சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

அடுத்தவர் இடத்திலிருந்து எதையும் பார்ப்பது Khan11

அடுத்தவர் இடத்திலிருந்து எதையும் பார்ப்பது

Go down

அடுத்தவர் இடத்திலிருந்து எதையும் பார்ப்பது Empty அடுத்தவர் இடத்திலிருந்து எதையும் பார்ப்பது

Post by ahmad78 Thu 24 Jul 2014 - 10:46

அடுத்தவர் இடத்திலிருந்து எதையும் பார்ப்பது Ht2697
‘உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது  உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது...’

இதைத்தான் ஆங்கிலத்தில் கம்பேஷன் (compassion) என்கிறோம். அதாவது, அடுத்தவர் இடத்திலிருந்து எதையும் பார்ப்பது. இந்த அணுகுமுறைக்குப் பழகிவிட்டோமானால் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி... நமக்கு யாருடனும், எதற்கும் மோதலே வராது.

தலைப்புச் செய்திகளில் இடம் பெறும் வரை உமா மகேஸ்வரியை யார் என்றே நமக்குத் தெரியாது. அவர் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு, கொலையுண்ட செய்தி கேள்விப்பட்டு, பதறாத, பரிதாபப்படாத ஆட்களே இருக்க மாட்டார்கள். கும்பகோணம் தீ விபத்தில் கருகிப் போன குழந்தைகளை நினைத்தும், சுனாமி பலி வாங்கிய உயிர்களை நினைத்தும் கண்ணீர் விட்டிருக்கிறோம். இன்னும் இப்படி தினம் தினம் படிக்கிற, பார்க்கிற, கேள்விப்படுகிற பல அவலங்களுக்கும் வருத்தப்படுகிறோம். அறிமுகமில்லாத அந்த நபர்கள் மீது கரிசனம் காட்ட, அவர்கள் இடத்தில் நின்று சூழலைப் பார்ப்பதே காரணம்.

ஆனால், வீட்டுக்குள், உறவுகளுக்குள் மட்டும் அந்தக் கரிசனப் பார்வை காணாமல் போகிறது. ‘‘எங்க வீட்ல என்னை ராணி மாதிரி வளர்த்தாங்க. கேட்டதெல்லாம் கிடைக்கும். எதுக்கும் மறுத்ததில்லை. கல்யாணம் பண்ணிட்டு வந்த பிறகு எல்லாமே மாறிப் போச்சு. புதுசா ஒரு புடவை வாங்கணும்னா கூட ஹஸ்பெண்ட், அவங்கம்மா, அப்பானு எல்லார்கிட்டயும் அனுமதி கேட்டு நிக்க வேண்டியிருக்கு... கேட்டா, எங்க வீட்டுப் பழக்கம் அப்படித்தாங்கறாங்க...” என்றார் வித்யா.

‘‘எங்க வீட்ல யாரும், எதுக்கும் அனாவசியமா செலவு பண்ண மாட்டோம்.  அவசியம்னா வீட்டுப் பெரியவங்கக்கிட்ட கேட்டுட்டு செய்வோம். அதனால நாங்க ஒண்ணும் கெட்டுப் போயிடலையே...” என்பது வித்யாவின் கணவர் அபிஷேக்கின் வாதம். இந்த விஷயத்தில் இவர்கள் இருவரையும் குறை சொல்வதற்கில்லை. இருவரும் வளர்ந்த விதம் வேறு வேறு. இருவரும் தன் இடத்திலிருந்து மற்றவரைப் பார்ப்பதைத் தவிர்த்து, அடுத்தவர் இடத்திலிருந்து பார்க்கப் பழகினாலே இந்தப் பிரச்னைக்கு முடிவு வரும். ஆனால், யாரும் அப்படிச் செய்வதில்லை. மாறாக, எந்த ஒரு பிரச்னைக்கும், காரண, காரியங்களை ஆராயா மல், மிகச் சுலபமாக மற்றவர் மீது பழியைப் போட்டுவிட்டுத் தப்பிக்கவே நினைக்கிறோம். கூடவே, அப்படி பழி போடுகிறவரின் மீது ஒரு கோப உணர்வை வளர்த்துக் கொண்டு திரிகிறோம்.

‘அடுத்தவர் மீதான கோபத்தை சுமந்து கொண்டு வாழ்வதென்பது, கையில் அமிலக் குப்பியை ஏந்திக் கொண்டிருப்பதற்கு சமம். அடுத்தவருக்கு எந்தளவுக்கு ஆபத்தானதோ, அதே அளவு அதைக் கையில் வைத்திருப்பவருக்கும் ஆபத்தானது’ என்றார் காந்தி. மற்றவர் நிலையிலிருந்து பார்க்கப் பழகும் குணத்தினால், இத்தகைய ஆபத்தான கோபம் நம்மிடமிருந்து காணாமல் போகும்.
கசப்பான, பழைய நினைவுகளை மறக்கவும் மன்னிக்கவும் கற்றுக் கொள்வோம். ‘கல்யாணத் தன்னிக்கு அப்படிச் சொன்னியே... பத்து வருஷத்துக்கு முன்னாடி என்னை தப்பா பேசினீங்களே...’ என்கிற மாதிரியான மோசமான நினைவுத் தேக்கங்களை விட்டொழிப்போம். அடுத்தவர் நிலையில் இருந்து விஷயங்களை அணுகுகிற கலையானது அத்தனை சுலபமான தல்லதான்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அடுத்தவர் இடத்திலிருந்து எதையும் பார்ப்பது Empty Re: அடுத்தவர் இடத்திலிருந்து எதையும் பார்ப்பது

Post by ahmad78 Thu 24 Jul 2014 - 10:46

அப்படியொரு அனுபவத்துக்குத் தயாராக இருப்பவர்கள் இந்தப் பயிற்சியை முயற்சி செய்து பார்க்கலாம்.

  முதலில் உங்களை மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். எப்போதோ செய்த தவறுகளை, துரோகங்களை நினைத்து, காலத்துக்கும் அது குறித்த குற்ற உணர்வில் புழுங்குவார்கள் சிலர். ‘எனக்கு மன்னிப்பே கிடையாது’ என அந்த நினைவை எப்போதும் பசுமையாகவே வைத்திருப்பார்கள். இது தவறு. உங்கள் மீது உங்களுக்குக் கருணை வேண்டும்.

  உங்கள் துணை உங்களுக்குப் பிடிக்காத முறையில், வித்தியாசமாக நடந்து கொள்கிறாரா? முதலில் அதற்கான காரணத்தைப் பாருங்கள். அதுதான் அவரது ஆளுமையா? அல்லது அவரது வளர்ப்பு முறையே அப்படித்தானா? அல்லது அவரது கலாசாரத்தின் பாதிப்பா எனப் பாருங்கள்.
இந்தப் பிரச்னை உங்களைப் போலவே உங்கள் தோழிகள் அல்லது நண்பர்கள் சிலருக்கும் நிச்சயம் இருக்கும். அப்படி சிலரை சேர்த்துக் கொண்டு ஒரு குழுவாகவே இதற்கான பயிற்சியை முயற்சி செய்யலாம். அந்தப் பயிற்சியில் நீங்கள் கவனிக்க வேண்டியவை...

உங்கள் துணையிடம் நீங்கள் என்ன மாதிரியான பிரச்னைகளைப் பார்க்கிறீர்கள்?

உங்கள் துணையின் வளர்ப்பு முறை எப்படியிருந்தது? அவரது அம்மாவின் இயல்பு கள், நம்பிக்கைகள், அப்பாவின் இயல்புகள் மற்றும் நம்பிக்கைகள் போன்றவை எப்படிப் பட்டவை?

ஒரு பிரச்னையை அல்லது விஷயத்தை அணுகுவதில் உங்கள் துணையின் கடந்த கால அனுபவம் எப்படியிருந்தது? உதாரணத்துக்கு 100 ரூபாயை தொலைத்துவிட்டு ஆகாயத்துக்கும் பூமிக்குமாக எகிறிக் குதித்திருக்கலாம் அல்லது லட்ச ரூபாயை பறி கொடுத்த பிறகும் பதற்றமே இல்லாமல் அடுத்த வேலையைப் பார்க்கப் போயிருக்கலாம். உங்கள் துணை எந்த ரகம்?

உங்கள் துணையின் ஆளுமை எப்படிப்பட்டது? எல்லோரிடமும் கலகலப்பாகப் பழகுபவரா? டேக் இட் ஈஸி பாலிசி உள்ளவரா? சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட நொறுங்கிப் போகிறவரா? சட்டென கோபப்படுபவரா? பழமைவாதியா? மிஸ் அல்லது மிஸ்டர் பர்ஃபெக்ஷனிஸ்ட்டா? நெகட்டிவ் சிந்தனை அதிகமுள்ளவரா? எதையும் திட்டமிட்டுச் செய்பவரா?

ஒரு நபரைப் பற்றி அல்லது ஒரு பிரச்னையைப் பற்றி உங்கள் துணையின் நிலைப்பாடு என்ன?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அடுத்தவர் இடத்திலிருந்து எதையும் பார்ப்பது Empty Re: அடுத்தவர் இடத்திலிருந்து எதையும் பார்ப்பது

Post by ahmad78 Thu 24 Jul 2014 - 10:46

இப்படி எல்லாவற்றையும் ஆராய்ந்து, பிறகு ஒரு முடிவுக்கு வரலாம். நான்கைந்து நபர்களுடன் சேர்ந்து இந்தப் பயிற்சியைப் பழகும் போது, வேறு வேறு பார்வைகள், வேறு வேறு அணுகு முறைகளைப் பற்றிய அறிமுகம் உங்களுக்குக் கிடைக்கும். இறுதியில் உங்கள் துணையிடம் நீங்கள் கண்டெடுத்த நெகட்டிவ் விஷயங்கள், பலவீனங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, அவரது கனவுகளை, லட்சியங்களை அறிந்து கொண்டு, அவை நிறைவேற உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யலாம். ஒரு பயிற்சி மையத்தில் எம்.பி.ஏ. மாணவர்களுக்கு படிப்பின் ஒரு பகுதியாக இந்த 3 படங்களையும் காட்டினார்கள்.

மாணவர் களை இரு பிரிவினராகப் பிரித்து, இரண்டு பிரிவுகளுக்கும் இரண்டு வேறு வேறு படங்களைக் காட்டினார்கள். ஒரு பிரிவினர் அவர்கள் கண்ட படத்தில் உள்ளவர் இளம் பெண் என்றார்கள். இன்னொரு பிரிவினரோ அதில் உள்ளவர் ஒரு முதியப் பெண்மணி என்றனர். பிறகு இரண்டு பிரிவினரையும் சேர்த்து, மூன்றாவதாக ஒரு படத்தைக் காட்டினார்கள். அது இரண்டின் கலவையாகத் தெரிந்தது. அப்போதுதான் அடுத்தவரின் பார்வையில்  அந்தப் படம் எப்படித் தெரிந்திருக்கும் என்பது இரு தரப்பினருக்கும் புரியும். இதே அணுகுமுறைதான் கணவன்  மனைவிக்கிடையிலும் அவசியம். உங்களுக்கு சரியெனத் தோன்றுவதை உங்களவர் தவறென மறுக்கலாம். அவர் சரியென்பதை நீங்கள் தவறெனலாம். சரி என்பதற்கும், தவறு என்பதற்குமான காரணங்களை அவரவர் நிலையிலிருந்து பார்ப்பது மட்டுமே இதற்கான தீர்வு.

துணையின் இடத்திலிருந்து பிரச்னைகளைப் பார்க்க, பழக இன்னுமொரு எளிமையான வழி. ஒரு மொழி பெயர்ப்பாளர், தான் மொழி பெயர்க்க வேண்டிய கட்டுரையை வார்த்தைக்கு வார்த்தை கவனமாக உள்வாங்குவார். அப்போதுதான் அவரால் அர்த்தம் மாறாத மொழி பெயர்ப்பைத் தர முடியும். உங்கள் துணையின் பேச்சை ஒரு மொழி பெயர்ப்பாளர் போல கவனியுங்கள். அவரை மனம் திறந்து பேச அனுமதியுங்கள்.

அடுத்தவர் பேச்சுக்கு காது கொடுத்தாலே பாதி பிரச்னைகள் காணாமல் போகும். அப்படி அவரைப் பேசவிட்டுக் கவனிப்பதன் மூலம், சண்டையோ, வாக்குவாதமோ இல்லாமல், எந்த ஒரு விஷயத்துக்கும் மூன்றாவதாக ஒரு மாற்றுத் தீர்வு கிடைக்கும். வலி சேர்த்த வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர்ப்பீர்கள். உங்களவரை நீங்கள் இன்னும் ஆழமாகத் தெரிந்து கொள்ளவும், அவர் மீதான மரியாதையை வளர்த்துக் கொள்ளவும் கூட இந்த அணுகுமுறை  உங்களுக்கு வழிகாட்டும்!

(வாழ்வோம்!)


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அடுத்தவர் இடத்திலிருந்து எதையும் பார்ப்பது Empty Re: அடுத்தவர் இடத்திலிருந்து எதையும் பார்ப்பது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum