சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

டான்சில் நோயை விரட்டும் மருந்துகள் Khan11

டான்சில் நோயை விரட்டும் மருந்துகள்

Go down

டான்சில் நோயை விரட்டும் மருந்துகள் Empty டான்சில் நோயை விரட்டும் மருந்துகள்

Post by ahmad78 Thu 16 Jul 2015 - 12:00

டான்சில் நோயை விரட்டும் மருந்துகள் Ht3713டான்சில் என்பது தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சியே. இது ஒரு நிணநீர்ச் சுரப்பி ஆகும். இது இயற்கையாகவே நம்  வாய்க்குள் மூன்று இடங்களில் உள்ளது. தொண்டையில் உள்நாக்குக்கு இரண்டு புறமும், நாக்குக்கு அடியிலும், மூக்குக்குப்  பின்னாலும் இருக்கும். இவை நம் சுவாசப் பாதைக்கும் உணவுப் பாதைக்கும் ஒரு பாதுகாப்பு வளையமாகச் செயல்படுகிறது.

தொண்டை டான்சில் நாம் உணவு சாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்கும்போதும் கிருமியோ, வேண்டாத உணவோ அல்லது  புதிதாக ஒரு பொருளோ உடலின் உள்ளே போகும்போது, அவற்றிலிருந்து துளியளவு ‘சாம்பிள்’ போல் எடுத்து ஆராய்ந்து,  அதுபற்றிய தகவல்களை உடனே மூளைக்கு தெரிவிக்கிற வேலையை தொண்டையில் உள்ள டான்சில்கள் செய்கின்றன. இது  நம்முடைய உடலில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்த உதவுகிறது.

டான்சில் வீங்குவது ஏன்?


சில சமயங்களில் கிருமிகளை ஆராயும்போது, அந்தக் கிருமிகள் மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்குமானால், முதலில்  டான்சில்கள் அந்தக் கிருமிகளால் பாதிக்கப்பட்டு விடும். காய்ச்சல் மற்றும் முன்பக்கத் தொண்டை வலிப்பது இதனால்தான்.  டான்சில் திசுக்கள் தொடர்ந்து இந்தக் கிருமிகளோடு போராடும்போது, தொண்டையில் இரண்டு பக்கமும் உள்ள டான்சில்கள்  ஒட்டுமொத்தமாக வீங்கிவிடும். இதைத்தான் ‘டான்சில் அழற்சி’ (Tonsillitis ) என்கிறோம். டான்சில்கள் வீங்குவதற்குப்  பொதுவான காரணம் ‘பீட்டா ஹீமோலைட்டிக் ஸ்ட்ரெப்டோகாகஸ்’எனும் பாக்டீரியா கிருமிதான். இதைத் தவிர, அடினோ  வைரஸ், ஃபுளூ வைரஸ், டிப்தீரியா, பாக்டீரியா போன்ற கிருமிகளின் தாக்கத்தாலும் இப்படி ஏற்படலாம்.

யாருக்கு பாதிப்பு?


பதினைந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டான்சில் பாதிப்பு அதிகம் ஏற்படும். அடிக்கடி சளி, ஜலதோஷம், சைனஸ், நோய்  எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கு, ஊட்டச்சத்து குறைந்தவர்களுக்கு, காற்று போக வழியில்லாமல் மிகவும் நெருக்கமான  இடங்களில் வசிப்பவர்களுக்கு, மாசடைந்த காற்றை  சுவாசிப்பவர்களுக்கு டான்சில் வீக்கம் அதிகமாக தொல்லை தரும்.

ஐஸ்கிரீம், குச்சி ஐஸ், ஃபிரிட்ஜிலிருந்து உடனே எடுத்துச் சாப்பிடப்படும் உணவுகள், குளிர்பானங்கள், குளிர்ச்சியான  தட்பவெப்பநிலை போன்றவை டான்சில் வீக்கத்துக்குத் துணை செய்யும். மிகவும் குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடும்போது,  அந்தப் பொருட்களின் அதீத குளிர்ச்சியானது டான்சில் ரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்துவிடும். இது டான்சில்களின் நோய்  எதிர்ப்புச் சக்தியைக் குறைத்துவிடும். அப்போது கிருமிகள் பலம் பெற்று டான்சில்களைத் தாக்கிவிடும். இதன்விளைவாக  டான்சில்கள் வீங்கிவிடும்.

டான்சில் வீக்கத்தின் வகைகள்:


டான்சில் வீக்கம் இரண்டு வகைப்படும். அவை, ‘திடீர் டான்சில் வீக்கம்’ (Acute Tonsillitis). ‘நாட்பட்ட டான்சில்  வீக்கம்’ (Chronic Tonsillitis). இதனால் தொண்டை வலி, காய்ச்சல், தலைவலி, உடல்வலி, குமட்டல், வாந்தி,  இருமல், உணவை விழுங்கும்போது வலி, காது வலி போன்றவை ஏற்படும்.  சிலருக்கு கழுத்தில் நெரி கட்டும். இவர்களுக்கு  ஆரம்பத்திலேயே தகுந்த ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை முறையாகக் கொடுத்துவிட்டால், பாதிப்பு ஏற்படாது.

டான்சில்கள் வீக்கத்திற்கு சரியான முறையில் சிகிச்சை பெறாவிட்டால் அதிகளவு பாதிப்பு  ஏற்படும். அப்போது டான்சில்களின்  நோய் எதிர்ப்புச் சக்தியானது நிரந்தரமாகவே குறைந்துவிடுவதால், கிருமிகளின் பாதிப்பும் நிரந்தரமாகிவிடும். அதனால் டான்சில்  வீக்கம் நீடிக்கும். இதை ‘நாட்பட்ட டான்சில் வீக்கம்’ என்று சொல்கிறோம். நாட்பட்ட டான்சில் வீக்கத்தால் அடிக்கடி காய்ச்சல்  வரும். தொண்டை வலி நிரந்தரமாகிவிடும். பசி குறையும். குழந்தையின் எடை குறையும். 

டான்சிலில் சீழ் பிடித்து வாய் நாற்றம் ஏற்படும். காதில் சீழ் வடியும். கேட்கும் திறன் குறையும். கழுத்தில் நெரி கட்டுதல்  நிரந்தரமாகிவிடும்.  சைனஸ் தொல்லை நீடிக்கும். இதனால் தலைவலி அடிக்கடி வரும். சிறு குழந்தைகளும் குறட்டை விடும்.  குரல் கரகரப்பாக மாறிவிடும். டான்சிலில் உள்ள கிருமிகள் சில நச்சுப் பொருட்களை வெளிவிடும். இவை ரத்த ஓட்டத்தில்  கலந்து உடலுக்குள் இருக்கும்.இதனால் சிறுநீரகம், எலும்பு மூட்டுகள், இதயம், நுரையீரல் போன்றவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பரவும் தன்மை  எப்படி?


தொண்டைக்குள் நாசி நீர் இறங்கல் (Postnasal drip), டான்சிலுக்கு மற்றொரு காரணம். தொண்டை தடிமன் போன்ற  நோய்கள் ஏற்படும்போது சுகாதாரமற்ற தண்ணீரைக் குடிக்கும்போது வைரஸ் தொற்றும், சுகாதாரமற்ற உணவு வகைகளை  உட்கொள்ளும்போது பாக்டீரியா தொற்றும் உண்டாகிறது. குளிர் காய்ச்சல் ஏற்படலாம். சளி, எச்சில், கைகள் வழியாக இந்த நோய்  மற்றவருக்கு எளிதில் பரவுகிறது.

சில பாக்டீரியாக்கள் தொண்டையிலேயே தங்கிவிட வாய்ப்புள்ளது. இவற்றைக் கண்டுகொள்ளாமல் விடும்போது ருமாட்டிக்  காய்ச்சல் மற்றும் ரத்தத்தில் தொற்று போன்ற சிக்கல்களை உண்டாக்கும். நெஞ்செரிச்சல், உணவு  மேலெழுந்து வருதல், புளித்த  ஏப்பம், வாயில் அமிலச் சுவை போன்ற பல  அறிகுறிகள் இருக்கலாம். சிலருக்கு இதனால் இருமல், ஆஸ்துமா ஏற்படுவதும்   உண்டு.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டான்சில் நோயை விரட்டும் மருந்துகள் Empty Re: டான்சில் நோயை விரட்டும் மருந்துகள்

Post by ahmad78 Thu 16 Jul 2015 - 12:00

தவிர்க்க வேண்டியவை

* தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தல், ஆற்றில் குளித்தல், எண்ணெய்ப் பலகாரங்களைச் சாப்பிடுதல், புளித்த தயிர்  ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

* குளிர்ச்சியான எண்ணெய் பசையுள்ள பதார்த்தங்களைத் தவிர்ப்பது  நல்லது.

* குளிர்பானம், நெய், வெண்ணெய், பாலாடை கட்டி, பால், மோர் ஆகியவற்றைத் தவிர்க்கவும். சர்க்கரை சேர்த்த இனிப்புப்  பண்டங்களையும் சாப்பிட கூடாது. 

மருத்துவம் 


* நொச்சி இலையை வெந்நீரில் கொதிக்க வைத்து ஒரு துணியை அதில் நனைத்து சிறிது கற்பூரமும் சேர்த்து ஒத்தடம்  கொடுக்கலாம்.

* கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், கருங்காலி, அதிமதுரம், ஏழிலம்பாலை போன்றவற்றை கஷாயம் வைத்து இளஞ்சூட்டில்  அடிக்கடி வாய் கொப்பளிக்கலாம்.

* உள்ளுக்கு சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி, கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதொடை சூரணத்தை தேன் கலந்து இரண்டு வேளை  சாப்பிடலாம்.

* இளம் சூட்டில் தண்ணீர் எடுத்து, அதில் அரை டிஸ்பூன் உப்பு சேர்த்து தொண்டையில் படும்படி கொப்பளிக்க வேண்டும். இது  தொண்டைக்கு இதமளிப்பதுடன் அதிலுள்ள சளி வெளியேறவும் உதவும்.

* கடுகை பொடி செய்து தொண்டையில் பற்று போட்டால் தொண்டை வலி குறையும்.

* கிராம்பை நீர் சேர்த்து மை போல அரைத்து பற்று போட்டால் வலி குறையும்.

* நோய் சற்று குணமடைந்த பிறகு மேலும் அதிகரிக்காமல் இருக்க இந்து காந்தம் நெய், சியவனபிராச லேகியம், வெண்பூசணி  லேகியம் போன்றவற்றைக் கொடுக்கலாம்.

*  தலைக்கு நொச்சித் தைலம், துளசித் தைலம் போன்றவற்றைத் தேய்த்துக் குழந்தையைக் குளிப்பாட்டலாம்.

* வைட்டமின் சி உள்ள மஞ்சள், ஆரஞ்சு, காய்கறிகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும். உணவில் பூண்டு அதிகம்  சேர்த்தால், நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

* இருமல், தொண்டை வலி இருப்பவர்கள், சிறிதளவு வசம்பையும் மிளகையும் மென்று சாப்பிடலாம்.

* பாலில் மஞ்சள் தூள், தேன், பொடித்த மிளகு ஆகியவற்றைப் போட்டு இரவு படுக்கும்போது அருந்த, தொண்டை வலி நீங்கி,  இதமாக இருக்கும்.

* கடுக்காய் தோல் சிறு துண்டை எடுத்து வாயில் போட்டு அடக்கிக்கொள்ள வேண்டும். ஊறிய உமிழ் நீரை விழுங்கிவிட  வேண்டும்.

* சுக்கு, பால்மிளகு, திப்பிலி ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிடத் தொண்டை கரகரப்பு குறையும்.


http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3723


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum