சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Khan11

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

+7
கவியருவி ம. ரமேஷ்
நண்பன்
பாயிஸ்
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
Nisha
ராகவா
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 26 Mar 2014 - 16:41

ஹைக்கூ இலக்கணம்

‘ஹை’  என்பதற்கு  ஜப்பானிய  அடிச்  சொல்லுக்கு  அணுத்தூசி,  கரு,  முழுமையான  கரு  என்ற  பொருள்  உண்டு.  ‘கூ’  என்பது  சொற்றொடர்,  வெளிப்பாடு,  வாக்கியம்,  பகுதி,  ஒரு  வரி,  ஓர்  அடி,  ஒரு  செய்யுள்,  ஒரு  கவிதை  என்றும்  பொருள்  தருகிறது.

இவற்றை  இணைத்துப்  பார்க்கையில்  ஹைக்கூ  என்பது  கரு  போன்றும்,  உயிரணு  போன்றும்  உருவானதொரு  கவிதை  என்னும்  முழுப்பொருளைத்  தரும்.  மேலும்  வளர்ச்சிக்கும்  விரிவுக்கும்,  ஒரு  கருவுக்கு  உள்ளிருக்கும்  இன்னொரு  கவிதைக்  கருவைக்  காண்பதற்கும்  ஹைக்கூ  என்ற  சொல்  சிறப்பாக  அமைந்திருப்பதைக்  காணலாம்.

‘ஹைக்கூ’  ஜப்பானிய  மொழிக் கவிதை.  3  அடிகள்  கொண்டது. மூன்று  அடிகள்  கொண்ட  ஜப்பானிய  ஹைக்கூ  ஐந்து,  ஏழு,  ஐந்து  சீர்களைக்  கொண்டு  17  சீர்களில்  ஹைக்கூ படைக்கப்படும் (தமிழுக்கு  இந்த  சீர்  எண்ணிக்கை  தேவையில்லை). ஜென்  தத்துவத்தோடு  இயற்கை  மற்றும்  மெய்யியலோடு  தொடர்பு  கொண்டது. கவித்துவம்  கொண்டது.  இந்தியாவின்  (தமிழ்நாடு  உள்பட)  சூழலுக்கு  ஜப்பானிய  ஹைக்கூவின்  உள்ளடக்கக்  கோட்பாடு  பொருந்தி  வராது  என்ற  போதிலும்  எப்படியோ  இந்தியாவில்  (தமிழ்நாடு  உள்பட)  ஓர்  இலக்கிய  வடிவமாக  /  கவிதையாக   இடம்  பிடித்துவிட்டது.  பெரும்பான்மையாக  தமிழ்நாட்டு ஹைக்கூ  3  அடிகள்  கொண்டு  எழுதப்படுகிறது.  அவ்வாறு  3  அடிகள்  கொண்டு  எழுதப்படுவதை  தமிழ்  அறிஞர்களால்  ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு    ‘ஹைக்கூ’  வடிவமாகவும்  அங்கீகரித்துள்ளார்கள்.  

இந்தியாவின்  (தமிழ்நாடு  உள்பட)  சூழலுக்கு  ஜப்பானிய  ஹைக்கூவின்  உள்ளடக்கக்  கோட்பாடு  பொருந்தி  வராது  என்ற  போதிலும்  தமிழ்  ‘ஹைக்கூ’ இயற்கை, மெய்யியல்  மற்றும்  கவித்துவம், குறியீடு,  படிமம்,  தொன்மம்  ஆகியவற்றையும்  அவற்றின்  வகைகளையும்  கருத்துச்  செறிவையும் கொண்டதாக  இருப்பது  சிறப்பு.  இன்று  எழுதப்படுவதெல்லாம்  ‘புதுக்கவிதை’  என்பது  போல  ‘ஹைக்கூ’  பற்றிய  சரியான  புரிதல்  இல்லாமல்  3  அடிகள்கொண்டு  எழுதப்படுவது  எல்லாம்  ‘ஹைக்கூ’  என்பதால்  ஹைக்கூவின்  உள்ளடக்கம்  தாழ்ந்துபோய்  உள்ளது.   ஜப்பானிய  ஹைக்கூவின்  தமிழ்  மொழிபெயர்ப்பை  தவிர்த்து  விட்டால்  1974ல்  கவிக்கோ  அப்துல்  ரகுமான்  தமிழில்  முதன்முதலாக  ஹைக்கூ  படைத்துள்ளார்.  இன்று  பல  ஆயிரம்  பேர்  தமிழில்  ஹைக்கூ  எழுதி  வருகிறார்கள்.  தமிழில் ‘ஹைக்கூ’விற்கென்றே  சில  தனி  சிற்றிதழ்கள்  வெளிவந்து  கொண்டுள்ளன.

இன்றைய  ஹைக்கூக்  கவிஞர்கள்  பெரும்பான்மையினர்  தங்களை  ஹைக்கூக்  கவிஞர்கள்  என்று  கூறிக்  கொள்ள  வேண்டும்  அல்லது  தொடர்ந்து  ¨ஹைக்கூவிற்குள்  இயங்கிக்  கொண்டிருப்பதாகக்  காட்டிக்  கொள்ள  வேண்டும்  என்ற  தன்முனைப்புக்காகச்  சென்ரியு  வகைக்  கவிதைகளை  நிறைய  படைத்து  அதனை  ஹைக்கூ  என்று  பெயரிட்டு  வெளியிட்டு  வருகிறார்கள்  என்பது  உண்மை.  இதன்  காரணமாகச்  சென்ரியு  என்ற  ஒரு  வடிவம்  இருப்பதை  அவர்களால்  வெளிக்காட்டாமல்  இருட்டடிப்பும்  செய்யப்படுகிறது.  இந்த  நிலை  இன்னும்  ஓராண்டுவரை  நீடித்தால்  கூட  சென்ரியு  கவிதைகள்  தான்  தமிழின்  ஹைக்கூக்  கவிதைகள்  என்று  வாசகர்கள்  மனத்தில்  பதிந்துபோய்விடும்.  

ஜப்பானிய  மொழியில்  இன்னும் - இன்றும்  ஹைக்கூ,  ஹைக்கூவாகவேதான்  இருக்கிறது.  ஹைக்கூவை எழுத முடியாதவர்கள் சென்ரியு வகையை நாடிச் சென்றுவிடுகிறார்கள். ஹைக்கூவின்  பிறிதோரு  வகையான  நகைச்சுவை,  வேடிக்கை,  சமூக  கேலி  கிண்டல்களை  உள்ளடக்கமாகக்  கொண்டதுதான்  சென்ரியு.  

இந்தியாவில்  குறிப்பாகத்  தமிழ்நாட்டில்  ஹைக்கூ  கவிஞர்கள்  என்று  குறிப்பிட்டுக்  கொள்ளும்  பலரும்  தங்களை  முன்னிலைப்படுத்திக்  கொள்ளவேண்டும்.  ஆயிரக்கணக்கான  ஹைக்கூக்கள்  படைத்துள்ளதாகக்  காட்டிக்கொள்ளவேண்டும்  என்ற  போலியான  /  தன்முனைப்பால்(Ego) சென்ரியு  வகை  கவிதைகளைப்  படைத்து  ஹைக்கூ  என்ற  தலைப்பில்  கவிதைத்  தொகுதியாக  வெளியிட்டுக்  கொண்டிருக்கிறார்கள்.  ஹைக்கூவின்  உள்ளடக்கம்  வேறு.  சென்ரியுவின்  உள்ளடக்கம்  வேறு  என்று  ஹைக்கூ  பற்றி  அவர்களுக்குத்  தெரிந்திருந்தும்,  உண்மையான  ஹைக்கூவை  எழுத  (நிறைய  எழுத)  முடியாதக்  காரணத்தால்  சென்ரியு  வகைக்  கவிதைகளை  எழுதிக்  குவித்துவிட்டு  ஹைக்கூ  என்று  சொல்லிக்  கொள்கிறார்கள்.  தவறான  வழிகாட்டியாவும்  திகழ்ந்து  கொண்டிருக்கிறார்கள்.  

தமிழ்நாட்டில்  ஒருவர்  எழுதிய  ஹைக்கூக்  கவிதைகளின்  எண்ணிக்கையைக்  கணக்கிட்டுதான்  ‘ஹைக்கூக்  கவிஞர்’  என்று  அழைக்கின்றனர்  அல்லது   பட்டம்  கொடுக்கப்படுகிறது.  இது  தவறு.  ஒருவர்   ஓரிரு  ஹைக்கூவைச்  சிறப்பாகப்  படைத்தாலும்  அவர்  ஹைக்கூக்  கவிஞர்தான்  என்று  ஏற்றுக்  கொள்ளும்  ஜப்பானியர்களின்  மனநிலை  தமிழ்நாட்டிலும்  பரவலாக்கப்பட  வேண்டும்.

ஹைக்கூ  மரபுகள்

1.  ஹைக்கூ மூன்று  வரியாக  இருக்க  வேண்டும். (ஒரு  வாக்கியத்தையே  பிரித்து  மூன்று  அடியாக்கி  ஹைக்கூ  எழுதக்  கூடாது.  ஹைக்கூவில்  ஒவ்வொரு  அடியும்  ஒரு  வாக்கியம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.)
2.  ஹைக்கூவுக்குத்  தலைப்பிட்டு  எழுதக்  கூடாது.  ஒரு  ஹைக்கூவிற்கு  இரண்டுக்கு  மேற்பட்ட  அல்லது  குறைந்த  பட்சம்  இரண்டு  உட்கருத்தாவது  (குறியீடு  போல;  உட்பொருள்)  இருக்க  வேண்டும். (ஹைக்கூவுக்குத்  தலைப்பிடக்கூடாது  என்பதற்கானக்  காரணம்  இதுதான்.  தலைப்பைத்  தாண்டிச்  சிந்திப்பதைத்  தடை  செய்கிறது.  ஒரு  ஹைக்கூவின்  உட்பொருள் (குறியீடு போல்)  விரிந்து செல்வதாக  இருக்க  வேண்டும்.  தமிழ்நாட்டு ஹைக்கூக்கள்  பெரும்பான்மையும்  ஒற்றைப்  பரிமாணத்தில்தான்  வருகின்றன.  ஒரு  உண்மையான  ஹைக்கூ  குறைந்தபட்சம்  இரண்டு  உட்பொருளையாவதுத்  தாங்கி  இருப்பது  சிறப்பு.)

கவிக்கோ  அப்துல்  ரகுமான்  கூற்று:
ஹைக்கூவில்  நாம்  கடைபிடிக்க  வேண்டிய  மூன்று  முக்கிய  மரபுகள்  உண்டு.
1.ஹைக்கூவில்  முதல்  அடி  ஒரு  கூறு.  ஈற்றடி  ஒரு  கூறு. ஹைக்கூவின்  அழகும்  ஆற்றலும்  ஈற்றடியில்தான்  உள்ளது.  ஈற்றடி  ஒரு  திடீர்  வெளிப்பாட்டை,  உணர்வு  அதிர்ச்சியை  ஏற்படுத்தி  முழுக்  கவிதையையும்  வெளிச்சப்படுத்த  வேண்டும்.
2.மற்றொரு  மரபு  ஹைக்கூவின்  மொழி  அமைப்பு.  ஹைக்கூவின்  மொழி  ஊழல்  சதையற்ற  மொழி.  தந்தி  மொழியைப்  போல்,  அவசியமற்ற  இணைப்புச்  சொற்களை  விட்டு  விட  வேண்டும். (ஹைக்கூ  எளிய  சொற்கள்  கொண்டும்  குறைந்த  வார்த்தைகளைக்  கொண்டும்  இருப்பது  சிறப்பு.  படைப்பாளர்  எல்லாவற்றையும்  விவரித்துக்கொண்டு  இருக்கக்கூடாது.  விவரிப்பது  வசனம்  அல்லது  புதுக்கவிதையின்  வேலை.)
3.உயிர்  நாடியான  ஈற்றடியில்  ஆற்றல்  மிக்க  வெளிப்பாட்டிற்காகப்  பெயர்ச்  சொல்லையே  பயன்படுத்த  வேண்டும்.

மேற்கண்டவற்றை  ஹைக்கூப்  படைப்பாளர்கள்  கடைபிடிக்க  வேண்டும்.  ஏனென்றால்  ஹைக்கூவின்  அடையாளமும்,  அழகும்,  ஆற்றலும்  இவற்றில்தான்  இருக்கின்றன.

ஹைக்கூ  வாசிப்பு  முறை
ஹைக்கூவை  முறையாக  எப்படி  வாசிக்க  வேண்டும்  என்ற  புரிதல்  ஹைக்கூ  எழுதுபவர்களுக்குக்  கூட  தெரியாமல்  இருப்பது  வினோதமானது.  3  அடிகள்  கொண்ட ஹைக்கூவை  முதல்  இரண்டு  அடிகளை  தொடர்ந்து  படித்து  நிறுத்த  வேண்டும்(மூன்றாவது  அடியைப்  படிக்கக்  கூடாது).  மீண்டும்  முதல்  இரண்டு  அடிகளை  படித்து  நிறுத்தி  மூன்றாவது  அடியைப்  படிக்க  வேண்டும்.  அப்படிப்  படிக்கும்  போது  அந்த  இறுதி  அடி  எதிர்பாராதத்  திருப்பம்  கொண்டதாக  இருக்க  வேண்டும்.  இப்போது ஹைக்கூ  எழுதுபவர்கள்  இந்த  எளிமையான  முறையை  மட்டுமே  கடைபிடித்தால்  கூட  அவர்கள்  எழுதும் ஹைக்கூவை  மேலும்  சிறப்பாகப்  படைக்க  முடியும்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu 27 Mar 2014 - 18:09; edited 2 times in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 26 Mar 2014 - 16:45

பாடம் - 1


மல்லிகை 
உதிர்ந்து கிடக்கிறது
செடியின் கீழ்


மல்லிகை ஏன் உதிர்ந்து கிடக்கிறது?

வீட்டில் கணவன் மனைவிக்குள் சண்டையா என்ன?

தெருவில் இரண்டு பெண்களுக்குள் சண்டையா?

ஒரு பெண்ணே ஏதோ ஒரு கோபத்தினால் தலையில் கிடந்தப் பூவை இப்படி உதிர்த்திருக்கிறாளா?

இல்லை அது முதல் இரவாகக் கூட  இருந்திருக்கலமே என்று நினைக்கிறீர்களா?

சரி ஏன் அப்படி உதிர்ந்து இருக்கிறது? என்று மூன்றாம் அடியைப் பார்க்கிறோம்.

செடியின் கீழ் – அட செடியின் கீழ் தான் உதிர்ந்து கிடந்திருக்கிறது.

சரி… செடியின் கீழ் ஏன் மல்லிகை உதிர்ந்து கிடந்திருக்கிறது?

நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்...

இந்த ஹைக்கூவில் முதல் அடியில்,

மல்லிகை – யை மல்லிகைப் பூக்கள் என்று எழுதலாம் என்றிருந்தேன்… ஹைக்கூவை மேலும் சுருக்க நினைத்து அவ்வாறு எழுதாமல்,

மல்லிகை 
உதிர்ந்து கிடக்கிறது
செடியின் கீழ்


என்று எழுதி முடித்தேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 26 Mar 2014 - 17:30

என்னுடைய பனித்துளியில் பனைமரம் (ஹைக்கூ) நூலின் ஆய்வுரை
பனைமரத்தின் கீழ் பால் குடித்தேன்…!
 
ந.க. துறைவன்
20, வசந்தம் நகர் விரிவு,
பேஸ் 3, சத்துவாச்சாரி  
வேலூர் – 632 009.
செல்: 9442234822; 8903905822
 
தமிழ் ஹைக்கூ கவிதைகளைச் சிற்றிதழ்களும் வணிக இதழ்களும் வெளியிட்டு வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கவிஞர்கள் பலரும் ஆர்வ மேலீட்டால் ஹைக்கூ கவிதை தொகுப்புகளை வெளியிட்டு அறிமுகமாகி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஹைக்கூ நூல்கள் வெளிவருகின்றன. ஹைக்கூ கவிதை மீதான விமர்சனக் கணைகள் இன்னும் வீசிக்கொண்டுதான் இருக்கின்றன. அவைகளை யெல்லாம் மீறியே இன்று அமைதியாக ஹைக்கூ இயங்கி வருகிறது. கல்லூரி, பல்கலைக் கழகங்களில் ஹைக்கூவை ஆராய்ந்து ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டம் பெற விழையும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு வருவதை அறியமுடிகின்றது.
 
            சமீபத்தில் நண்பர் கவியருவி ரமேஷ் எழுதிய ஹைக்கூ கவிதைகளை இதழ்களின் வழியே படிக்க நேர்ந்தது. ஹைக்கூ கவிதைகள் நிறையவே படைத்து தனித்தொரு அங்கீகாரம் பெற்றிட வேண்டும் என்கிற முனைப்பு மிகுந்தே அந்த ஹைக்கூ கவிதைகளில் காணப் பெற்றன.   அந்த முனைப்பும்  தீவிர     ஆர்வமும் நான் அவரை நேரில் கண்டபோதும் வெளிப்பட்டு நின்றது. கவித்துவமிக்கத் தலைப்பான ‘பனித் துளியில் பனைமரம்’ என்ற இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில ஹைக்கூ கவிதைகள் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிய கருத்துகளை வாசகர்களிடையே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
 
            பிரபஞ்ச இயக்கத்திற்கு எப்பொழுதும் ஓய்வு என்பதில்லை. புவியில் வாழும் ஜீவராசிகளுக்கும் ஓய்வு என்பதில்லை. எல்லாமே இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஓய்வு என்பது உறக்கமே; ஓய்வாகாது. உறக்கமின்றேல் மனிதனுக்குப் பல்வேறு வகையான மன, உளவியல் சார்ந்த தொந்தரவுகள் ஏற்பட்டுவிடுகிறது. எனவே, மருத்துவர் அந்நோய்க்கு மருந்தாக உறக்க மாத்திரை அளித்து நிவாரணமாக ஓய்வெடுக்க விடுகிறார். அப்படிப் பார்த்தால் ஓய்வு என்பது ஒரு பாவனையாகவே கருதப்படுகிறது. இந்த ஓய்வு நிலையினை,
இலை நிழலில்
இளைப்பாறுகின்றன
எறும்புகள்
 என்று சிறு எறும்பின் மூலமாக எடுத்துரைக்கிறார்.
            அரிசி புடைத்தல் கிராமப் பெண்களுக்கு லாவகமானதொரு செயல். அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு எனப் பல உணவுப் பொருட்கள் புடைத்துச் சுத்தம் செய்வதனை வீடுகளில் ஏதேனும் ஓரிடத்தில் உட்கார்ந்து புடைப்பதனைக் காணலாம். வீட்டில் முற்றத்தில் மகள் அரிசி புடைப்பதனை அம்மா ஏதோ ஒரு காரணம் முன்னிட்டு திட்டுகிறாள். அதனை வீட்டின் மாடத்தில் அமர்ந்திருக்கும் குருவி கண்டு களிக்கிறதாம். இதனை,
முற்றத்தில் அரிசி புடைத்தால்
திட்டுவாள் அம்மா
மாடத்தில் குருவி
என்று அற்புதமானதொரு காட்சிப் படிமத்தைக்காட்டி சிந்திக்க வைக்கிறார் கவிஞர்.
 
            உழவுத் தொழில் விவசாயிகளின் ஜீவாதாரமான வாழ்க்கை. உழவுத் தொழிலை வள்ளுவப் பெருந்தகை  உயர்த்திப் போற்றுகிறார். உலக மாந்தர்களை எல்லாம் வாழ்விப்பது உழவுத் தொழிலே. ஆனால், அம்மக்களின் வாழ்நிலை இன்றைய நவீன தொழில்நுட்பக் காலத்தில் உயர்வாகப் பேசும்படி இல்லையென்பது வருத்தத்திற்கு உரியதே. அவர்களின் வாழ்க்கை எவ்வழி செல்கிறது என்பதனை,
ஏர் வழி செல்லும்
காளைகள்
விவசாயியின் வாழ்க்கை
 என்று காட்டுகிறார் கவிஞர்.
            விவசாயிகளின் ஏர் (நேர்) வழி வாழ்க்கையைப்
படம் பிடித்துக் காட்டும் கவிஞர் அவ்விவசாயப் மக்கள் எதிர்நோக்கும் மழையைப் பற்றியும் கீழ்கண்டவாறு எழுதுகிறார்.
வாடிக் கொண்டிருக்கும் செடி
அடியில் எறும்பு புற்று
வருந்தியபோது மழை
 என்று வள்ளுவரைப் போன்றும், வள்ளலாரைப் போன்றும் வாடிக் கொண்டிருக்கும் செடிகளுக்காகவும் எறும்புகளுக்காகவும் பரிவு காட்டுகிறார்.
 
            மனிதர்கள் ஆடை உடுத்தவில்லை எனில் நிர்வாணமாகக் காட்சியளித்து விலங்கினங்களைப் போலத் தோன்றுவார்கள். அந் நிர்வாண உருவத்தைப் பார்ப்பதற்குச் சகிக்கத் தோன்றுமா? இலைகளைத் தன் இடுப்பில் ஆடையாக அணியத் தொடங்கிய மனிதனின் அழகு, இன்று நாகரீகம்  என்ற வார்த்தை போதையில் மயங்கி,  மீண்டும் ஆடைகள் அரை நிர்வாணமாக மாறி வருகின்றன.
ஆடை
உடுத்தலில் இருக்கிறது
பூக்களின் அழகு
 ஆடை உடுத்தியிருப்பதால்தான் அனைத்துப் பூக்களும் அழகாகக் காட்சி  அளிப்பதாகவும், பூக்களும் ஆடை அணிந்துள்ளன என்று கண்டுணர்ந்த இக்கவிஞனின் பார்வையை வியக்காமல் இருக்க முடியவில்லை.
 
            பூக்கள் மரங்களுக்கு அழகு சேர்ப்பதைப் போன்று பூக்கள் பெண்களின் கூந்தலுக்கும் அழகு சேர்க்கிறது. பெண்கள் கூந்தலில் சூடியப் பூக்கள் மாலைப் பொழுது வருவதற்குள் வாடி போய்விடுகிறது. பெண்களின் உடல் வெப்பநிலை, காற்றின்மை, உணர்வுநிலை, மனச் சோர்வு, மன அழுத்தம் ஆகிய மனநிலை சிக்கல் களுக்குக் காரணமாகச் சொல்லலாம். பெண்கூந்தலின் மீதான பார்வையைப் பதித்திருக்கிறது இந்த ஹைக்கூ:
கூந்தல்
சிக்குண்டது
பூக்கள்
பெண்கள் தலையில் லாவகமாகப் பூவை வைப்பதும் எடுப்பதையும் காணலாம். ஆனால் சிக்குண்டது என்று இன்றைய பெண்ணியவாதிகளின் பார்வையில் இருந்து அவர்களின் அவலநிலையை உணர்த்துகிறார்.
 
            இருவர் உள்ளங்களைக் கவர்ந்து வசீகரிக்கும் உணர்வே காதலாகும். இக் காதல் காந்த சக்தி இரு மனங்களையும் இணைத்துக் கொண்டு இயங்கும் வேகம் அபரிமிதமானதாகும். காந்தம் இரும்போடு இணைந்தும் விலகியும் ஆட்டம் போடும். அதே போன்றுதான் காதலும் இணைந்தும் விலகியும் விளையாட்டு காட்டும். ஆனால், காதல் மௌனமாக நடந்தேறும்போது தன்னைக் காதலிக்கிறாளா இல்லையா என்று
காதலனாலும், தன்னைக் காதலிக்கிறானா இல்லையா என்று காதலியாலும் உணர்ந்து கொள்வதற்கு அவர்களுள் நடந்தேறும் மௌனம் புரிந்துகொள்ள முடியாத புதிராகவே திகழும். அக் காதலை,
தண்ணீர் ஊற்றாத
பூச்செடி
காதலி மௌனம்
என்று காதலை புதுமையாக் காட்டுகிறார். காதலின் மௌனத்தைக் காட்டிய கவிஞர் காதலுக்குண்டான தனிமையையும் பேசுகிறார். தனிமையில்தான் காதல் உணர்வு மேலெழுந்து உடல் மனமெல்லாம் பரவி அதன் வெற்றி தோல்விகளுக்கான வழிவகைகள் காண முயற்சிகள் மேற்கொள்ளும். ஆனால், வெற்றியடையும் காதலைவிட, தோல்வியைத் தழுவும் காதலே மிக அதிகம். காதலர்கள் காதல் தோல்வியில் அல்லல் பட்டுக் கண்ணீர் சிந்தும் சோகத்தை,
தனிமையில் காதலர்கள்
பேசும் மொழி
கண்ணீர்
என்று காதலர்களின் உணர்வுகளைப் புரிந்து இந்த ஹைக்கூவினைப்   படைத்துள்ளார்.
 
            மனிதன் உழைத்தோ ஊழல் செய்தோ அல்லது தவறான வழியில்  பொருளை ஈட்டி சேர்த்து வைக்கும் பண ஆசைக்கு எல்லை இல்லாமலே போய்விட்டது. நீதி போதனைகளாக  அத்தனைக்கும் ஆசைப்படு என்று சொல்கிறார்கள், ஆசைப்படாதே என்றும் சொல்கிறார்கள். அப்படி என்றால், மனிதன் எதைக் கடைப்பிடித்து ஒழுகுவது என்பது மிகப் பெரிய கேள்விக்குரியாகிறது. எது எப்படியோ பல மனிதர்களின் ஆசைகள் திடீரென நிறைவேறாமல் இடையிலேயே நின்று போய்விடுகிறது. அப்படிப் பட்ட ஒரு மனிதனின் ஆசை,
            சேர்த்து வைத்த ஆசைகள்
சிதறு தேங்காயாகி விட்டது
மரணம்
என்று மரணத்தினால் ஆசைகள் நிறைவேறாமல் போய் விட்டது என்பதை ‘சிதறு தேங்காய்’ என்ற சொல் வழக்கில் மிக அழகாகக் கொண்டு வந்து இந்த ஹைக்கூவில் சொல்லி வாசகர்களுக்கு உணர்த்துகிறார்.
 
புல், பனித்துளி ஆகியன ஹைக்கூ கவிதையின் உயிர் எனலாம். இந்த இயற்கையின் அற்புதங்கள் பார்க்கப் பார்க்க தெகிட்டாத இன்பம். பெரிய ஆலமரத்தில் சிறிய பழம் எத்தனை அழகு. வயல் வரப்புகளில் புல்லின் மேல் அமர்ந்திருக்கும் பனித்துளிதான் எத்துனை பெரிய பேரழகு. இருப்பினும் இது பலருக்குத் தினம் காணும் நிகழ்வாகவே நின்றுவிடுகிறது. ஆனால் இக்கவிஞரின் கற்பனையோ அப்பனி துளிக்குள்ளும் ஒரு விஸ்வரூபத் தரிசனத்தைக் கண்டுள்ளது. இவ்வகையிலான கருப்பொருளால்தான் நாம் ஹைக்கூவை வியக்கவும் முடிகிறது.
 
புல்லில் பனித்துளி
பனித்துளியில்
பனைமரம்
நீண்ட நெடிய பனைமரம் ஒரு பனித்துளிக்குள் காட்சி அளிக்கும் இயற்கைத் தன்மையைக் கண்டு உணர்ந்து படைத்துள்ள இக்கவிதை கவிஞரின் இயற்கையின்பால் கொண்டுள்ள ஈடுபாட்டையும் கற்பனை வளத்தையும்  எடுத்துக்காட்டுவதோடு அறிவியல் பார்வை கொண்ட அழகியல் கவிதையாகவும் அமைந்துள்ளது.
 
குழந்தைகளின் மன உலகில் நுழைவதற்குப் பெரியவர்களுக்குக் குழந்தை மனம் தேவைப் படுகிறது. அக்குழந்தை மனம் எல்லாருக்கும் வாய்ப்பது அரிது. ஒரு சிலருக்கே அது கை வரப்பெறும். கவிஞரும் குழந்தைகளின் செயல்களை உற்று நோக்குகிறார். அக் குழந்தைகளின் பல்வேறு விளையாட்டுகளில் நிலாச் சோறு, மண்சோறு ஆக்கிப் படைத்துப் பசியாற்றிக் கொள்வதும் ஒன்று. இன்று குழந்தைகள் ஒன்றாகக் கூடி  விளையாடும் வாய்ப்புகள் குறைந்துவிட்டதால்குழந்தைகளைத் தடுத்துவிட்டதாலும் அவ்வகையான கருப்பொருள்கள் கவிதையாக்கம் பெறுவது தவிர்க்க முடியததாகும். 
குழந்தைகளுக்குப் பசி
தாமே சமைத்து உண்டார்கள்
மண்சோறு
என்று அக்குழந்தைகளின் பசிக்கான காரணத்தைச் சொல்லாமல் அக் குழந்தைகள் தாமே சமைத்து மண் சோறு உண்டு பசி ஆறியதாக நினைத்து மகிழ்ந்ததைக் காட்சிபடுத்துகிறார். இக்கருப்பொருளில் அமைந்த பிறிதொரு ஹைக்கூ கவிதையில் குழந்தைகள்  மீதான பெற்றோர்களின்  கண்டிப்பினைச் சுட்டிக் காட்டுகிறார்.  அக்கவிதை:
குழந்தைகளை
கட்டவிட மறுக்கிறோம்
மணல்வீடுகள்
ஆறு, கடற்கரை, மணல் குவியல் ஆகிய  ஏதேனும் ஓர் இடத்தில் சந்தோஷமாக விளையாடும் குழந்தைகளை ‘மணல விளையாடதே வா ஒடம்பு மண்ணாகும்; அழுக்குச் சேரும்’ என்றெல்லாம் அவர்களை அதட்டிக் கண்டிப்பதனைக் கவிஞர் கண்டிக்கிறார். குழந்தைகளை அவர்களின் போக்கிலேயே விட்டு நல்வழிப் படுத்த வேண்டும் என்கிறார்.
ஹைக்கூ கவிதைகளின் வாசிப்பு அனுபவம் கவிஞருக்கு ஹைக்கூவை எழுதுவதற்கும் உந்து சக்தியாக அமைந்துள்ளது. இத் தொகுப்பில் இயற்கை சார்ந்த கவிதைகள் மிகுந்து காணப்படுகின்றன. இவர் வாழும் சமூகத்தைக் கூர்ந்து நோக்கிய பார்வையால் ஹைக்கூ கவிதைகளுக்குக்கான கருப்பொருள்கள் அதிகமாகவே கிடைத்துள்ளன. கவிஞரின் அகவயக் கருத்துணர்வால் உருவான பிறப்பு, இறப்பு, உடல், மனம் சார்ந்த கவிதைகள், பெற்றோர்கள், குழந்தைகள், ஆண், பெண், அன்பு, கருணை, காதல், பெண்மை எனப் பல்வேறு நிலைகளில் உருவான ஹைக்கூ கவிதைகளும்  இக்கவிதைத் தொகுப்பில் கருப் பொருளாகியுள்ளன. இன்னும் கொஞ்சம் ஹைக்கூக்களின் நுட்பங்களைக் கூர்ந்து நோக்கி சீரிய முயற்சிகள் மேற்கொண்டால்  தமிழுக்குச் செழுமையான ஹைக்கூ கவிதைகள் நிறைய கிடைக்கும் வாய்ப்புகள் நிறைந்துள்ளன என்று கூறி கவிஞர் கவியருவியை வாழ்த்துவதில் மகிழ்கின்றேன்.
 
சுவையானது; குளிர்ச்சியானது
சுட்டெரிக்காத முக்கண்
பனை நுங்கு

- ந.க. துறைவன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by ராகவா Wed 26 Mar 2014 - 17:52

வாவ்....நானும் இனி ஹைக்கூ எழுதுவேன்...
நன்றி நண்பா..
மிக தெளிவான விளக்கம்..
என் வாழ்த்துக்கள் ..இன்னும் பல கவிஞர்கள் உருவாவது உறுதி..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by Nisha Wed 26 Mar 2014 - 20:32

3  அடிகள்  கொண்ட ஹைக்கூவை  முதல்  இரண்டு  அடிகளை  தொடர்ந்து  படித்து  நிறுத்த  வேண்டும்(மூன்றாவது  அடியைப்  படிக்கக்  கூடாது).  மீண்டும்  முதல்  இரண்டு  அடிகளை  படித்து  நிறுத்தி  மூன்றாவது  அடியைப்  படிக்க  வேண்டும்.  அப்படிப்  படிக்கும்  போது  அந்த  இறுதி  அடி  எதிர்பாராதத்  திருப்பம்  கொண்டதாக  இருக்க  வேண்டும்.

1. 3 வரி அல்லது அடி
2. முதல் இரண்டு  அடியும் ஒரு கருத்தை சொல்லி
3. வருவது எதிர்மறை கருத்தை தரணும்.


மொத்தமும் இதுதான் அல்லவா! ரெம்ப எளிய விளக்கம். புரியும் படியாய் இருக்கிறது.

நான்முயற்சிக்கிறேன்! சரியாய் வராவிட்டால்  தளை தட்டி திருத்துங்கள்.

வானத்தில்
வட்ட நிலா
அம்மா சுட்ட தோசை


மேகத்திலிருந்து
கொட்டும் அருவி
கண்ணீர்
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by Nisha Wed 26 Mar 2014 - 20:45

ஒரே குத்து
எல்லாமே முடிந்தது
முற்றுப்புள்ளி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by Nisha Thu 27 Mar 2014 - 0:32

வானத்தில்  விண்மீன்
வழி காட்டியது
வெளிச்சவிடு


விரலில்
இரத்ததுளிகள்
நகப்பூச்சு


எதிரில் தெரிந்த முகம்
பார்க்க சகிகக வில்லை
கண்ணாடியில் நான்


ஏனைய பாடங்களை  இன்னொரு நாள் வந்து  படித்து முயற்சிப்பேன் சார். அடுத்த நான்கைந்து நாள்  ரெம்ப பிசி,

சிந்திக்க முடியாத படி உடல் உள்ளம் களைத்திருக்கும்  என்பதால் எதையும் யோசித்து  எழுத தோனறாது. .
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 27 Mar 2014 - 5:04

மேகத்திலிருந்து
கொட்டும் அருவி
கண்ணீர்



ஒரே குத்து
எல்லாமே முடிந்தது
முற்றுப்புள்ளி



விரலில்
இரத்ததுளிகள்
நகப்பூச்சு


எதிரில் தெரிந்த முகம்
பார்க்க சகிகக வில்லை
கண்ணாடியில் நான்




இவையனைத்தும் சிறப்பாக இருக்கின்றன... கவிதையில் பல  வடிவங்கள் அறிந்துக்கொள்ளும்போது நாமும் பலவாறு சிந்திக்கிறோம்... ஒரு கவிதை எழுதி முடிந்ததும் மகிழ்ச்சி உண்டாவது மனத்திற்கு சந்தோஷத்தைத் தருகிறது.


நீங்கள் திரும்பும்போது மற்ற கவிதைகளுக்கான குறைகளைச் சுட்டிக் காட்டி திருத்தலாம்... சென்று வருக.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by ராகவா Thu 27 Mar 2014 - 5:36

நிஷா அக்கா வாழ்த்துக்கள்..ரொம்ப அருமையாக உள்ளது..
முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by ந.க.துறைவன் Thu 27 Mar 2014 - 12:58

அருமையான பதிவு. பங்குப் பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by Nisha Thu 27 Mar 2014 - 17:42

நன்றி கவியருவி அவர்களே!

 நீங்கள் தவறுகளை  சுட்டுங்கள், நான் பகலில் வர இயலவிட்டாலும் இரவில் வந்து  முயற்சிக்கிறேன்!


தாமரை பொய்கையில்
நங்கை நீராடினாய்
நாணத்தோடு  நிலம் பார்த்தது 
குன்றென நின்ற குளத்து தாமரை


சம்ஸ் அவர்கள்  எழுதியகவிதை இது.

தாமரை பொய்கையில்  
நங்கை  நீராடினாள்
தலை குனிந்தது  தாமரை!

இப்படி எழுதினால் ஹைக்குவாகுமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by Nisha Thu 27 Mar 2014 - 17:44

அச்சலா wrote:நிஷா அக்கா வாழ்த்துக்கள்..ரொம்ப அருமையாக உள்ளது..
முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்..

  நன்றி அச்சலா!

நீங்களும் முயற்சி செய்யுங்க!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by Nisha Thu 27 Mar 2014 - 17:56

பிரிந்தவர்கள் சேர்ப்பார்கள்
நம்பிக்கையோடு  காதலர்கள்
ரயில் தண்டவாளம் !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by Nisha Thu 27 Mar 2014 - 17:58

இருகோடுகளை
இணைக்கும் பாலம்
ரயில் வண்டி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 27 Mar 2014 - 17:59

Nisha wrote:நன்றி கவியருவி அவர்களே!

 நீங்கள் தவறுகளை  சுட்டுங்கள், நான் பகலில் வர இயலவிட்டாலும் இரவில் வந்து  முயற்சிக்கிறேன்!


தாமரை பொய்கையில்
நங்கை நீராடினாய்
நாணத்தோடு  நிலம் பார்த்தது 
குன்றென நின்ற குளத்து தாமரை


சம்ஸ் அவர்கள்  எழுதியகவிதை இது.

தாமரை பொய்கையில்  
நங்கை  நீராடினாள்
தலை குனிந்தது  தாமரை!

இப்படி எழுதினால் ஹைக்குவாகுமா?

அழகான முயற்சி... கொஞ்சம் திருத்தம் தேவை...

குறை - 1
முதல் அடியிலும் 3 வது அடியிலும் தாமரை என்ற சொல் வருகிறது. அப்படி வரக்கூடாது. தாமரை என்பது பொய்கையில்தான் இருக்கும் என்பது யாவரும் அறிந்ததே.

குறை  -2
2 வது அடியில் நங்கை நீராடினாள் என்று வருகிறது. நங்கை என்பவள் பெண்தான் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இப்போது குறைகளைக் களைத்து எழுதுகிறேன் பாருங்கள்.

பொய்கையில்  
நீராடினாள்
தலை குனிந்தது  தாமரை!



என்று சுருங்கிய வடிவமாக இருந்தால் சிறப்பாக இருக்கும். - முடிந்த வரையில் சுருக்கமா - அவசியமான வார்த்தையை மட்டும் பயன்படுத்தி எழுத வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by Nisha Thu 27 Mar 2014 - 18:15

வாவ் புரிந்து போச்சி!

பூப்பூவாய்
பொழிந்தது
வெண்பனி

இது ஓக்கேயா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 27 Mar 2014 - 18:46

Nisha wrote:வாவ் புரிந்து போச்சி!

பூப்பூவாய்
பொழிந்தது
வெண்பனி

இது ஓக்கேயா
மிகச் சரியாகத்தான் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by Nisha Thu 27 Mar 2014 - 18:50

ஹிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

நான் முதல்ல ஹைக்கூ எழுத ஒழுங்கா கற்றுகொண்டு  அதுக்கு அப்புறமா மற்றதெல்லாம் கற்க வருகிறேன்.

ஒரேதடவையில் நிரம்ப யோசிக்க முடியாது! என் மூளை பாவம். ஏற்கனவே ரெம்ப கனம் ஏறிபோனது.  கொஞ்சமாத்தான்  யோசிகக  வைக்கனும்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 27 Mar 2014 - 18:57

ஹைக்கூவை திறமையாகக் கற்றுக் கொண்டால் மற்ற சென்ரியூ, லிமரைக்கூ மிகவும் எளிமையாக எழுதி விடலாம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by Nisha Tue 8 Apr 2014 - 9:22

கட்டுப்பாடில்லாமல்  ஓடியவன்
சிறைக்குள் அடங்கினான்
ஓடும் நதி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by ந.க.துறைவன் Tue 8 Apr 2014 - 9:31

ஹைக்கூ எழுதி அசத்தராங்கப்பா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by Nisha Tue 8 Apr 2014 - 11:29

ந.க.துறைவன் wrote:ஹைக்கூ எழுதி அசத்தராங்கப்பா...

கவியரசு சாரின் ஹைபுன் கவிதை  அப்படியாச்சு.

ஆனால் அது சரியா என நீங்கள் சொல்லனூம்.

நட்சத்திரங்களின்
அணிவகுப்பு
அமைதி ஊர்வலம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon 28 Apr 2014 - 14:49

நன்றாக இருக்கிறது... பாராட்டுகள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon 28 Apr 2014 - 14:53

http://www.chenaitamilulaa.net/t45342-topic#393292 என்ற தலைப்பில் வரும் கவிதையின் ஒன்றை இங்கு விவாதிக்கலாம். 

பெற்றோரை பிரிக்க
குழந்தையை
கண்கட்டிக்கொண்ட நீதிதேவதை. - 


நான் தருவது என்னுடைய புரிதலிலிருந்து...

கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள் ஏதோ காரணத்திற்காகப் பிரிகிறார்கள் - ஏதோ காரணம் என்பது என்னவாக இருக்கும் என்று நாம் விரித்துப்பார்த்துக்கொள்ளலாம் - அன்பு இன்மை - அன்பு குறைந்ததாக நினைத்தது- நினைத்த வசதி வாய்ப்பு இன்மை - இல்லையேல் வேறொருவரிடம் காதல் - இப்படி -

குழந்தை இல்வாழ்க்கையின் பேரு என்பதெல்லாம் இன்று பொய்யாகிவிட்டது. குழந்தை என்பது இன்று விவாகரத்து கோருபவர்களுக்குத் தொந்தரவே -

நீதி தேவதை பெண்தானே- அவளுக்கும் மனசாட்சி என்ற ஒன்று இருக்கும் தானே - அதனால் அந்த ஆணுக்கோ - பெண்ணுக்கோ மனசாட்சி இல்லாததைக் கண்டு அவர்களை - இதயம் இல்லாதவர்களை உயர்திணையாக்கி என்ன பயன் - அதுகளை என்று கூறினாலும் தவறில்லை - பார்க்கக்கூட சகிக்காமல் கண்களைக் கட்டிக் கொள்கிறது.

குழந்தை என்பதால் நீதிதேவதையையும் விளையாட்டுப் பொம்மை என்று கருதி வேடிக்கைப் பொருளாகிவிடக்கூடாதே என்றும் கருதி கண்ணைக் கட்டியிருக்காலம்.

குழந்தை கொஞ்சம் புத்தி தெரிந்தது என்றால் - அம்மாவுக்கு இரக்கம் இல்லாதது போன்று உனக்கும்தான் இரக்கம் இல்லை - அதனால்தான் என்னை அவர்களிடமிருந்து பிரிக்கிறாய் என்று கருதுவதாகவும் அமையலாம்...

என்னுடைய ஓராயிரம் சென்ரியூ என்ற நூலிலிருந்து... இந்தக் கருத்தோடு தொடர்புடைய கவிதையும் விளக்கமும் -

கடந்த பத்தாண்டுகளில் விவாகரத்துகளும் வழக்கு களும் அதிகரித்துள்ளன என்று நீதி மன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விவாகரத்துக்கு முக்கிய காரணம் சகிப்புத் தன்மையின்மையே ஆகும். மெத்த படித்தவர் களும், பெரும் சம்பளம் வாங்குபவர்களும் மேற்கத்திய நாகரிகத்தைக் கண் மூடித்தனமாகக் கடைபிடிக்க விழைபவர்களுமே விவாகரத்து வேண்டி நீதிமன்றம் செல்கின்றனர். மேலும், குடும்பத்திற்குள் இருக்கும் இருவருக்கும் உள்ள ஒழுக்கச் சிதைவும் விவாகரத்துக் குக் காரணமாகின்றன. 


விவாகரத்து
முடிந்த பின்னும் சண்டை
குழந்தைக்காக!


குடும்பத்திலிருந்து விலகினாலும் வருங்காலத்தின் குழந்தையின் பாதுகாப்பு கருதிக் குழந்தை யார் பக்கம் பிரித்துவிடுவது என்ற தீர்ப்பை நீதிமன்றம் கொடுத் தாலும் மீண்டும் குழந்தைக்காகச் சண்டை ஏற்படு வதை எடுத்துக்காட்டும் சென்ரியூவால் எப்படியும் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் சூழலை விவாகரத்துகள் செய்கின்றன என்று கூறிச் சமூக அவலமாகி வரும் இன்றைய விவாகரத்து வழக்குகளை நகைக்கிறார். கவிஞர் மட்டுமல்ல,


நீதிமன்றத்தில் பெற்றோர்
கைகொட்டிச் சிரிக்கிறது
நீதிதேவதையைப் பார்த்து குழந்தை


என்று ஏதுமறியாத குழந்தை நீதிதேவதையைப் பார்த்து அல்ல சமுதாயத்தைப் பார்த்தே சிரிக்கிறது எனலாம். இவ்வாறு பலரும் நகைக்குமுன் நாம் விவாகரத்தை ஒழிப்பது சமுதாயக் கடமையாகிறது. விவாகரத்துக்கு மற்றொரு முக்கியக் காரணம் கூட்டுக் குடும்பச் சிதையும், தாய் தந்தை உடன் இல்லாததும் காரணம் என்கிறார் கவிஞர். 

இதன் விரிவான விளக்கத்திற்கு -
http://www.kaviaruviramesh.com/search/label/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon 12 May 2014 - 10:06

குளிர்காலத்தில் நாம் பகல்பொழுதிலேயே தண்ணீரில் குளிக்க கஷ்டப்படுவோம். அதுவும் இந்த ஐயப்ப பக்தர்கள் விடியற்காலையில் கிராமப்புறங்களில் குளத்தில் குளிப்பதைப் பார்த்திருக்கிறேன். எப்படித்தான் குளிக்க முடிகிறதோ தெரியவில்லை. அதை வைத்துதான் இந்த ஹைக்கூ பிறந்திருக்கிறது. குளத்தில் இருக்கும் தண்ணீர் விடியற்காலையில் வெதுவெதுப்பாகத்தான் இருக்குமாம். சரி குளிர் காலத்தில்தானே பனியும் வருகிறது. அதனால்,
 
மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
 
என்று முதலிரண்டு அடிகளை எழுதி முடித்து மூன்றாம் அடியில்ஐயப்ப பக்தர்கள்என்று எழுதலாம் என்று நினைத்து எழுதினேன்.
 
மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
ஐயப்ப பக்தர்கள்
 
பின்னர் சிந்தித்தேன்ஐயப்ப பக்தர்கள் குளிப்பதில் என்ன சிறப்பு இருக்கப்போகிறது. மனிதர்கள் குளிக்கத்தானே வேண்டும். ஓர் அஃறிணை உயிரை கவிதையில் சேர்த்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணிதவளைஎன்று சேர்த்தேன். பின்னர் குதிக்கும் என்பதைச் சேர்த்து குதிக்கும் தவளை என்று மூன்றாவது அடியை எழுதி முடித்தேன்
 
மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
குதிக்கும் தவளை  
 
என்று எழுதி முடித்து ஆழ்ந்து சிந்தித்தேன். நீங்களும் சிந்தியுங்கள்! (தவளை தண்ணீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம் என்பது தெரிந்ததுதான். ஹைக்கூவில் மூன்றாவது அடி தான் சிறப்பு வாய்ந்தது என்பார்கள் ஹைக்கூ ஆய்வாளர்கள். தவளை குதித்திருக்கிறது. ஏன் குதிக்க வேண்டும்? எதாவது துரத்தியதினால் பயந்து குதித்ததா? குளத்திலிருந்து வெளியேறி திரும்பவும் குதிக்கிறதா? அல்லது புதிதாக ஒரு தவளை குதிக்கிறதா? மெதுவாக குளத்திற்குள் இறங்காமல் ஏன் குதித்தது? இணை தேட இருக்குமா? இப்படியே இன்னும் விரித்துச் செல்லலாம்… நீங்களும் சொல்லலாம்…
 
மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
குதிக்கும் தவளை  
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum