சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

மனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்... Khan11

மனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்...

2 posters

Go down

மனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்... Empty மனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்...

Post by சே.குமார் Sun 1 Feb 2015 - 20:50

போட்டிப் பேச்சு...

மிழ்க்குடில் நடத்திய போட்டிகளுக்கான பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை சொன்னபடி அனுப்பிவிட்டார்கள். சான்றிதழ்களை தமிழ்க்குடில் அறக்கட்டளை வலைப்பூவிலும் முகநூலிலும் பகிர்ந்திருந்தார்கள். கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றமைக்கான சான்றிதழும் பரிசுத்தொகைக்கான காசோலை வந்து சேர்ந்து விட்டதாக மனைவி சொன்னார். சான்றிதழை ஸ்கைப்பில் காண்பித்தார். போட்டியை சிறப்பாக நடத்தி, அதற்கான பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை விரைவாய் அனுப்பியமைக்கு குடில் நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் அவர்களின் சிறப்பான மக்கள் தொண்டு.

குடிலை நீங்களும் வாசிக்க : தமிழ்க்குடில்

எனக்கு வந்த சான்றிதழ் உங்கள் பார்வைக்காக....

மனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்... Katturai%2B1

***

கோதரர் ரூபன் மற்றும் திருவாளர் யாழ்பாவாணன் இருவரும் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டிக்கான கடைசி தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கதைகளை அனுப்ப கடைசித்தேதி பிப்ரவரி-15. இன்னும் பதினைந்து தினங்கள் இருப்பதால் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு வெற்றிக்கனியைத் தட்டிச் செல்லுங்கள். தொடர்ந்து வலையுலகில் போட்டிகள் நடத்தி சிறப்புச் சேர்க்கும் அந்த இரண்டு எழுத்தாளர்களையும் வாழ்த்துவோம்.

போட்டி குறித்து அறிய : ரூபனின் எழுத்துப்படைப்பு

***

சேனைத்தமிழ் உலா நடத்தும் சிறுகதைப் போட்டிக்கான கடைசித் தேதி 10/02/2015. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். மேலும் சேனையில் இணைந்து உங்களது எழுத்துக்களைப் பகிர்ந்து நல்ல நட்புக்களின் உற்சாகமான உணர்வுப் பூர்வமான கருத்துக்களைப் பெற்று உங்கள் எழுத்தை மேலும் மெருகூட்டுங்கள். தாங்கள் இணைந்தீர்கள் என்றால் கண்டிப்பாக அவர்களின் அன்பில் நனைந்து இன்புறுவீர்கள்.

சேனையின் குடும்ப சிறுகதைப் போட்டி குறித்த விவரங்களுக்கு : சேனைத்தமிழ் உலா

***

ழுத்து.காம் நடத்தும் கவிதைப் போட்டிக்கான கடைசி தேதி : 08/02/2015. போட்டியில் பங்கு பெற எழுத்து.காமில் உறுப்பினராய் இருக்க வேண்டும்.

போட்டி குறித்த விவரம் அறிய : எழுத்து.காம்

*********************

நம்ம பேச்சு

சிறுகதைகள் மட்டுமே எழுதி வந்த  என்னை தொடர்கதை எழுத வைத்தது சில நண்பர்கள்தான் என்பதை பலமுறை சொல்லியிருக்கிறேன். 'கலையாத கனவுகள்'என்ற முதல் தொடர்கதை (இது தொடர்கதை இல்லை மெகா தொடர்ன்னு மைண்ட்வாய்ஸில் சிலர் திட்டுவது கேக்குது... வேணாம்... விட்டுடுங்க...) பெற்ற வரவேற்பைவிட தற்போது எழுதும் 'வேரும் விழுதுகளும்' நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. எல்லோருமே கிராமத்து நடையில் பயணிக்கும் கதையை விரும்பிப் படிக்கிறார்கள். நம்ம எழுத்துக்கு... அதுவும் தொடர்கதைக்கு பெரியவர்கள் எல்லாம் சொல்லும் கருத்துக்கள் உண்மையில் ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்குது.

***

நேற்று பள்ளி ஆண்டு விழாவில் ஸ்ருதியும் விஷாலும் 3000 ரூபாய்க்கு மேல் செலவு வைத்து நடனம் ஆடியிருக்கிறார்கள். எப்பவுமே ஸ்ருதியின் நடனம் அருமையாக இருக்கும். பெரும்பாலும் பின் வரிசையில் வைத்து விடுவார்கள் என்பதே வருத்தமாக இருக்கும். இந்த முறை முதல் ஆளாக நின்று கலக்கலாய் ஆடியிருக்கிறது. விஷாலும் முதல் ஆள்... ஆட்டத்தில் அக்காவை தூக்கி சாப்பிட்டுவிட்டான். விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்த எனது நண்பனும் தேவகோட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவருமான பேராசிரியர். கரு.முரு(கன்) மேடையிலேயே 'மாப்ள கலக்கிட்டேடா' என தூக்கிக் கொஞ்சினானாம். நானும் வீடியோ பார்த்தேன்... குமாருக்கு அப்படியே நேரெதிர்... என்னமா ஆட்டம் போடுது... அவங்க அம்மாக்கிட்ட சுத்திப் போடச் சொல்லியிருக்கேன்... பின்னே பெத்தவங்க கண்ணுதான் படக்கூடாதுன்னு சொல்லுவாங்க.

***

ன்னைக்கு இது என திட்டமிட்டு சென்ற வாரம் புதன் கிழமை சிறுகதை / கட்டுரை மட்டும் பதியாமல் மற்ற ஆறு நாட்களும் வெற்றிகரமாக பதிவுகளை இட்டு பேரைக் காப்பாற்றிக் கொண்டேன்... இனி தொடருமா தெரியாது... ஏன்னா சொல்லி எழுதுவதை விட எதாவது எழுதிப் போடுவது சுலபமாத் தெரியுது... ஹி...ஹி...

***

லைனில்தான் இந்த மாதமும் ஜாகை... அறையில் கேட்டு சமைப்பதற்கு அனுமதி வாங்கிவிட்டேன். இன்று புளிக்குழம்புடன் ஆரம்பிச்சாச்சு. இனி ஹோட்டல் சாப்பாட்டில் இருந்து விடுமுறை.

**********************

நடப்புப் பேச்சு

லைனில் தங்கியிருக்கும் அறையில் ஊருக்குப் பொயிட்டு நேற்றுத்தான் ஒரு மலையாளி வந்திருக்கிறார். சென்ற மாதம் அவருக்குப் பதிலாகத்தான் நான் இருந்தேன். இந்த மாதமும் தங்க வேண்டிய சூழல் வந்ததால் அவர்கள் எனக்கு ஒரு கட்டில் போட்டுக் கொடுத்தார்கள்... மலையாளிகள் என்றாலும் நல்லவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  ஊரில் இருந்து வரும்போது ஏர்போர்ட் டூட்டி ப்ரியில் பாட்டில்களை அள்ளி வந்து விட்டார் போலும். நேற்று நான் அபுதாபியில் இருந்து வரும் போது புல் போதையில் இருந்தார். இன்று பணிக்குப் போகவில்லை போலும்... மதியம் நான் வேலை முடிந்து வரும் போது உடம்பில் இருந்த கைலி தனியே கிடந்தது கூட அறியாமல் புல்லாகக் கிடந்தார். இப்போத்தான் எழுந்தார்... வேகவேகமாக தலை சீவினார்... பாட்டிலில் தண்ணீர் பிடித்தார்... டூட்டிப்ரி பாட்டிலுடன் பக்கத்து அறைக்குச் சென்றுவிட்டார். இப்படியும் மனிதர்கள்... 

மனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்... 13

***

நான் அலைன் வந்ததில் இருந்து தினமும் மதியம் சாப்பிடும் மலையாளி ஹோட்டலில் பணி செய்யும் பையனை, இரவு சாப்பிடச் செல்லும் கடையில் மசாலா தோசை சாப்பிட்டுக் கொண்டிருக்கக் கண்டேன். என்ன இங்க என்றதும் எங்க ஹோட்டல்ல மசாலா தோசை கிடைக்காதுல்ல என்றவன், என்னுடன் பேச ஆரம்பித்தான். 'சேட்டா... நானு பாம்பேல பிஎம்டபிள்யூ ஷோரூம்ல பணி செஞ்சேன். எனக்கு கீழ 10 பேர் வேலை பார்த்தாங்க. ஊருக்குப் போனப்போ விபத்துல நல்ல அடி. பின்ன தேறி வரும்போது அப்பா இவட கூட்டியாந்தாச்சு... இங்க 1200 திர்ஹாம் சம்பளம். காலையில் 8 மணிக்குப் போன இரவு 2 மணியாகும் போயி கிடந்து உறங்க... அங்கயே இருந்திருக்கலாம்... படைச்சவனுக்கு பிடிக்கலை போல என்று புலம்பினான். ஜான் ஆபிரகாமுடன் நிற்கும் போட்டைவை மொபைலில் இருந்து எடுத்துக்காட்டி... அவட இருந்திருந்தா இன்னேரம் நல்ல சம்பளம் கிடைக்கும் என்றான்... உண்மைதான் 17, 18 நேரம் பணி எடுத்து 20.000 இந்திய ரூபாய் சம்பளமாகப் பெற்று அதில் செலவு போக மிஞ்சுவது என்ன...? வாழ்வின் இழப்பை ஈடு செய்யுமா இந்த மிச்சம்..?

னசின் பக்கம் அடுத்த வாரம் வரும்
-பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்... Empty Re: மனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்...

Post by Nisha Mon 2 Feb 2015 - 1:43

தமிழ்க்குடில் சிறுகதைப்போட்டியில்  வென்றமைக்கு வாழ்த்துகள் குமார். ரோஜாரோஜாசலூட்

உங்கள் வெற்றி  மென்மேலும் தொடரட்டும் பிரார்த்தனை செய்

வாவ் சேனைத்தமிழ் குறித்தும்  சிறு கதை போட்டி குறித்தும்  அசத்தல் விளம்பரம்.  இது யாருக்குமே தோணாமல் போனதேப்பா! என்ன கொடுமை  படிக்கும் போது மகிழ்ச்சியாய் இருக்கு குமார்!இனி கொண்டாட்டம் தான்

அலைன் வாழ்க்கையும் புளிக்குழம்பும் மட்டும் தான் தொடருமா! இரட்டை வாடகை செலவும்  தொடருமா எனவும் சொல்லி இருக்கணும் சார்!  அழுகை

அதெல்லாம் சரி! நீங்கள் நன்றாக சமைப்பீர்களோ சார்? விருந்துக்கு வரலாமோ?துபாய் வர ஆறு மணி நேரம் தான்  ஆகும். சுவிஸில் காலையில் சாப்பிட்டு புறப்பட்டால் மதியச்சாப்பாட்டுக்கு உங்க வீட்டுக்கு வந்திரலாமாம்.. டிக்கட் அனுப்பி வைத்தால் நாளைக்கே கிளம்பிருவோம்ல!

பின்னூட்டம் தொடரும்>>..ஐ ஜாலி

Last edited by Nisha on Mon 2 Feb 2015 - 2:03; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்... Empty Re: மனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்...

Post by Nisha Mon 2 Feb 2015 - 1:56

விஷால், ஸ்ருதி  குறித்து உங்களுடன் நாங்களும் மகிழ்கின்றோம்பா! குழந்தைகள் இருவரும் ஊரும் உலகம்  போற்றும் சாதனையாளர்களாய் அனைத்து செல்வங்களையும் பெற்றிட எங்கள் நல்லாசிகள்!

மருமக்களின் பள்ளி நடனம் வீடியோவை 
எங்கள் விட்டுக்குட்டீஸ் . பகுதியில் பகிரலாமே!
நாங்களூம் ரசிப்போமல்!

நிஷா வீட்டு குட்டீஸ்  குறித்து இங்கே பார்க்கலாம்!

அந்த பகுதியில் சேனை உறவுகளின் வீட்டு வாண்டுகள் கலகலக்கிட்டிருக்காங்க!   நேரம் கிடைக்கும் போது பாருங்க.

வேலை தேடிய புலம் பெயர்தல் விடயத்தில் இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை நிலை தான் குமார். ஊரில் இருப்’பவர்களுக்கு சொன்னால் புரியாது. அனுபவித்து தான் புரிந்துப்பார்கள். 

பல நேரம் அங்கிருப்போர்  அதிகமாய் ஆசைப்பட ஏற்கனவே  புலம்பெயர்ந்து  தொழில் செய்வோரின் அலம்பலும், ஆடம்பரமும், போலித்தனமும், வேஷமும் கூட காரணம் எனலாம். வெளி நாடு என்றாலே சொர்க்க லோகம் எனும் மாயையை  உருவாக்குபவர்கள் முதலில் உணரணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்... Empty Re: மனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்...

Post by Nisha Mon 2 Feb 2015 - 2:01

வேரும் விழுதுக்கு நானும் வாசகி தான்பா..  கலையாத கனவிலிருந்தே சைலன்ஸ் வாசகி நானாக்கும். 

 சுவாரஷ்யமான படிக்க ஆர்வம் தருவதாய் இருக்கின்றது மனசின் பக்கம்.  வாராவாரம் மறந்திராம  தொடருங்கள்.

மொத்தத்தில் மனசின் பக்கம் மிக அருமையாய் தொகுக்கப்பட்டிருக்கிறது. இதை  நானும்  பின்பற்றி வாராவாரம் நிகழ்வுகளை  பதிவாக்கலாமா யோசிக்கின்றேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்... Empty Re: மனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்...

Post by சே.குமார் Mon 2 Feb 2015 - 15:14

Nisha wrote:தமிழ்க்குடில் சிறுகதைப்போட்டியில்  வென்றமைக்கு வாழ்த்துகள் குமார். ரோஜாரோஜாசலூட்

உங்கள் வெற்றி  மென்மேலும் தொடரட்டும் பிரார்த்தனை செய்

வாவ் சேனைத்தமிழ் குறித்தும்  சிறு கதை போட்டி குறித்தும்  அசத்தல் விளம்பரம்.  இது யாருக்குமே தோணாமல் போனதேப்பா! என்ன கொடுமை  படிக்கும் போது மகிழ்ச்சியாய் இருக்கு குமார்!இனி கொண்டாட்டம் தான்

அலைன் வாழ்க்கையும் புளிக்குழம்பும் மட்டும் தான் தொடருமா! இரட்டை வாடகை செலவும்  தொடருமா எனவும் சொல்லி இருக்கணும் சார்!  அழுகை

அதெல்லாம் சரி! நீங்கள் நன்றாக சமைப்பீர்களோ சார்? விருந்துக்கு வரலாமோ?துபாய் வர ஆறு மணி நேரம் தான்  ஆகும். சுவிஸில் காலையில் சாப்பிட்டு புறப்பட்டால் மதியச்சாப்பாட்டுக்கு உங்க வீட்டுக்கு வந்திரலாமாம்.. டிக்கட் அனுப்பி வைத்தால் நாளைக்கே கிளம்பிருவோம்ல!

பின்னூட்டம் தொடரும்>>..ஐ ஜாலி

வணக்கம் அக்கா...
தங்கள் கருத்துக்கு நன்றி.
இரண்டு இடத்திலும் வாடகைதான்... அதான் அநியாயமா இருக்கு.
என்ன வேணுமின்னாலும் சமைக்கலாம்... டிக்கட் அனுப்பிட்டாப் போச்சு....
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்... Empty Re: மனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்...

Post by சே.குமார் Mon 2 Feb 2015 - 15:16

Nisha wrote:விஷால், ஸ்ருதி  குறித்து உங்களுடன் நாங்களும் மகிழ்கின்றோம்பா! குழந்தைகள் இருவரும் ஊரும் உலகம்  போற்றும் சாதனையாளர்களாய் அனைத்து செல்வங்களையும் பெற்றிட எங்கள் நல்லாசிகள்!

மருமக்களின் பள்ளி நடனம் வீடியோவை 
எங்கள் விட்டுக்குட்டீஸ் . பகுதியில் பகிரலாமே!
நாங்களூம் ரசிப்போமல்!

நிஷா வீட்டு குட்டீஸ்  குறித்து இங்கே பார்க்கலாம்!

அந்த பகுதியில் சேனை உறவுகளின் வீட்டு வாண்டுகள் கலகலக்கிட்டிருக்காங்க!   நேரம் கிடைக்கும் போது பாருங்க.

வேலை தேடிய புலம் பெயர்தல் விடயத்தில் இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை நிலை தான் குமார். ஊரில் இருப்’பவர்களுக்கு சொன்னால் புரியாது. அனுபவித்து தான் புரிந்துப்பார்கள். 

பல நேரம் அங்கிருப்போர்  அதிகமாய் ஆசைப்பட ஏற்கனவே  புலம்பெயர்ந்து  தொழில் செய்வோரின் அலம்பலும், ஆடம்பரமும், போலித்தனமும், வேஷமும் கூட காரணம் எனலாம். வெளி நாடு என்றாலே சொர்க்க லோகம் எனும் மாயையை  உருவாக்குபவர்கள் முதலில் உணரணும்.
வணக்கம் அக்கா...
குழந்தைகளை வாழ்த்தியமைக்கு நன்றி அக்கா...
எனக்கே ஸ்கைப்ல அங்கிருந்து மொபைலில் காட்டினார்கள்...
வீடியோ வந்ததும் பகிர்கிறேன்.
தங்கள் குட்டீஸ் போட்டோஸ் பார்த்தேன் அருமை.... கலக்கல்....

தங்கள் கருத்துக்கு நன்றி அக்கா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்... Empty Re: மனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்...

Post by சே.குமார் Mon 2 Feb 2015 - 15:18

Nisha wrote:வேரும் விழுதுக்கு நானும் வாசகி தான்பா..  கலையாத கனவிலிருந்தே சைலன்ஸ் வாசகி நானாக்கும். 

 சுவாரஷ்யமான படிக்க ஆர்வம் தருவதாய் இருக்கின்றது மனசின் பக்கம்.  வாராவாரம் மறந்திராம  தொடருங்கள்.

மொத்தத்தில் மனசின் பக்கம் மிக அருமையாய் தொகுக்கப்பட்டிருக்கிறது. இதை  நானும்  பின்பற்றி வாராவாரம் நிகழ்வுகளை  பதிவாக்கலாமா யோசிக்கின்றேன்.
வணக்கம் அக்கா...
தொடர்கதையை தொடர்ந்து வாசிப்பதற்கு நனறி.
ரொம்ப சந்தோஷம்... தாங்களும் பதிவைத் தொடங்குங்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்... Empty Re: மனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்...

Post by Nisha Mon 2 Feb 2015 - 20:11

நன்றிப்பா. நல்லது தொடருங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்... Empty Re: மனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum