சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Khan11

லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான்

5 posters

Go down

லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Empty லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 26 Mar 2014 - 16:57

லிமரைக்கூ - இலக்கணம்


ஆங்கிலத்தில்  ‘லிமரிக்’  என்பது  ஒரு  கவிதை  வடிவம்.  5  அடிகளில்  அமையும்  இந்தக்  கவிதை  வடிவம்  முக்கியமாக  வேடிக்கை,  வினோதம்,  நகைச்சுவை  முதலிய  உணர்வோடு  இயங்கக்  கூடியது.  

தமிழில் முதன்முதலாக  ஈரோடு  தமிழன்பன்  ‘லிமரைக்கூ’வைப்  படைத்துள்ளார். தமிழில் முதன்முதலாக   ‘லிமரைக்கூ’வைப்  படைத்த  ஈரோடு  தமிழன்பன்  ஆங்கிலத்தின்  ‘லிமரிக்’  வடிவத்தையும் / உள்ளடக்கத்தையும் [லிமரிக்கில்  பயின்று  வரும்  இயைபுத்  தொடையை  1 (முதல்)  மற்றும்  3 (இறுதி)  அடிகளில்  இணைத்து]  ஜப்பானிய  ‘ஹைக்கூ’வின்  வடிவத்தையும்  இணைத்து  3  அடிகள்  கொண்டு  ‘லிமரைக்கூ’  என்ற  புதிய  தமிழ்க்  கவிதை  வடிவத்தை  தமிழில்  ஆரம்பித்து  வைத்தார்.  இவ்வடிவமே  தமிழின்  லிமரைக்கூ  வடிவமாக  அமைந்து  விட்டது.  

ஹைக்கூ,  லிமரிக்  என்னும்  இரண்டு  வகைக்  கவிதைகளின்  வடிவங்களையும்  உள்ளடக்கங்களையும்  உள்  வாங்கிக்  கொண்டு  தமிழில்  கவிதைப்  படைக்கத்தக்க  திறமையும்  பயிற்சியும்  தேர்ச்சியும்  மொழியாளுமை - கவித்துவ  இயக்கம்  ஆகிய  இரண்டிலும்  தேவை என்கிறார் ஈரோடு தமிழன்பன்.

5-7-5  என்னும்  அசையமைப்பு  அடிகளைக்  கருத்தில்  கொண்டால்  ஹைக்கூவின்  தன்மை  அதுவென  உணர்ந்து  மூன்றடிகளின்  இடையடி  சற்றே -  ஒரு  சீர்  அளவே  மிக்கிருக்க  எழுதலாம்.  முதல்,  கடை  அடிகள்  தவிர்த்த  இடையடிகள்  சீர்  குறைந்து  வரும்  லிமரிக்கைக்  கருத்தில்  கொள்ளும்  போது  -  லிமரைக்கூவிலும்  நடுவடி  சீர்  குறைந்து  வரலாம் (இது சிறுபான்மை).  மூவசைச்  சீர்களைப்  பயன்படுத்தும் போது  அவை  ஈரசைகளாகப்  பிரிக்கத்தக்கதாக  இருந்து  விடாமல்  பார்த்துக்  கொள்ள  வேண்டும் என்பார் ஈரோடு தமிழன்பன்.

எடுத்துக்காட்டாக,  ‘வந்ததற்காய்’  என்னும்  மூவசைச்  சீர்,  ‘வந்த + தற்காய்’  என  இரண்டு  சீராகப்  பிரியும்  வாய்ப்புள்ளதாகவும்,  ‘வந்ததனால்’  என்பது,  ‘வந்த + தனால்’  எனப்  பிரிவும்  போது  அவ்வாய்ப்பைப்  பெறாததாகவும்  அமைவதைக்  கருத்தில்  கொள்ள  வேண்டும்.

3  அடிகளிலும்  சந்தம்  கண்டிப்பாக  இருக்க  வேண்டும்  என்ற  விதி  இல்லை.  ஈரோடு  தமிழன்பன்  தமிழுக்கு  முதன்முறையாக  லிமரைக்கூவை  அறிமுகம்  செய்து  வைத்தபோது  சந்தம் கடைபிடிக்கப்பட்டது.  (அவ்வாறு  சந்தம்  அமைத்துக்  கொண்டது  ஈரோடு  தமிழன்பனின்  தனி  உத்தி.)  மூன்று  வரி,  சந்தம்  மட்டுமே  லிமரைக்கூ  ஆகிவிடாது. ஹைக்கூ,  சென்ரியுவின்  இணைப்புதான்  லிமரைக்கூ.

தேன்  நிரம்பி  வழிந்தது
வண்ணத்துப்  பூச்சி  பறந்து  சென்றது
பூ  தலைக்  கவிழ்ந்தது
-இது  சந்தம்  கொண்டு  அமைந்த லிமரைக்கூ.

ஜணகனமன  பாடியது
மரியாதையுடன்  கூட்டத்தில்  பொது  மக்கள்
அரசியல்வாதி  கொட்டாவி  விட்டது - ம.ரமேஷ்
-இது  இயைபுத்  தொடை கொண்டு  அமைந்த லிமரைக்கூ.  

குருக்கள் தெய்வங்கள் ஆனார்கள்
கோயி லில்லா ஊர்களிலே தெய்வங்கள்
குடியி ருக்கப் போனார்கள்

பறவை கூடு திரும்பியது
சிறகு முளைத்துப் பறந்து திரிய
வானின் இதயம் விரும்பியது
- ஈரோடு தமிழன்பன் – சென்னிமலை கிளியோப்பாத்ராக்கள்

எதிரெதிர்  தலைவர்கள் கைக்குலுக்கல்
விளை நிலங்கள் பங்கீடு பேச்சுக்குப்பின்
அவரவர் பங்குகள் பதுக்கல்

வாழ்வில் எத்தனை இன்னல்
முதிர் கன்னியோடு ஏங்கி ஏங்கி
இளைத்துப் போனது பின்னல்
- கன்னிக்கோவில் இராஜா - சென்னைவாசி

மார்கழி மாதப் பனிக்காலம்
மனத்தில் எண்ணங்கள் தேக்கி வாசலில்
வரைந்தாள் அழகிய கோலம்

வீசும் மெல்லியக் காற்று
வயலில் ஆனந்த நடனம்
ஆடிக் களிக்கும் நாற்று
- ந.க. துறைவன் - உப்பு பொம்மைகள்

இயற்கைக்கு வந்தது ஊறு!
ஏரி குளங்களில் கட்டினார்கள் வீடு!
இனியாவது நீ மாறு!

கொட்டி தீர்த்த மழை!
வீடுகளில் உள்ளே புகுந்தது நீரு!
தூர்வாறா குளங்களால் பிழை!
- " தளிர் அண்ணா" சா. சுரேஷ்பாபு

கவிதைக்குக் குறுகிய வடிவம் சிறப்புடையது என்பதில் ஐயமில்லை. அந்தச் சிறப்பை ஹைக்கூ,சென்ரியு, லிமரைக்கூ பெற்றுள்ளன. சொற்கள் குறையும் பொழுது சொற்களுக்கிடையே மௌனங்கள் கூடுகின்றன. இந்த மௌனங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. சிந்திக்கும்பொழுது நமக்குள் கூர்மைப்படுகிறோம். இந்தத் திசையில்தான் அந்தக் கவிதைகள் நம்மோடு ஒட்டுகின்றன. உறவாடுகின்றன. அவை நம்மோடும் உரையாடுகின்றன. குறுகிய வடிவம் என்பதன் காரணமாகப் படிமம், குறியீடு, தொன்மம் முன்னுக்கு வருகின்றன. அவைதான் கவிதைக்கு உயிராய் அமைகின்றன என்று சொல்வதில் தவறு இல்லை என்பார் ஞானி.

இன்று  தமிழில்  இவ்வகை  வடிவங்களைத்  தவிர ஹைபுன்,  லிபுன்,  குறட்கூ,  சீர்க்கூ, கஸல்  எனப்  பல  வடிவங்கள்  உருவாகிக்  கொண்டு வருகின்றன.  
காண்க : 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Empty Re: லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான்

Post by ராகவா Wed 26 Mar 2014 - 17:57

மிகவும் சிறப்பான தொடக்கம் நண்பா...தொடருங்கள் நானும் வருகிறேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Empty Re: லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான்

Post by பர்ஹாத் பாறூக் Wed 26 Mar 2014 - 19:54

லிமரிக்ஸ் என்ற ஆங்கில கவிதை வடிவினை மஹாகவி து. உருத்திரமூர்த்தி அவர்கள் குறும்பா எனும் பெயரில் தமிழுக்கு கொண்டு வந்தார்

1966 ம் ஆண்டு வெளிவந்த மஹாகவி து.உருத்திரமூர்த்தி அவர்களின் மஹாகவியின்  குறும்பா எனும் நூலுக்கு எஸ் பொன்னுத்துரை வழங்கிய முன்னீடு... கீழே..


லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் 332cx9k
லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் 9vbbsi
லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Xer8dd
லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Zmxdw5
லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் 167ukch
லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் 35lc9bs
லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Aexxy1
லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Wb5v6s
லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் 154v8dg
லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Fa5rp1
லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் 22ahom
லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Op7cjo
லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Jjxrhu
லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் 143bzd


மஹாகவியின் முழு குறும்பா நூலையும் மின்நூல் வடிவில் படிக்க..
அழுத்துக

லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் 150px-427
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Empty Re: லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 27 Mar 2014 - 4:58

மிகவும் விரிவானதொரு தகவல்... தமிழ் கவிஞர்கள் மத்தியில் இந்த லிமரிக் வடிவம் செல்வாக்குப் பெற வில்லை. அதற்குப் பதிலாக - ஈரோடு தமிழன்பனால் அறிமுகப்படுத்தப்பட்ட லிமரைக்கூ வடிவம் செல்வாக்குப் பெற்று வளர்ந்து வருகிறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Empty Re: லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான்

Post by Nisha Thu 27 Mar 2014 - 10:25

பழைய, புதிய லிமரைக்கூ  குறித்த விபரங்களை பகிர்ந்தமைக்கா்க ரமேஷ் சாருக்கும், பர்ஹாத்துக்கும்  நன்றி!


Last edited by Nisha on Thu 27 Mar 2014 - 18:21; edited 2 times in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Empty Re: லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான்

Post by ந.க.துறைவன் Thu 27 Mar 2014 - 12:53

நண்பர்.கவியருவி இரமேஷ் லிமரைக்கூ வை அறிமுகப்படுத்தியதும்
அதற்கு மகாகவியின் நூலுக்காக படைப்பாளி எஸ்.பொன்னுத்துரையின்
விரிவான அணிந்துரையை வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது.
தொடரட்டும்... வாழ்த்துக்கள்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Empty Re: லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 27 Mar 2014 - 18:04

மகிழ்ச்சி தோழர்களே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான் Empty Re: லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum