சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 11:49

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

உடற்பயிற்சி செய்தால் நீரிழிவை விரட்டலாம் Khan11

உடற்பயிற்சி செய்தால் நீரிழிவை விரட்டலாம்

Go down

உடற்பயிற்சி செய்தால் நீரிழிவை விரட்டலாம் Empty உடற்பயிற்சி செய்தால் நீரிழிவை விரட்டலாம்

Post by ahmad78 Wed 6 Aug 2014 - 8:14

உடற்பயிற்சி செய்தால் நீரிழிவை விரட்டலாம் Ht2551
நீரிழிவு (diabetes) என்பது வளர்சிதைமாற்ற நோய்களின் ஒரு தொகுப்பாகும். தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த  இன்சுலினை பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலையில், இந்நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். ஆனால், நீரிழிவு  என்பது ஒரு நோயல்ல; இன்சுலின் சமச்சீர் நிலையை இழப்பதால் ஏற்படுவதாகும். 

முதல் வகை


முதலாவது வகை நீரிழிவானது (IDDM Insulin DEPENDENTஉடற்பயிற்சி செய்தால் நீரிழிவை விரட்டலாம் Arrow-10x10 Diabetes Mellitus)    சிறுவர், சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகிறது.  இவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்கவேண்டும். ஏனென்றால் இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும்  இழந்திருக்கின்றன. இந்த வகை 10 வீதமான நோயாளிகளுக்கு ஏற்படுகிறது. 

இரண்டாவது வகை

இரண்டாவது வகை நீரிழிவு ( NIDDM Non Insulin Dependent DIABETESஉடற்பயிற்சி செய்தால் நீரிழிவை விரட்டலாம் Arrow-10x10 Mellitus)  இன்சுலின் சுரப்பிகள் போதியளவு சுரக்காததாலோ அல்லது சுரக்கப்படும்  இன்சுலினுக்கு எதிர்வினை ஏற்படுவதாலோ ஏற்படுகின்றது. இந்த வகை நீரிழிவு கிட்டத்தட்ட 90 விதமான நோயாளிகளுக்கு காணப்படுகிறது. இந்த வகை நீரிழிவு  வயது வந்தவர்களுக்கு ஏற்படும் என்றும் கூறுவார்கள். இந்த வகை அதிக உடற்பருமன் உள்ளவர்களிடம் காணப்படுகிறது.

மூன்றாவது வகை

கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி குருதியில் கலக்கிறது. கர்ப்ப கால நீரிழிவானது 2 சதவீதம் முதல் 4 சதவீதமான பெண்களுக்கு ஏற்படுகிறது.  குழந்தை பிறந்தவுடன் இது மறைந்து விடும். இருந்தபோதிலும், பின்னர் குழந்தைக்கும், தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும். நமது  இரைப்பையும் குடலும் உணவிலிருந்து குளுக்கோஸ் எனும் வெல்லத்தை எடுத்து குருதியில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின்  உற்பத்தியாகி குருதியில் கலக்கிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடற்பயிற்சி செய்தால் நீரிழிவை விரட்டலாம் Empty Re: உடற்பயிற்சி செய்தால் நீரிழிவை விரட்டலாம்

Post by ahmad78 Wed 6 Aug 2014 - 8:15

உறுதி செய்யும் சோதனை முறைகள்:

நீரிழிவு நோயினை உறுதிசெய்வதற்கு ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அல்லது சர்க்கரையின் அளவானது அளவிடப்படுகிறது. உண்ணாநிலை குருதிச் சர்க்கரை  அளவு (Fasting plasma glucose) 7.0 மில்லி மோல்/லிட்டர் (126 மில்லி கிராம்/டெசிலிட்டர்)லும் அதிகமாக அல்லது எதேச்சையான குருதிச் சர்க்கரையின்  அளவு (RANDOMஉடற்பயிற்சி செய்தால் நீரிழிவை விரட்டலாம் Arrow-10x10 plasma glucose )  11.1 மில்லி மோல்/லிட்டர் (200 மில்லி கிராம்/டெசிலிட்டர்) லும் அதிகமாக காணப்பட்டால் ஒருவருக்கு நீரிழிவு நோய்  உள்ளது என உறுதி செய்யப்படும்.

அறிகுறிகள்

* அடிக்கடி சிறுநீர் கழிப்பது
* அடிக்கடி தாகம்
* சருமம், தோல் பாதிப்பு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய்

தாகம்: உடலில் திரவப்பொருட்கள் குறையும்போதோ, உப்பின் அடர்த்தி அதிகமாகும்போதோ தாக உணர்வு ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளின்போது மூளை  வேகமாக செயல்பட்டு தாக உணர்வை அதிகரிக்கும். உடலில் தொடர்ந்து நீரிழப்பு இருக்குமானால் அது பலவகையான சிக்கல்களின் அறிகுறியாக இருக்கலாம்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஏன்?

சிறுநீர் என்பது திரவ வடிவிலான ஒரு கழிவுப்பொருள். இது சிறுநீரகத்தில் உருவாகி, சிறுநீர்க்குழாய் மூலம் சிறுநீர்ப்பைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தற்காலிகமாக  அங்கே சேகரிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து சிறுநீர்வழி மூலம் உடலில் இருந்து வெளியேறுகிறது. உடலுக்குத் தேவையற்ற நச்சுப்பொருட்கள் இதன்மூலம்  வெளியேறும். உடலில் நிகழும் மாற்றங்களையும், பல நோய்களையும் கண்டறிய சிறுநீர் மாதிரி பயன்படுத்தப்படுகிறது.

சருமம், தோல் பாதிப்பு

உடலைக் கிருமிகளில் இருந்து பாதுகாப்பதில் தோல் முக்கிய பங்கு வகிக்கிறது. வெப்பக்காப்பு, வெப்பநிலை கட்டுப்பாடு, தொட்டுணர்வு, உயிர்ச்சத்து ‘டி‘ இன்  தொகுப்பு, உயிர்ச்சத்து ‘பி‘ ஐ பாதுகாத்தல் என்பன இதன் பிற செயற்பாடுகள் ஆகும். நீரிழிவு நோயாளிகளுக்கு தோல் பெரும்பாலும் நிறத்தை இழந்து காணப்படும்.

தொற்றுநோய்

ஒரு நோய் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களின் காரணமாக ஏற்படுகிறது என்பது  உறுதிப்படுத்தப்பட்டால், அந்நோய் தொற்றுநோயாகும். தொற்று நோயானது ஒரு குறிப்பிட்ட இனத்துக்குள்ளேயோ அல்லது ஒரு இனத்திலிருந்து, வேறொரு  இனத்துக்கோ கடத்தப்படுகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடற்பயிற்சி செய்தால் நீரிழிவை விரட்டலாம் Empty Re: உடற்பயிற்சி செய்தால் நீரிழிவை விரட்டலாம்

Post by ahmad78 Wed 6 Aug 2014 - 8:15

கட்டுப்படுத்தும் உணவு வகைகள்

பாகற்காய்: 
நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு வரப்பிரசாதமாகும். ஏனெனில் பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து  வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

வெந்தயக் கீரை: கீரை வகைகளில் வெந்தயக்கீரையை சாப்பிட்டு வந்தால், நீரிழிவைத் தடுக்கலாம். இந்த கீரையில் உள்ள லேசான கசப்பு சுவையானது. ரத்தத்தில்  உள்ள குளுக்கோஸின் அளவை குறைக்கிறது.

வெண்டைக்காய்: வெண்டைக்காயை நறுக்கும்போது வரும் ஒருவித பசை போன்ற நீர்மம், நீரிழிவைக் கட்டுப்படுத்தும். இரவில் வெண்டைக்காயை நறுக்கி நீரில்  ஊற வைத்து, அதிகாலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை குடிக்க வேண்டும்.

சுரைக்காய்: இன்சுலின் குறைபாட்டினால் வரும் நீரிழிவை, சுரைக்காயின் சாறை காலையில் குடித்து வர சரியாகும்.

காலிஃப்ளவர்: காலிஃப்ளவர் இனிப்பு சுவையற்றது. ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், உடலானது நன்கு ஆரோக்கியமாக இருக்கும். 
இனிப்பு சுவை இல்லாத காய் என்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

பூசணிக்காய்: அனைவருக்குமே பூசணிக்காய் இனிப்பு சுவையுடையது என்பது தெரியும். ஆனால் அவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கும்.  எனவேதான் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு காயாக உள்ளது.

சீதாப்பழம்: 
சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது. இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே மருத்துவ  பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த  டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது பழத்தில் உள்ள சத்துக்கள்: சீத்தாப்பழத்தில்  வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்ச்சத்து, மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து,  போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன. நீரிழிவு என்பது இன்று பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. இதற்கு சரியான உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி  போன்றவை இருந்தால் நீரிழிவு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.


தினகரன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடற்பயிற்சி செய்தால் நீரிழிவை விரட்டலாம் Empty Re: உடற்பயிற்சி செய்தால் நீரிழிவை விரட்டலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum