Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்றுby rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!
+5
நண்பன்
ஹம்னா
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
abuwasmee
9 posters
Page 1 of 1
தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!
உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.
வெள்ளைப் பூண்டு:
பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள்.
இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.
வெங்காயம்:
வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.
காரட்:
நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.
ஆரஞ்சு :
வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.
பருப்பு வகைகள் :
பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்தஅணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
கோதுமை ரொட்டி :
நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இறால், மீன் மற்றும் நண்டு :
அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.
தேநீர் :
தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.
பாலாடைக்கட்டி :
சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.
முட்டைக்கோஸ் :
குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.
மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.
http://abuwasmeeonline.blogspot.com
Re: தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!
:”@: ##* க்கு !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!
இதில் உள்ள எல்லா உணவுகளையும் நான் சாப்பிடுகிறேன்.
நண்டை தவிர. ##* ##*
நண்டை தவிர. ##* ##*
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
![தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! X_be45e21](https://2img.net/h/i1125.photobucket.com/albums/l587/gif-mania/album27/x_be45e21.gif)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!
நானும் அப்படித்தான்ஹம்னா wrote:இதில் உள்ள எல்லா உணவுகளையும் நான் சாப்பிடுகிறேன்.
நண்டை தவிர. ##* ##*
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!
மிக மிக அருமையான பகிர்வு . நண்டு எனக்கு மிகமிகப் பிடித்த உணவு . பகிர்வுக்கு நன்றி!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!
யாதுமானவள் wrote:மிக மிக அருமையான பகிர்வு . நண்டு எனக்கு மிகமிகப் பிடித்த உணவு . பகிர்வுக்கு நன்றி!
நான் இதுவரை சாப்பிடாத உணவு நண்டு அக்கா :,;:
Re: தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!
உண்டு மகிழ, ஆரோக்யத்திற்கென ருசியான பதிவு தந்த அன்பு உறவு அபுஸ்வமீ க்கு ஜே ஜே ..... :!+:
Re: தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!
இன்ஷா அல்லாஹ்! காத்திருங்கள்! விரைவில் வருகிறது இன்னும் பல சிறந்த பயனுள்ள பதிவுகள்!!!
உங்களுக்காக!![தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! 741156](https://2img.net/u/3212/14/48/64/smiles/741156.gif)
உங்களுக்காக!
![தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்! 741156](https://2img.net/u/3212/14/48/64/smiles/741156.gif)
Re: தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!
நீங்களுமா அக்காயாதுமானவள் wrote:மிக மிக அருமையான பகிர்வு . நண்டு எனக்கு மிகமிகப் பிடித்த உணவு . பகிர்வுக்கு நன்றி!
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!
தொடருங்கள் உறவே :”@:abuwasmee wrote:இன்ஷா அல்லாஹ்! காத்திருங்கள்! விரைவில் வருகிறது இன்னும் பல சிறந்த பயனுள்ள பதிவுகள்!!!
உங்களுக்காக!
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!
எனக்கும் நண்டு பிடிக்காது
சிறந்த பகி்ர்வு நன்றி
சிறந்த பகி்ர்வு நன்றி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|