சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Today at 8:21

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11

கவர்ச்சியில் கான்ஃபிடண்ட் வளர்க்கும் கன்னிகள்!!! Khan11

கவர்ச்சியில் கான்ஃபிடண்ட் வளர்க்கும் கன்னிகள்!!!

3 posters

Go down

கவர்ச்சியில் கான்ஃபிடண்ட் வளர்க்கும் கன்னிகள்!!! Empty கவர்ச்சியில் கான்ஃபிடண்ட் வளர்க்கும் கன்னிகள்!!!

Post by ahmad78 Sat 21 Apr 2012 - 16:14


கவர்ச்சியில் கான்ஃபிடண்ட் வளர்க்கும் கன்னிகளும், அந்த போதையின் விளைவும்.


அன்பின் சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

அழகு..இன்று இதுதான் பிரதானமாக பெண்களின் மீது ஆளுமை செழுத்தும் வார்த்தை. முன்னெல்லாம் கொஞ்ச நேரம் கண்ணாடி முன்னாடி நிற்க முடியாது,அம்மாகிட்ட இருந்து கடுகுவெடிக்கும் வார்த்தைகள் வந்து விழும். பதில் சொல்லமுடியாது.ஆனால் இன்று அவர்களுக்கு பதில் தயாராகி வந்துவிட்டது. ஆம் “கான்ஃபிடண்ட்”. அதாவது தன்னம்பிக்கை. அழகைக்கூட்டி, தன்னை பிறர்க்கு எழிலாய்க் காட்டி தன்னம்பிக்கையை மெருகேற்றுகிறார்களாம் இந்த அப்பாவி பெண்கள்.

எங்கிருந்து வந்தது இந்த வார்த்தை? சுயமாக சிந்தித்து பெண்கள் கையிலெடுத்துக் கொண்டார்களா? இல்லவே இல்லை. இது மேட்இன் மேலைநாடு இல்லயா?.இந்த வார்த்தை வந்து விழுந்ததே வர்த்தக விளம்பரங்கள் வாயிலாகத்தானே.இன்னும் நாம் அனைவருமே, வாயில் எச்சில் சொட்ட ரசித்து ரசித்து அவர்களின் மொழியையும், கலாச்சாரத்தையும், உணவுகளையும், ஆடைமுறையையும்,என கேவலம் கழிவறைக்காகிதம் வரை அணுஅணுவாய் கடைப்பிடிக்க, அதன்மீதான நமது மோகத்தை தவிர ஒரு மண்ணும் இல்லை அதிலே...

மேலைநாட்டு நாகரீகக்(?) கவர்ச்சியும், கலை(?) என்கிற பெயரில் கேடுகெட்ட சினிமாக் கூத்தாடிகள் காட்டிக்கொடுக்கும் வக்கிரங்களும் இன்று நமக்கு பிரதானமாகிப்போக, ஊணும் உடையும், நடையும் பாவனையும் அவர்களின் கைகளில் விதையாகி நம்மில் வளர்கிறது விஷச்செடிகளாய்.


மேலைநாட்டு நாகரீகம் - வெஸ்ட்டர்ன் கல்ச்சர்..என்ன கருமம் இருக்கிறது இதிலே...ச்சீ.. இதை மெச்சிப்பேசும் மேதாவி ஒருவர் இப்படி சொல்கிறார். அவர் அந்நாட்டில் இருக்கும் போது, பெண் ஒருவர் நீச்சலுடையில் அவர்முன் வந்து,கரையில் யாரும் இல்லை, நான் குளிக்கிறேன்,தனக்கு பயமாக இருப்பதால் நீங்கள் கொஞ்சம் பார்த்துகொள்ளுங்கள், என்றாராம். எப்படிப்பட்ட கலாச்சாரம்? நம்நாட்டில் இப்படி முடியுமா? உடல் அவயங்கள் குறித்து அவர்களுக்கு எவ்வித சிந்தனையும் இல்லை.இயல்பாக பழகுகிறார்கள் என வியந்தார்.இதில் வியக்க என்ன இருக்கிறது.தன்னை துடைப்பமாக மாற்றி குப்பையில் புரலுபவர்களுக்கு, அருவருப்பும் அசூசையும் பெரிதில்லைதானெ...பின் உடலென்ன பொருளென்ன???

இதை தூக்கிப்பிடித்து கோஷம் போட வெக்கமாக இல்லையா? ஆணும் பெண்ணும் வகை தொகையின்றி கூடிக்குலாவ,கூத்தடிக்க கற்றுக்கொடுக்கிறது இந்த ஈனக் கலாச்சாரம். ஆடைகளில் ஆபாசத்தை புகுத்தி,அதைத் தன் உரிமையென அலறி, இன்று என்நாட்டு பெண்களும் அந்த மோகத்தில் தன்னை கவர்ச்சிப்பொருளாக்கி கான்ஃபிடண்ட்?? வளர்க்கிறார்கள்.ஆமாம் இப்போ இப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள். தான் அழகா இருந்தால்த்தான் கான்ஃபிடண்ட்டா இருக்கிறார்களாம். உங்களது பேச்சிலும், திறனிலும், ஒழுக்கத்திலும், தனித்துவத்திலும், ஆற்றலிலும் வெளிப்படாத கான்ஃபிடண்ட், அழகில் வந்துவிட்டது என்ற வர்த்தக விளம்பரங்களின் அற்ப கோஷங்களை, எப்படி அறிவில்லாமல் கையிலெடுத்து ஏந்துகிறீர்கள்?

உங்களுக்காகவே காலத்திற்கேற்ப கோஷங்களை மாற்றி தன் வியாபாரத்தை நல்லபடியே நடத்திக்கொண்டிருக்கிறான் மேற்கத்திய வியாபாரி. உங்களுக்குத்தான் பொட்டில் அறைந்தாற்போல் சொன்னாலும் விளங்குவதில்லை.ஒருவர் தன்னை அழகுபடுத்திக் கொள்வதை யாரும் தடுக்கமுடியாது.அது அவரவர் உரிமையும் கூட. என்ன?... காலாகாலமாக நம் பெண்கள் அழகுபடுத்திக் கொள்ளாமாலா இருந்துவிட்டார்கள்.அது அவர்களை ஆடையிலும் அலங்காரத்திலும்,தன்னையும், தனது சுயத்தை இழந்துவிடாது பாதுகாத்தது..

ஆனால் இன்று....அழகு அழகு என சொல்லி உங்கள் மாராப்பை உங்களுக்கே தெரியாமல் உருவிவிட்டானே! இன்னமும் உணரவில்லையா நீங்கள்...முன்பு எதை மறைத்திருந்தீர்கள், இன்று எதை இழந்திருக்கிறீர்கள் என்று? மாராப்பில்லாத எந்த ஆடையும் அணியாத நாம் இன்று சேலை தவிர எதிலும் மாராப்பு போடுவதில்லை.சேலைக்கு வேறு வழியில்லை. ஆனால் அதற்கு வேறுவிதமாக ஜன்னல், ஸ்லீவ்லெஸ் என திறப்புகளை கொடுத்து அதையும் கவர்ச்சி ஆடைக்குச் சற்றும் குறைவில்லாமல் ஆக்கிவிட்டான் சினிமா கூத்தாடி. இன்னும் சேலையை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.முறையாக அணியாவிட்டால் அதைவிட ஒரு அபாசமான ஆடை இல்லை...சரி விஷயத்துக்கு வருவோம்.

எங்கு போனது இந்த மாராப்பு, இதற்கு ஏன் இப்போது தேவை இல்லாமல் போனது? ச்சே..இத்தனை காலமும் முட்டாள் தனமாய்,இப்படி ஒரு ஆடைய அணிந்து அவயத்தை மறைத்து கான்ஃபிடண்டை தவறவிட்டோமெ(?) என அங்கலாய்த்து துறந்துவிட்டீர்களோ?.. நீங்கள் எண்ணிக்கொள்ளலாம்,நானாகத்தானெ என் மேலாடையை துறந்தேன் என்று? இல்லை..உங்களுக்கு ஒப்பீட்டளவில் காட்டப்பட்டது.உங்களது முந்தைய ஆடை,ஏதோ கேவலம் போலவும்,அதை துறந்தமேனியுடைய பெண்,சினிமா நடிகை முகத்தில் காட்டும் நடிப்பை வெளிப்படுத்தி நடைபயில,.அதை கண்டு விழிவிரிந்த நிமிடம்,உங்களது ஆடை காற்றில் பறந்திருக்கிறது.இல்லயா?.ஆனால் இதை யாரும் உணர்வதில்லை.அப்படி ஆடை அணிந்து அவர்களை போல நடைபயின்றால் கான்ஃபிடண்ட்?? உங்களையும் தொற்றிக்கொள்கிறதா?..

ஹ்ம்ம் இப்படிப்பட்ட கான்ஃபிடண்ட் என்ன தெரியுமா?... வெளிப்படையாக சொல்வதானால் அப்பட்டமான இனக்கவர்ச்சியில் தொக்கிக்கொண்டு நிற்கும் அசிங்கம்.அழகு சாதனத்தை அள்ளி அப்பிக்கொண்டு,கவர்ச்சியாக உடையணிந்து,ஊசிக்காலணியில் ஒய்யார நடைபோட்டால், ஊர்ல உள்ளவன் கண்ணு பூர உங்கமேலதான். எதுனால அந்த வாய்பிளக்கும் பார்வை உங்கள் மீது?...என்றாவது சிந்தித்ததுண்டா?..அவன் அந்த அழகிய?? ஆடையை பார்க்கிறானா? அதில் உள்ள வேலைப்பாட்டை பார்க்கிறானா? ம்ம்ஹும்... அது வெளிப்படுத்தியிருக்கும்,இவன் பார்க்கத்துடிக்கும் உங்களின் அவயங்களைத் தானே பார்க்கிறான். அது உங்களுக்கு தெரியவில்லையா? இது வெறும் உடல் கவர்ச்சி, இனக்கவர்ச்சி என்று. இதில் தான் உங்களது கான்ஃபிடண்ட்டுக்கு விதை தூவி விவசாயம் பார்க்கிறீர்கள்.

ஆம் இதில் உங்களுக்கு மகசூலும் கிடைக்கலாம்.எங்கும் உங்களது அங்கங்களுக்கு மதிப்பில்லாமல் இல்லைதானே.அதனால் முதியவன் முதல் பெரிய அதிகாரி வரை, அத்துனை பேரும் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பான்.உங்களிடம் நேரம் ஒதுக்கி பேசமுயல்வான். இது உடலை முறையாக மறைத்து தன்மானம் பேணும் ஒரு பெண்ணுக்கு கிடைக்காமல் போகலாம்.அவருக்கு அந்த இடத்தில் கிடைக்காத முக்கியத்துவம் உங்களுக்கு கிடைத்துவிட்டதாக உச்சி குளிர்ந்துவிடாதீர்கள்.இது உங்களுக்கான முக்கியத்துவம் எனக்கருதிவிடாதீர்கள்.. இன்றைய சினிமா வெற்றிக்கு ஒரு குத்துப்பாட்டு எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறதோ, அந்த ரீதியில் நீங்களும் முக்கியத்துவம் பெறுகிறீர்கள்.

சிலர் சொல்கிறார்கள்.சம அறிவுள்ள இருபெண்கள் இருந்தால்,ஒருவர் இயல்பான முகத்துடனும்,முழுமையான ஆடையுடனும்,மற்றவர் முக உதட்டுப் பூச்சுடன் குட்டை பாவாடை, குறுஞ்சட்டை அணிந்துவந்தால், இருவரில் யாருக்கு முக்கியத்துவம் கிடைக்கும்? என்னதான் சம அறிவிருந்தாலும்,இந்த அழகு(?) என்பது கேட்பாஸ் மாதிரி தங்களுக்கு பயன்படுகிறதாம்....இப்படிப்பட்ட முக்கியத்துவத்தை,எங்கும் உறுதியாக பெற்றுத் தருவதால் தாங்கள் கான்ஃபிடண்ட்டுடன் இருக்கமுடிகிறதாம்.. அதெல்லாம் சரி, உங்களுடன் மூனாமவராய் அதே சமஅறிவுள்ள ஒருவர், சினிமாவில் கூத்தாடும் கவர்ச்சி நடிகைபோல் ஆடை அணிந்துவந்தால் உங்களை காட்டிலும்,அதே அதீத முக்கியத்துவம் பெற்றுவிடுவார். அப்போ உங்கள் கான்ஃபிடண்டின் நிலை என்னவாக இருக்கும்?. காற்றுப்போன பலூன் தானா??

மனசாட்சியோடு ஒரு நிமிடம் சிந்தித்தால்...ஹ்ம்ம்..இதுக்கு ஏன் இவ்ளோதூரம் போகனும், இயலபாகவே சிந்தித்தால்,ஆண் பெண் இருவரில் அதிகம் மறைக்கவேண்டிய அவயங்களை கொண்டவர்கள் பெண்கள் என்பது அரைபைத்தியத்திற்கு கூட விளங்கும். ஆனால் நிதர்சனத்தில் நடப்பதோ வேறு.! ஆண் முழுவதும் மறைத்த ஆடையை அணிகிறான்.பெண் எங்கடா திறக்கலாம் என பார்க்கிறாள்(திறப்போர் மட்டும்).அல்லது எங்குதிறந்த ஆடைகளை வடிவமைத்து அவர்களின் அழகை கூ(கா)ட்டி, கான்ஃபிடண்ட் வளர்க்கலாம் என உங்களின் நலம்(உடல்) விரும்பும்?? நல்லவன் யோசிக்கிறான்.


ஒரு பெண்ணுக்கு தன்னை கவனிக்கும் ஆணின் பார்வை எங்கே இருக்கிறது என்பது,அவள் அவனை பார்க்காவிட்டாலும் குறிப்பால் உணரும் திறன் உண்டு.ஒவ்வொரு பெண்ணும் அறிவாள்,தன்னுடன் பேசும் ஆண்,தான் பார்க்கும் போது எங்கு பார்க்கிறான்,தான் பார்க்காத போது எங்கு பார்க்கிறான் என்று.இப்படித் தெரிந்தும் தன்னைத் திறந்து, இன்னும் உங்களது அசைவுகளில் வெளிப்படும் வண்ணம் மறைத்தும் மறைக்காமலும் என, அவயங்களை வெளிப்படுத்தி வெற்றிபெற(?) முனைகிறீர்களே எனதருமைத் தாய்குலமே!!!

இப்படி அடுத்தவன் பல்லிழிக்க வேண்டும் என்ற காரணத்திற்க்காய். முகத்திற்கு அரிதாரமிடுவதும், உடலுக்கு ஒவ்வாத அரைகுறை ஆடை அணிவதும்,உயரக்காலணிகள் அணிந்து ஒய்யார நடைகட்டுவதும் நீங்களே!
பார்க்க அனுமதிக்கும் உடலை,அடுத்தகட்ட நடவடிக்கை மூலம் அதே மேலதிகாரி/பொருக்கி சீண்டினால் அதனால் பாதிக்கப்படுவதும் நீங்களே!. தவறு செய்தவன் அவனாக இருந்தாலும் தவறை தூண்டியது நீங்களென்பதை, பட்டும் உணரமாட்டீர்கள்.

அழகும் அறிவும்,உங்களது தோலில் ஒட்டிக்கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டு,எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற ரீதியில் கவர்ச்சி ஆடைகளிலும்,முகப்பூச்சுக் கலவைகளிலும் இப்படி மைய்யல் கொண்டு மயங்கிக் கிடப்பது அறிவார்ந்த செயலென்று ஆக்கிவிட்டீர்கள் போலும்.

இந்த போதையிலேயே உங்களை வைத்திருப்பதன் மூலமே மேலத்தேய பெருமுதலாளிகளின் வளர்ச்சி இருக்கிறது.இன்னும் அந்த போதையால் தான், அவன் உங்களை குறித்து என்னவிதமாக விளம்பரப்படுத்தினாலும், அவை உங்களின் சிந்தனை எல்லையை சீண்டுவதில்லை.

ஒருவன் பாடிஸ்ப்ரே பயன்படுத்தி வெளியே வந்தால்,அவ்ளோதான் பெண்களெல்லாம் அப்படியே அவன் பின்னாடி ஓடி வந்திடுவார்களாம்.குடும்பபெண் பக்கத்துவீட்டுக்காரனின் பாடிஸ்ப்ரேக்கு மயங்கிவிடுகிறாளாம்.பாடிஸ்ப்ரே அடித்திருக்கும் கிழவன், அவனுடன் பொது இடத்தில் உறவுக்கு தயாராகிவிடுகிறாள் பெண்.



இதுமாதிரியான விளம்பரங்கள் கண்டிப்பாக வாய்பிளக்கும் ஆண்களை கவர்வதற்கு பயன்படுகிறதென்றாலும்,அங்கு போகப்பொருள் பெண்தானே. ஆம்,ஒரு பெண்ணை கவர வேண்டுமா? இந்த ஸ்ப்ரே பயன்படுத்து,அவள் அவ்ளோதான்..என்கிற ரீதியில்தான் விளம்பரம் செய்கிறான்.இதில் கேவலப்படுத்தப்படுவது யார்?

ச்சீ..இத்தனை கீழ்தரமா உங்களை படம்பிடித்து காட்டுகிறானே! என்றாவது உணர்ந்ததுண்டா? என்ன நாம் அவ்வளவு கேவலமாக போய்விட்டோமா? நம்மையல்லவா இப்படி காட்டுகிறான் என எத்தனை பேர் கோவப்பட்டதுண்டு.குறைந்தபட்சம் சிந்தித்ததுண்டு..??

உங்களை உங்கள் வீட்டு அறைக்கே வந்து ஒருவன் கேவலப்படுத்தினாலும் உங்களால் உணரமுடியாது. உண்மையை சொல்லப்போனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆண் உங்களை போகப்பொருளாகத்தான் பயன்படுத்த முயற்சிக்கிறான்.அதை நடத்தியும் காட்டுகிறான்.இந்த காலத்தில் என்னவோ கட்டுடைத்துவிட்டதாக காலரை தூக்கிக்கொண்டு பேசுகிறீர்களே!. அறிந்துகொள்ளுங்கள் உண்மையிலேயே முந்தைய காலங்களைவிட இப்போதுதான் இப்படிப்பட்டவர்களின் முழுமையான போகப்பொருளாகி இருக்கிறீர்கள். ஏத்திவிட்ட அழகு போதையில் அவன் போடும் தாளத்துக்கு அச்சுபிசகாமல் ஆட்டம் போடுகிறீர்கள்... வசீகரிக்கும் உடையும், வாகான நடையும்,உங்களின் வெற்றியல்ல. வாய்பிளக்கும் ஆண்களிடம் மண்டியிடும் தோல்வி. இதோ..அதன் நீட்சியாக, இந்த விளம்பரத்தின் வெற்றி சொல்லிக்காட்டுகிறது நீங்கள் இன்னும் வக்கிர ஆண்களின் போகப்பொருள்தான் என்று. இது பானைச் சோற்றுப்பதம்.

எத்தனை எத்தனையோ முனை மழுங்கிய காரணங்களை முன்வைத்து போராட்டம் நடத்துகிறீர்களே! இவைகளை எதிர்த்து போராட... ம்ம்ஹும், ஒரு கண்டனம் தெரிவிக்க ம்ம்ஹும்...எங்கும் கண்டதில்லை. இன்று முகப்புத்தகத்திலும்,இன்னும் பற்பல சமூக வலைதளங்களிலும், வலைப்பூக்களிலும் ஆளுமை செலுத்தும் நீங்கள் இதுபோன்ற கேவலங்களை என்றாவது கண்டித்ததுண்டா?. இன்று இது போன்ற ஊடகத்திறனால் ஆட்சிகளே மாறும் காட்சிகளை காணமுடிகிறதே!...இன்று உங்கள் கைகளில் இருக்கும் திறம்கொண்டு, தருணத்தில் உங்களது பாதையை சீர்செய்துகொள்ளுங்கள்.இது நீடித்தால் நாளை உங்களை மேலைநாடுபோல ஒட்டுத்துணியில்லாமல் அலையவிட்டு பார்க்க முயற்சிகள் நடக்கும்...அன்றும் நீங்கள் எதோஒரு காரணத்தை சொல்லிக் கொண்டு அவ்வாறே போகலாம்.ஆனால் அந்த எல்லையை கடந்தபின் எப்போதும் உங்களது ஆடையை மீட்டுக் கொள்ளவேமாட்டீர்கள் என்பது திண்ணம்.

உடலைக்காட்டி உங்களை முக்கியத்துவப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு நீங்கள் தாழ்ந்து போய்விடவில்லை.முறையாக உடலை மறைத்து கண்ணியமாக நடைபோட்டு, வாய்பிளக்கும் ஆண்களின் முகத்தில் சேற்றை நிறப்புங்கள்.இத்தகைய கேவலமான விளம்பரச் சித்தரிப்புகளுக்கு செருப்படி கொடுங்கள்,ஆபாச ஆடைகளையும், கவர்ச்சி வேஷங்களையும் புறக்கணித்து வெற்றிபெறுங்கள். ஆண்கள் நாங்கள் உங்களுக்கு பக்கபலமாக நிற்போம்.

அன்று இந்த வெற்றி ஆண்களின் உங்கள்மீதான பார்வையை மாற்றிப்போடும்.உங்களின் மீதான ஆபாசப்பார்வை கண்ணியமான பார்வையாக மாறும்.ஒருவர் உங்களை கண்ணியமாக பார்ப்பது,உங்களுக்கு கான்ஃபிடண்ட் தராதா?..கண்ணியம் கொடுக்கும் கான்ஃபிடண்ட்டும், அதைக்கடந்த தடையில்லாத ஊக்கமும்,எந்த அழகும் கவர்ச்சியும் தராது, வேறெதிலும் கிடைக்காது.அப்படிப்பட்ட கன்ஃபிடண்ட்டை சுவைத்துப்பாருங்கள். பின் ஒருகாலமும் கைவிடமாட்டீர்கள். அதுவே எல்லாக் காலத்திலும்,எல்லா வயதிலும் துணையாய் நிலைத்திருக்கும் கான்ஃபிடண்ட்.

அதை கைகொள்ளுங்கள்.. வெற்றி பெறுங்கள்.. தலை நிமிர்ந்து நில்லுங்கள்...
அன்புடன்
ரஜின்

http://sunmarkam.blogspot.com/2011/12/blog-post.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கவர்ச்சியில் கான்ஃபிடண்ட் வளர்க்கும் கன்னிகள்!!! Empty Re: கவர்ச்சியில் கான்ஃபிடண்ட் வளர்க்கும் கன்னிகள்!!!

Post by gud boy Sat 21 Apr 2012 - 17:03

அருமையான கட்டுரை..மிக அருமை..

மகளை விட தாய் கவர்ச்சி காட்டிக் கொண்டு மகனோடு வெளியே செல்கிறாள்..இது தான் இந்த மேலை நாடு கலாசாரம்..
மொத்தத்தில் முறை இல்லாத உறவுக்கு வழி கோலுவதில்இந்த மேலை நாட்டு கலாசாரம் முன்னோடியாக திகழ்கிறது..

போர்த்திக் கொண்டு நடப்பது பெண்ணடிமை தனம் என்று கொடி பிடிக்கத் தான் ஆட்கள் இருக்கிறார்கள்.அது கற்பை பாது காக்கும்.கயவர்களின் கண்ணிலிருந்து காக்கும் என்பதை உணர்வோர் குறைவே உள்ளனர்..
இதை எல்லாம் உணர்ந்து தான் இஸ்லாம் பெண்கள் மீது ஹிஜாபை கடமை ஆக்கியிருக்கிறது..

இஸ்லாம் எதை செய்ய சொல்கிறதோ அதில் மனிதனுக்கு நன்மையை தவிர வேறில்லை..

gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

கவர்ச்சியில் கான்ஃபிடண்ட் வளர்க்கும் கன்னிகள்!!! Empty Re: கவர்ச்சியில் கான்ஃபிடண்ட் வளர்க்கும் கன்னிகள்!!!

Post by முனாஸ் சுலைமான் Sat 21 Apr 2012 - 20:44

##* :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கவர்ச்சியில் கான்ஃபிடண்ட் வளர்க்கும் கன்னிகள்!!! Empty Re: கவர்ச்சியில் கான்ஃபிடண்ட் வளர்க்கும் கன்னிகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum