சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 8:22 pm

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 8:15 pm

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 4:31 pm

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 4:29 pm

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 3:00 pm

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 2:46 pm

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 12:19 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 11:48 am

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm

» nisc
by rammalar Yesterday at 8:21 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm

» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am

பெருநாள் வாழ்த்துக்கவிதை (ஆசுகவி அன்புடீன்) Khan11

பெருநாள் வாழ்த்துக்கவிதை (ஆசுகவி அன்புடீன்)

Go down

பெருநாள் வாழ்த்துக்கவிதை (ஆசுகவி அன்புடீன்) Empty பெருநாள் வாழ்த்துக்கவிதை (ஆசுகவி அன்புடீன்)

Post by முனாஸ் சுலைமான் Tue Aug 30, 2011 1:26 am

இன்று
பெருநாள் ஈகைத் திருநாள்

புத்தாடை அணிந்து, புதுமணம் பூசி
பூத்துக் குலுங்கி
மகிழும் இந்நாளில்

முப்பது நோன்பின்
முதல்பத்து பற்றியும்

முப்பது நாளின் ஸஹர்நிலை பற்றியும்
நோன்புப் பெருநாள்
நோக்குகள் பற்றியும்

கூறுவதற்க்காய் நான் ஆசுகவி அன்புடீன்
சேனையின் அன்பு உறவுகள்
எல்லோர்க்கும் நெஞ்சில் இருந்தென்
அஸ்ஸலாமு அலைக்கும்






***********************


ஐந்து தூண்களது
அத்திவாரம் நமதிஸ்லாம்



ஒன்று கலிமா, இன்னொன்று
தொழுகை



மற்றது ஸக்காத்து,
நோன்பு, ஹஜ்ஜென்று



மடல்கள் ஐந்தின்
மகத்துவம் இஸ்லாமியம்!



இஸ்லாம்
சொல்லும் இதமான கடமைகளுள்



இரகசியம் நோன்பு
பரகசியம் அல்லஅது



மனிதனுக்கு இறைவன்
மலர்த்துகின்ற மனப்பரீட்சை



மாண்புமிகு நோன்பு
ஓம்பும்உயர் பண்புஅது!






***********************


நோன்பு என்றால்
சிலருக்கு பாம்பு



இன்னும் சிலருக்கோ
நோன்பு வேம்பு



வேறுவேறு சிலருக்கு
நோன்பு ஒருவீம்பு



வேண்டாத சிலருக்கு நோன்பு கூர்அம்பு


வேண்டுகின்ற பேர்களுக்கு
நோன்பு நல்லமாண்பு



விரும்புகின்ற
பேர்களுக்கு நோன்பு தூயஅன்பு



சான்றோர்க்கு நோன்பு
நேர்நெறி வரம்பு



சாயுச்சியம் அதுதான்
நோன்பு என்றுஓம்பு



******************





ரம்ஸான் பிறைகண்டு
ஷவ்வால்பிறை காணும்வரை



முப்பது நாட்களது
“முகாம்
அந்த நோன்புஅது


நோன்புவின் முதற்பத்து
அல்லாஹ்வின் ரஹ்மத்து



நடுப்பத்து மன்னிப்பு
நாடுகின்ற மஃபிறத்து



முப்பதாம் பத்து
நரகத்து மீட்டெடுப்பு



இத்ஹும் மினல்னார்
என்றதற்கு பேரழைப்பு



மூபத்து முப்பதாய்
முகிழ்ந்தது நோன்புச்சுற்று



முனைவன் அல்லாஹ்வின்
முதலீடு அருள்பத்து







**************************


எல்லா நாளையும்
போலஅல்ல நோன்புபத்து



இருக்கிறது அதற்குள்ளே
அல்லாஹ்வின் றஹ்மத்து



அருளை அல்லாஹ்
சேல்செய்யும் காலமது


மலிவு விற்பனை
போலஅல்ல அக்காலம்



இலவச நன்கொடையாய்
இலங்குகின்ற பொற்காலம்



இதுவே றஹ்மத்து
இறைஆசி நற்காலம்



உலக முஸ்லீம்கள்
ஒவ்வொருவர் வீட்டுக்கும்



உதயம் அருள்மாரி!
உயர்வடைவார் உபவாசி!







*****************************


ஸஹர்ஒரு
பறக்கத்து சாற்றுவது நபிகூற்று



புலனுக்கு தெரியாத
புலப்பாடு அதனூற்று



ஸஹர்ஒரு றஹ்மத்து
சாத்துவீகம் அதன்கீற்று (பிற)



சமயங்கள் எவைதானும்
சாராத முறைமாற்று



ஸஹர்ஒரு மருத்துவம்!
சான்றோர்சொல் மந்திரம்!



சன்மார்க்க சமத்துவம்!
சாந்திமறை சரித்திரம்!



ஸஹர்ஒரு சமுத்திரம்!
சம்தர்ம எந்திரம்!



ஸஹர்இறை தத்துவம்!
சபைபோற்றும் மகத்துவம்!







*************************


நோன்புப்பூவை
நுகர்ந்தவர் கோடி, அதன்



நோக்கமறிந்து நோற்றவர்
கோடி, இன்று



மாண்புப்பெருநாள் மலர்வினில்
கூடி, இன்ப



மகிழ்சியிலாடி குதிக்கிறார் பாடி,
தக்பீர்



வானைப்பிழந்து ஒலிக்குது
கேளீர்! எங்கும்



வல்லவன் அல்லாஹ்வின்
வாழ்த்துரை பாரீர்



தேனையுண்ட வண்டுகள்
போலவே, மக்கள்



தேசம் முழுவதும்
தெரிகிறார் காணீர்!












அடுத்தவன் பசிக்கப்
புசியாதே என்று



அருமை நபிகள்
ஆற்றிய உரையின்



தொடுத்த பாலம்
தொடர்கதை நோன்பு



தொன்று தொட்டு
தொடர்வது பண்பு!



அடுத்தவன் பசியை
அடுத்தவன் அறிய



ஆக்கிய புதிய
புத்தகம் நோன்பு



இருப்பவர் இல்லாதவர்
எனும்நிலை இன்றி



எல்லோரும் பெருநாள்
எடுப்பது மாண்பு



***********************





எல்லோரும் எல்லாமும்
பெறுகின்ற நிலையை



இல்லாமை இல்லாமல்
இருக்கின்ற நிலையை



சொல்ல
வருவதும் சுட்டியே நிற்பதும்



சோபனம் சொல்வதும்
சுகமிந்தப் பெருநாள்!



வள்ளல் தனங்களை
வளர்ப்பது பெருநாள்



வறுமைக்கு வறுமையை
வைப்பது பெருநாள்



உள்ளவர் இல்லாதவர்
ஒவ்வொரு வீட்டிலும்



ஒருமைப் பாட்டினை
ஒலிப்பது பெருநாள்!



*********************





இருப்பவன்
ஒருவனும் இல்லாதவன் ஒருவனும்



இல்லாத நிலையை
இணக்கிடத் தூண்டிடும்



பொறுப்பான பணியை
பூமிக்குச் சொல்லுகின்ற



புதியநாள் வந்ததே!
பெரியநாள் வந்ததே!



கொடுப்பவன்
ஒருவனும் பெறுபவன் ஒருவனும்



கொலு கொண்டிருப்பது கொள்கையில் இல்லையே!


அடுத்தவன் போலவே அடுத்தவன் வாழ்ந்திடும்


அடிப்படைத் தத்துவம்
பெருநாள்நீ வாழ்கவே!




*********************





தோளோடு தோழமை தொழுகையில்
மட்டுமா?



தோழமை தொடர்ந்து
தொழிற்பட மறுப்பதேன்



ஆளுமை அதன்
அடிப்படைத் தத்துவம்



அறிய உணர்த்திடும் அறிவகம்
நோன்பதே



வாழும் மனிதருள்
வாழாமை வாழ்வதா?



வாழ்வாங்கு வாழ்ந்திட
வகைசொல்லும் மாண்பதே!



பாலோடு தேனையும்
பருகிடும் சுவைதரும்



பக்குவம் நோன்பதன்
பவுத்திரம் வாழ்கவே!


****************************
EID MUBARAK


அவருக்காகத் தருவது இவரு........................ பெருநாள் வாழ்த்துக்கவிதை (ஆசுகவி அன்புடீன்) 528804
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum