சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Khan11

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Empty ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:02

தமிழகத்தின் நெற்களஞ்சியம். பிற்காலச் சோழர்களின் காலமான கி.பி. 11 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளின் புகழ்பெற்ற மாநகரமாகத் திகழ்ந்தது.

கலைக்கும், இலக்கியத்துக்கும், கைவினைப் பொருட்கள் செய்வதற்கும் புகழ்பெற்ற தமிழ்த் தரணி. பெயர் வரக் காரணமாகச் சொல்லப்படும் புராணக்கதை. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அசுரன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்திவந்தான்.

மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்ற பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீசுவரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார்.இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்கிரகாரத்திற்கு அருகில் இருக்கிறது.

தஞ்சாவூர் 8-ஆம் நுற்றாண்டுகளில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும். அப்போது இப்பகுதியினை வளமையோடு ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையரின் பெயரையே இந் நகரம் பெயராகப் பெற்றது. தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று நிலைப்பெற்றது என்றும் கூறப்படுகிறது.உலகப் புகழ் பெற்ற சரசுவதி மகால் நூலகத்தைத் தன்னகத்தே கொண்டது. இந்நூலகத்தில் காணக்கிடைக்காத மிக அரிய ஓலைச் சுவடிகள் நூற்றுக் கணக்கில் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.உலகில் தமிழுக்கென்று அமைக்கப்பட்ட முதல் பல்கலைக் கழகம் தஞ்சாவூரில் உள்ளது. மெல்லிசைக் கருவிகளான வீணை, மிருதங்கம், தபேலா, தம்புரா போன்றவை இங்கு தான் செய்யப் படுகின்றன. இத்தகைய தஞ்சை மாநகரை சுற்றிப்பார்ப்போமா தஞ்சை பெரிய கோவில் தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு.

இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 65 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.அத்தகைய  சிறப்புவாய்ந்த கோவிலை உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப்பயணிகள் கண்ட வண்ணம் இருக்கின்றனர்.தஞ்சை பெரிய கோவில் சுவாரஸ்ய தகவல்கள் இந்த ஆலய கட்டிட வேலைகள் 1003 ம் ஆண்டு தொடங்கி 7 வருடங்களில் முடிவுற்றதாக குறிபிடப்படுகின்றது.முதன்மையான கோபுரத்தின் உயரம் 215 அடி (65 மீட்டர் என கணக்கிடப் பட்டுள்ளது. இது கருவரையின் மேலே 96 அடி சதுரமான அடித்தளத்தின் மேல் ஒரே கல்லால் உருவாக்கப்பட்டது. கருவறையின்மீது கட்டிய இந்த மிகப்பெரிய விமானமே இக்கோயிலின் பெரும் சிறப்பாக போற்றப்படுகின்றது.


கோபுரத்தின் நிழல் எக்காலத்திலும் நிலத்தில் படாத வண்ணம் கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கர்ப்பகிரகத்தில் மட்டும் சூரிய வெளிச்சம் படும் வண்ணம் அற்புதமான கட்டிட கலையால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தின் கருவறையில் அமைந்துள்ள ஆவுடையார் எனும் மூல லிங்கம் விசேட ரகத்தில் அமைந்த தனியான கல்லில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 23 அடி , சுற்றளவு 54 அடி உடையதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


கோவிலின் முன் அமர்ந்த கோலத்தில் உள்ள தனி கல்லில் செதுக்கிய நந்தி எடை , 12 அடி உயரம் , 8 அடி அகலம், 20 அடி நீளமும் உடையது.


கோபுரத்தின் உச்சியில் விமானத்தில் உள்ள எண்கோண கலசம் 3.8 மீற்றர் உயரமும் 81 எடை ( அண்ணளவாக 15 யானைகள் எடை) உடைய தனியான 25 அடி சதுர கல்லில் செதுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. ஒவ்வொரு மூலைக்கு இரண்டு நந்திகளாக எட்டு நந்திகள் இந்த விமானத்தில் அமைக்கப்பட்டுள்ளன
மேல் சொல்லப்பட்ட கலசத்தினை செய்வதற்கு வேண்டிய அந்த கல்லை அக்காலத்தில் 6 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து கொண்டு வந்த மகா திறமை இன்றும் புரியாத புதிராக உலகில் பலராலும் பேசப்படுகின்றது.
தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு இந்தியாவின் பல பகுதியிலும் இருந்து கொண்டு வரப்பட்ட கற்களின் மொத்த அளவானது ஜீசா பிரமிட்டு கட்டுவதற்கு பயன் படுத்தியதை விடவும் அதிகம் என ஆராச்சி செய்வோர் கணக்கிட்டுள்ளனர்.


இந்த ஆலயத்தின் சுற்று சுவர்கள் அடங்கலான பகுதிக்குள் 200 தாஜ் மஹால்களை அடைக்கும் அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக விரிந்து பரந்துள்ளதாக வியந்த பேசப்படுகின்றது.
தமிழர்களின் கலை, கலாச்சாரம், கற்பனைத் திறன், சிற்பத் திறன் ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள தஞ்சை பெரிய கோயிலானது தமிழர்களின் ஆட்சி , அறம் இவற்றுடன் ஆன்மீகப் பணிக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.


இராஜ ராஜ பேரரசர் கோவில் திருப்பணியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இவரது ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாகவும் சுபீட்சமாகவும் வாழ்ந்தனர் எனவும் சொல்லப்படுகின்றது. மக்களுக்காக உயர் கல்விக்கூடங்கள், அருட்சாலைகள், அறச்சாலைகள் போன்ற பொது நற்பணி மன்றங்களையும் மன்னர் நிறுவியிருந்ததாக வரலாறு குறிப்பிடுகின்றது.
இந்த ஆலயத்தின் வெளியே சோழ பேரரசன் இராஜராஜனின் சிலைஅமைக்கப்பட்டுள்ளது.இந்தக் கோவில் தற்போது மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை வசம் இருந்துவருகின்றது.இந்த ஆலயத்தை UNESCO  உலக கலாச்சார சின்னமாக அறிவிள்ளது.


தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில்:


தஞ்சாவூரிலிருந்து சுமார் 5 கீ.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. தஞ்சாவூரிலிருந்து ஆட்டோ அல்லது பேரூந்து மூலம் இக்கோவிலுக்கு செல்லலாம். 1680 ம் ஆண்டு  மராட்டிய அரச பரம்பரையை  சேர்ந்த வெங்கோஜி சத்ரபதி, திருச்சி அருகே உள்ள சமயபுரத்தில் படை வீடூ அமைத்து தங்கி இருந்த போது, அவனுடய கனவில் தோன்றிய மாரியம்மன்…….தஞ்சாவூரின் அருகில் புன்னை மரங்கள்  நிறைந்த இடத்தில் தனக்கொரு அமைவிடம் இருப்பதாகவும், அந்த இடத்துக்கு வந்து வழிபட்டால் அவனுக்கு வெற்றி கிடைக்கும் எனவும் கூறியதாம்.சிறிதும் தாமதிக்காத வெங்கோஜி உடனடியாக கிளம்பி சென்று, தஞ்சாவூரீன் கிழக்கே அமைந்திருந்த புன்னை மர காட்டின் உள்ளே தேடி, அங்கு இருந்த ஒரு புற்றுதான் அம்மனின் இருப்பிடம் என்பதை கண்டறிந்து வழிப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
தஞ்சையில் காணவேண்டிய மேலும் சில இடங்கள் :


ராஜராஜன் மணி மண்டபம்:


இந்த மண்டபம் 8-ம் உலக தமிழ் மாநாட்டின் போது கட்டப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான பொருட்களை கொண்டு சிறிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகம் ராஜ ராஜன் மணிமண்டபத்தின் அடிதளத்தில் சுற்றுலா பயணிகள் பயனடைய செயல்படுகிறது. தமிழக அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது
சோழர் காலத்தின் சிற்பங்களை சிறப்புற விளக்கும் இக்கோவில் கி.பி 1005-ம் ஆண்டு தஞ்சைக்கு மிக அருகாமையில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் பிரார்த்தனை, அழகியியல், புராண கதை போன்றவற்றிற்கு பிரசித்தமாக விளங்குகிறது. வெளிநாட்டவர்கள் பலரும் இக்கோவிலில் உள்ள சிற்பங்கள், கல்வட்டு முதலியவற்றை ஆர்வமுடன் அறிந்து கொள்கிறார்கள்.

குவார்ட்ஸ் தேவாலயம்: அரண்மனை தோட்டத்தில் உள்ள இந்த தேவாலயம் கி.பி 1779ம் ஆண்டு சரபோஜி மன்னரரால் கட்டப்பட்டுள்ளது.


சரபோஜி மன்னர் சமய பிரசாரகர் Rev.C.V குவார்ட்ஸ் மேல் கொண்ட அன்புக்கு அடையாளமாக இந்த தேவாலயத்தை உருவாக்கியுள்ளார்.

கடந்த காலத்தில் வெள்ளையரின் இராணுவம் வழிப்பட்டதாக கூறப்படுகிறது.

தஞ்சைக்கு செல்வது எப்படி :
விமானம் வழியாக: விமானம் வழியாக சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்துவிடவும். நீங்கள் திருச்சியை சுற்றிபார்க்க திட்டமிட்டிருந்தால் அதன் பிறகு தஞ்சைக்கு செல்வது நல்லது. திருச்சியிலிருந்து தஞ்சைக்கு செல்ல 1 மணிநேரம் ஆகும். எண்ணற்ற பேரூந்துகள் திருச்சிக்கும் தஞ்சாவூருக்கும் இடையில் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து பல்வேறு ரயில்கள் தஞ்சைக்கு செல்கிறது. ரயில் மூலம் ஒரு சிறந்த பயண அனுபவத்தை உணர வேண்டுமானால் கம்பன் எக்ஸ்பிரஸ் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். சென்னை எழும்பூரிலிருந்து

இரவு 11.15 க்கு புறப்படும் இந்த ரயில் சரியாக மறுநாள் கலை 5.30 க்கு தஞ்சாவூரை அடையும். மலைக்கோட்டை, ஜனதா உள்ளிட்ட எக்ஸ்பிரஸ்களும்  தஞ்சாவூருக்கு செல்கிறது. இதன் கால அட்டவணையை இணையத்தில் காணவும் பேரூந்து பயணம் : சென்னை கோயம்பேட்டிலிருந்து பல்வேறு அரசு பேரூந்துகள் தஞ்சாவூருக்கு தினமும் செல்கின்றன SRM நிறுவனத்தின் தனியார் பேரூந்துகளும் தஞ்சாவூருக்கு இயக்கப்படுகின்றன. இதுவும் கோயம்பேடு பேரூந்து நிலையத்திற்கு அருகிலேயே உள்ளது. சொகுசு பேரூந்துகள், குளிர்சாதன வசதிகொண்ட

பேரூந்துகள், செமி சிலீப்பர் எனப்படும் படுக்கை வசதிகொண்ட பேரூந்துகள் இந்த இரண்டு பஸ் நிலையங்களிலிருந்து இயக்கப்படுகின்றன தங்கும் விடுதிகள் : தஞ்சாவூரில் பல்வேறு விடுதிகள் உள்ளன இருந்தபோதிலும் உங்கள் தொடர்புக்கு ஒரு விடுதியின் முகவரியை தருகிறோம். தஞ்சையை சுற்றிபார்க்க இரண்டு நாட்களில் தம்பதி ஒருவருக்கு 6000 ரூபாய் வரை  செலவாகும்.குழந்தைகள் ஒருவர் அல்லது இருவர் இருப்பின் அதற்கு ஏற்ப 15 வரை கூடுதல் செலவாகும்.

ஹோட்டல்  சங்கம் திருச்சி ரோடு, தஞ்சாவூர் குறிப்பு: இந்த விடுதி எங்களால் பரிந்துரைக்கப்படவில்லை. தஞ்சாவூரின் சிறந்த விடுதிகளுள் ஒன்று என்ற  அடிப்படையிலேயே தரப்படுகிறது..

நானும் பகிர்கிறேன்..


Last edited by அனுராகவன் on Tue 29 Apr 2014 - 15:44; edited 2 times in total
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by நேசமுடன் ஹாசிம் Tue 29 Apr 2014 - 15:03

மேலே இன்னும் படிக்கவில்லை படித்து கருத்திடுகிறேன் ராகவன் 
இப்போது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்


ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:11

நேசமுடன் ஹாசிம் wrote:மேலே இன்னும் படிக்கவில்லை படித்து கருத்திடுகிறேன் ராகவன் 
இப்போது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்
இப்போது ஈரோடு அண்ணா..என் சொந்த ஊர் தஞ்சை...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:13

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Tamil-Daily-News-Paper_26789057255
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by நேசமுடன் ஹாசிம் Tue 29 Apr 2014 - 15:14

அனுராகவன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:மேலே இன்னும் படிக்கவில்லை படித்து கருத்திடுகிறேன் ராகவன் 
இப்போது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்
இப்போது ஈரோடு அண்ணா..என் சொந்த ஊர் தஞ்சை...
இப்போது நீங்கள் ஈரோட்டில்தான் இருக்கிறீர்களா 
எந்த மாவட்டம்


ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:14

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Gankaikondacholapuram
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:15

நேசமுடன் ஹாசிம் wrote:
அனுராகவன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:மேலே இன்னும் படிக்கவில்லை படித்து கருத்திடுகிறேன் ராகவன் 
இப்போது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்
இப்போது ஈரோடு அண்ணா..என் சொந்த ஊர் தஞ்சை...
இப்போது நீங்கள் ஈரோட்டில்தான் இருக்கிறீர்களா 
எந்த மாவட்டம்
நாமக்கல் மாவட்டம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:15

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Tamil-daily-news-paper_85996645690
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:16

கங்கை கொண்ட சோழபுரம்:

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012- 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவனுக்கு "கடாரம் கொண்டான்' என்ற பட்டம் கிடைத்தது.

தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோயிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தான். தஞ்சாவூரைப்போலவே சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினான். பெரிய நாயகி பெயருக்கேற்றாற் போல் 9.5 அடி உயரத்தில் பிரமாண்டமாக அம்மன் அருள்பாலிக்கிறாள். நிமிர்ந்து பார்த்து தான் வணங்க வேண்டும். கோயில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்தான். இதனால் இவ்வூர் "கங்கை கொண்ட சோழபுரம்' ஆனது.

கும்பாபிஷேக நீரை கோயிலுக்குள்ளேயே கிணறு தோண்டி அதில் வடியச்செய்து, அதன் மேல் தனது சின்னமான சிங்கத்தின் சிலையை வடித்தான். கோயிலுக்கு வரும் போதெல்லாம் இந்த கங்கை நீரை தலையில் தெளித்து கொண்ட பின்பே சிவனை தரிசனம் செய்வான்.

பெரிய லிங்கம்:

தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் இங்கு தான் உள்ளது. தஞ்சை பெரிய கோயில் லிங்கம் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவும் (ஆவுடையார்) கொண்டது. கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது. ஆவுடையை சுற்றி பலகை கட்டி, அதன் மீது ஏறிநின்று அபிஷேகம் செய்கின்றனர். ஒரே கல்லால் ஆன மூலவர் இங்கு பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார். தஞ்சாவூரில் உள்ள லிங்கம் ஆணின் அம்சம். இங்குள்ள லிங்கம் பெண் அம்சமாகும். அங்கு உரல் வடிவம். இங்கு உடுக்கை வடிவம்.

தினமும் சூரிய தரிசனம்:

இங்குள்ள நந்தியும் தஞ்சாவூரை விட பெரியது. தஞ்சாவூரில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டு உயரமான மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. தஞ்சாவூரில் மூலஸ்தானத்திலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் நந்தி உள்ளது. இங்கு 200 மீட்டர் இடைவெளியில் உள்ளது. தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு. மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் லிங்கத்தைப் பார்த்தால் மிகவும் அற்புதமாக இந்த ஒளி தெரியும் வகையில் வடிவமைத்துள்ளனர் நம் சிற்ப வல்லுனர்கள்.

சந்திரகாந்த கல்:

கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும். இந்த அனுபவத்தை பல தலைமுறைகளாக இருந்து வரும் குருக்குள் தங்கள் சந்ததியினருக்கு கூறி வருகிறார்கள். இந்த வகை கல் வேறு எந்தக் கோயிலிலும் இருப்பதாக தெரியவில்லை.

அன்னாபிஷேகம்:

காஞ்சிமடத்தின் சார்பில், ஐப்பசி பவுர்ணமி தினத்தில் இங்கு பல வருடங்களாக மிகவும் சிறப்பாக அன்னாபிஷேகம் நடந்து வருகிறது. நூற்றுக்கணக்கான மூட்டை அரிசியை வேகவைத்து மூலவராக இருக்கும் பிரமாண்டமான லிங்கம் மூடும் அளவிற்கு சாதத்தினால் அபிஷேகம் செய்வார்கள். அன்றைய தினம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இந்த அபிஷேகம் நடக்கும். அத்துடன் காய்கறி, கனி வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, சிறப்பு பூஜை நடக்கும். மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரை பக்தர்கள் அன்னாபிஷேக லிங்கத்தை தரிசிப்பார்கள்.

அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை பொதுவாக ஓடும் நீரில் விடுவது வழக்கம். குறிப்பாக பாணத்தின் மீது இருக்கும் அன்னத்தில் கதிர்கள் ஊடுருவி இருக்கும். அதை சாப்பிட்டால் அதன் சக்தியை தாங்கும் வலிமை நமக்கு கிடையாது. எனவே ஆவுடைப்பகுதியில் உள்ள அன்னத்தில், தயிர் கலந்து தயிர் சாதமாக பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இதைச் சாப்பிடுகிறார்கள்.

சுற்றமுடியாத நவக்கிரக மண்டபம்:

இங்குள்ள நவக்கிரகம் மற்ற கோயில்களை போல் இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சூரியனுக்குரிய யந்திர வடிவில் 8 கிரகங்கள் சுற்றிலும் அமைக்கப்பட்டு, 7 குதிரைகள் பூட்டிய தேரில் மேற்கு நோக்கி சூரியன் அமர்ந்துள்ளார். தேரை அருணன் சாரதியாக இருந்து ஓட்டுகிறான். தேரிலுள்ள 10 கடையாணிகளும் கந்தர்வர்கள் எனக் கூறப்படுகிறது. நவக்கிரகங்கள் இந்த உலகை சுற்றி வருகின்றன. எனவே அதை யாரும் சுற்றக்கூடாது என்பதன் அடிப்படையில் இங்கு நவக்கிரகங்களை சுற்றமுடியாத படி மண்டப அமைப்பு உள்ளது.

குழந்தை வடிவில் துர்க்கை:

இங்குள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். இவள் ராஜேந்திர சோழனின் குலதெய்வம். 9 வயது சிறுமியின் வடிவில் சிரித்த முகத்துடன் 20 திருக்கரங்களுடன் மகிஷாசூரனை வதம் செய்த கோலத்தில் அருளுகிறாள். இத்தகைய கோலத்தை காண்பது மிகவும் அபூர்வம். இவளை "மங்கள சண்டி' என்று அழைக்கிறார்கள். திருமணபாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றுக்காக இவளை வணங்குகின்றனர். பதவி உயர்வுக்காகவும், பணியிட மாற்றத்திற்காகவும் அர்ச்சனை நடக்கிறது.

ராஜேந்திர சோழன் கோயிலுக்கு வந்தவுடன் முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின் தான் சிவனை வணங்குவான். இதன் அடையாளமாக இன்றும் கூட ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில், முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின்னர் தான் சிவனை தரிசிக்க செல்கின்றனர். இவளுக்கு கோயிலின் இடது பக்கம் தனி சன்னதி உள்ளது.

கணக்கு விநாயகர்:

ஒருமுறை ராஜேந்திர சோழன் தன் அமைச்சரை அழைத்து "பெரிய கோயில் கட்டியதற்கு இது வரை எவ்வளவு செலவாகி உள்ளது?' என கேட்டான்.அமைச்சருக்கு சரியாக சொல்ல தெரியவில்லை. அவர் பதறிப்போய் அங்கிருந்த விநாயகரை வணங்கினார். "காவிக்கல் 8 ஆயிரம் செம்புகாசு, காவிநூல் 8 ஆயிரம் செம்பு காசு' என நினைவு வந்தது. எனவே "கணக்கு விநாயகர்' என்று அழைக்கப்பட்டார். தற்போது "கனக விநாயகர்' எனப்படுகிறார். இவர் தன் வலக்கையில் எழுத்தாணியுடன் உள்ளார்.

கோபுர அமைப்பு:

இங்குள்ள கோபுரம் சோழர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தஞ்சாவூரைப்போலவே இங்கும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த பின் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. 216 அடி உயரமுள்ள தஞ்சாவூர் கோபுரம் கீழிருந்து மேல் ஒரே சீராக கட்டப்பட்டிருக்கும். ஆனால் 180 அடி உயரம், 100 அடி அகலமுள்ள இக்கோயில் கோபுரம், கீழிருந்து 100 அடி உயரம் வரை அகலமாகவும், அதன் பின் 80 அடி உயரம் குறுகலாகவும் கட்டப்பட்டுள்ளது.கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு அடுத்தபடியாக இக்கோயில் விமானம் தான் தமிழகத்தில் பெரிய விமானம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழா:

மாசி சிவராத்திரி,மார்கழி திருவாதிரை ஆகிய தினங்களில் சிறப்பு பூஜையும்,பங்குனித்திருவிழாவின் கடைசி நாளில் துர்க்கைக்கு 500 குடம் பாலபிஷேகம் செய்யப்படுகிறது.ஐப்பசி பவுர்ணமி தினத்தில் இங்கு பல வருடங்களாக மிகவும் சிறப்பாக அன்னாபிஷேகம் நடந்து வருகிறது
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:21

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Images?q=tbn:ANd9GcTaFYVJav6CSNdTDlVkqb26zeuIwpZWkj0DUJEmo-xrPp1mLyZS
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? 2Q==
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? 9k=
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Pichavaram
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:22

சுரபுன்னை (மாங்குரோவ்) காடுகளின் ஒரு பகுதி.

சிதம்பரம், ஏப். 18: மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கி விட்டது. இந்த விடுமுறையை பயனுள்ளதாக்க கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கடலோரத்தில் பிச்சாவரம் சுற்றுலா வனப் பகுதியில் உள்ள எழில்மிகு மாங்குரோவ் (சுரபுன்னை) காடுகளை படகில் சுற்றிப் பார்த்து மகிழலாம்.

சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது பிச்சாவரம் வனப்பகுதி. சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் சிதம்பரத்துக்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் புறவழிச்சாலை வழியாக பிச்சாவரத்துக்கு செல்லலாம்.

பிச்சாவரத்தின் கடற்கரை நீளம் 6 கி.மீ. மேற்கே உப்பனாறும், தெற்கே கீழத்திருக்கழிப்பாலை கிராமமும், வடக்கே சுரபுன்னை காடுகளும் எல்லைகளாக உள்ளன. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான மாங்குரோவ் செடிகளும் உள்ளன. கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில் சுமார் 4,400 கால்வாய்கள் உள்ளன. இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.

இந்த மாங்குரோவ் (சுரபுன்னை) காடுகள், கால்வாய்களை சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் சென்று பார்க்கலாம். ஆண்டுதோறும் இப்பகுதியில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் இப்பகுதிக்கு வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம், கூட்டமாக வரும்.

மேலும் கடற்கரையோரம் எம்.ஜி.ஆர். திட்டு, சின்னவாய்க்கால், பில்லுமேடு ஆகிய 3 எழில்மிகு தீவுகள் உள்ளன. மேற்கண்ட தீவுகளில் மீனவர்கள் வசித்து வந்தனர்.

2004 டிசம்பர் 26-ம் தேதி சுனாமி பேரலையின்போது மேற்கண்ட தீவுகளில் உள்ள மீனவர்கள் பலர் இறந்ததால் தற்போது அங்கு மீனவர்கள் வசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படப்பிடிப்பு பிச்சாவரத்தில் நடைபெற்றதால் அங்குள்ள தீவுக்கு எம்.ஜி.ஆர். திட்டு என பெயர் சூட்டப்பட்டது.

இங்குள்ள சுரபுன்னை செடிகளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள், புற்றுநோய் மற்றும் கொடிய நோய்களை அழிக்கும் திறன் கொண்டது என எம்.எஸ்.சுவாமிநாதன் விஞ்ஞான ஆய்வு மைய சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மீனவர்களை புற்றுநோய் தாக்குவதில்லை என அந் நிறுவனத்தினர் தெரிவித்தனர். பிச்சாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தில் படகு குழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஒரே இடத்திலிருந்து பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியை பார்க்கும் வண்ணம் உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு: பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாக மேலாளர் தொலைபேசி எண்: 04144-24923 சிதம்பரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலக தொலைபேசி எண்: 04144-238739 கிள்ளை பேரூராட்சி தொலைபேசி எண்: 04144-24227. வெப்சைட் முகவரி: www.killai.com.

நன்றி:தினமணி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by Nisha Tue 29 Apr 2014 - 15:22

தஞ்சாவூர் குறித்த பகிர்வுக்காக் நன்றி ராக்வன்!

தஞ்சைகோயில் குறித்தும் பகிருங்கள்.

இந்தியா வரும் வாய்ப்பு வந்தால் நிச்சயம் எல்லா இடமும் பார்க்க வேண்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:24

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Anaikarai
அணைக்கரை

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? PoondiMatha

Elakurichi Adaikala Matha Shrine
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:26

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? 392px-Thanjavur_montage
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:29

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? 2Q==
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Dsc066671
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? News_12159
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? DSC03857
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Images?q=tbn:ANd9GcS7B7suVvfm35KCgqD3yf7R4PR0aHLEJidlMMuKqVNKId5vWX1bqA
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:30

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? %E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D

தஞ்சை_பெரிய_கோவில்_பழைய_தோற்றம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:31

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? 800px-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-_%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8Dபெரிய நந்தி..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:33

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Stage1
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Singer_sudha
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Dance2
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Exhibition1-300x261

தஞ்சை பெரிய கோயில் 1000ஆவது ஆண்டு நிறைவு விழா
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:36

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? 554523_526053747475536_1642941285_n
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Images?q=tbn:ANd9GcSlcJVB9Z66T692rTe7k1RR6kIFLNQ9ATmZ1PMPF7moyNtqHinj
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? 9-26-2010-5-1-000-dancers-pay-tribute-to-b
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Tanjore_dance_frnt
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? 10
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Tamil-Daily-News-Paper_374567509
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Images?q=tbn:ANd9GcT-HR5mP2rZp9p3N7szDNgkbCipVTpkSE9w2NlVHe9NsI3x-_9u
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:39

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? TN_150952000000
1000 ஆண்டுகண்ட தஞ்சை பெரிய கோயில்

கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு. இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து.

சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது. மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள்
உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.

யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு
ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த
சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.
திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.

எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும்,
புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய். குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது.

சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து. வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர்.

தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள்,
நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.

எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக
இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள் என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு. மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (ஈதஞுடூ). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள்.

தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது. கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும் என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.

விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த
அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.

இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால்
அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு! உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:44

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? 087-388x330
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? 231
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:45

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? 036ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? 036
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:47

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Siva-2
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? 107
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? 163
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? 116
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:47

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? 25
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? 183
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:50

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? 055

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? 155
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? RajaRaja-Chozan
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? 192
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? 144
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? 221
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? 075
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? 066
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum