சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

குறட்டை குறைபாடா? ஆயுர்வேத மருத்துவ முறையில் தடுக்கலாம்!    Khan11

குறட்டை குறைபாடா? ஆயுர்வேத மருத்துவ முறையில் தடுக்கலாம்!

4 posters

Go down

குறட்டை குறைபாடா? ஆயுர்வேத மருத்துவ முறையில் தடுக்கலாம்!    Empty குறட்டை குறைபாடா? ஆயுர்வேத மருத்துவ முறையில் தடுக்கலாம்!

Post by mufees Fri 12 Aug 2011 - 14:59

குறட்டை குறைபாடா? ஆயுர்வேத மருத்துவ முறையில் தடுக்கலாம்!    Sleep
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

குறட்டை குறைபாடா? ஆயுர்வேத மருத்துவ முறையில் தடுக்கலாம்!    Empty Re: குறட்டை குறைபாடா? ஆயுர்வேத மருத்துவ முறையில் தடுக்கலாம்!

Post by mufees Fri 12 Aug 2011 - 14:59


தூங்க ஆரம்பிக்கும்போதே மிகவும் அதிக ஓசையுடன் குறட்டையும் ஆரம்பித்துவிடுகிறதே, குறட்டை வருவது எதனால்? அது ஓர் ஆரோக்கியக் குறைபாடா? உடல் கோளாறுகளால் ஏற்படுகிறதா? மூக்கில் அறுவைச் சிகிச்சை பயன் தருமா? ஆயுர்வேத சிகிச்சை என்ன?

மூச்சுக் குழாய் மற்றும் நாக்குப் பகுதிகளில் உள்ள தசைகளின் சக்திக் குறைவினாலும், தொய்வினாலும், தூக்கத்தில் அவை தளர்வுற்று மூச்சுக் குழாயில் காற்று செல்லும்போது, அதன் பாதையில், அவை தொங்கி அங்கும் இங்கும் ஆடுவதால், குறட்டை ஒலி சத்தத்துடன் எழும்புவதாகக் கூறப்படுகிறது. அவை தளர்வுற்றுத் தொங்குவதற்கான பல காரணங்களில் முக்கியமாக உடல் பருமன் ஒரு காரணமாகலாம்.

கழுத்து மற்றும் மூச்சுக் குழாய்ப் பகுதிகளில் சேரும் அதிக தசைகள், படுக்கும்போது, உள்நோக்கி அமுங்குவதால், பிராண வாயுவிற்கு ஏற்படும் தடையினால், குறட்டை உருவாகிறது. புகை பிடிப்பவர்கள், தலையில் நீர் கோர்த்த நிலை உள்ளவர்கள், மதுபானம் அருந்தும் வழக்கமுடையவர்கள், தூக்க மாத்திரையை இரவில் சாப்பிடுபவர்களுக்கு குறட்டை ஏற்படும்.

அலர்ஜியைக் கட்டுப்படுத்த உதவும் அய்ற்ண் - ஏண்ள்ற்ஹம்ண்ய்ங் மருந்துகள், தொண்டையைச் சுற்றியுள்ள தசைநார்களைத் தளர்வுறச் செய்வதாலும், மூச்சுப் பாதையில் தடை ஏற்படுத்தி, குறட்டையை ஏற்படுத்தக்கூடும். தலையணையின் உயரம் அதிகமிருந்தால் கழுத்தில் முன்னோக்கிய அழுத்தம் கூடுவதாலும் குறட்டை ஏற்படக்கூடும். பாதிக்கப்பட்டுள்ள நபரின் முன்னோர்களுக்கும் குறட்டை விடும் பழக்கமிருந்தால், சிகிச்சை எளிதில் பலன் தருவதில்லை.

அதிக அளவிலும், அதிக நேரம் எடுத்துக் கொண்டும் இரவில் சாப்பிடுவது, பால், வெண்ணெய், தயிர் இரவில் சாப்பிடுவது, மதுபானம் அருந்துதல், தூக்க மாத்திரை, காப்பி குடித்தல் போன்றவற்றை இரவில் சாப்பிடுவதைத் தவிர்த்தால் குறட்டையையும் குறைத்துவிடலாம். மேலும் குறட்டையைத் தவிர்க்க, தொண்டையிலுள்ள தசைகளை வலுப்படுத்த வேண்டும்.

நாக்கை இங்கும் அங்கும் சுழட்டுவதன் மூலமாகவும், எ,இ, ஐ, ஓ,யூ எனும் எழுத்துகளைச் சத்தமாக, ஒவ்வொன்றையும் மூன்றுமுறை அடிக்கடி உச்சரிப்பதாலும் நாக்கு மற்றும் தொண்டையிலுள்ள தசைகள் வலுப்பெறும். நாக்கின் நுனியை முன்பற்களின் பின்புறம் வைத்து, அப்படியே வாயின் மேற்கூரை வழியாக பின்னோக்கி மூன்று நிமிடங்கள் செலுத்தும் பயிற்சி நாக்கின் தசை வலிவைக் கூட்ட உதவும். வாயைத் திறந்து, தாடை எலும்பை வலப்புறம் அசைத்து 30 வினாடிகள் நிறுத்தவும். பிறகு இடதுபுறம் அசைத்து 30 வினாடிகள் நிறுத்தவும்.

தசைகள் வலுப்பெறும். வாயைத் திறந்து, தொண்டையின் பின்புறத்திலுள்ள தசைகளைத் தொடர்ந்து சுருக்கி விரிக்கவும். கண்ணாடியில் உள்நாக்கு மேலும் கீழுமாக ஆடுவதைக் காணலாம். பாட்டுப் பாடுவதன் மூலமாகவும், தொண்டைத் தசையை வலுப்படுத்தலாம். இவை அனைத்தும் குறட்டையைக் குறைக்க உதவும் உபாயங்களாகும். குறட்டையைக் கட்டுப்படுத்த மூக்கில் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை நிறைவான பலனைத் தருவதில்லை. தசை நார்களை வலுப்படுத்துவதுதான் சிறந்த சிகிச்சை முறையாகும்.

குறட்டைக்கான ஏற்படுவது எதனால் என்பதற்கு ஆயுர்வேதம் கூறும் ஒரு முக்கியக் காரணம், நெய்ப்பு எனப்படும் எண்ணெய்ப் பசை மூக்கு மற்றும் மூச்சுக் குழாய்ப் பகுதிகளில் குறையும் போது, அந்தப் பகுதிகளில் வறட்சியின் தன்மை கூடுகிறது. வறண்ட பாதையில் பிராண வாயு செல்லும் போது, அங்குள்ள சுவர்களில் மோதிச் செல்கிறது. இதனால் ஏற்படும் உரசல் குறட்டை ஒலியை எழுப்புகிறது.

இந்த நெய்ப்பைச் சம்பாதித்துக் கொள்வதற்கான சிறந்த வழி, காலையில் குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக இரும்புக் கரண்டியில் வெதுவெதுப்பாக சூடாக்கிய நல்லெண்ணெய்யை ஊற்றி நிரப்பி, மூக்கினுள்ள 3-4 சொட்டுகள் விட்டுக் கொண்டு, வாயினுள்ளே நல்லெண்ணெய்யை நிரப்பிச் சிறிது நேரம் வைத்திருந்து துப்பி, கண்களின் புருவம், ரப்பைகளில் இளஞ்சூடான விளக்கெண்ணையைத் தடவி, நீவி விட்டு, முகத்தில் தேங்காய் எண்ணெய்யை இதமாகப் பூசி, கழுத்துகளின் மென்னிப் பகுதிகளில் வெதுவெதுப்பாக நல்லெண்ணெயைத் தேய்த்து, ஊறிய பிறகு இதமான வெந்நீரில் குளித்து, தலைப் பகுதியிலுள்ள பிசுக்கை அகற்ற, பச்சைப் பயறு மாவுடன் அரிசி வடித்த கஞ்சியைக் குழைத்து தேய்த்துக் குளிக்க வேண்டும். இது தோலிலுள்ள பிசுக்கை அகற்றி, உட்பகுதிகளில் உள்ள நெய்ப்பின் சேமிப்பை மிச்சப்படுத்தும்.

இப்படி எண்ணெய் தேய்ப்பதால், வேறு ஏதேனும் நன்மை உண்டா? என்றால் உண்டு. முகத்தின் வசீகரம் கூடும். தலையிலுள்ள ஐம்புலன்களும் தத்தம் தொழில்களில் திறம்பட வேலை செய்யும். முடி நன்றாகத் தலையில் வளரும். சிந்தனை எனும் சக்தியானது செயல் ஏற்றம் பெற்றுப் புத்தியைக் கூர்மையாக்கும். உறக்கம் இரவில்தானே வரும். விடியற்காலையில்தானே விலகும். குறட்டைச் சத்தம் எழுப்பாமல் இருக்க இது சிறந்த வழியாகும்.

mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

குறட்டை குறைபாடா? ஆயுர்வேத மருத்துவ முறையில் தடுக்கலாம்!    Empty Re: குறட்டை குறைபாடா? ஆயுர்வேத மருத்துவ முறையில் தடுக்கலாம்!

Post by M.M.Lafeer Fri 12 Aug 2011 - 16:04

முபீஸ் உங்கள் செய்தியை பார்த்ததும் எனக்கு ஓர் கதை யாபகம் ஒரு ஊரில் இளம் சோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார்களாம் அன்றிரவே அப்பெண்மணி இந்த மாப்பிள்ளை எனக்கு தேவைஇல்லை என்று ஒருபிடிஇல் நின்றாளாம் என்ன காரணம் என்று கேட்டதேர்க்கு அவர்விடும் குறட்டையை கேட்டு எனுக்கு துக்கமும் இல்லை பயமாகவும் உள்ளது என்று கூறினாளாம் அக்குடும்பத்தில் உள்ள பெரியோர்கள் தாத்தாக்கள் எல்லோர்களும் அவளை சமாதானம் செய்து சேர்ந்து வாலவைது விட்டார்களாம் பிறகு பல வருடங்களுக்கு பிறகு அக்குடும்பத்தை சேர்ந்த்தவர்கள் அனைபெர்களும் ஒரு விடுமுறை காலத்தில் சுற்றுலா சென்றிருந்தத போது அவளது கணவனோடு மிகவும் ஐக்கியமாக பழகுவதை பார்த்து மணம் பூரித்து அவளை அருகில் அழைத்து உனக்கு யாபகம் உள்ளதா இந்த கணவனை வேண்டாம் என்று அழுது அடம் பிடித்து வெறுத்தாயல்லவா தற்போது உனது வாழ்க்கை எப்படி உள்ளது என்று கேட்டதுக்கு அதை என்னத்த கேபங்க இப்ப அந்த குறட்ட சத்தம் இல்லை என்றால் இப்போது எனக்கு உறக்கம் வருவதில்லை என கூறி சிரித்தாலாம்
M.M.Lafeer
M.M.Lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 29
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

குறட்டை குறைபாடா? ஆயுர்வேத மருத்துவ முறையில் தடுக்கலாம்!    Empty Re: குறட்டை குறைபாடா? ஆயுர்வேத மருத்துவ முறையில் தடுக்கலாம்!

Post by நண்பன் Fri 12 Aug 2011 - 16:08

தகவலுக்கு நன்றி முபீஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குறட்டை குறைபாடா? ஆயுர்வேத மருத்துவ முறையில் தடுக்கலாம்!    Empty Re: குறட்டை குறைபாடா? ஆயுர்வேத மருத்துவ முறையில் தடுக்கலாம்!

Post by Atchaya Fri 12 Aug 2011 - 16:11

mufees & labeer :!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

குறட்டை குறைபாடா? ஆயுர்வேத மருத்துவ முறையில் தடுக்கலாம்!    Empty Re: குறட்டை குறைபாடா? ஆயுர்வேத மருத்துவ முறையில் தடுக்கலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum