சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள் Khan11

பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள்

+2
பானுஷபானா
*சம்ஸ்
6 posters

Go down

பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள் Empty பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள்

Post by *சம்ஸ் Sat 19 Oct 2013 - 17:34

பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள் 6401a058-595d-496a-a294-56ce8c1f3426_S_secvpf



பித்தம் சிறிது எண்ணெய்ப்பசையுடன் கூடியது, செயலில் கூர்மையானது, சூடானது, லேசானது, துர்நாற்றமுடையது, இளகும் தன்மையுடையது, நீர்த்தது ஆகிய குணங்களைக் கொண்டது. தொப்புள், இரைப்பை, வியர்வை, நிணநீர், இரத்தம், கண்கள், தோல் இவற்றை இருப்பிடமாகக் கொண்டுள்ளது. உடலுக்குப் பித்தம் பல நன்மைகளைச் செய்கிறது. 

உண்ட உணவை சீரணிக்கச் செய்தல், உடலுக்குத் தேவையான வெப்பம், விருப்பம், பசி, தாகம், ஒளி, தெளிவு, பார்வை, நினைவாற்றல், திறமை, மென்மை போன்ற நல்ல செயல்களைச் செய்து உடலைப்பாதுகாக்கிறது. 

தன் நிலையிலிருந்து பித்தம் சீற்றம் கொண்டு உடலில் அதிகரித்து விட்டால் - தோலில் மஞ்சள் நிறம் உண்டாகுதல், சோர்வு, புலன்களுக்கு வலுவின்மை, உடலில் சக்திக்குறைவு, குளிர்ச்சியில் விருப்பம், எரிச்சல், வாயில் கசப்புச்சுவையை ஏற்படுத்துதல், நாவறட்சி, மூர்ச்சை, தூக்கம் குறைதல், கோபம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. பித்தம் ஐந்து வகையான பிரிவுகளைக் கொண்டது. அவை:- 

1. பாசகம்: இரைப்பை, சீரணப்பை இவற்றின் நடுவில் இருந்து கொண்டு ஐம்பெரும்பூதங்களால் ஆக்கப்பட்டிருந்தாலும், இதனிடம் நெருப்பின் குணம் அதிகமாக இருப்பதாலும், நீரின் குணங்கள் குறைவாக இருப்பதாலும், தன் திரவகுணத்தை விட்டுவிட்டு தன்னைச் சார்ந்த வாயு, ஈரத்தன்மை இவற்றின் காரணமாக உடலுக்கு உதவி புரிகிறது. 

அதாவது உடலுக்குச் சூட்டையும், உணவை செரிக்கவும் செய்கிறது. அதனால் இதற்கு `அக்னி' என்று அழைக்கப்படுகிறது. உணவை செரிக்கச் செய்து அதிலிருந்து சத்தான பகுதியையும், தேவையற்ற மலத்தையும் பிரிக்கிறது. மற்ற இடங்களிலுள்ள பித்தங்களுக்குத் தன்னிருக்கையிலிருந்து கொண்டே, ஊட்டமளிக்கிறது. 

2. ரஞ்சக பித்தம்: இது இரைப்பையை உறைவிடமாகக் கொண்டு அங்குள்ள உணவின் நீர்ச்சத்தான பகுதிக்கு செந்நிறத்தை அளிக்கிறது. 

3. ஸாதக பித்தம்: இது இதயத்தை தங்கு மிடமாகக் கொண்டு அறிவு, நுண்ணறிவு, தந்நிறைவு, செயல்படுவதில் ஊக்கம் இவைகளைத் தந்து தனக்கு விருப்பமான புலப்பொருள் அடைதல், செயல் இவற்றின் ஈடுபாட்டினால் அதை நிறைவேற்றிக் கொள்ளுதல் ஆகியவற்றைச் செய்கிறது. 

4. ஆலோசக பித்தம்: இது கண்களில் தங்கி அவற்றிற்குப் பார்க்கும் சக்தியை அளிக்கிறது. 

5. ப்ராஜக பித்தம்: சருமத்தை உறைவிடமாகக் கொண்டு சருமத்திற்கு ஒருவித ஒளியைக் கொடுத்து அதை நன்கு விளங்கச் செய்வதால் இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. இது எண்ணெய் குளியல், நீராடுதல், மேற்பூச்சு இவற்றைப் பக்குவப்படுத்தி ஊட்டமளித்து ஒளியை வெளிப்படுத்துகிறது. 

காரம், புளி, உப்புச்சுவை, புலால் உணவு வகைகளில் மீன், கோழி, நண்டு வகையறா, எண்ணெய்யில் பொரித்த உணவு வகைகள், காபி, டீ, பேல்பூரி, பாணிப்பூரி, சமோஸா, பாஸ்தா, நூடுல்ஸ், சிப்ஸ், குளிர்பானங்கள், கையேந்தி பவனில் விற்கப்படும் சூப், சுண்டல், மதுபானம், பாக்கு, சிகரெட், குட்கா போன்றவை பித்தத்தைத் தூண்டி விட்டு, அதன் சீற்றத்திற்குக் காரணமாகி சுமார் 40 வகையான பித்த நோய்களை ஏற்படுத்துகின்றன. அவை: வருமாறு:- 

உடல் முழுவதும் நெருப்பின் அருகில் உள்ளது போன்ற வியர்வையுடன் கூடிய எரிச்சல். உடலில் ஒரு பகுதியில் வியர்வை ஏற்படாமல் உஷ்ணம் தோன்றுதல், உடலில் காட்டுத் தீ போன்ற எரிச்சல், , கண் முதலிய பொறிகளில் எரிச்சல், முகம், உதடுகள், 

வாயின் மேல் பாகம் இவற்றில் எரிச்சல் , உடலின் உள் எரிச்சல், தோலில் தோன்றும் எரிச்சல், தோளில் எரிச்சல், புகைவது போல ஏப்பம் விடுதல், புளித்த ஏப்பம், கடுமையான உஷ்ணம், அதிகமாக வியர்த்தல், உடல் நாற்றம், புலன்களின் அழற்சி, இரத்தம் கருத்து நீற்றுப் போதல், மாமிசம் கருநிறமடைந்து கெட்ட நாற்றம் வீசுதல், 

தோல், அதனுள் உள்ள மாமிசம் இவற்றின் பிளவு, தோலின் உள்ளும், புறமும் வெடிப்பு, இரத்தக்கட்டி, எரிச்சலுள்ள இரத்தக் கொப்புளம், தோலின் மேல் உண்டாகும் வட்டமான தடிப்பு, இரத்த பித்தம், உடலிலோ, மலத்திலோ பச்சை நிறம் ஏற்படுதல், உடலில் மஞ்சள் நிறம் தோன்றுதல், ரத்தம் நீல நிறமாக மாறுதல், 

கக்கம், தோல், விலா இவற்றில் தோன்றும் வேதனையளிக்கும் கொப்புளம், மஞ்சள் காமாலை, வாயில் கசப்புச் சுவை, வாயில் இரத்தத்தின் நாற்றம், வாயில் கெட்ட நாற்றம், தாகம் அதிகரித்தல், உணவில் போதும் என்ற எண்ணம் தோன்றாமை, வாய் வேக்காடு, தொண்டைக்குள் வேக்காடு, கண் நோய், மலத்துவாரத்தில் வேக்காடு, 

ஆண் குறியில் வேக்காடு, உயிருக்கு ஆதாரமான இரத்தம் வெளிவருதல், இருண்டு போதல், கண், சிறுநீர், மலம் இவை பசுமை கலந்த மஞ்சள் நிறமாகுதல், பித்தம் தன்னுடைய இயற்கையான அளவிலிருந்து குறைந்து விட்டால் செயலற்றிருப்பது, குளிர்ச்சி, விட்டு விட்டு ஏற்படும் உடல் வலி, குத்தல், சுவையின்மை, அசீரணம், 

உடலில் சொரசொரப்பு, நடுக்கம், பளு, நகம், கண் இவை வெளுத்துப் போதல் போன்றவை உடலில் காணும். பித்தத்தின் சீற்றத்தினால் ஏற்படும் உபாதைகளை நீக்க - கசப்பான மூலிகை நெய் மருந்தை அருந்தச் செய்தல், பேதி மருந்துகளால் பித்தத்தை மலம் வழியாகக் கழியச் செய்தல், இனிப்பு, கசப்பு, துவர்ப்புச் சுவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல், 

வெட்டிவேர், விளாமிச்சைவேர், கரும்புவேர் போட்டு ஊறிய பானைத் தண்ணீரை குடிக்கப் பயன்படுத்துதல், குளிர்ந்த நீரில் குளித்தல், நெற்றியில் தூய சந்தனத்தை இட்டுக் கொள்ளுதல், காதிற்கு இனிமையாகவும், மிருதுவாகவும், மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடியதுமான இன்னிசை, அன்பான வார்த்தைகளை கேட்டல், 

பழைய அரிசி, கோதுமை, பச்சைப்பயறு, சர்க்கரை, தேன், புடலை, நெல்லிக்காய், திராட்சை போன்றவை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல் நல்லது. வயிறு நிறையச் சாப்பிடுதல், தயிர், மசாலாப் பொருட்கள், புலால் உணவு, எண்ணெய், எதிர்காற்று, மதுபானம், பகலுறக்கம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். 

வாஸா குடூச்யாதிகஷாயம், திராக்ஷதி கஷாயம், திக்தகம் கஷாயம், சந்தனாஸவம், உசீராஸவம், திரிவிருத் லேஹ்யம், விதார்யாதி கிருதம், சந்தனாதி தைலம், ஹிமஸாகரதைலம் போன்ற ஆயுர்வேதத்தின் தரமான மருந்துகளை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி உள்ளும் புறமும் உபயோகிக்கச் சிறந்தவை. - 

எஸ்.சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, நசரத்பேட்டை. செல்: 9444441771


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள் Empty Re: பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள்

Post by பானுஷபானா Mon 21 Oct 2013 - 12:37

:”@: :”@: தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள் Empty Re: பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள்

Post by நண்பன் Mon 21 Oct 2013 - 13:26

பயனுள்ள கட்டுரை பகிர்வுக்கு நன்றி...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள் Empty Re: பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள்

Post by ராகவா Tue 22 Oct 2013 - 21:11

நல்ல கட்டுரை....நன்றி தொடருங்கள்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள் Empty Re: பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள்

Post by rammalar Fri 25 Oct 2013 - 6:03

பித்தம் தெளிய மருந்து ஒன்றிருக்குது..!!
=
:/
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23976
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள் Empty Re: பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள்

Post by ansar hayath Fri 25 Oct 2013 - 18:44

:”@: :”@:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள் Empty Re: பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள்

Post by *சம்ஸ் Mon 28 Oct 2013 - 17:26

நண்பன் wrote:பயனுள்ள கட்டுரை பகிர்வுக்கு நன்றி...
நன்றி பாஸ் )(


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள் Empty Re: பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum