சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

காசி நாடு-அறிவோம்... Khan11

காசி நாடு-அறிவோம்...

Go down

காசி நாடு-அறிவோம்... Empty காசி நாடு-அறிவோம்...

Post by ராகவா Wed 18 Sep 2013 - 12:03

காசி நாடு என்பது 1194 வரை காணப்பட்ட ஒரு சுதந்திர பூமிஹார் பிராமண (நிலவுடைமையாளரான பிராமணர்) நாடாகும். 1775ல் இது ஒரு பிரித்தானியப் பகுதியாகவும், 1911ல் ஒரு மாநிலமாகவும் ஆகியது. இங்கு ராம்நகர் கோட்டையும் அதன் நூதன சாலையும் அமைந்துள்ளது. காசியின் மன்னர்களின் வரலாற்றைக் கூறும் எச்சங்களாக இவை உள்ளன. மேலும் 18ம் நூற்றாண்டிலிருந்து காசி மன்னர்களின் வதிவிடமாகவும் இதுவே திகழ்கிறது. தற்காலத்திலும் காசியின் மன்னர், காசியின் மக்களால் மிகவும் மரியாதைக்குரியவராகக் கருதப்படுகிறார். இவர் ஒரு சமயத் தலைவராக உள்ளதோடு காசியின் மக்கள் இவரை சிவபெருமானின் மறுபிறவியாகவே கருதுகின்றனர்.இவர் ஒரு கலாசாரத் தலைவராகவும் உள்ளதோடு, அனைத்து சமய விழாக்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறார்.மன்னர் குடும்பத்தினர் தம்மைச் சிவனின் வழிவந்தவர்களாகக் குறிப்பிடுவதோடு காசிக்கு யாத்திரை வருவோரிடமிருந்து சிறந்த அனுகூலங்களைப் பெற்று வருகின்றனர்.
காசி நாடு-அறிவோம்... 800px-Benares_%28Varanasi%2C_India%29_-_1922
வாரணாசி காட்

வரலாறு

காசி ராச்சியம், பிரதிஸ்தனவின் சோமவன்ச குலத்தைச் சேர்ந்த அயுசின் மகனான சேத்திரவிரதனால் உருவாக்கப்பட்டது. 1194ல் இது அவுதின் நவாபினாலும், 1775ல் பிரித்தானியராலும் கைப்பற்றப்பட்டது. 1911ல் காசி ஒரு மாநிலமானது. இது 13-குண்டு மரியாதை தரும் ஒரு பகுதியாக்கப்பட்டது.
காசியின் ஆளுநர் காசியின் பெரும்பாலான பிரதேசங்களை, கங்கபூரின் கௌதம பூமிஹார் பிராமண ஜமீன்தார் ஒருவருக்கு அளித்து விட்டார். கங்கபூரின் ஆட்சியாளரான பல்வந்த் சிங், தில்லியின் முகலாயப் பேரரசர் முகமது ஷாவிடமிருந்து, 1737ல் ஜன்பூர்மற்றும் வாரணாசியையும் 1740ல் சூனாரையும் பெற்றார். இவ்வாறு முகலாயப் பேரரசில் காசி காணப்பட்டது. காசி மன்னரின் அதிகாரத்தின் கீழ் சந்தாலி, கியான்பூர், சாக்கியா, லதிஃப்ஷா, மிர்சபூர், நந்தேஷ்வர், மின்ட் ஹௌஸ் மற்றும் விந்தியாஞ்சல் ஆகியனவும் காணப்பட்டன.
முகலாயப் பேரரசின் வீழ்ச்சியுடன் பூமிஹார் பிராமணர்கள் தமது ஆட்சிப்பரப்பை தெற்கில் அவாத் வரையிலும் மேலும், அரிசி விளையும் செழிப்பான பகுதிகளான பனாரஸ், கோரக்பூர், டெயோரியா, காசிபூர், பல்லியா மற்றூம் பீகார் வரையிலும் வங்காளத்தின் சில பகுதிகளிலும் விஸ்தரித்துக் கொண்டனர்.பரம்பரை ஆட்சியுரிமை என்பது சில இந்து இளவரசர்களுக்கு வெற்றி தேடித் தந்தது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பூமிஹார் பிராமணர்கள் காசியின் மன்னர் பதவிக்குத் தகுதியுடையோராய் இருந்தனர். இந்தப் பகுதிகள் பின்பு பெனாரஸ், கோரக்பூர் மற்றும் அசம்கர் போன்ற மாவட்டங்களாயின. இதன் காரணமாக, 1750கள் மற்றும் 1760களில் அவுதின் நவாபினால் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட போது தம்மைப் பலப்படுத்திக்கொள்ள அவர்களால் முடியுமாயிருந்தது.அவுது நவாபினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு படை நடவடிக்கையின் போது பனாரசின் ஆட்சியாளரால் தனது பிராமணப் படை வீரர்களைக் கொண்டு ஒரு கெரில்லாப் போர் தொடங்கப்பட்டது. இதனால் நவாப் தனது படையுடன் பின்வாங்க வேண்டியிருந்தது.
பண்டைய பிராமண வழக்கப்படி காசியின் மன்னர் உணவருந்துவதை எவரும் பார்த்ததில்லை. மேலும் எந்தவொரு மன்னரும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவில்லை. இவ்வாறு தமது பிராமணச் சட்டங்களை அம்மன்னர்கள் பேணி வந்தனர். காசியின் மன்னரின் விருந்தினராக பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலா, பண்டித ஜவகர்லால் நேரு, ராஜேந்திரப் பிரசாத், இந்திரா காந்தி, இரண்டாம் எலிசபெத், நெல்சன் மண்டேலா, தலாய் லாமா, கோச்செரில் ராமன் நாராயணன் மற்றும் அவரது பர்மிய மனைவி போன்றோர் சென்றுள்ளனர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காசி நாடு-அறிவோம்... Empty Re: காசி நாடு-அறிவோம்...

Post by ராகவா Wed 18 Sep 2013 - 12:09

காசியின் மன்னர்

காசியின் மன்னர் சிவபெருமானின் வழிவந்தவராகக் கருதப் படுகிறார். சிவராத்திரியின் போது காசியின் மன்னரே பிரதம பூசகராக இருப்பார். மேலும் ஏனைய பூசகர்கள் கருவறையினுள் நுழைய அனுமதிக்கப் படுவதில்லை. மன்னர் தனது சமயக் கருமங்களை நிறைவேற்றிய பின்னரே ஏனையோர் அனுமதிகப் படுவர்.
மன்னரின் இருப்பிடம் காசிக்கு அருகில், கங்கை நதியை அடுத்துள்ள ராம்நகரில் அமைந்துள்ள ராம்நகர் கோட்டையாகும்.காசியின் மன்னர், வாரணாசி இந்துப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியை ஏற்றுள்ளார்.வேந்தருக்கு எந்த அதிகாரங்களும் இல்லை. எல்லா முடிவுகளையும் அதன் உபவேந்தரே எடுக்கிறார்.
சனவரி 28, 1983 அன்று, காசி விசுவநாதர் கோவில் உத்திரப் பிரதேச அரசினால் பொறுப்பேற்கப்பட்டது. அதன் முகாமைத்துவம், அன்றைய காசி மன்னரான, கலாநிதி.விபூதி நாராயண் சிங்கை தலைவராகக் கொண்ட அறக்கட்டளையிடம் கையளிக்கப்பட்டது. மேலும் அந்தப் பிரதேச ஆணையாளரை தலைவராகக் கொண்ட நிறைவேற்றுக் குழுவொன்றும் அமைக்கப் பட்டது.
கலாநிதி. விபூதி நாராயண் சிங்கே காசியின் இறுதி மன்னராவார். அக்டோபர் 15, 1948ல் காசி இந்திய ஒன்றியத்தின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. 2000ம் ஆண்டில் அவரது மரணத்தின் பின் அவரது மகனான ஆனந்த் நாராயண் சிங் பாரம்பரியக் கடமைகளை நிறைவேற்றும், அடுத்த காசி மன்னராக பதவியேற்றார்.

ராம்நகரின் வரலாறு

ராம்நகர் கோட்டை காசி மன்னர் பல்வந்த் சிங்கினால், 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது வெள்ளை சூனார் மணற்கல்லால் கட்டப்பட்டது. இது மாடங்கள், திறந்தவெளி அரங்குகள் கொண்ட முகலாயப் பாணியிலமைந்த கட்டடமாகும்.

ராம் நகரில் ராம் லீலா

விஜயதசமி விழா(தசரா) வண்ணமயமான அலங்காரங்களுடன் ஆரம்பமாகும் போது காசியின் மன்னர் ஊர்வலத்துக்குத் தலைமையேற்று யானையில் வலம் வருவார்.பின்பு, பளபளக்கும் பட்டுப் பீதாம்பரங்களை அணிந்த அவர், ராம்நகரில் ஒரு மாத காலம் நடக்கும் ராம்லீலா நாடகத்தை ஆரம்பித்து வைப்பார்.
ராம்லீலா என்பது, துளசிதாசர் எழுதிய ராமாயணமான ராமசரித மானசில் கூறப்பட்டுள்ள ராமபிரானின் கதையை நடித்துக் காட்டும் நாடகமாகும். இந்நாடகம் மன்னரின் அனுசரணையோடு ராம்நகரில் மாலை நேரத்தில், தொடர்ந்து 31 நாட்களுக்கு நடைபெறும்.விழாவின் இறுதிநாளில் இது உச்சகட்டத்தை அடையும். இதன்போது ராமர், அரக்க அரசனான ராவணனை அழிப்பார்.19ம் நூற்றாண்டில், மகாராஜா உதித் நாராயண் சிங் என்பவரே ராம்நகரில் ராம்லீலாவை அரங்கேற்றும் வழக்கத்தை ஆரம்பித்தார்.
காசி மன்னரால் நடாத்தப்படும் விழாவைக் காண ஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவர்.
அகில இந்திய காசி ராச்சிய நம்பிக்கை நிதியம்

காசியின் மன்னர் கலாநிதி.விபூதி நாராயண் சிங்கின் வழிகாட்டலின் கீழ் அமைக்கப்பட்ட அகில இந்திய காசி ராச்சிய நம்பிக்கை நிதியத்தின் மூலம் புராணங்களின் மீதான ஆராய்ச்சி ஆரம்பித்தது. இவ்வமைப்பு, புராணங்களைப் பதிப்பித்து வெளியிட்டதோடு, புராணம் எனும் பெயரில் சஞ்சிகை ஒன்றையும் வெளியிட்டது.

ராம் நகர் கோட்டையில் சரஸ்வதி பவன்

மிகவும் அரிய ஓலைச்சுவடிகள், விசேடமாக சமயம் தொடர்பான ஆக்கங்கள் சரஸ்வதி பவனில் வைக்கப்பட்டுள்ளன. இதில் துளசிதாசர் எழுதிய அரிய ஓலைச்சுவடிகளும் காணப்படுகின்றன. மேலும் முகலாயப் பாணியிலமந்த, அழகிய முகப்பு அட்டைகளையுடைய நூல்களும் இங்கு உள்ளன.
ராம் நகரிலுள்ள வியாசர் கோவில்

பிரபலமான புராணக் கதையொன்றின்படி, வியாசர் காசியில் பிச்சை பெற்றுக்கொள்ள முடியாததால் அவர் அந்நகருக்குச் சாபமிட்டார்.எனினும், பார்வதியும் சிவனும் மனிதத் தம்பதியினராய் உருவெடுத்து வியாசரை உணவருந்த அழைத்தனர். வியாசரும் அதனை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு தனது சாபத்தை மறந்துவிட்டார்.எவ்வாறாயினும், வியாசரின் முன்கோப குணத்தால் சிவன் வியாசரை காசியினுள் நுழைவதற்குத் தடை விதித்தார். எனினும் காசிக்கு அருகிலேயே இருக்க வேண்டும் என்ற ஆவலினால் கங்கை நதியின் மறுகரையில் வியாசர் தமது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார். ராம்நகரில் அவரது கோவிலை அவ்விடத்தில் இன்றும் காணலாம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காசி நாடு-அறிவோம்... Empty Re: காசி நாடு-அறிவோம்...

Post by ராகவா Wed 18 Sep 2013 - 12:17

காசி நாடு-அறிவோம்... Hometown%2B122
சாயந்திர ஆரத்தி...காசி (யமுனையின் மடியில்)
காசி நாடு-அறிவோம்... 14_big

அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவில் ...

காசி நாடு-அறிவோம்... F462dcdd-2374-42cd-98d7-d25ce4f060d6_S_secvpf
காசி யாத்திரை..
காசி நாடு-அறிவோம்... Viswanath
காசி நாடு-அறிவோம்... Images?q=tbn:ANd9GcTOvfg6WNhdDAzxger2tjtT1FRKzTmfmWBUwuZiaDgLJyjz4HwMhw
காசியின் வீதி..

நன்றி:தமிழ் விக்கிப்பீடியா
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காசி நாடு-அறிவோம்... Empty Re: காசி நாடு-அறிவோம்...

Post by ராகவா Wed 18 Sep 2013 - 12:24

வாரணாசி
காசி என்றும் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசி, இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நகரமாகும். கங்கைக் கரையில் அமைந்த இந்நகர், இந்து சமயத்தினரின் புனித நகரமாக கருதப்படுகிறது. இங்குள்ள விசுவநாதர் ஆலயத்திலுள்ள லிங்கம், சைவ சமயத்தினரின் புகழ் ​பெற்ற பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகும். பண்டைய காலங்களில் கல்விக்கூடங்கள் பல அமைந்து கல்வியிற் சிறந்த இடமாக விளங்கியது வாரணாசி. இங்கு தயாரிக்கப்படும் பெனாரஸ் பட்டுப் புடவைகள் மிகப் பிரபலமானவை.
காசி என்பது ​சொர்க்கத்திற்குச் ​செல்லும் வழியாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் காசி ​என்ற ​புகழுடன் சிவத்தலங்கள் அதிகமாக உள்ளன. அவற்றுள் ​தென்​கோடியில் உள்ள ​தென்காசி மற்றும் மதுரைக்கு அருகில் ​​வைகை ஆற்றின் கரையில் உள்ள திருப்பூவணக்காசி மற்றும் காவேரி ஆற்றின் கரையில் உள்ள பல சிவத்தலங்களும் அடங்கும்.
காசியின் புகழுக்குக் காரணம் சூரிய வம்சத்தில் தோன்றிய மன்னன் சகரன். அவன் அசுவமேத யாகம் செய்தான். இதனால் இந்திரன் தனது பதவி பறிபோய்விடும் எனப் பயந்து அசுவமேத யாகக் குதிரையைத் திருடி, இமாலயத்தில் கடும் தவமியற்றி வந்த கபிலர் என்ற மகாமுனியின் ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான். குதிரையைத் தேடிவந்த சகரனின் புதல்வர்கள் முனிவரைத் துன்புறுத்தினர். இதனால் கோபம் கொண்ட முனிவர், ராசகுமாரர்களையும் அவர்களுடன் வந்த அனைவரையும் தனது கோபப்பார்வையால் எரித்துச் சாம்பல் ஆக்கிவிட்டார். தனது பிள்ளைகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இறந்துவிட்டதனால் மனமுடைந்த சகர மன்னன் தனது பேரன் அம்சுமான் என்பவனுக்கு முடிசூட்டிவிட்டு கானகம் சென்று தவம் செய்து முத்தியடைந்தான். ஆனால் முனிவரின் ​கோபப்பார்​வையால் இறந்த இளவரசர்கள் யாரும் முத்தி அடைய வில்லை. அம்சுமானின் அரண்மனைக்கு வந்த மகான்கள் அனைவரும் சகரனின் புத்திரர்கள் நற்கதி அடைய வேண்டுமானால் எரிந்து போன அவர்களின் சாம்பல் மீது தேவர்களின் உலகில் பாய்ந்து செல்லும் கங்கையின் நீரைத் ​தெளித்தால் மட்டுமே சாபவிமோசனம் பெற்று நற்கதி அடைய முடியும் என்று கருத்துத் ​தெரிவித்தார்கள்.
கங்கையை பூமிக்குக் கொண்டுவர அம்சுமானால் முடியவில்லை. அவனது மகன் அசமஞ்சனாலும் முடியவில்லை, ஆனால் அசமஞ்சனின் மைந்தன் பகீரதன் தனது முன்னோர்களின் ஆன்மாக்கள் முத்தியடையக் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவரவேண்டித் கடுந்தவம் செய்தான். அவனது தவத்தை ஏற்று கங்கா தேவியும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். சிவபெருமான் தனது திருமுடியில் கங்கையை விழச்செய்து பூமியில் நதியாக ஓடச் செய்தார். இவ்வாறு ஓடிய கங்கை நதியில் பகீரதனின் முன்னோர்களின் அஸ்திகள் கரைக்கப்பட்டன, இதனால் அவர்கள் முத்தி பெற்றனர். அன்றிலிருந்து கங்கையில் அஸ்தியைக் கரைத்து முன்னோர்களின் ஆன்மாக்களை முத்தியடையச் செய்து வருகின்றனர். இதுவே காசியின் சிறப்பு ஆகும்.
காசி நாடு-அறிவோம்... EarlymorningontheGanges
காசி நாடு-அறிவோம்... 800px-Varanasi_5
வாரணாசியின் கங்கைக் கரையில் ஒரு தோற்றம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காசி நாடு-அறிவோம்... Empty Re: காசி நாடு-அறிவோம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum