சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Today at 19:57

» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Today at 19:45

» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Today at 19:41

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 11:49

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

கிளியோபாட்ரா- தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி  Khan11

கிளியோபாட்ரா- தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி

2 posters

Go down

கிளியோபாட்ரா- தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி  Empty கிளியோபாட்ரா- தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி

Post by யாதுமானவள் Mon 11 Jul 2011 - 12:12

உண்மையில் சரித்திரத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, கிளியோபாட்ராவின் வாழ்க்கையும் அந்நாளைய எகிப்து தேசத்தின் சமூக, அரசியல் நிலைமையும் சுவாரசியம் தரக்கூடியவை.

கிளியோபாட்ராவின் காலம் கி.மு.69-லிருந்து 30 வரை என்று வரலாற்றுப் புத்தகங்கள் சொல்லுகின்றன. எகிப்தை ஆண்ட பன்னிரெண்டாம் டாலமி என்கிற மன்னனுக்கும் இஸிஸ் என்கிற அவனது ஒரு அரசிக்கும் பிறந்தவள் கிளியோபாட்ரா. சரித்திரப் பிரசித்தி பெற்ற இந்த கிளியோபாட்ராவுக்கு முன்னால் ஏழு கிளியோபாட்ராக்கள் இருந்திருக்கிறார்கள் என்பதால் இவள் பிறக்கும்போதே எட்டாம் கிளியோபாட்ரா என்றே குறிப்பிடப்பட்டு வந்திருக்கிறாள். முந்தைய ஏழு பேர் பெறாத பேரையும், புகழையும் இவள் எப்படிப் பெற்றாள் என்றால், அதற்கு இரண்டு காரணங்கள்.

முதலாவது, இவளது புத்திசாலித்தனம். அடுத்த காரணம், அழகு. அழகு என்றால் ஐஸ்வர்யாராய் அழகல்ல. அதற்கெல்லாம் நூறுபடி மேலே என்கிறார்கள் எகிப்து சரித்திரவியலாளர்கள். வெறும் முப்பத்தொன்பது வயசு வரைக்கும் தான் அவள் வாழ்ந்திருக்கிறாள். ரொம்பச் சின்ன வயசிலேயே அரசியானவள் என்றாலும் ராஜாங்கக் காரியங்கள் தவிர பல்வேறு துறைகளில் அவளுக்குப் பெரிய ஆர்வங்கள் இருந்திருக்கின்றன.

உதாரணமாக, வான சாஸ்திரம், ஜோதிடம் போன்ற கலைகளைக் கல்வியாகவே கற்றவள் கிளியோபாட்ரா. சும்மா மேக் அப் போட்டுக் கொள்ளுவதோடு விட்டு விடாமல், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பது, அவற்றின் வேதியியல், மருத்துவ குணங்களை ஆராய்வது போன்றவற்றில் அவளுக்கு அபாரமான திறமை உண்டு. தன் வாழ்நாளில் அவளே ஏழு விதமான பர்ஃப் யூம்களைக் (செண்ட்) கண்டுபிடித்ததாகவும் சொல்லுகிறார்கள்.

இதெல்லாம் போதாதென்று ஒன்பது மொழிகளில் எழுத, பேச, படிக்கவும் தெரியும். ஆச்சா? கிளியோபாட்ராவின் தந்தையான டாலமிக்கு வயசானதும் தன் மகளைப் பட்டத்தில் அமர்த்த விரும்பியிருக்கிறார். அந்தக் காலத்தில் எகிப்தில் ஒரு பெண் தனியாக ஆட்சி செய்வது முடியாது. ஆகவே, கிளியோபாட்ராவையும், அவளது தம்பியான டாலமியையும் சேர்த்து அரியணையில் உட்கார வைத்தார். அதாவது, கூட்டணி ஆட்சி!

இதில் இன்னொரு கூத்தும் உண்டு. பெண் தனியாக ஆள முடியாது என்பது மட்டுமல்ல அப்போது தம்பியுடன் சேர்த்தும் ஆளமுடியாது! ஒரு வழி, யாரையாவது கல்யாணம் பண்ணிக் கொண்டு புருஷன் பொண்டாட்டியாக வேண்டுமானால் ஆட்சி செய்யலாம். ஆகவே கிளியோபாட்ரா, தன் 10 வயதுத் தம்பியான அந்த ஜூனியர் டாலமியையே திருமணம் செய்து கொண்டு எகிப்தின் ஆட்சிப் பீடத்தில் உட்கார்ந்து விட்டாள். ஆக, பதினெட்டு வயசு ராணி, பத்து வயசு ராஜா. ஆட்சியெல்லாம் சூப்பராகத் தான் நடந்தது.

ஆனால் அந்தச் சின்னப் பையன் மனத்தைச் சில பேர் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டார்கள். அவனுக்கு இன்னும் நாலைந்து வயசுகள் கூடுவதற்குள், அமைச்சர்களாக இருந்த சில வில்லன்கள், நீ உன் அக்காவைத் துரத்தியடி. முழு தேசமும் உன் கைக்கு வந்துவிடும். அவள் அதிகாரம் செய்ய, நீ சும்மா கையெழுத்துப்போடுவதில் என்ன பெருமை இருக்கிறது என்று தூண்டி விட்டார்கள்.

ஆகவே, அந்த ஜூனியர் டாலமியாகப்பட்டவன் தன் முன்னாள் அக்கா, இன்னாள் மனைவி என்றும் பாராமல் கிளியோபாட்ராவுக்கு எதிராக ஒரு குட்டிப் புரட்சியைத் தூண்டி விட்டு, அவள் உயிருக்கு உலை வைத்தான். தப்பிப்பிழைக்க விரும்பிய கிளியோபாட்ராவை சிரியாவுக்குத் தப்பியோட வழிவிட்டான். இந்தச் சமயத்தில்தான் (கி.மு.48) ஜூலியர் சீசர் எகிப்துக்கு வருகிறார். சீசருக்கு அறிமுகம் வேண்டியதில்லை அல்லவா? மாபெரும் ரோமானிய வீரர். அலெக்சாண்டருக்கு நிகராக சரித்திரத்தில் கொண்டாடப்படுகிற ஒரு ஹீரோ.

அப்பேற்பட்ட சீசர் தன் எதிரி ஒருத்தனைப் பழி வாங்கத் தேடிக்கொண்டு எகிப்துக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டாள் கிளியோபாட்ரா. அவரை வைத்து எப்படியாவது எகிப்து பீடத்தை பிடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்த கிளியோபாட்ரா, மிகுந்த நாடகத்தனம் கொண்ட, அதே சமயம் கவித்துவமான ஒரு உத்தியையும் கண்டுபிடித்தாள். தன் சேடிப்பெண் ஒருத்தியை அழைத்து, ஒரு பெரிய கார்ப்பெட்டுக்குள் தன்னை வைத்துச் சுருட்டி, உருட்டி தூக்கிக்கொண்டுபோகச் சொல்லி, சீசருக்கு முன்னால் உருட்டித் திறந்து விடச் சொன்னாள்.

மாபெரும் வீரரே! இதோ உங்களுக்கான பரிசு!

அசந்துபோனார் சீசர். அடேங்கப்பா. எப்பேர்ப்பட்ட பேரழகி! கண்டதும் காதல் என்பார்களே, அந்த மாதிரி ஒரு இது வந்து விட்டது சீசருக்கு! கிளியோபாட்ராவுக்கு சீசரைக் காதலிப்பதிலேயோ, கல்யாணம் செய்து கொள்வதிலேயோ எந்தவித ஆட்சேபனையும் இருக்கவில்லை.

அவளது நோக்கமெல்லாம், எகிப்து ஆட்சிப்பீடத்தை மீண்டும் பிடிப்பது. அதற்கு சீசர் உதவ முடியுமானால் அவரைக் காதலித்து டூயட் பாடுவதில் ஒரு தடையும் இல்லை! கசக்குமா சீசருக்கு? இயல்பிலேயே மாவீரர் அல்லவா? ப்பூ! இதென்ன பிரமாதமான காரியம்? இதோ ஒரே நாளில் எகிப்து ஆட்சியை உன்னுடையதாக்கி விடுகிறேன் பார் என்று போர் அறிவிப்பு வெளியிட்டு விட்டார்.

யுத்தத்தில் அந்த டாலமிப் பையன் தோற்கடிக்கப்பட்டதையும் கிளியோபாட்ரா மீண்டும் எகிப்து ராணியானதையும் ஹாலிவுட் சினிமாக்கள் மிகவும் பரவசத்துடன் காட்டி மகிழ்ந்தன. ஒரு தேரிலிருந்து சீசர் அந்தப் பையனின் தலையைக் கொய்து தூக்கி எறிவது போலவும் அது பறந்து போய் ஒரு மலை முகட்டில் முட்டி கீழே ஆற்றில் விழுவது போலவும் காட்டுவார்கள்.

இதெல்லாம் டூமச் என்றாலும் கிளியோ பாட்ரா மீண்டும் எகிப்து ராணியானது மட்டும் நிஜம். அவளது தம்பியும், கணவனுமான டாலமி அந்த யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டதும் உண்மையே. மீண்டும் எகிப்தின் மணிமுடியைப் பெற்ற கிளியோபாட்ரா, தொடர்ந்து சீசருடன் டூயட் பாடிக் கொண்டிருந்ததன் விளைவாக ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தைக்கு டாலமி சீசர் என்று இரண்டு கணவர்களின் பேரையும் சேர்த்து வைத்து, சீராட்டி வளர்க்க ஆரம்பித்தாள்.அந்தக் குழந்தை சுகப்பிரசவமாக அல்லாமல் கிளியோபாட்ராவின் வயிற்றைக் கீறி, சீசராலேயே வெளியே எடுக்கப்பட்டது. முதல் முதலில் ஆபரேஷன் மூலம் பிறந்த குழந்தை அதுதான் என்பதாலும், அதைச் செய்தது சீசர்தான் என்பதாலும்தான் இன்றைக்கு வரை மருத்துவத்துறை, ஆபரேஷன் மூலம் பிரசவம் பார்ப்பதை சிசேரியன் என்று அழைக்கிறது!

திருமணத்துக்குப் பிறகு கிளியோபாட்ரா தனது நம்பிக்கைக்குரிய மந்திரிகள் சிலரிடம் எகிப்தின் ஆட்சிப் பொறுப்பை அவ்வப்போது கொடுத்து விட்டு அடிக்கடி சீசருடன் ரோமுக்குப் போய் விடுவாள். அங்கே மாளிகையில் குழந்தையைக் கொஞ்சுவதும், தாலாட்டுவதுமாக அவளது பொழுது ஒரு டிபிகல் குடும்பத்தலைவியாகப் போய்க் கொண்டிருந்தது.

திடீரென்று ஆட்சி ஞாபகம் வந்ததும் கிளம்பி எகிப்துக்கு வந்துவிடுவாள். அப்போது சீசர் பின்னாலேயே புறப்பட்டு எகிப்துக்கு வந்துவிடுவார். இது ரோமானிய முக்கியஸ்தர்களுக்குப் பெரிய எரிச்சலைத் தந்தது. ஒரு முகூர்த்தம் பார்த்து அவளுக்கு விஷம் வைத்துக்கொன்று விட்டார்கள்.

- பனித்துளி சங்கர் ( shankarp071@gmail.com)


நன்றி : கீற்று
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கிளியோபாட்ரா- தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி  Empty Re: கிளியோபாட்ரா- தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி

Post by நேசமுடன் ஹாசிம் Mon 11 Jul 2011 - 12:17

இவர்பற்றிய சரித்திரம் மிகப்பெரியது இவர் பற்றிய வாழ்க்கை வரலாறு இருந்தால் பகிருங்கள் தோழர்களே
நன்றி அக்கா பகிர்வுக்கு


கிளியோபாட்ரா- தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum