சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 11:49

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

குழந்தைகளுக்கு வரும் உயர் ரத்த அழுத்தம்  Khan11

குழந்தைகளுக்கு வரும் உயர் ரத்த அழுத்தம்

Go down

குழந்தைகளுக்கு வரும் உயர் ரத்த அழுத்தம்  Empty குழந்தைகளுக்கு வரும் உயர் ரத்த அழுத்தம்

Post by ahmad78 Mon 26 May 2014 - 13:54

முன்பெல்லாம் பெரியவர்களுக்கான நோய்கள் என்பதாக வகைப்படுத்தப்பட்டவை, தற்போது சிறிய குழந்தைகளிடமும் சாதாரணமாக தோன்ற ஆரம்பித்துள்ளன. கெட்டுவிட்ட சுற்றுச்சூழலும், தவறான மருத்துவப் பழக்க வழக்கங்களும் மற்றும் நமது வாழ்க்கை முறையுமே இவற்றுக்கு பிரதான காரணம்.

குழந்தைகளுக்கு வரும் உயர் ரத்த அழுத்தம்  ChildBloodPressure


உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை தற்போது குழந்தைகளையும் அதிகம் வாட்டும் ஒரு நோயாக மாறிவிட்டது. எனவே, அதுதொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

குழந்தைகளுக்கு ரத்த அழுத்த சோதனை செய்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் என்ன?

பொதுவாக பெரியவர்களுக்கு மட்டுமே, குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த அழுத்த சோதனை நடத்தப்படுகிறது. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகள், குழந்தைகளிடம் உயர் ரத்த அழுத்த பிரச்சினைகள் இருப்பதை நிரூபிக்கின்றன. எனவே, 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் ரத்த அழுத்த சோதனை நடத்த வேண்டியது அவசியமாகிறது.

குழந்தைகள் மத்தியில் எந்தளவிற்கு உயர் ரத்த அழுத்த சிக்கல்கள் உள்ளன?

இப்பிரச்சினை, இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, 3 - 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடம், 3.6% அளவிற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளது. அதேசமயம், சீனாவைப் பொறுத்தவரை, 8 முதல் 17 வயது வரையிலான பள்ளி குழந்தைகளிடம் 17.4% அளவிற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளது.

குழந்தைகளிடம் ரத்த அழுத்த சோதனை நடத்தவில்லை என்றால், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன?

உயர் ரத்த அழுத்த பிரச்சினைக் கொண்ட 75% குழந்தைகள், சோதனைக்கு உட்படுத்தப்படாமலேயே உள்ளனர். இதன்மூலம், அவர்கள் பெரியவர்கள் ஆனதும், இதயம் மற்றும் ரத்த நாளம் தொடர்பான நோய்களுக்கு உள்ளாகின்றனர். உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ள ஒருவர், சர்க்கரை நோய், அதிக கொழுப்பு மற்றும் இதய நோய் ஆகியவை தாக்குவதற்கான அதிகபட்ச ஆபத்தில் இருக்கிறார்.

உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு, முறையான கவனிப்பிற்கு உட்படுத்தப்படாவிட்டால், மூளை வீக்கம், குழப்பம், கோமா, தீவிர தலைவலி மற்றும் குருட்டுத் தன்மை உள்ளிட்ட மோசமான நிலைகளுக்கு ஆட்படும் ஆபத்து உள்ளது. எனவே, ஆண்டிற்கு ஒரு முறையாகினும், குழந்தைகளுக்கு ரத்த அழுத்த சோதனை நடத்தப்பட வேண்டும்.

குழந்தைகளிடம் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை அதிகரிக்க காரணங்கள் என்ன?

இன்றைய சமூகத்தில், குழந்தைகளின் வாழ்க்கை முறையில் பல விரும்பத்தகாத அம்சங்கள் இருப்பதே அதற்கு காரணம். உதாரணமாக, அதிகமாக தொலைக்காட்சிப் பார்த்தல், கணினி முன்பாக அதிகநேரம் செலவழித்தல், வீடியோ கேம் விளையாடுதல், ஜங்க் உணவுகளை உண்ணுதல் மற்றும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படும் பானங்களைப் பருகுதல் உள்ளிட்ட பல பழக்கவழக்கங்களால், உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்படுகிறது.

அதேசமயம், தேவைக்கும் குறைவான உடலியக்கம், தொடர்ச்சியாக உடற்பயிற்சிகள் செய்யாமை, உடல் சார்ந்த விளையாட்டுக்களுக்கு வாய்ப்பில்லாமை உள்ளிட்ட அம்சங்கள் ஒரு குழந்தை குண்டாவதற்கு மட்டுமல்ல, அக்குழந்தை உயர் ரத்த அழுத்த பிரச்சினையை எதிர்கொள்வதற்கும் காரணமாகின்றன.

குழந்தைகளின் உயர் ரத்த அழுத்த சிக்கலைத் தீர்க்க கட்டாயம் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகள், நல்ல சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட ஊக்கப்படுத்தப்பட வேண்டும். மேலும் ஜங்க் உணவு மற்றும் சர்க்கரை அதிகம் கலந்த பானங்களை தவிர்க்க வேண்டும்.

காலை, மதியம் மற்றும் இரவு உணவுகளை தவறவிடாமல், சரியான நேரத்தில உண்ண வேண்டும். அதுபோல், அதிகநேரம் தொலைக்காட்சி முன்பாகவோ அல்லது கணினி முன்பாகவோ அமரக்கூடாது. தேவையான அளவிற்கு விளையாட வேண்டும்.

தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும், இரவில் நெடுநேரம் கண்விழிக்காமல், தினமும் தேவையான அளவு தூங்க வேண்டும்.

குழந்தைகளுக்கான நார்மல் ரத்த அழுத்தம் என்பது என்ன?

பெரியவர்களை எடுத்துக் கொண்டால், அவர்களின் நார்மல் ரத்த அழுத்த அளவு 120/80 mm Hg) என்பதாக இருக்கும். ஆனால் குழந்தைகளைப் பொறுத்தவரை, நார்மல் ரத்த அழுத்தம் என்பது, வயது, பாலினம் மற்றும் உயரம் ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.

எனவே, இதற்கென்று குறிப்பிட்ட அளவீட்டை நிர்ணயிக்க முடியாது. குழந்தையின் ரத்த அழுத்தத்தை அளவிடும் மருத்துவர், அதை reference table -க்கு பொருத்திப் பார்த்து, அது நார்மலா அல்லது அசாதாரணமானதா என்பதை நிர்ணயிக்க வேண்டும்.

இந்த ஒப்பீட்டின்போது, 95% விழுக்காட்டிற்கு மேல் இருந்தால், அது உயர் ரத்த அழுத்தமாக கணக்கிடப்படும். உதாரணமாக, ஒரு 5 வயது குழந்தையின் உயரம் 95% விழுக்காட்டில் இருந்தால், 104/65 mm Hg என்பதற்கு மேலான மதிப்பு உயர் ரத்த அழுத்தமாக கருதப்படும்.

குழந்தைகளிடம் நிலவும் மாறுப்பட்ட ரத்த அழுத்த நிலைகள் யாவை?

குழந்தைகளிடம் முதல் நிலையிலான அல்லது அவசியமான உயர் ரத்த அழுத்தம் இருக்கும். இதற்கென பின்னணி உடல் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம். அதேசமயம், சிறுநீரக மற்றும் இதய நோய்களுக்கான அறிகுறியாகவும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினைகள் இருக்கலாம்.

முன்பு, குழந்தைகளிடம் இருக்கும் அனைத்து உயர் ரத்த அழுத்த பிரச்சினைகளும் இரண்டாம் நிலையிலானவை என்று கருதப்பட்டு வந்தது. ஆனால், தற்போது நடைபெற்றுவரும் பல ஆராய்ச்சிகளின் விளைவாக, முதல்நிலை அல்லது அவசியமான உயர் ரத்த அழுத்த பிரச்சினைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய பிரச்சினைகள், இதுவரை பெரியவர்களிடம் மட்டுமே இருந்தவை.

குழந்தைகளிடம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்கள் யாவை?

உடல் பருமன், சிறுநீரக கோளாறு, இதய கோளாறு, தூக்கத்தின்போதான சுவாசப் பிரச்சினை உள்ளிட்டவை, குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்கள். ஒரு குழந்தையிடம் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருக்கிறதென்றால், அதற்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

ரத்த அழுத்தத்தை சோதனை செய்வதற்கான உகந்த கரம்(hand) எது?

வலது கரம், ரத்த அழுத்தத்தை சோதனை செய்வதற்கான சரியான உறுப்பாகும். இடது கையில் ரத்த அழுத்தத்தை சோதனை செய்தால், இதய நோய் அறிகுறியை கண்டறிவதில் சிக்கல் ஏற்படலாம். ஏனெனில், இடது கை அழுத்தம் குறைவாக இருக்கும்.

White- Coat உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன?

ஒரு குழந்தைக்கு, மருத்துவமனை அல்லது மருத்துவரின் கிளீனிக் ஆகிய இடங்களில் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்து, அதேசமயம், வீட்டில் அவரின் ரத்த அழுத்தம் சாதாரணமாக இருந்தால், அந்த நிலைக்குப் பெயர் White- Coat Hypertension.

இந்தநிலை, மாறுபடும் மனநிலை அழுத்தம் காரணமாக ஏற்படுவதாகும். இந்த White- Coat Hypertension என்பது தீங்கு தரும் ஒன்றல்ல. எனவே, ஒரு குழந்தை White- Coat Hypertension சிக்கலைக் கொண்டிருந்தால், அதை நினைத்து பெற்றோர் பயப்பட வேண்டியதில்லை. ஏனெனில், அதனால் எந்த தீங்கும் ஏற்படாது.

http://tamilkudumpam.blogspot.in/2014/05/blog-post_260.htmlகுழந்தைகளுக்கு வரும் உயர் ரத்த அழுத்தம்  24workpng1குழந்தைகளுக்கு வரும் உயர் ரத்த அழுத்தம்  24workpng1குழந்தைகளுக்கு வரும் உயர் ரத்த அழுத்தம்  24workpng1


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum