Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Today at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
கிருமிகளை வளர்க்கும் கைப்பேசிகள்!
5 posters
Page 1 of 1
கிருமிகளை வளர்க்கும் கைப்பேசிகள்!
![கிருமிகளை வளர்க்கும் கைப்பேசிகள்! Ht3026](https://2img.net/h/img.dinakaran.com/Healthnew/H_image/ht3026.jpg)
தெரியுமா?
ஹாலிவுட் படங்களில் மனிதர்களுக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் இடையே யுத்தம் வருவதாக அவ்வப்போது பார்த்திருப்போம். ஆனால், கண்ணுக்குத் தெரியாத ஆபத்தான கிருமிகளுக்கும் நமக்கும் ஏற்கெனவே ஒரு யுத்தம் சத்தமில்லாமல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எபோலா போன்ற புதுப் புதுப் பெயர்களில் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய்கள் அதை அடிக்கடி உறுதிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ‘நாங்க எல்லாம் ரொம்ப சுத்தம்...’ என்று சொல்பவர்களைக் கூட யோசிக்க வைத்திருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
‘பக்கத்தில் யாராவது தும்மினாலே ‘அய்யோ கிருமி... கிருமி’ என்று எச்சரிக்கையோடு முகத்தை மூடிக் கொள்பவராகவோ அந்த இடத்தை விட்டே ஓடிப்போகும் நபராகவோ நீங்கள் இருக்கலாம். ஆனால், அதைவிடப் பலமடங்கு கிருமிகள் உங்கள் சுத்தமான வாழ்க்கையிலேயே இருக்கிறது தெரியுமா?’ என்று ஆரம்பத்திலேயே நமக்கு செக் வைக்கிறது அந்த ஆய்வு. 54வது சர்வதேச அறிவியல் மாநாட்டில் மிசிகிகிசி என்ற அமைப்பு இது பற்றி நேரடியாக ஒரு சோதனையை நடத்திக் காட்டியது.
‘2 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரத்துக்குள் 40 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் வரை கைகள் வழியாகக் கிருமிகள் பெருகிப் பரவுகின்றன’ என்பதை ஆதாரப்பூர்வமாக அதில் விளக்கினார்கள். இந்தப் பரிசோதனைக்காக ‘பாக்டீரியோபேஜ் எம்.எஸ்.2’ என்ற மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காத வைரஸ் எடுத்துக் கொள்ளப்பட்டது. மனிதர்களிடம் தொற்றிப் பரவக்கூடிய நோரோ வைரஸின் உருவத்திலும் அளவிலுமே இந்த ‘பாக்டீரியோபேஜ் எம்.எஸ். 2’வும் இருந்தது (இந்த நோரோ வைரஸ் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை உருவாக்கக் கூடியது).
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த ‘பாக்டீரியோபேஜ் எம்.எஸ் 2’ வைரஸ், மனிதர்களின் கைகள் அதிகம் படக்கூடிய கதவு கைப்பிடிகள், மேஜை விரிப்புகள் ஆகியவற்றில் சாம்பிளுக்கு வைக்கப்பட்டது. வைத்த வேகத்திலேயே இந்தக் கிருமிகள் மனிதர்கள் மூலம் அலுவலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தன. ஸ்விட்சுகள், தேநீர் கோப்பைகள், தொலைபேசிகள், நாற்காலிகள், கம்ப்யூட்டர்கள் என்று வேகமாகப் பரவ ஆரம்பித்த வைரஸ்கள், 4 மணி நேரத்துக்குள் 60 சதவிகித அலுவலகம் முழுவதும் பரவிவிட்டது. இந்த எண்ணிக்கை ‘ஒருவர் தும்மும்போது பரவும் கிருமிகளைவிட பலமடங்கு அதிகம்’ என்பதை ஆய்வாளர்கள் புரிய வைத்தார்கள்.
‘இதுக்கு என்னதான் செய்வது?’ என்று கவலையோடு கேள்வி கேட்டவர்களுக்கு, ‘இதைத்தான் நாங்க எதிர்பார்த்தோம்’ என்ற ரீதியில் ஆய்வாளர்கள் பதில் சொன்னார்கள். ‘வைரஸ் பற்றி உங்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காகத்தான் இந்த ஆய்வு. எனவே, கிருமி நாசினிகளைப் பயன்படுத்தி அடிக்கடி கைகளைக் கழுவுங்கள். குறிப்பாக சாப்பிடும் முன் கண்டிப்பாகக் கிருமி நாசினிகளைப் பயன்படுத்துங்கள். இது 80 முதல் 99 சதவிகிதம் வரை கைகள் மூலம் கிருமிகள் பரவுவதைத் தடுக்கிறது’ என்றார்கள். ஏற்கெனவே, டாய்லெட்களில் இருக்கும் கிருமிகளின் எண்ணிக்கையைவிட உங்கள் கம்ப்யூட்டர் கீபோர்டிலும் நீங்கள் எப்போதும் இணைபிரியாமல் வைத்திருக்கும் செல்போனிலும் இருக்கும் கிருமிகள் அதிகம் என்று ஓர் ஆய்வு அதிர்ச்சி கிளப்பியது. இப்போது இந்த ஆய்வு வந்திருக்கிறது. சுத்தத்தில் நமக்கு இன்னும் பயிற்சிகள் வேண்டுமோ?;
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3036
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கிருமிகளை வளர்க்கும் கைப்பேசிகள்!
இனி கீபோர்டையே தொடக்கூடாதுப்பா :)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கிருமிகளை வளர்க்கும் கைப்பேசிகள்!
மிக அவசியமான பதிவு நினைத்துக்கூட பார்க்க முடியாத ஆராய்ச்சு முடிவு எப்போதும் எம்மோடு இருக்கும் விடயங்களில் எமக்கு எதிரானவையும் கலந்திருக்கிறது என்பதுதான் ஆச்சரியம் இனிமேலாவது அவதானமாக கையாளவேண்டும் நன்றி அகமட்
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கிருமிகளை அழிக்கும் மஞ்சள்
» உடல் கிருமிகளை அழிக்கும் பூவரசு
» லஞ்சம் அன்பை வளர்க்கும்…!!
» அறிவை வளர்க்கும் ஆலயங்கள்தான் நூலகம்
» தலைமுடியை வளர்க்கும் விரல் நகங்கள்.
» உடல் கிருமிகளை அழிக்கும் பூவரசு
» லஞ்சம் அன்பை வளர்க்கும்…!!
» அறிவை வளர்க்கும் ஆலயங்கள்தான் நூலகம்
» தலைமுடியை வளர்க்கும் விரல் நகங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|