சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்! Khan11

இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்!

+2
சே.குமார்
ahmad78
6 posters

Go down

இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்! Empty இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்!

Post by ahmad78 Tue 10 Feb 2015 - 16:33

இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்!
இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்! Ld3144



DEFENDING CHAMPION INDIA TO ENTER I...



மகத்தான மாற்றுத்திறனாளிகள்: மாள்விகா ஐயர்

புத்திசாலி, கருணையானவள், படிப்பாளி, உள்ளுணர்வு உடையவள், விடாமுயற்சி செய்பவள், பகுத்தாய்பவள்... மாள்விகா என்கிற பெயருக்கு இப்படியெல்லாம் அர்த்தம் சொல்கிறது அகராதி. அத்தனை அர்த்தங்களும் அம்சமாகப் பொருந்த அழகாகச் சிரித்து வரவேற்கிறார் மாள்விகா. எல்லோருக்கும் வாழ்க்கை மலர ஆரம்பிக்கிற வயது 13. மாள்விகாவுக்கோ 13லேயே எல்லாம் கருகிப் போயின. கைகளும் கால்களும் மட்டுமின்றி, கனவுகளும்தான்! விளையாடிக் கொண்டிருந்த மாள்விகாவின் வாழ்க்கையில் குண்டுவெடிப்பு ரூபத்தில் விதி விளையாடியதன் விளைவு, மாற்றுத் திறனாளிகளில் ஒருவரானார். ஆனாலும், மாள்விகா மனம் தளரவில்லை. அவரது தன்னம்பிக்கையும் பாசிட்டிவ் மனப்பான்மையும் தலைவணங்க வைக்கிறது யாரையும். அவர் செய்கிற விஷயங்கள் வியக்க வைக்கின்றன. 

‘‘கும்பகோணத்துல பிறந்தேன். நான் ரொம்ப சின்ன குழந்தையா இருந்தப்பவே எங்கப்பாவுக்கு ராஜஸ்தான், பிகானீருக்கு டிரான்ஸ்ஃபர் ஆயிடுச்சு. என்னோட 13 வயசு வரை அங்கதான் இருந்தோம். ஸ்விம்மிங், ஸ்கேட்டிங், கதக்னு எனக்குப் பிடிச்சதை எல்லாம் கத்துக்கிட்டு ரொம்பவே சந்தோஷமா இருந்தது என் குழந்தைப் பருவம். 2002 மே 26... என் வாழ்க்கையில வராமலேயே போயிருக்கலாம்...’’ - கடந்த காலத்துக்குள் நுழையும் போது அவரையும் அறியாமல் வார்த்தைகள் நடுங்குகின்றன.

‘‘அப்ப எனக்கு 13 வயசு... எனக்கு நடந்த அந்த விபத்துக்கு சில மாசங்கள் முன்னாடி, ஒரு வெடிகுண்டுக் கிடங்குல தீப்பிடிச்சது. அதுல கை வெடிகுண்டு உள்பட பலதும்  வெடிச்சு ஊர் முழுக்க சிதறிப் போச்சு. அதுல ஒரு துண்டு நாங்க குடியிருந்த பகுதியில விழுந்திருக்கு. அது செயலிழக்கச் செய்ததுனுதான் சொன்னாங்க. விளையாட்டுத்தனமா நான் அதைத் தட்டினேன். முதல் அடி விழுந்ததுமே அது வெடிச்சு சிதறினது. அவ்வளவுதான்... அடுத்த சில நொடிகள்ல எனக்கு ரெண்டு கைகளும் சிதறிப் போச்சு. கால்களும் செயலிழந்து போச்சு.  கால்கள்ல ‘ஹைப்போஎஸ்தேசியா’னு சொல்ற உணர்வுகள் மரத்துப் போன நிலை.

சம்பவம் நடந்த முதல் 3 நாள் எனக்கு நல்ல நினைவு இருந்தது. ‘என் மகளோட கை போயிடுச்சே’னு எங்கம்மா அலறினது உள்பட எல்லாம் கேட்டது. உடம்பு மட்டும் மரத்துப் போயிருந்தது. உடனடியா என்னை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனாங்க. கிட்டத்தட்ட 80 சதவிகிதம் ரத்தம் போயிருந்தது. முக்கியமான நாலு நரம்புகள் கட் ஆயிருந்தது. பிபி ஜீரோவுக்கு வந்திருச்சு. பிழைப்பேனாங்கிறதே சந்தேகமா இருந்தது. கால்களை எடுத்தாகணும்னு சொல்லிட்டாங்க டாக்டர்ஸ். அம்மா, அப்பாவுக்கோ அதுல உடன்பாடில்லை. என்னை ஆம்புலன்ஸ்ல வச்சு ஜெய்ப்பூருக்கு கூட்டிட்டுப் போனாங்க. என் கால் முழுக்க மெட்டல் பொருத்தினாங்க. அது கால்களுக்குள்ள ஆழமா போயிருந்ததுல உயிரே போகற அளவுக்கு வலி. 

24 மணி நேரமும் வலியோட துடிச்ச அந்த நாட்கள் இப்பவும் எனக்கு மறக்கலை. ஒரு வழியா டாக்டர்ஸ் என் காலை காப்பாத்தினாங்க. என் இடது கால் மொத்தமும் வடிவம் இழந்து, உணர்வுகள் இல்லாத நிலையிலயும், என் வலது காலால ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாத நிலையிலயும் காப்பாத்தினாங்க. வெடிச்சு சிதறினதுல துண்டானதால கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படலை. அப்புறம் சென்னைக்கு வந்து, அண்ணா நகர்ல ஒரு ஆஸ்பத்திரியில தொடர் சிகிச்சை எடுத்ததுல மெல்ல மெல்ல எழுந்து நடமாட ஆரம்பிச்சேன்...’’ - உபயோகமில்லாத நிலையிலும் கால்கள் காப்பாற்றப்பட்டதில் மாள்விகாவுக்கு மகிழ்ச்சி. ஆனால், கைகளை இழந்ததில் தாள முடியாத அதிர்ச்சி.

‘‘8வதுலேருந்து 10வது படிக்கிற வரைக்கும் படுக்கையிலயே இருந்திருக்கேன். பத்தாவது எக்ஸாம் நெருங்கிட்டிருந்தது. செயற்கை கைகளை வச்சு ஏதாவது பண்ண முடியுமானு நானும் அம்மாவும் இன்டர்நெட்ல தேடினோம். செயற்கை கைகள் தயாரிக்கிற கம்பெனி பத்தி தெரிய வந்தது. ‘மையோ எலெக்ட்ரானிக்’ கைகள் பொருத்தப்பட்டது. பேட்டரியில இயங்கற இந்தக் கைகள், நிஜக் கைகளைப் போல திறக்கும். மூடும். அந்தக் கைகளை வச்சு எழுதிப் பழகினேன். எக்ஸாமுக்கு மூணே மாசம் இருந்த நிலையில கடுமையா உழைச்சேன். எந்நேரமும் படிப்பு, படிப்புனு அதுலயே கவனமா இருந்ததுல எனக்கு நல்ல ரிசல்ட் கிடைச்சது. பிரைவேட் கேன்டிடேட்ஸ்ல நான்தான் டாப்பர். ரெண்டு சப்ஜெக்ட்ஸ்ல நூத்துக்கு நூறு. 

அடுத்த நாளே எல்லா பத்திரிகைகள்லயும் என்னைப் பத்தி எழுதினாங்க. எனக்கு நடந்த ஆக்சிடென்ட், அதன் தொடர்ச்சியா நடந்த துயரங்கள் எல்லாத்தையும் கடந்து நான் எப்படி படிப்புல சாதிச்சேன்னு பாராட்டி, ஊக்கப்படுத்தினாங்க. என் வாழ்க்கையில பெரிய மாற்றம் ஏற்பட்ட மாதிரி ஃபீல் பண்ணினேன். அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் என்னை வரவழைச்சு பாராட்டினார். அதுக்கப்புறம் பிளஸ் 2, அடுத்து எகனாமிக்ஸ், சோஷியல் ஒர்க்ல மாஸ்டர்ஸ் டிகிரினு நிறைய படிச்சேன். பயிற்சியின் போது மாற்றுத்திறனாளிக் குழந்தைகளோட வேலை பார்க்கிற அனுபவம் கிடைச்சது. அவங்க இடத்துல இருந்து அவங்களை என்னால நல்லா புரிஞ்சுக்க முடியும்னு தோணினது. 

அவங்களுக்கு ஏதாவது செய்யணும்கிற உத்வேகம் வந்தது. போன வருஷம் ஜிணிஞிஜ் ல ஒரு ஸ்பீச் கொடுக்க என்னைக் கூப்பிட்டாங்க. அந்தச் சம்பவம் என் வாழ்க்கையை இன்னும் கலர்ஃபுல்லா மாத்தினது. அதுவரைக்கும் நான் உண்டு, என் வேலை உண்டுனு மட்டும் இருந்தேன். ‘மத்த எல்லாரும் நார்மலானவங்க. நான் அப்படியில்லை’ங்கிற எண்ணம் எனக்குள்ள இருந்தது. ஆனா, அந்த ஸ்பீச்ல நான் என்னைப் பத்திப் பேசினதுக்குப் பிறகு நான் எவ்வளவு ஸ்பெஷல்னு உணர்ந்தேன். இப்ப ‘மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்’னு எனக்கு உண்டாகியிருக்கிற அடையாளத்துக்கு அந்தப் பேச்சுதான் அஸ்திவாரம். இன்னிக்கு நிறைய ஸ்கூல், காலேஜ்ல என்னைக் கூப்பிட்டு மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுக்கச் சொல்றாங்க. 

போன வருஷம் பெங்களூருல நடந்த இந்தியா இன்க்ளூஷன் சம்மிட்ல பேசக் கூப்பிட்டாங்க. நிறைய சாதனை செய்த மாற்றுத்திறனாளிகள் பலரை அங்கே சந்திச்சேன். இந்தச் சம்பவங்கள் எல்லாம் என்னோட குறைபாட்டை ஏத்துக்கிற மனப்பான்மையைக் கொடுத்தது.  சமீபத்துல எபிலிட்டி ஃபவுண்டேஷனும் என்.ஐ.எஃப்.டியும் இணைந்து நடத்தின ஒரு ராம்ப் வாக்ல கலந்துக்கிட்டேன். நிஃப்ட்டை சேர்ந்த ஸ்டூடன்ட்ஸ் எனக்கு ரெண்டு கவுன் டிசைன் பண்ணிக் கொடுத்தாங்க. என் செயற்கை கைகளை நுழைக்கிற மாதிரி ஸ்பெஷலா டிசைன் பண்ணின அந்த டிரெஸ்சை போட்டுக்கிட்டு நான் ராம்ப் வாக் பண்ணினேன். 

ரொம்ப அருமையான அனுபவம் அது. மாற்றுத்திறனாளிகளுக்கான அக்ஸஸபிள் க்ளோத்திங் பத்தி யோசிக்கவும், பேசவும் வச்ச சம்பவமா அமைஞ்சது. சமூக விழிப்புணர்வுப் பிரசாரங்கள் தொடர்பான பல நிகழ்ச்சிகள்ல கலந்துக்கறேன். பெங்களூருல நடந்த மாரத்தான் நிகழ்ச்சியில டான்ஸ் பண்ணினேன். அடிப்படையில டான்சரான என்னால முன்ன மாதிரி ஆட முடியலைன்னாலும் ஆடினேன். சமுதாயத்துல மாற்றுத்திறனாளிகளோட மனநிலை எப்படி இருக்கு, சமுதாயம் அவங்களை எப்படிப் பார்க்குதுங்கிறதைப் பத்தி பிஹெச்டி பண்ணிட்டிருக்கேன். இன்னிக்கு நான் ஒரு க்ளோபல் ஸ்பீக்கர். ஒவ்வொரு மேடையிலயும் என் கதையை சொல்றபோது, நிறைய பேர் கலங்கறாங்க. 

நான் என்னோட நிலைமையை நினைச்சு என்னிக்குமே கம்ப்ளெயின்ட் பண்ணினதில்லை. என் பேச்சைக் கேட்டுட்டு, ‘ஒண்ணுமே இல்லாத விஷயங்களுக்கு நாங்க வாழ்க்கையை வெறுத்திருக்கோம். இனி அப்படி நடந்துக்க மாட்டோம்’னு நம்பிக்கையோட சொல்லியிருக்காங்க...’’ - அடுக்கடுக்காக தனது அடையாளங்களை சொல்கிறவருக்கு, சிகிச்சைகள் இன்னும் முழுமையடையவில்லை.  ‘‘ஆக்சிடென்ட் நடந்த முதல் நாள் எமர்ஜென்சி  ஆபரேஷன்ல ஆரம்பிச்சு, இதுவரைக்கும் எனக்கு 20க்கும் மேலான ஆபரேஷன்ஸ் செய்திருக்காங்க. வெடிச்சு சிதறின குண்டுல ஒரு சின்ன துண்டு இன்னும் என் உடம்புக்குள்ள இருக்கு. அதை எடுக்க முடியாது. 

கால்கள்ல பிளேட் பொருத்தினப்ப அந்த குண்டுத் துண்டோட உராய்ஞ்சதுல எனக்கு ரெண்டு வாட்டி பிரச்னையாயிருக்கு. இப்பவும் எனக்கான ட்ரீட்மென்ட் போயிட்டிருக்கு. அதுக்கு முடிவே இல்லை. இவ்வளவு சம்பவங்களுக்குப் பிறகும் நான் என் வாழ்க்கையை நேசிக்கக் காரணம் என் அம்மா ஹேமமாலினி. என்கூடவே என் நிழல் மாதிரி இருக்கிறவங்க. ‘விட்டுக் கொடுத்துடாதே... பிரச்னைகள் வரும். போகும். மனசு விட்டுப் போச்சுன்னா வாழறது கஷடம்’னு சொல்லிச் சொல்லியே வளர்த்தாங்க. என்னை சோகமா யாருமே பார்த்திருக்க முடியாது. வலியில துடிச்ச போதுகூட சிரிச்சுக்கிட்டே எல்லாத்தையும் எதிர் கொண்டேன். 

என்னைப் பொறுத்த வரை இது என்னோட செகண்ட் லைஃப். ரொம்ப ஸ்பெஷலான லைஃபும் கூட. நம்ம வாழ்க்கையை நாம நேசிக்கவும் ஸ்பெஷலா நினைக்கவும் கத்துக்கிட்டாலே போதும். ஈஸியா ஜெயிச்சிடலாம். நான் ஸ்பெஷல்னு முதல்ல நான் நினைக்கணும். அப்ப தான் மத்தவங்களும் நம்மை அப்படி நினைப்பாங்க...’’ -  அப்படியே நினைக்க வைக்கிறது மாள்விகாவின் பேச்சு!

http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=3146


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்! Empty Re: இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்!

Post by சே.குமார் Tue 10 Feb 2015 - 17:22

13 வயதில் பாதிக்கப்பட்டு அப்படியே படுத்துவிடாமல் துணிந்து போராடி வாழ்க்கைய நேசிக்கும் அவரைப் பாராட்டுவோம்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்! Empty Re: இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 10 Feb 2015 - 19:35

தன்னம்பிக்கையின் மறுஉருவம் எடுத்துக்காட்டான சம்பவம் பகிர்வுக்கு மிக்க நன்றிகள்


இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்! Empty Re: இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்!

Post by *சம்ஸ் Thu 12 Feb 2015 - 8:28

சே.குமார் wrote:13 வயதில் பாதிக்கப்பட்டு அப்படியே படுத்துவிடாமல் துணிந்து போராடி வாழ்க்கைய நேசிக்கும் அவரைப் பாராட்டுவோம்...
சியர்ஸ் துணிந்து போராடி வாழ்க்கைய நேசிக்கும் அவரைப் பாராட்டுவோம்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்! Empty Re: இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்!

Post by Nisha Thu 12 Feb 2015 - 21:35

  ‘விட்டுக் கொடுத்துடாதே... பிரச்னைகள் வரும். போகும். மனசு விட்டுப் போச்சுன்னா வாழறது கஷடம்’

 நிஜம் தான்.  இன்னும் இன்னும் சாதிக்க வாழ்த்துகின்றேன் . 

இந்த பெண்ணை போல் தானே   எனக்கும் 13 ஆவது வயதில் ஓடி ஆடி சந்தோஷமாய் திருந்திட்டிருக்கும் போது  சிறகை முறித்தது போல் அந்த விபத்தும் அதன் விளைவுகளுமாய் இன்னும் தொடர்வதும்...அவளுக்கு கையும் காலும்.. எனக்கு காது கண்..  தலை... எல்லாமோ தொடர் கதைதான்.. ஆனாலும்  எல்லாம் எல்லாமுமாயிருந்து சாதிப்பது பெரிசில்ல-- எதுவுமே இல்ல எனும்  பூச்சியத்திலிருந்து ராஜ்ஜியம் ஆள்வது தான்  சாதனை. 

மனசு விட்டு போச்சின்னால் வாழ முடியாது தான்பா..  நம்மால் முடியும் எனும் நம்பிக்கை தான் வாழ்க்கை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்! Empty Re: இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்!

Post by நண்பன் Fri 13 Feb 2015 - 8:25

Nisha wrote:
  ‘விட்டுக் கொடுத்துடாதே... பிரச்னைகள் வரும். போகும். மனசு விட்டுப் போச்சுன்னா வாழறது கஷடம்’

 நிஜம் தான்.  இன்னும் இன்னும் சாதிக்க வாழ்த்துகின்றேன் . 

இந்த பெண்ணை போல் தானே   எனக்கும் 13 ஆவது வயதில் ஓடி ஆடி சந்தோஷமாய் திருந்திட்டிருக்கும் போது  சிறகை முறித்தது போல் அந்த விபத்தும் அதன் விளைவுகளுமாய் இன்னும் தொடர்வதும்...அவளுக்கு கையும் காலும்.. எனக்கு காது கண்..  தலை... எல்லாமோ தொடர் கதைதான்.. ஆனாலும்  எல்லாம் எல்லாமுமாயிருந்து சாதிப்பது பெரிசில்ல-- எதுவுமே இல்ல எனும்  பூச்சியத்திலிருந்து ராஜ்ஜியம் ஆள்வது தான்  சாதனை. 

மனசு விட்டு போச்சின்னால் வாழ முடியாது தான்பா..  நம்மால் முடியும் எனும் நம்பிக்கை தான் வாழ்க்கை.
உண்மைதான்  
பூச்சியத்திலிருந்து ராஜ்ஜியம் ஆள்வது தான்  சாதனை. 
அந்த வரிசையில் நிஷா அக்காவின் பெயரும் பொன் எழுத்துக்களால் சமூகத்தில் பொறிக்கப்பட வேண்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்! Empty Re: இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்!

Post by Nisha Fri 13 Feb 2015 - 12:06

அடடடா? 

இதை ஏன் இம்மாம் பெரிய எழுத்தில் இட்டீர்கள் தும்பி சார்?

என்னத்தை ராஜ்ஜியம் ஆண்டோம். தெருக்கோடியில் இருக்கும்  ஓலைக்குடிலை கூட வசப்படுத்தி ஆள முடியல்லப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்! Empty Re: இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்!

Post by *சம்ஸ் Sat 14 Feb 2015 - 17:51

Nisha wrote:
  ‘விட்டுக் கொடுத்துடாதே... பிரச்னைகள் வரும். போகும். மனசு விட்டுப் போச்சுன்னா வாழறது கஷடம்’

 நிஜம் தான்.  இன்னும் இன்னும் சாதிக்க வாழ்த்துகின்றேன் . 

இந்த பெண்ணை போல் தானே   எனக்கும் 13 ஆவது வயதில் ஓடி ஆடி சந்தோஷமாய் திருந்திட்டிருக்கும் போது  சிறகை முறித்தது போல் அந்த விபத்தும் அதன் விளைவுகளுமாய் இன்னும் தொடர்வதும்...அவளுக்கு கையும் காலும்.. எனக்கு காது கண்..  தலை... எல்லாமோ தொடர் கதைதான்.. ஆனாலும்  எல்லாம் எல்லாமுமாயிருந்து சாதிப்பது பெரிசில்ல-- எதுவுமே இல்ல எனும்  பூச்சியத்திலிருந்து ராஜ்ஜியம் ஆள்வது தான்  சாதனை. 

மனசு விட்டு போச்சின்னால் வாழ முடியாது தான்பா..  நம்மால் முடியும் எனும் நம்பிக்கை தான் வாழ்க்கை.

உண்மைதான்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்! Empty Re: இது ரொம்ப ஸ்பெஷலான லைஃப்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum