சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

 சில நாட்களாக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மர்ம மனிதன்  Khan11

சில நாட்களாக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மர்ம மனிதன்

2 posters

Go down

 சில நாட்களாக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மர்ம மனிதன்  Empty சில நாட்களாக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மர்ம மனிதன்

Post by kalainilaa Mon 15 Aug 2011 - 5:07

சில நாட்களாக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மர்ம மனிதன் பற்றிய முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இது உண்மையா? ஆம் இது உண்மைதான் என்பதனை நிரூபிக்கும் வகையில் மர்ம மனிதர்கள், பாதுகாப்புபடையின் நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாடுகள் என்பன அமைவாயுள்ளது. இவ்விடயம் பற்றி சற்று ஆழமாக உற்றுநோக்குவோம்.

மக்களிடையே பல்வேறுபட்ட கருத்துக்கள், சந்தேகங்கள் உருவாகியுள்ளன. அதாவது;

-நாட்டின் பிரபல்யமான அரசியல்வாதியொருவருக்கு விசித்திர வியாதி ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான பரிகாரத்திற்காகவேண்டி மூவாயிரம் பெண்களின் இரத்தம் தேவை என சாத்திரிகர் கூறியுள்ளதால் தேசிய ரீதியில் இரத்தம் பெறும் நடவடிக்கை இது என்றும்

-புதையல் ஒன்று பழங்கால மன்னர்கள் ஆட்சிபுரிந்த இடமொன்றில் காணப்படுவதாகவும் அப்புதையலை எடுக்க ஆயிரம் பெண்களை பலிகொடுக்க வேண்டும் என்பதால் இவ்வாறு நாடளாவிய ரீதியில் பெண்கள் தாக்கப்படுகிறார்கள் என்றும்

-பொதுமக்களை சீண்டுவதால் சீற்றமுற்று மக்கள் மறைத்து வைத்திருக்கும் ஆயுதங்களை வெளியில் கொண்டுவருகிரார்களா, ஆயுதங்கள் உள்ளனவா என்பதனை உளவு பார்பதற்காக பயன்படுத்தப்படும் யுக்தி எனவும்

-புராதன மன்னன் ஒருவனின் வாள் குகை ஒன்றில் இருப்பதாகவும் அதனை கண்டறிந்தால் நீண்ட காலம் ஆட்சிபீடத்தில் இருக்கலாம் என்றும் அந்த வாளினை எடுக்க ஆயிரம் பெண்களை பலிகொடுக்க வேண்டும் என்பதால் இவ்வாறு நாடளாவிய ரீதியில் பெண்கள் தாக்கப்படுகிறார்கள் என்றும் பலவிதமான வதந்திகள் பரவவிடப்பட்டுள்ளன.

இவைகள் ஒப்பான கருத்துக்கள் அல்ல. ஏனெனில் பலிகொடுப்பது நாம் அறிந்தவரை உரிய இடத்தில் குறிப்பிட நபரினால் நிறைவேற்றப்பட வேண்டும்.

தனித்தனியே ஆயிரம் அல்லது மூவாயிரம் பெண்களின் இரத்தம் தேவை என வைத்துக்கொண்டாலும் அதனை இலகுவாக பணத்தினை கொடுத்து வாங்குவது இவ்வாறான நம்பிக்கயுடவர்களுக்கு ஒன்றும் பாரிய விடயமல்ல.

பாடசாலை பேரூந்துகள் கடத்தப்பட்டு பல நூற்றுக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டது நாம் அறிந்த விடயம். இவ்வாறு பலி கொடுப்பதற்கு உயிகள் தேவையெனில் அது இலகுவாக நடந்து முடிந்திருக்க வேண்டும், ஏனெனில் மனிதர்களை கொல்லுவதொண்றும் நம் நாட்டில் பெரியவிடயமல்ல.

இவைகளை நடந்து முடிந்த மர்ம மனிதனின் செயற்பாடுகளுடன் ஒப்பிடுவோம்.

சம்மாந்துறை, இறக்காமம், வரிப்பதான்சேனை, பொத்துவில், கல்முனை, ஓட்டமாவடி, வாழைச்சேனை, மலையகம் இவ்வாறு பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றன. இவ்வனைத்து ஊர்களிலும் நடந்து முடிந்த மர்ம மனித வேட்டைகளில் பின்வரும் விடயங்களை அவதானிக்கக்கூடியதாயுள்ளது. அதாவது;

-மக்களால் வர்ணிக்கப்படும் மர்ம மனிதர்களால் எவருக்கும் பாரதூரமான எந்த பாதிப்புக்களும் நடந்ததில்லை.

-மக்களால் பிடிக்கப்பட்ட மர்ம மனிதர்கள் என வர்ணிக்கப்படும் நபர்கள் அனைவரும் பாதுகாப்பு படையினை சேர்ந்தவர்கள்.

- மக்களால் பிடிக்கப்பட்ட மர்ம மனிதர்கள் என வர்ணிக்கப்படும் நபர்கள் அனைவரையும் பாதுகாப்பு படையினர் பாதுகாத்து விடுதலை செய்துள்ளனர்.

-பாதுகப்புப்படையினர் மர்ம மனிதைகளை விட்டுவிட்டு பொதுமக்களை அடித்து படுகாயப்படுத்துவது மட்டுமன்றி சுட்டும் குலை செய்துள்ளனர்.

-மர்ம மனிதனின் நடவடிக்கைகளை நோக்குமிடத்து, ஒரு நிதானமான செயட்ட்பாட்டினை கவனிக்கக்கூடியதாய் உள்ளது. அதாவது உயிர்பலி அல்லது பாரிய காயங்கள் எதனையும் ஏட்படுதவில்லை. மாறாக ஒரு அச்சுறுத்தும் நடவடிக்கையாகவே காணக்கூடியதாய் உள்ளது. (இருப்பினும் இவர்கள் தப்பிவிட முற்படும்போது உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதை எம்மால் திடமாக உணர முடிகிறது.

- நடந்து முடிந்த மர்ம மனிதனின் அச்சுறுத்தல்களில் உள்ளூர் நபர்களின் ஒத்துழைப்பு முழுமையாக இருக்கவேண்டும் ஏனெனில், ஆண்கள் இல்லாத வீடுகள், ஊரின் பாதைகள் பிற ஊரவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இதன் மூலம் இவ்வாறான கேள்விகள் தோன்றுகின்றன.

-நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி அவசரகால சட்டங்களை நீடிப்பதற்காகவா?

-இதனை காரணம் காட்டி மூடப்பட்ட இராணுவ முகாம்களை மீண்டும் திறக்கவா?

-மக்களை குழப்பத்திலாழ்த்தி மக்களின் மனநிலையை திசை திருப்புவதுடன் வெளி நாடுகளையும் தற்போதைய இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் இருந்து திசை திருப்பவா?

இந்த கேள்விகளின் அடிப்படையை உற்று நோக்குவோம்.

யுத்த காலங்களில் பாதுகப்புப்படையினர் அவர்களின் அடிப்படை சம்பளத்தைவிட இரட்டிப்பு, சில சமயம் மும்மடங்கு என கணிசமான வருமானம் பெறக்கூடியதாக இருந்தது. மட்டுமல்லாமல் மேலதிக கொடுப்பனவுகள், தனித்துவமான மதிப்பு, மரியாதை என பல்வேறு அம்சங்களில் உயர்நிலையில் இருந்தது நாம் எல்லோரும் அறிந்த விடயம். ஆனால் தற்போது இந்த நிலை தலைகீழாக மாற்றமடைந்து காணப்படுவதை நாம் அவதானிக்கின்றோம். தற்போது அடிப்படை மாத சம்பளத்தைவிட மேலதிக வருமானம் ஏதும் பாதுகப்புப்படையினருக்கு கிடைப்பதில்லை. அதேபோல் முன்னர் கிடைக்கப்பெற்ற மதிப்பு, மரியாதைகளும் கிடைப்பதில்லை.

எனவேதான் பாதுகப்புப்படையினர் இவ்வாறான கலவரங்களை உண்டுபண்னுவதன்மூலம் நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி அவசரகால சட்டங்களை நீடித்து, மூடப்பட்ட இராணுவ முகாம்களை மீண்டும் திறப்பதற்கான ஒரு யுக்தியே இந்த மர்ம மனித நாடகம் என்பது ஏற்புடைய ஒரு காரணியாக எனது சிந்தனையில் துலங்குகிறது.

எவ்வாறாயினும் மர்ம மனிதனின் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் அதிகளவில் பெண்களையே பாதித்திருப்பதால் பெண்கள் மிக விழிப்புடனும் ஜாக்கிரதையாகவும் இருப்பது அவசியமாகும். இதனை முடிவுக்குக்கொண்டுவர அரசு உடனடி நடவடிக்கைகை மேற்கொள்ள வேண்டும்.

எழுதியவர்: சம்மாந்துறை பிரதேசவாதி

இலங்கை
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 சில நாட்களாக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மர்ம மனிதன்  Empty Re: சில நாட்களாக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மர்ம மனிதன்

Post by யாதுமானவள் Mon 15 Aug 2011 - 6:11

என்ன கொடுமை இது? இப்படிப்பட்ட நிலையில் மக்கள் பயமின்றி எப்படி நடமாடுவது? எப்படி வாழ்வது?

இந்நிலை மாறி நாட்டு மக்கள் அனனைவரும் நிம்மதியுடன் வாழ வேண்டுகிறேன்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum