சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

உலக பொருளாதாரத்தில் மந்த நிலை Khan11

உலக பொருளாதாரத்தில் மந்த நிலை

Go down

உலக பொருளாதாரத்தில் மந்த நிலை Empty உலக பொருளாதாரத்தில் மந்த நிலை

Post by Atchaya Sun 21 Aug 2011 - 18:09

நன்றி lankasri
உலக பொருளாதாரத்தில் மந்த நிலை : நாடுகள் கவலை
[ சனிக்கிழமை, 20 ஓகஸ்ட் 2011, 04:06.14 மு.ப GMT ]
அமெரிக்காவையும் ஐரோப்பாவின் சில நாடுகளையும் பொருளாதார மந்தநிலை தாக்கப் போவதாக மோர்கன் அண்ட் ஸ்டான்லி நிதி ஆலோசனை அமைப்பு எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் கடன் வாங்கும் தரத்தை AAA என்ற அதி உச்ச நிலையிலிருந்து AA என்ற நிலைக்கு ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் குறைத்ததையடுத்து சர்வதேச பங்குச் சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன.

இந்நிலையில் அட்லாண்டிக் கடலுக்கு அந்தப் பக்கத்தையும்(அமெரிக்கா), இந்தப் பக்கத்தையும்(ஐரோப்பா) பொருளாதாரத் தேக்க நிலை தாக்கப் போகிறது என்று மோர்கன் அண்ட் ஸ்டான்லி எச்சரித்துள்ளது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த எச்சரிக்கையால் வழக்கம்போல முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பங்குச் சந்தைகளில் இருந்து எடுத்து தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்து விடவே தங்கத்தின் விலை ஒரே இரவில் சர்வதேச அளவில் பெருமளவில் உயர்ந்துவிட்டது.

நேற்று அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் ஆரம்பித்த அடி ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும் இன்று பரவியது. இந்தியப் பங்குச் சந்தையிலும் இதன் தாக்கம் இன்று உணரப்பட்டது.

அமெரிக்கா, ஐரோப்பாவில் மந்த நிலை ஏற்பட்டால் அங்கு எரிபொருளுக்கான தேவை குறையலாம் என்ற அச்சத்தின் காரணமாக லண்டன் பங்குச் சந்தையில்(இங்கு தான் உலகளவில் கச்சா எண்ணெயின் விலை நிர்ணயிக்கப்படுகிறது) பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 4 டொலர்கள் சரிந்துள்ளது.

இதற்கிடையே மோர்கன் அண்ட் ஸ்டான்லி வெளியிட்டுள்ற அறிக்கையில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கடைபிடிக்கப்படும் பொருளாதாரக் கொள்கைகள் அந்த நாடுகளின் நிதி நிலைமையை சீர்படுத்துவதாக இல்லை. இதனால் அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரத் தேக்க நிலைக்கு மிக அருகே நிற்கின்றன.

இதனால் 2011ம் ஆண்டில் உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி முதலில் கணக்கிட்டபடி 4.2 சதவீதமாக இருக்காது. அது 3.8 சதவீதம் அளவுக்கு சரியலாம். அதிலும் குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் வளர்ச்சி 1.5 சதவீதத்தைக் கூட தாண்டாது.

அதே நேரத்தில் சீனா, இந்தியா, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி முதலில் கணக்கிடப்பட்ட 6.4 சதவீதத்தை விட கொஞ்சம் குறைந்து 6.1 சதவீதமாகலாமே தவிர அதைவிடக் குறைய வாய்ப்பில்லை.

வரும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான 6 மாதங்கள் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு மிக மிக கஷ்டமான காலகட்டமாக இருக்கும் என்று கூறியுள்ளது.

2008ம் ஆண்டில் அமெரிக்காவின் சிட்டி பேங்க் உள்ளிட்ட பல வங்கிகளும் முதலீட்டு நிறுவனங்களும் திவால் ஆன போது அதன் தாக்கத்தை உலகம் மிகக் கடுமையாக உணர்ந்தது. அப்போது ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் சாப்ட்வேர் வேலைகள் முதல் ஜவுளித் தொழில் வரை அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். அதிலிருந்து மீளவே 2 ஆண்டுகள் ஆயின. இந்நிலையில் மீண்டும் ஒரு பொருளாதாரத் தேக்க நிலையா என்ற கவலையில் ஆழ்ந்துள்ளன நாடுகள்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum