யோகாசனம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 11 Jul 2011 - 13:40

நண்பன் wrote:
சாதிக் wrote:
யாதுமானவள் wrote:நான் இவ்வளவு நாள் செஞ்சிருன்தவ இப்போதான் விட்டேன்... சோம்பல் தான் காரணம். மறுபடி ஆரம்பிக்கணும்..

அதனாலதான் குண்ண்ண்ணடா இருக்கிங்களா அக்கா
பார்த்தா அப்படி தெரியலயே சாதிக் அக்கா குண்டா? :,;: :,;: :,;:

ஹலோ இது அக்கா தம்பிக்குள்ள சமாச்சாரம் நீங்க கேக்கப்படாது :”: :”:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வயிற்றுக்கான யோகாசனம் Empty Re: வயிற்றுக்கான யோகாசனம்

Post by யாதுமானவள் Mon 11 Jul 2011 - 13:42

சாதிக் wrote:
நண்பன் wrote:
சாதிக் wrote:
யாதுமானவள் wrote:நான் இவ்வளவு நாள் செஞ்சிருன்தவ இப்போதான் விட்டேன்... சோம்பல் தான் காரணம். மறுபடி ஆரம்பிக்கணும்..

அதனாலதான் குண்ண்ண்ணடா இருக்கிங்களா அக்கா
பார்த்தா அப்படி தெரியலயே சாதிக் அக்கா குண்டா? :,;: :,;: :,;:

ஹலோ இது அக்கா தம்பிக்குள்ள சமாச்சாரம் நீங்க கேக்கப்படாது :”: :”:

ஹ்ஹஹா ...சாதிக் !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

வயிற்றுக்கான யோகாசனம் Empty Re: வயிற்றுக்கான யோகாசனம்

Post by நண்பன் Mon 11 Jul 2011 - 13:43

சாதிக் wrote:
நண்பன் wrote:
சாதிக் wrote:
யாதுமானவள் wrote:நான் இவ்வளவு நாள் செஞ்சிருன்தவ இப்போதான் விட்டேன்... சோம்பல் தான் காரணம். மறுபடி ஆரம்பிக்கணும்..

அதனாலதான் குண்ண்ண்ணடா இருக்கிங்களா அக்கா
பார்த்தா அப்படி தெரியலயே சாதிக் அக்கா குண்டா? :,;: :,;: :,;:

ஹலோ இது அக்கா தம்பிக்குள்ள சமாச்சாரம் நீங்க கேக்கப்படாது :”: :”:
அக்கா பீல் பன்றாங்க எங்கேப்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வயிற்றுக்கான யோகாசனம் Empty Re: வயிற்றுக்கான யோகாசனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum