சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15

» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06

» பல்சுவை
by rammalar Today at 2:19

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07

» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02

» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55

» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48

» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57

» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45

» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

குழந்தைகளிடம் எப்போதுமே சொல்லக் கூடாத விடயங்கள் !  Khan11

குழந்தைகளிடம் எப்போதுமே சொல்லக் கூடாத விடயங்கள் !

4 posters

Go down

குழந்தைகளிடம் எப்போதுமே சொல்லக் கூடாத விடயங்கள் !  Empty குழந்தைகளிடம் எப்போதுமே சொல்லக் கூடாத விடயங்கள் !

Post by Nisha Mon 12 May 2014 - 5:22

பெற்றோர் குழந்தைக்கு கொடுக்கக் கூடிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அன்பு என்ற உணர்வு ஒன்று தான். பெற்றோர்களுக்கு குழந்தையின் பாதுகாப்பு நலன் மிகவும் முக்கியமானது. பொறுப்பான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை, வாழ்க்கையில் கடினமாக வேலை செய்து. அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை ஊக்குவிக்கிறார்கள். பெருமைக்குரிய குழந்தையாக வளர்வது கடினமானதாக இருப்பது போலவே. ஒரு குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருப்பதும் கடினமானதாகும். கோபத்தின் வடிகாலாக பயன்படுத்தப்படும் கடுமையான வார்த்தைகளை மனிதர்களால் மட்டுமே கூற முடியும்.

இருப்பினும் இந்த கோபத்திற்கு ஆளாவது குழந்தைகள் மட்டுமே. இதனால் ஒரு நிலையற்ற, சமாளிக்க முடியாத விளைவுகள் குழந்தைகளிடையே ஏற்படுகிறது. ஆகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் எப்போதும் சொல்லக்கூடாதவைகளை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை குழந்தைகளிடம் சொல்வதை தவிர்த்திடுங்கள்.

நான் உங்கள் வயதில் இருந்த போது, மிகவும் பொறுப்பாக இருந்தேன்! 
மேற்கூறியவற்றையே பெரும்பாலான பெற்றோர்கள் சொல்வது. இவ்வாறு குழந்தையின் திறமையை தங்களுடன் ஒப்பிட்டு சொல்வது பெற்றோர்கள் செய்யும் முதல் தவறு ஆகும். பெற்றோர்களின் இந்த எதிர்பார்ப்புகளினால் குழந்தைக்கு முதலில் வருவது எரிச்சல் மட்டும் தான். ஆகவே அப்போது நீங்கள் குழந்தையாக இருக்கும் போது செய்த தவறுகளை எல்லாம் நினைவுப்படுத்தி பார்த்து, அப்பொழுது உங்கள் பெற்றோர்களுக்கு உண்டான தொந்தரவுகளை நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும். மேலும் குழந்தையிடம், வீட்டில் நீ தான் மூத்தவனாக இருப்பதால் எப்படி உறவுமுறைகளிடம் நடந்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்ற வார்த்தைகளால், குழந்தையின் நம்பிக்கை

நீ எப்போதுமே தவறான முடிவுகளையே எடுப்பாய்! 
முதலில் இவ்வாறு கூறி குழந்தையின் பக்குவப்படாத வயதிற்காக தண்டனை அளிக்கக்கூடாது. உண்மையில் கற்கின்ற போது எல்லோருமே தவறு செய்வது சகஜமான ஒன்று தான். ஒருவேளை குழந்தைகள் வேலைச் செய்ய எடுத்துக் கொண்ட கல்வித்துறை ஆர்வமூட்டுவதாக இல்லாமல் இருக்கலாம் அல்லது அவர்கள் எடுத்துக் கொண்ட கல்வித்துறையின் கம்பெனி மிகவும் பிரபலமானதாக இல்லாமல் இருக்கலாம். அதனால் அவர்கள் எடுத்துள்ள தீர்மானத்தில், அவர்களை குற்றம் சொல்ல வேண்டுமென்பது இல்லை. ஒரு பெற்றோர் என்ற முறையில் குழந்தைகளுக்கு வழிக்காட்டியாக இருக்க வேண்டுமே ஒழிய, உங்களின் கருத்துக்களை ஏற்க கட்டாயப்படுத்தக் கூடாது.

ஏன் நீங்கள் ஒரு சகோதரன்/சகோதரி போன்று இருக்க முடியாது? 
இது மீண்டும் ஒரு நியாயமற்ற ஒப்பீடாகும் மற்றும் இதுவும் பொதுவாக வழக்கத்தில் உள்ள ஒன்றாகும். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கிடையே அவர்களின் திறன்களை, மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவதன் மூலம் அவர்களுக்குள் விரோதத்தை வளர்க்கும். ஆகவே அதைத் தவிர்க்க வேண்டும். மேலும் இவ்வாறு செய்வதால் உடன்பிறப்புகளுக்கிடையே பிளவு உருவாக்கலாம்.ஆகவே குழந்தைகளுக்கு இடையிலான மதிப்பிடுதலை தவிர்த்தால், குழந்தைகளுக்கு உங்கள் மீது ஏற்படும் வெறுப்புணர்வுகளைத் தவிர்க்கலாம்.

என்னை தனியாக இருக்கவிடுங்கள்!
 குழந்தைகள் கவலை மற்றும் பொறுப்புகள் இல்லாமல் அப்பாவித்தனமாக இருப்பார்கள், அதனால், பெரியவர்களுக்கு குழந்தைகளைப் பார்த்து கொள்ள வேண்டிய பெரிய பொறுப்புகள் உண்டு. அதே சமயம், சில நேரத்தில் நாம் தனிமையை விரும்பக்கூடும். அப்பொழுது குழந்தைகள் இது போன்ற சூழல்களை புரிந்துக் கொள்ளும் திறனற்று இருப்பார்கள். இந்த நேரத்தில் பொறுமையிழந்து அவசரப்பட்டு, ‘என்னை தனியாக இருக்கவிடு‘, என்று எரிச்சல்பட்டு சொல்வது, குழந்தைக்கு புறக்கணிக்கப்பட்ட மற்றும் தேவையற்ற மன அழுத்தத்தையே உண்டாக்கும். ஆகவே இதுப் போன்ற சமயத்தில் சிறிது பொறுமையாக இருந்து குழந்தையிடம் கோபமாக பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

நீங்கள் உங்களை கண்டு வெட்கப்பட வேண்டும்! 
இது மாதிரி வெளிப்படையாக மிகக்கடுமையாக மற்றும் மோசமாகப் பேசுவது, சாதாரணமாக எந்த ஒரு குழந்தைக்கும் தவறாகத் தான் தோன்றும். ஆம், சில குறும்புக்கார குழந்தைகளிடம் நச்சரித்து துளைத்தெடுக்கும் சுபாவம் மிக சாதாரணமாகக் காணப்படும். அதற்காக உங்களின் எதிர்ப்பை காண்பிக்க வேண்டுமென்பதில்லை. இந்நேரத்தில் குழந்தைக்கு நல்லது மற்றும் கெட்டது என இரண்டிற்கும் இடையேயான வித்தியாசத்தை புரிய வைக்க சிறந்த மற்றும் பொறுமையான வழிகள் பல உள்ளன.

நீங்கள் உங்களது தந்தை/தாய் போலவே தான் இருக்கிறீர்கள்...
 திருமணமான அனைத்து தம்பதிகளும் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதில்லை. பெரும்பாலானோர் வெறுப்பினால் அவர்களது உறவுகளுக்கிடையே ஒருவருக்கொருவர் எதிராக கொடூரமாக வார்த்தைகளால் பேசிக் கொள்கின்றனர். இதனால் சில உறவுகள் இறுதியில் பிரிந்தும் விடுகின்றன. எவ்வாறு பார்த்தாலும், குழந்தைகள் இந்த பரஸ்பர விரோத போக்குக்கு மற்றும் விமர்சனங்களுக்கு ஒரு சாட்சியாகின்றனர். அதனால் உங்களுக்கு இடையேயான விரோதத்தை, உங்கள் குழந்தை மீது காண்பித்தால், அது உங்கள் மீதான மரியாதையை இழக்கச் செய்யும்.

நீங்கள் எப்போது என்னை காயப்படுத்தலாம் என்ற நேரத்தை நோக்கியிருக்கிறீர்கள்! 
குழந்தைகள், பெற்றோர்களை புண்படுத்தும் வகையில், அவர்களின் விருப்பத்திற்கு எதிராக செய்வதன் மூலம், பெற்றோர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் நேரங்கள் இருக்கின்றன. பெரும்பாலான நேரங்களில் இது எதிர்பாராவிதமாக நடந்தாலும், சில சமயத்தில் குழந்தைகள் வேண்டுமென்றே செய்கின்றன. எனினும், மேலே கூறப்பட்ட வார்த்தைகளைப் போன்று குழந்தைகளிடம் சொல்வதன் மூலம், அவர்களுடைய மனத்தில் குற்ற உணர்வு கொள்ளச் செய்துவிடுகிறது. இதனால் அவர்கள் உங்களது கோரிக்கைகளுக்கு இணங்கி உங்களை மகிழச் செய்வார்கள். ஆனால் நீங்கள் அவர்களுடைய உரிமைக்கான மகிழ்ச்சியை நீண்ட காலமாக பறித்துக் கொண்டிருப்பீர்கள். அதனால் குழந்தைகளை தங்களுடைய சொந்த எண்ணத்தின் படி வாழ விட்டு, அவர்களை குற்றமற்ற வாழ்க்கை வாழ விடுங்கள்.

உங்களைப் போன்ற ஒரு குழந்தை இருப்பதை விட குழந்தையில்லாமல் இருப்பதே மேல்...
 மேலே சொல்லப்பட்டது போல் அவசரப்பட்டு சொல்லுகின்ற வார்த்தைகளால், குழந்தைகள் பெரும்பாலும் தீவிர உணர்ச்சி வசப்படுகின்றனர். மேலும் இது அவர்கள் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். சந்தேகத்திற்கு இடமில்லாமல், அப்படிச் சொல்வது மனம் மிகவும் புண்படுத்தும் விதமாக இருப்பதால், குழந்தைகளிடம் இது போல் ஒருபோதுமே சொல்லக் கூடாது. எந்தவிதமான நெருக்கடியாக இருந்தாலும், இப்படி ஏதாவது சொல்வதன் மூலம், இறுதியில் அது உங்கள் வாழ்க்கை முழுவதும் வருத்தப்படச் செய்துவிடும்.

கெட்ட நண்பர்களின் சகவாசத்தை விட்டுவிடவும்! 
பெற்றோர்களும் ஒருவரை நண்பராக்குவதற்கு முன்பு யோசனைச் செய்வதில்லை. அதுபோலவே குழந்தைகளும் செய்கின்றனர். ஆனால் ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், நமக்கு ஏற்படும் கெட்ட நண்பர்களின் சகவாசத்திலிருந்து எப்படி விட்டு விலக வேண்டுமென்று நமக்கு தெரியும். ஆனால் குழந்தைகளுக்கு தெரிவதில்லை. அவர்களுக்கு நண்பர்களே உலகம், எனவே நீங்கள் வெறும் அதிகாரத்தினால் 'நல்ல' நண்பர்களைப் திரும்பவும் பெற வேண்டும் என்று அவர்களிடம் கூற முடியாது.உறவுகள்

minnal


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குழந்தைகளிடம் எப்போதுமே சொல்லக் கூடாத விடயங்கள் !  Empty Re: குழந்தைகளிடம் எப்போதுமே சொல்லக் கூடாத விடயங்கள் !

Post by rammalar Mon 12 May 2014 - 5:45

பயனுள்ள பகிர்வு...
-
 *_  *_
-குழந்தைகளிடம் எப்போதுமே சொல்லக் கூடாத விடயங்கள் !  2Q==

ஒரு நல்ல மனைவி,
தன் வழி சுற்றம் மற்றும் கணவன் வழி
சுற்றதார்களுடன் தனது குழந்தைகளுக்கு
நல்ல உறவு முறையை ஏற்படுத்திக்
கொடுக்க வேண்டும்...
-
நண்பர்கள் குடும்பத்தினரை மாதத்தில் ஒரு
முறையாவது விருந்துக்கு அழைக்க வேண்டும்
அதே போல குழந்தைகளுடன் நண்பர்கள்
இல்லங்களுக்கு செல்ல வேண்டும்...
-
சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு அன்பு,
ஈகை, அற வழி , இறை ஈடுபாடு என அனைத்தும்
சொல்லிக் கொடுக்க வேண்டும்...
-
#இந்தியா வல்லரசாக வேண்டுமே..!!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24602
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

குழந்தைகளிடம் எப்போதுமே சொல்லக் கூடாத விடயங்கள் !  Empty Re: குழந்தைகளிடம் எப்போதுமே சொல்லக் கூடாத விடயங்கள் !

Post by நண்பன் Mon 12 May 2014 - 11:47

மிண்டும் எங்கள் பார்வைக்கு கொண்டு வந்த நிஷா அக்கா அவர்களுக்கு நன்றி

மிகவும் பயனுள்ள பதிவு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளிடம் எப்போதுமே சொல்லக் கூடாத விடயங்கள் !  Empty Re: குழந்தைகளிடம் எப்போதுமே சொல்லக் கூடாத விடயங்கள் !

Post by Nisha Mon 12 May 2014 - 14:24

நன்றி ராம் மலர் ஐயா!

நன்றி நண்பன். மீண்டும் எங்கள் பார்வைக்கு என போட்டிருக்கிங்களேஏற்கனவே இந்த பதிவு இங்கே இருக்கிறதா..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குழந்தைகளிடம் எப்போதுமே சொல்லக் கூடாத விடயங்கள் !  Empty Re: குழந்தைகளிடம் எப்போதுமே சொல்லக் கூடாத விடயங்கள் !

Post by ahmad78 Tue 13 May 2014 - 14:37

பயனுள்ள தகவல்கள்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குழந்தைகளிடம் எப்போதுமே சொல்லக் கூடாத விடயங்கள் !  Empty Re: குழந்தைகளிடம் எப்போதுமே சொல்லக் கூடாத விடயங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum