சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Today at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41

» மோர்க்களி
by rammalar Today at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

ஆன்லைனில் வேலை தேடுபவரா நீங்கள்...........? Khan11

ஆன்லைனில் வேலை தேடுபவரா நீங்கள்...........?

3 posters

Go down

ஆன்லைனில் வேலை தேடுபவரா நீங்கள்...........? Empty ஆன்லைனில் வேலை தேடுபவரா நீங்கள்...........?

Post by nazimudeen Sun 2 Oct 2011 - 17:31

ஆன்லைனில் வேலை தேடுபவரா நீங்கள்...........?

கம்ப்யூட்டர்
தொழில் நுட்பத்தை கற்றுத் தேர்ந்த அந்த இளைஞர், தனியார் நிறுவனம் ஒன்றில்
வேலை பார்த்து வருகிறார். அதை விட அதிக சம்பளத்திற்கான வேலையை தேட
விரும்பி, தன் கல்வித் தகுதி, அனுபவம் போன்ற விவரங்களை இணைய தளத்தில் பதிவு
செய்து வைத்திருந்தார்.

கடந்த வாரம் திடீரென்று அவரது மெயிலுக்கு தகவல் ஒன்று வந்தது. அதில், 'இங்கிலாந்து முழுக்க ஹோட்டல் நடத்தி வரும் ...
பிரபல
நிறுவனத்தின் கம்ப்யூட்டர் பிரிவில் பணிபுரிய தகுதி வாய்ந்த நபராக உங்களை
கருதுகிறோம். உங்கள் திறமையை நாங்கள் மதிப்பீடு செய்ய
வேண்டியுருப்பதால்...தேதியில்.....மணிக்கு இணையதள தேர்வில் நீங்கள கலந்து கொள்ள வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மகிழ்ச்சியடைந்த இளைஞர் உடனே ஒ.கே. செய்தார். குறிப்பிட்ட நாளில்
'ஆன்லைன்' தேர்வில் கலந்து கொண்டு பதிலளித்தார். எப்படியும் நமக்கு அந்த
வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவரிடம் துளிர்க்க, அடுத்து வந்த
மெயில் அவருடைய நம்பிக்கையை மேலும் அதிகரித்தது. 'எங்கள் நிறுவனத்தின் மனித
வள மேம்பாட்டுப் பிரிவில் இருந்து உங்களிடம் பேசுவார்கள்' என்றிருந்தது
அந்த மெயில்.

இரண்டொரு நாளில் இன்னொரு ஆன்லைன் தேர்வுக்கு அழைப்பு வந்தது. அதிலும்
பங்குபெற்றார். அதிலும் அவர் தேறிவிட்டதாக தகவல் வர, அப்போதுதான் ' தனக்கு
எவ்வளவு சம்பளம்?' என்று கேட்டார். 'மாதம் நான்கு லட்சம் ரூபாய் சம்பளம்'
என்று பதில் வந்தது, இளைஞர் மகிழ்ச்சியில் துள்ளலே போட்டு விட்டார்.
அடுத்து இதர சலுகைகள் என்று ஏகப்பட்ட நீளத்தில் இன்னொரு பட்டியல்
வந்திருக்கிறது. கூடவே 'அப்பாயின்ட்மென்ட்' ஆர்டரும் வந்துவிட்டது.

மெய்சிலிர்த்து போன அவர் உற்சாகத்தில் நண்பர்களுக்கெல்லாம்
'பார்ட்டி'வைத்து கொண்டாடிவிட்டார். பார்ட்டியில் பங்குபெற்ற நண்பரில்
ஒருவர், 'உனக்கு நல்லவேளை கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சிதாண்டா. ஆனால் நம்ம
படிச்சிருக்கிற படிப்புக்கு லண்டனில் நாலு லட்சம் ரூபாய் சம்பளம். ஊர்பட்ட
சலுகை வேறு. இதுதாண்டா நம்ப முடியலை. எதுக்கும் விபரம் தெரிஞ்சவங்ககிட்ட
விசாரிச்சுக்கோ' என்று மெதுவாக சந்தேக விதையை தூவிவிட்டு சென்றார். அதை
பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை அந்த இளைஞர்.

பார்ட்டிக்கு மறுநாள் 'உங்களுக்கு விசா எடுக்க வேண்டும். அதற்காக இந்த
படிவத்தை நிரப்பி அனுப்புங்கள்' என்று தகவல் வந்தது. அதில் வங்கி கணக்கு
விபரம், ஈமெயில் பாஸ்வேர்டு போன்றவைகள் எல்லாம் கேட்கப்பட்டிருந்தது.
மட்டுமின்றி தெரிந்தவர் இருவர் விபரங்களும், அவர்களது வங்கி கணக்கு
தகவல்களும் கேட்கப்பட்டிருந்தது. இளைஞருக்கு லேசாக சந்தேகம் வந்தது.
அப்படியே இரண்டு நாட்கள் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்து விட, தொடர்ந்து
மெயில்கள் வந்தபடி இருந்தன.

ஒரு மெயிலில் 'விசாவுக்கான படிவத்தை பூர்த்தி செய்துவிட்டு,
அத்தோடு குறிப்பிட்ட வங்கி கணக்கில் 'விசா எடுக்கும் செலவிற்காக 25 ஆயிரம்
ரூபாய் செலுத்துங்கள்' என்றும் குறிப்பிடபட்டிருந்திருக்கிறது.
உடனே அவர், தனது லண்டன் நண்பர் மூலம் குறிப்பிட்ட அந்த ஹோட்டல்
நிர்வாகத்தை தொடர்புகொள்ள, ''நாங்கள் ஆள் ஏதும் எடுக்கவில்லை. ஒன்றிரண்டு
மோசடி கும்பல் எங்கள் பெயரைக் கூறி லட்சக்கணக்கில் சம்பாதித்துக்
கொண்டிருக்கிறார்கள்'' என்று கூறியிருக்கிறார்கள்.

இந்த தகவல் நம்ம ஊர் இளைஞருக்கு வந்து சேரவும், அப்பாடா தப்பிச்சேன்...
என்று நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார். முதலில் 25 ஆயிரம் ரூபாய்
கேட்கும் மோசடி கும்பல், அடுத்தடுத்து நம்பும்படியான காரணங்களைக் கூறி ஒரு
ஒரு லட்சம் ரூபாய் வரை பறித்து விடுவார்கள். அதன் பிறகே ஏமாந்தவர்கள்
விழிப்படைவார்களாம்.

இவர்களிடம் ஏமாந்தவர்கள் பட்டியல் தமிழ் நாட்டிலே வெகு நீளம். அதில் நீங்களும் சேர்ந்திடாதீங்கன்னு சொல்றோம் அவ்வளவுதான்!

- நன்றி தினத்தந்தி
-- அன்புடன் உங்கள் சகோதரன்: பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
nazimudeen
nazimudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 0

http://pnonazim.blogspot.com

Back to top Go down

ஆன்லைனில் வேலை தேடுபவரா நீங்கள்...........? Empty Re: ஆன்லைனில் வேலை தேடுபவரா நீங்கள்...........?

Post by நேசமுடன் ஹாசிம் Sun 2 Oct 2011 - 17:38

நான் படித்த போதே நினைத்த முடிவுதான் கிடைத்தது உண்மைதான் இவ்வாறு பல்லாயிரம் அனாமோதய மெயில்கள் உலவுகின்றன இதை நம்பி ஏமாந்திடாதீர்கள் எம்மை நம்ப வைக்க இவர்கள் போணில் கூட பேசுவார்கள் பின்னர் பார்சல் அனுப்புகிறோம் பணம் அனுப்புங்கள் என்றெல்லாம் வினவுவார்கள் உசாராக இருங்கள் அவசியமான பதிவு தோழா இவைகள்தான் எமது நண்பர்களுக்கு புத்திமதியாக அமைந்துவிடும்


ஆன்லைனில் வேலை தேடுபவரா நீங்கள்...........? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆன்லைனில் வேலை தேடுபவரா நீங்கள்...........? Empty Re: ஆன்லைனில் வேலை தேடுபவரா நீங்கள்...........?

Post by நண்பன் Sun 2 Oct 2011 - 20:05

உறவுகளுக்கு மிகவும் பயனுள்ள தகவள் தந்தீர்கள் உறவே நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆன்லைனில் வேலை தேடுபவரா நீங்கள்...........? Empty Re: ஆன்லைனில் வேலை தேடுபவரா நீங்கள்...........?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum