சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

மோதலின்போதே கடாபி கொல்லப்பட்டார்; இடைக்கால அரசின் பிரதமர் அறிவிப்பு Khan11

மோதலின்போதே கடாபி கொல்லப்பட்டார்; இடைக்கால அரசின் பிரதமர் அறிவிப்பு

3 posters

Go down

மோதலின்போதே கடாபி கொல்லப்பட்டார்; இடைக்கால அரசின் பிரதமர் அறிவிப்பு Empty மோதலின்போதே கடாபி கொல்லப்பட்டார்; இடைக்கால அரசின் பிரதமர் அறிவிப்பு

Post by நண்பன் Sat 22 Oct 2011 - 11:09

மோதலின்போதே கடாபி கொல்லப்பட்டார்;
இடைக்கால அரசின் பிரதமர் அறிவிப்பு



லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி சிர்த் நகரில் இடம்பெற்ற கடைசி மோதலின் போதே
சுட்டுக்கொல்லப்பட்டதாக இடைக்கால அரசின் பிரதமர் மஹ்மூத் ஜிப்ரில் குறிப்பிட்டார்.
கடந்த வியாழக்கிழமை சிர்த் நகரில் இடம்பெற்ற கிளர்ச்சிப்படை- கடாபி ஆதரவுப்
படைகளுக்கு இடையிலான மோதலின் போது தப்பிக்க முயன்ற முஅம்மர் கடாபியின் தலையில்
குண்டடிப்பட்டதாகவும் அவரின் இரு கால்களும் துப்பாக்கிச்சூட்டில் கடும்
காயத்திற்குள்ளாகி இருந்ததாகவும் மஹ்மூத் ஜிப்ரில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதில் முஅம்மர் கடாபி பிடிபடும் போது இவர் கடும் காயத்திற்குள்ளாகி உயிருடனேயே
இருந்துள்ளார். எனினும் அவரை கிளர்ச்சிப் படையினர் உடனடியாக வாகனத்தில் ஏற்றி
மருந்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மரண மடைந்துள்ளார்.
முஅம்மர் கடாபி பிடிபட்டதைத் தொடர்ந்து ஏ.எப்.பி. செய்திச் சேவை முதல் புகைப்படத்தை
வெளியிட்டது. கையடக்க தொலைபேசியில் இருக்கும் கெமராவில் பிடிக்கப்பட்ட அந்த புகைப்
படம் தெளிவில்லாமல் காணப்பட்டது. எனினும் இதனைத் தொடர்ந்து அல் ஜkரா வெளியிட்ட
வீடியோ காட்சியில் கடாபி உயிருடனேயே காணப்பட்டார்.
அத்துடன் மற்றுமொரு வீடியோ காட்சியில் உயிரற்ற கடாபியின் உடலை கிளர்ச்சிப்படையினர்
இழுத்துச் செல்வது போல் காட்சி அமைந்திருந்தது.
களத்தில் இருந்து வெளியான செய்தி களின்படி புரட்சி படையினரிடம் சிக் காமல்
தப்பிப்பதற்காக தனது பாது காவலர்களுடன் பாதாள சாக்கடைக் குழிக்குள் பதுங்கினார்
கடாபி. அவரைக் காப்பாற்றும் நோக்கில் அவரது பாது காவலர்குள் கடாபி உள்ளே இருப்பதாகக்
கூறினர். இதையடுத்து உள்ளே இறங்கி கடாபியை வெளியே கொண்டு வந்த புரட்சிப் படையினர்
கடாபியை சரமாரியாக அடித்து உதைத்து பின்னர் சரமாரியாகச் சுட்டுக் கொன்றனர்.
தனது உடலில் ஏற்பட்ட தாயத்தால் கடும் அவதிப்பட்ட கடாபி, சுடாதீங்க, சுடாதீங்க என்று
கெஞ்சியுள்ளார். ஆனால் புரட்சிப் படையினர் கடாபியை சுட்டுக் கொன்றுவிட்டனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் உள்ள காட்சிகள் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது.
சிர்த்தில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் கடாபி ஆதரவுப்படையினர் 50 பேருக்கும் மேல்
கொல்லப்பட்டுள்ளனர். இதன் போது கடைசி நேரத்தில் முஅம்மர் கடாபியுடன் இருந்த மெய்ப்
பாதுகாவலர் களில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டாலும் ஒருவர் மாத்திரம் கடாபியை
காப்பாற்ற கிளர்ச்சியாளர்களுடன் போராடியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரி
விக்கின்றன.
கடாபி மகன் பலி
சிர்த்தில் இடம்பெற்ற கடைசிக்கட்ட மோதலில் முஅம்மர் கடாபியின் மகன் முதஸ்ஸிம்
கடாபியும் பலியானார். இந்த தகவலை திரிபோலிக்கான இரா ணுவ கவுன்சிலின் பேச்சாளர் அனீஸ்
அல் ஷரில் உறுதி செய்தார். கொல்லப்பட்ட முத்தஸ்ஸிம் கடாபியின் புகைப்படங்கள்
ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவரது கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதிகளில்
துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப் படுகின்றன. முத்தஸ்ஸிம் கடாபி முஅம்மர்
கடாபியின் தேசிய பாதுகாப்பு படையின் ஆலோசகராக செயல்பட்ட வராவார்.
இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு அமெ ரிக்க - லிபிய உறவை மேம்படுத்தும் முயற்சியாக
அமெரிக்கா சென்று அந்நாட்டு வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளின்டனை சந்தித்து
பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மோதலின்போதே கடாபி கொல்லப்பட்டார்; இடைக்கால அரசின் பிரதமர் அறிவிப்பு Empty Re: மோதலின்போதே கடாபி கொல்லப்பட்டார்; இடைக்கால அரசின் பிரதமர் அறிவிப்பு

Post by jasmin Sat 22 Oct 2011 - 15:03

லிபியாவில் இனித்தான் குழப்பம் ஆரம்பிக்கும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மோதலின்போதே கடாபி கொல்லப்பட்டார்; இடைக்கால அரசின் பிரதமர் அறிவிப்பு Empty Re: மோதலின்போதே கடாபி கொல்லப்பட்டார்; இடைக்கால அரசின் பிரதமர் அறிவிப்பு

Post by நண்பன் Sat 22 Oct 2011 - 16:49

jasmin wrote:லிபியாவில் இனித்தான் குழப்பம் ஆரம்பிக்கும்
மோதலின்போதே கடாபி கொல்லப்பட்டார்; இடைக்கால அரசின் பிரதமர் அறிவிப்பு 111433 மோதலின்போதே கடாபி கொல்லப்பட்டார்; இடைக்கால அரசின் பிரதமர் அறிவிப்பு 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மோதலின்போதே கடாபி கொல்லப்பட்டார்; இடைக்கால அரசின் பிரதமர் அறிவிப்பு Empty Re: மோதலின்போதே கடாபி கொல்லப்பட்டார்; இடைக்கால அரசின் பிரதமர் அறிவிப்பு

Post by முனாஸ் சுலைமான் Sat 22 Oct 2011 - 17:30

இடைக்கால அரசின் பிரதமர் யார் அவர் ஒரு தலையாட்டி பொம்மை இவரின் நோக்கமே கேணல் கடாபியை கொல்ல வேண்டும் என்பதே.
இவரை யார் நியமித்தார் எனவே நடந்துள்ளது கொடுமை இதற்க்குள் மோதலில்தான் கொலைசெய்யப்பட்டார் என்று சொல்லியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது
ஏன் என்றால் கடாபியை உயிருடன் பிடித்து என்னை சுட வேண்டாம் உங்களுக்கு நான் என்ன தப்பு செய்தேன் என்று கடாபி மன்றாடும் காட்சிகள் இன்று வீடியோக்களில் வந்துள்ளது
இவர் சிறு பிள்ளைத்தனமாக கூறுவது வேடிக்கை காட்டு மிராண்டிகளை விட மோசமாக கடாபியின் இறந்த உடலை பாதையால் இழுத்துக்கொண்டு போனது எந்தளவு அநியாயம் என்பதனை மக்கள்தான் சொல்ல வேண்டும்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மோதலின்போதே கடாபி கொல்லப்பட்டார்; இடைக்கால அரசின் பிரதமர் அறிவிப்பு Empty Re: மோதலின்போதே கடாபி கொல்லப்பட்டார்; இடைக்கால அரசின் பிரதமர் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum