சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 16:12

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Khan11

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Empty சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Dec 2015 - 17:52

நண்பர்களுக்கு தண்டச் சோறு போடுகிறீர்களா?
-----------
நல்ல வேலையிலிருக்கும் நான், என் நண்பன் ஒருவனுக்கு சாப்பாடு போட்டு, என் அறையில் கூடவே வைத்து பராமரித்து வந்தேன். அவனும் என்னை தெய்வமாக மதித்து, மற்றவர்களிடம் பெருமையாக புகழ்ந்து வந்தான்.

எனக்கு திருமணமாகியது. என் மனைவியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி போனேன். என் நண்பனுக்கு செலவு செய்ய தடை போட்டு விட்டாள் மனைவி. ஓசி சோறில், உடல் வளர்த்து சோம்பேறி ஆகிவிட்ட நண்பன், வேலைக்கு போகாமலும், வேலைக்குச் சென்றால் ஒரு மாதம் கூட நிலைத்து நிற்காமல் சும்மாகவே சுற்றித் திரிகிறான்.
ஓசி சோறு கிடைக்காததால் நான், நட்புக்கு துரோகம் செய்து விட்டதாக, இப்போது சேற்றை வாரி இறைத்து வருகிறான். அவன் பெற்றோரோ... தங்கள் மகனை நான் வேலைக்கு போக விடாமல் தடுத்து, எனக்கு எடுபிடியாக வைத்துக் கொண்டு, அவன் எதிர்காலத்தை பாழாக்கி விட்டதாக பழி சொல்கின்றனர்.

நண்பர்களுக்கு செலவு செய்து மகிழும் நட்பு திலகங்களே... நண்பர்களுக்கு நீங்கள் போடும் சோறு, உங்களுக்கு கெட்ட பெயரை கொண்டு வருவதோடு, உங்கள் நண்பனின் எதிர்காலத்தையும் பாதிக்கும், என்பதை உணருங்கள்!

நன்றி : வாரமலர் —கோ. பிரசன்னா, கோவை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Empty Re: சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Dec 2015 - 17:54

டிரைவருக்கு நன்றி!
-----------
சமீபத்தில் தோழி ஒருவருடன், சென்னையிலிருந்து, மதுரைக்கு பேருந்தில் பயணம் செய்தேன். பல விஷயங்களை பேசியபடி வந்த அவள், டிரைவர் வந்து அமர்ந்தவுடன், பஸ் புறப்படத் தயாராகும் நேரத்தில், தன் பேச்சை திடீரென திசை மாற்றினாள். டிரைவர் வேலையை, மிக புனிதமானது என்றும், இரவு தூக்கத்தை தொலைத்து அவர்கள் பணி செய்வதை மிகவும் பெருமையாகக் குறிப்பிட்டாள். இவையனைத்தையும், மிக சத்தமாக டிரைவர் கேட்கும் வகையில் கூறினாள். புரியாமல் விழித்த என்னிடம், காரணத்தை பிறகு சொல்வதாக, கண் ஜாடை காட்டினாள்.
பஸ் மதுரை சென்றடைந்ததும், அவளும், அவளது குழந்தைகளும் டிரைவருக்கு நன்றி தெரிவித்தனர். டிரைவரும், புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்டார். பின்னர் எனக்கு விளக்கினாள்...

தற்போது விபத்துகள் நடப்பது சகஜமான ஒன்றாகி விட்டது. அதனால் தான் டிரைவருக்கு, அவரின் பணியின் புனிதத்தையும், அவர்களுக்கு எத்தகைய பொறுப்பு இருக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவதற்காகவே, தான், அப்படி பேசியதாகவும், நாம் அவர்களுக்கு நன்றி சொல்வது அவர்களை ஊக்கப்படுத்தும் என்றும் கூறினாள்.
நல்ல விஷயந்தானே... நானும், என் குழந்தைகளும் இதை பின்பற்றத் துவங்கி விட்டோம்!

நன்றி வாரமலர் — சுபா தியாகராஜன், திருவொற்றியூர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Empty Re: சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Dec 2015 - 17:56

மருந்துக் கடையின் பொறுப்பான செயல்!
--------------

நான், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். சமீபத்தில், உடல் நல குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். மருத்துவரின் ஆலோசனையை பெற்று, அவர் அளித்த மருந்து சீட்டுடன், அருகில் இருந்த மருந்து கடைக்கு சென்றேன்.

மருந்து சீட்டை பெற்ற கடை ஊழியர், குறிப்பிட்ட மருந்து, மாத்திரைகளை எடுத்து வைத்து, ஒவ்வொரு மருந்து அட்டையின் பின்புறமும், ஸ்டிக்கர் ஒன்றை ஓட்டினார். அதை கவனித்த எனக்கு ஆச்சரியம். அந்த ஸ்டிக்கரில், காலை, மதியம், இரவு என, தமிழில் எழுதி இருந்தது.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "மருத்துவர்களின் கையெழுத்து புரியாத சிலர், காலையில் எடுக்க வேண்டிய மருந்தை இரவிலும், மதியம் எடுக்க வேண்டிய மருந்தை காலையிலும் உட்கொள்கின்றனர். வெறும் வாய் வார்த்தையால் நாங்கள் சொன்னால், அதை அவர்கள் மறந்து விடுவர். இதைத் தவிர்க்கவே, இந்த ஸ்டிக்கரை ஒட்டுகிறோம். என்னென்ன மாத்திரை எந்தந்த வேளைக்கு சாப்பிட வேண்டும் என, இதில் குறிப்பிட்டு விட்டால், குழப்பம் இருக்காது...' என்றார்.

தெருவிற்கு தெரு மருந்து கடைகள் முளைத்து விட்ட இக்காலத்தில், வெறும் வியாபார நோக்கோடு மட்டும் அல்லாமல், கடமை உணர்வோடு, மற்ற மருந்து கடைக்காரர்களும் இதை பின்பற்றலாமே! 

நன்றி - வார மலர் — எஸ்.மைதிலி, மேற்கு மாம்பலம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Empty Re: சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Dec 2015 - 17:57

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!
----------
ஒன்றாக கல்லூரியில் படித்து, பட்டம் வாங்கி வேலை தேடி கொண்டிருக்கும் நண்பர்கள் நாங்கள். மாநகரில் மூலைக்கு மூலை வசித்தாலும், ஒரு குறிப்பிட்ட நாளில் சந்தித்து, உரையாடி, ஆறுதல் தேடுவது வழக்கம். எங்கள் குழு நண்பனொருவனை இரண்டு வாரங்களாக காணவில்லை. என்னமோ ஏதோவென்று பதறி, அவனைக் காண, அவன் வீட்டுக்கு சென்றோம். வீட்டில் அவன் இல்லை. இரண்டு தெரு தள்ளி, ஒரு வீட்டில் அவன் இருப்பதாக கூறினர். அங்கு சென்றோம்.

குறிப்பிட்ட வீடு பூட்டப்பட்டிருக்க, நண்பனும் இன்னும் சிலரும், கையில் உருட்டுக் கட்டைகளோடு காவல் காத்துக் கொண்டிருந்தனர்.
"என்னடா விஷயம்?' என வினவினோம்...
"அது ஒண்ணுமில்லடா... இந்த வீட்டுல இருக்கிறவங்க, ஒரு வாரம் வெளியூர் போயிருக்காங்க. அவுங்க திரும்பி வர்ற வரைக்கும், வீட்டோட பாதுகாப்பை, எங்க பொறுப்புல ஏத்துக்கிட்டிருக்கோம். சும்மா,வெட்டியா ஊரை சுத்தி, வம்பு பேசிகிட்டுத் திரியுற நேரத்துல, இது மாதிரி ஏதாவது உருப்படியா செஞ்சா, "அட்லீஸ்ட்' நாம அப்ளிகேஷன் போடுற செலவுக்காவது ஆகுமே... அதுக்குத் தான்...' என்றான்.

ஆச்சரியமடைந்து, "இதுக்கு எவ்ளோடா சார்ஜ் பண்ணுவீங்க?' என்றோம்
"அது ஆளோட வசதியை பொறுத்தது. இது மிடில் கிளாஸ் பேமிலி. அதனால், இரண்டாயிரம் ரூபா சார்ஜ். இதே, ஹை கிளாஸ் வீடாக இருந்தால், ஐயாயிரம் முதல் ஏழாயிரம் ரூபாய் வரை வாங்குவோம். மேலும், பாதுகாக்க வேண்டிய நாளுக்கு ஏத்த மாதிரி, சார்ஜ் பண்ணுவோம். உள்ளுர் பிள்ளைகளாதலால், நம்பிக்கையாக ஒப்படைக்கின்றனர்...' என்று சொன்னான். 
"மனம் இருந்தால் மார்க்கம் உண்டு'ன்னு சும்மாவா சொன்னாங்க... எங்கள் ஏரியாவில், நாங்களும் ஒரு காவல்படை துவங்க முடிவு செய்து விட்டோம்.

நன்றி - வாரமலர் — எம்.சந்திரசேகர், திண்டுக்கல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Empty Re: சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Dec 2015 - 17:59

இளமையைக் காப்பாற்ற... இப்படியா?
---------

என் தோழிக்கு, தன் அழகைப் பற்றியும், உடல்வாகு பற்றியும் பெருமை அதிகம். முப்பது வயதிலும் ரொம்ப இளமையாக இருப்பாள். திடீரென்று,"ஜிம்'மில் சேர்ந்து, தினமும், போய் வர துவங்கினாள். காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணி வரை வகுப்பு. அவளுடைய, ஐந்து வயதுக் குழந்தை எட்டு மணிக்கு பள்ளிக்கு கிளம்ப வேண்டும். வெறும், அரை மணி நேரத்தில் வெந்தும், வேகாததுமாய் கொடுத்து அனுப்பி விடுவாள். கணவரின் நிலைமையும் அதுவே.
ஒரே மாதத்தில், என் தோழியின் உடல் இளைத்ததோ இல்லையோ, அவள் மகளும், கணவரும் உடல் இளைத்து, துரும்பாகி, நோயாளிகளைப் போல் ஆகி விட்டனர். அவளுக்கு புத்திமதி சொன்னால், "என் இளமையை, காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா...' என்கிறாள். இளமையை, காப்பாற்றிக் கொள்ள வேண்டாமென்று சொல்லவில்லை. அதற்காக, குடும்பத்தை நட்டாற்றில் விட வேண்டுமா? 

நன்றி - வாரமலர் — ஸ்ரீவித்யா, திருப்பூர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Empty Re: சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

Post by சே.குமார் Wed 2 Dec 2015 - 20:29

நல்ல கருத்துக்கள் தொகுப்பாய்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Empty Re: சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 3 Dec 2015 - 12:22

சே.குமார் wrote:நல்ல கருத்துக்கள் தொகுப்பாய்...
 அன்பு வணக்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Empty Re: சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 19:42

குளிருது!
--------------

நடு நடுங்க வைக்கும் குளிர் இரவில் யூதத் துறவி ஒருவர், ஒரு பணக்கார வியாபாரியின் வீட்டுக் கதவைத் தட்டினார்.
கதவைத் திறந்த வியாபாரி, துறவியைக் கண்டதும், அவரை உடனே உள்ளே அழைத்தார்.
தரையில் கனமான கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. கணப்பில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அந்தக் கதகதப்பான அறையில், வசதியான சோபாக்களில் அவர்கள் அமர்ந்தனர்.

""தாங்கள் வந்த விஷயத்தை நான் தெரிந்து கொள்ளலாமா?'' என்று வியாபாரி, துறவியைப் பார்த்துக் கேட்டார்.
""ஏழை மக்களுக்குக் குளிரைத் தாங்குவதற்கான ஆடைகள் வாங்குவதற்காக நான் பணம் திரட்டும் காரியத்தில் ஈடுபட்டு இருக்கிறேன். அதுவும் இந்த வருடம் குளிர் ரொம்ப அதிகமாகவே இருக்கு! எலும்பையே ஆட்டி வைக்குது!'' என்று கூறினார் துறவி.
""நம்மூர் மக்கள் இதுக்கெல்லாம் பழகினவங்கதானே...!'' என்று மிகவும் அலட்சியமாகக் கூறினார் வியாபாரி.
""எப்படி இருந்தாலும் நம்மால் முடிந்த உதவியை நாம் செய்யத் தானே வேண்டும்...!'' என்று துறவி கூறினார்.

""நீங்கள் கூறுவதும் சரிதான்! ஆனால், என்னைப் பொறுத்தவரை, நான் உதவியென்று செய்தால், ஏதாவது பெரிதாகக் கொடுக்க விரும்புகிறேன். அதனால்... உங்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது மன்னியுங்கள்!'' என்று வியாபாரி கூறினார்.
துறவி, மிகுந்த ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பினார்.
இரண்டு நாட்கள் சென்றன.

மீண்டும் அத்துறவி, அந்த வியாபாரியின் வீட்டுக் கதவைத் தட்டினார்.
இந்த முறையும் வியாபாரி, துறவியை வீட்டுக்குள் அழைத்தார். ஆனால், துறவி வீட்டுக்குள் நுழையாமல் வெளியே தள்ளியே நின்றுகொண்டார்.

""இந்த வழியே போய்க்கிட்டு இருந்தேன். அப்படியே உங்களைப் பார்த்துகிட்டுப் போகலாமின்னு வந்தேன்,'' என்று வியாபாரியைப் பார்த்துத் துறவி கூறினார்.
""ரொம்ப கரிசனமானவராக இருக்கீங்களே... சரி உள்ளே வாங்க... வெளியே ரொம்ப குளிரா இருக்கும்!'' என்று கூறிய வியாபாரி, துறவியை வீட்டுக்குள் வருமாறு அழைத்தார்.

""இல்லை... இல்லை... நாம் ரொம்ப அவசரமாக போய்கிட்டு இருக்கேன்... உங்க குடும்பம் எப்படி இருக்கு? எல்லாரும் நல்லா இருப்பாங்கன்னு நெனைக்கிறேன்!'' என்று துறவி, விசாரித்தார்.

""எல்லாரும் நலம் என்று கூறிய வியாபாரி குளிரால் தன் ஆடையை இறுக்கிக் கொண்டார்.
""உங்க தொழில் எப்படி இருக்கு?'' துறவி வியாபாரியைப் பார்த்துக் கேட்டார்.
வியாபாரி குளிரில் நடுங்கிக்கொண்டே, ஏறக்குறைய அலறினார்.

""போதும்... போதும்... ஏழைகள் குளிரில் எப்படிக் கஷ்டப்படுவாங்கன்னு இப்போது நான் உணர்ந்து கொண்டேன். முதல்லே உள்ளே வாங்க...!'' என்று துறவியை உள்ளே அழைத்தார் வியாபாரி.
பின்னர், துறவியிடம் நிறையப் பணம் கொடுத்து அனுப்பினார் வியாபாரி.

நன்றி : சிறுவர் மலர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Empty Re: சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 19:43

முரடாக நடந்து கொள்ளாதீர்!
------------

என் நண்பர் வீட்டில், நடந்த சம்பவம் இது. நண்பரின் மகன், தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியிருக்கிறான். அதனால், அவனை இரவில் கண் விழித்துப் படிக்க சொல்லியிருக்கிறார் நண்பர். ஆனால், மகனுக்கோ கண் விழிக்க முடியாமல், தூக்கம் வந்து விடுகிறது.
அதனால், அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து, படிக்க சொல்லியிருக்கிறார். பையனுக்கு அதுவும் முடியவில்லை. கோபமுற்ற நண்பர், பக்கெட் தண்ணீரை தூங்கி கொண்டிருந்த மகனின் தலையில் ஊற்றி விட்டார். திடீரென்று, தூக்கத்தில் தண்ணீர் விழுந்ததால், மூச்சு விட முடியாமல் திணறிப் போன பிள்ளைக்கு, பயத்தில் இப்போது, சித்த பிரமையே ஏற்பட்டு விட்டது.
மனநல மருத்துவரிடம், தன் மகனை அழைத்துச் சென்று வருகிறார் என் நண்பர். படிப்பு படிப்பு என்று சொல்லி, குழந்தைகளை ஒரு அளவுக்கு மேல், "டார்ச்சர்' செய்யாதீர்!

நன்றி - வாரமலர் — கே.ராமமூர்த்தி, காஞ்சிபுரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Empty Re: சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 19:45

ஆண்கள் ஜொள்ளர்கள்தான்! இருப்பினும்...


ஆசிரியையாக பணிபுரியும் இளம் பெண் நான். தினமும், பள்ளிக்கு, பஸ்சில் சென்று வருவது வழக்கம். நான் ஏறும் பஸ் ஸ்டாப்பில், அலுவலகம் செல்லும் பெண்களும் பஸ் ஏறுவதுண்டு. இத்தகைய பஸ் பயணத்தில் அறிமுகமான தோழி ஒருத்தி, கூட்ட நெரிசலில் பயணிக்கும் போது, ஆண் இருக்கை பக்கம், ஏதாவது சீட் காலியாக இருந்தால், சட்டென்று அங்கு உட்கார்ந்து விடுவாள்.
அறிமுகம் இல்லாத ஒரு ஆண் அருகில் அமர்ந்து, பயணம் செய்கிறாளே என, அவளைப் பற்றி என்னுள் ஒரு குறுகுறுப்பு. 

ஒரு நாள், அவளிடம் இதைக் கேட்டு விட்டேன். படு காஷûவலாக சிரித்த அவள், "ஆண்கள் பொதுவாகவே ஜொள்ளர்கள் தான். ஆனாலும், அவர்களது சபலப்புத்தி எப்போதும் வெளிப்படுவதில்லை. கூட்ட நெரிசலில் வாய்ப்புக் கிடைக்கும் போது, உரசிப் பார்ப்பவன் கூட, தன் அருகில், ஒரு பெண் வந்து அமர்ந்தால், டீசன்ட்டாக நடந்து கொள்வான்...' என்றாள்.

அது நிஜம்தானா என அறிய, கடந்த வாரம் ஒருநாள், ஆண் ஒருவரின் அருகில் சீட் காலியாக, அதில் போய் அமர்ந்தேன். என்ன ஆச்சரியம்! அந்த ஆள் பார்ப்பதற்கு பொறுக்கி போல் இருந்தாலும், சற்று நகர்ந்து, ஒரு சின்ன இடைவெளி விட்டு, ஒதுங்கி அமர்ந்து கொண்டான்.

கூட்ட நெரிசலில், உரசல், இடித்தல், எதுவுமின்றி, சவுகர்யமாய் பயணித்து, என் சேலையின் மடிப்பு கலையாமல் பள்ளி சென்றேன்.
பெண்களே... ஆண்களில் பெரும்பாலோர் ஜொள்ளர்கள் தான். ஆனாலும், கள்ளம் கபடமின்றி அவர்களை அணுகும்போது, அவர்களும் கவுரவ மாகவே நடந்து கொள்கின்றனர்.

நன்றி - வாரமலர் - ஐ.ஹரிணி, சென்னை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Empty Re: சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 19:47

தோழியின் பாதுகாப்பு கவசம்!
---------------
அரசுடைமை வங்கி ஒன்றில், வேலை பார்க்கும் நான், சமீபத்தில், தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரியும், பால்ய சிநேகிதியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன்.
"ஆபீசில், சபலிஸ்டுகளை எப்படி சமாளிக்கிறாய்?' என்று, சிரித்துக் கொண்டே கேட்டேன்.
"அந்த விஷயத்துல நான் சமர்த்து. ஆபீசுல பத்து வருஷமா, பழந்தின்னு கொட்டை போட்டவங்களெல்லாம், என்னைப் பார்த்து, புருவம் உயர்த்தி, ஆச்சரியப்படற அளவுக்கு நான் பாப்புலர்...

"எப்படின்னு கேக்கறியா? காலைல ஆபீசுக்கு போனவுடனே, "இன்னிக்கு பஸ்சுல, ஒரு காலிப்பய என்கிட்ட, சில்மிஷம் பண்ணினான். செருப்பை கழட்டி, "பளார் பளார்'ன்னு அறைஞ்சேன். அலறி, அடிச்சிட்டு தப்பிச்சோம், பிழைச்சோம்ன்னு இறங்கி ஓடிப் போயிட்டான்'ன்னு எல்லாருக்கும் கேட்கும்படி, டுபாக்கூர் விடுவேன்.

"இந்த மாதிரி, அவ்வப்போது யாருக்கும் சந்தேகம் வராதபடி, "கப்ஸா' அடிச்சி விடுவேன். இதை உண்மையின்னு நம்பி, "எம்மா...அவளா நெருப்புல்லா'ன்னு சொல்லுவாங்க அந்த மாதிரியான சபல ஆசாமிகள் உட்பட, யாரும் என்கிட்ட வாலாட்ட மாட்டாங்க...' என்றாள் பெருமையாக!
வேலைக்கு செல்லும் சகோதரிகளே... நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக, இந்த மாதிரி பொய் சொன்னாலும் பரவாயில்லை... நெருப்புங்கற இமேஜை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதுவே, பாதுகாப்பு கவசமாய் உங்களுக்கு உறுதுணையாய் இருக்கும்.

நன்றி - தினமலர் - சி.கலாராணி, புதுச்சேரி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Empty Re: சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 19:48

பொது இடத்தில் வேண்டாமே!
----------------

நானும், என் கணவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தோம். எங்களுக்கு முன், நவநாகரிகமான காதல் ஜோடி ஒன்று, பைக்கில் சென்று கொண்டிருந்தது. பில்லியனில் அமர்ந்திருந்த இளம் பெண், காதலனின் தாடையை பிடித்துக் கிள்ளுவதும், கழுத்தில் முத்தமிட்டு, இரு கைகளால் காதலனின் இடுப்பை இறுக்கமாக அணைத்தும், "கிச்சு கிச்சு' மூட்டியபடி சென்றாள்.
காதலனோ, சுற்றுப்புறத்தை எல்லாம் மறந்து, காதலியின், "கிளுகிளுப்பு'களை அனுபவித்தவாறு, பைக் ஓட்டிச் சென்றான்.
"இவர்கள் இப்படி விளையாட்டாக செய்வது, விபரீதத்தில் முடியப் போகிறதே...' என்று, என் கணவர் சொல்லிக் கொண்டிருந்த போதே, அந்த விபரிதம் நடந்து விட்டது.

எங்களுக்கு பின்னால் இருந்து, பைக்கில் வந்த வில்லன் ஒருவன், இளம் ஜோடியின் பைக் அருகில் சென்று, இளம் பெண்ணின் மார்பை அழுத்தி விட்டு, வேகமாக சென்று விட்டான். இதைப்பார்த்த நாங்கள், அதிர்ந்து விட்டோம். அதிர்ச்சியில், உறைந்து போயிருந்தாள் அந்த இளம் பெண். பைக்கை, ஓரமாக நிறுத்தி விட்டான் இளைஞன். அதன் பின், என்ன ஆயிற்றோ தெரியவில்லை.

இளம் ஜோடிகளே... உங்கள், பருவ விளையாட்டுகளை, நான்கு சுவற்றுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். பொது இடத்தில் அரங்கேற்றினால், இப்படிப்பட்ட விபரீதங் கள் நடக்க வாய்ப்புள்ளது. உஷாராக இருந்து கொள்ளுங்கள்.

நன்றி - வாரமலர் — கமலா மூர்த்தி, சென்னை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Empty Re: சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 19:49

தவறான, "அட்வைஸ்' தராதீர்!

-------------

எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர், அவரின் பக்கத்து வீட்டு பெண்மணியின் பேச்சை, வேதவாக்கு போல் கேட்பார். தன் கணவர் ஏதாவது சொன்னால் கூட, அதை அவ்வளவாக ஏற்பது கிடையாது. சமீபத்தில், அப்பெண்மணியின் வீட்டில் பிரச்னை ஏற்பட, வழக்கம் போல் பக்கத்து வீட்டு பெண்ணிடம் பிரச்னையை கூற, "எத்தனை நாட்கள் தான், கணவர் உன்னிடம் பேசாமல் இருப்பார்... ஒருநாள், கண் முன்னாடியே கிணற்றுக்குள் குதி. அப்பவாவது, உன் மேல் அவருக்கிருப்பது பாசமா அல்லது வேஷமா என்பது புரியும்!' எனக் கூற, அப்பெண்மணியும் அப்படியே செய்து விட்டார்.

கிணற்றில் குதித்த வேகத்தில், தலையில் நன்றாக அடிபட்டு விட்டது. நல்ல வேளை... அப்பெண்மணி யின் கணவர் உயிரை காப்பாற்றி விட்டார். அடுத்தவர்களுக்கு, "அட்வைஸ்' கூறும், அட்வைஸ் அம்புஜங்களே... மற்றவர் குடும்பத்தில், பிரச்னை வராத மாதிரி, அறிவுரை கூற முடிந்தால் கூறுங்கள்; அதை விடுத்து, இப்படி அபத்தமான (ஆபத்தான) அறிவுரை கூறி, வேதனைக்குள்ளாக்காதீர்!

நன்றி - வாரமலர் — எல். சந்திரகலா, போரூர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Empty Re: சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 19:51

ஆரதவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்யப் போகிறீர்களா?
----------------

சமீபத்தில், என் பேரனின் பிறந்த நாள் நிகழ்ச்சியின் போது, அருகிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு, உணவு தயார் செய்து கொடுத்தோம். அந்த இல்லத்தில் இருந்த பொறுப்பாளரிடம் பேசிக் கொண்டு இருந்த போது, "இதுபோல் உதவுபவர்கள் எல்லோருமே சாப்பிடும் உணவுப் பொருட்களாகத்தான் கொடுக்கின்றனர்.

"சில சமயம், ஒரே நாளில் முன்னறிவிப்பின்றி, இரண்டு, மூன்று குடும்பத்தினர் உணவுப் பண்டங்களைக் கொண்டுவந்து விடுவர். அப்போதெல்லாம் உணவு மிஞ்சிவிடும். இதைத் தவிர்க்க, தானமளிக்க விரும்புவோர், முன் கூட்டியே, எங்களிடம் வந்து கேட்டால், எங்கள் இல்லக் குழந்தைகளுக்கு, தேவைப்படும் மருந்துப் பொருட்களை வாங்கித் தரச் சொல்ல முடியும்...' என்றார்.

அவர் கூறியது பயனுள்ளதாக இருந்ததால், அதை நினைவில் வைத்து, அடுத்து வந்த எங்கள் திருமண நாளின் போது, அந்த இல்லம் சென்று, மருந்துப் பொருட்களின், "லிஸ்ட்' வாங்கி வந்து, எங்களின், "பட்ஜெட்' பணத்தில் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு மருந்துப் பொருட்களை வாங்கிக் கொடுத்தோம்.
இதுபோல் மற்றவர்களும் செய்யலாம் தானே!

நன்றி - வாரமலர் — கே. எம். பாருக். சென்னை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Empty Re: சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 19:52

பெரிய மனிதர் போர்வையில்...
-------------------------------
நான், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். என் குடும்ப சூழ்நிலை காரணமாக, மாணவர்களுக்கு, "டியூஷன்' எடுப்பதுடன், ஆங்கில நர்சரி பள்ளி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டே, பி.ஏ., மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறேன். என் பள்ளியின் நிர்வாகி, என் பிறந்த நாள் அன்று, பரிசாக, ஒரு கவிதை எழுதிக் கொடுத்தார். அதில், என் அழகை வர்ணித்தும், அந்த அழகு தனக்கு கிடைக்குமெனில், காலில் விழுவதற்கும் தயார் என்றும் எழுதி இருந்தார்.

இது, எனக்கு அதிர்ச்சியை அளித்தது. இத்தனைக்கும், அவருக்கு, வயது 56. அவர் மகன், கல்லூரியில் படிக்கிறான். என் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள, நான் ஏதும் பேசாமல் இருந்ததை, தவறாக புரிந்து கொண்டு, அவ்வப்போது பரிசு பொருட்கள் கொடுப்பதுடன், "பண கஷ்டம் இருந்தால், என்னிடம் சொல்; நான் தருகிறேன். ஆனால், யாரிடமும் சொல்லக் கூடாது...' என்றெல்லாம், பேச ஆரம்பித்து விட்டார்.

இன்னும் போனால், தொடர்ந்து பல பிரச்னைகள் வரக்கூடும் என்று நினைத்து, வேலையை விட்டு விட்டேன். இப்போது, டியூஷன் மட்டுமே எடுத்து வருகிறேன். இந்த காலத்தில், இளைஞர்களை கூட நம்பி விடலாம். ஆனால், வயதானவர் என்ற போர்வையில் இருக்கும் இப்படிப்பட்டவர்களை, நம்பவே கூடாது.

நன்றி _ வாரமலர் — வ.மனோகரி, கம்பம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Empty Re: சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 19:54

காலமும் கெடலை; கலியும் முத்தலை!
-----------------
கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும், 80 வயது முதிய பெண்மணி நான். மகன் மற்றும் மகள் வயிற்றுப் பேரக் குழந்தைகளுக்கு ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற இதிகாச புராணக் கதைகளை, மனதில் பதியுமாறு, "போதி'த்து வைத்திருக்கிறேன்.
மருத்துவமனையிலிருந்து குழந்தையை திருடிச் செல்வது, பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவி, பிள்ளையை வயிற்றில் சுமப்பது, பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப் போவது போன்ற, கலி கால கிரகசாரங்களை நாளிதழிலும், "டிவி'யிலும் பார்த்து, "காலம் கெட்டுப் போச்சு; கலிமுத்திப் போச்சு...' என்று, ஒரு நாள் புலம்பிக் கொண்டிருந்தேன்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும், மகள் வயிற்றுப் பேத்தி, என் புலம்பலைக் கேட்டு, என் அருகில் வந்தாள்...
"ஜெயில்ல, தேவகிக்கு பிறந்த குழந்தையை, நந்தகோபர், கோகுலத்துக்கு தூக்கிட்டுப் போய், அங்கிருந்து, யசோதைக்குப் பிறந்த குழந்தையை, ராவோடு ராவா தூக்கிட்டு வந்தாரே... அது, குழந்தைத் திருட்டுதானே...' என்றாள்.
நான், "திருதிரு' வென்று, விழித்தேன்.

"சரி... பராசர முனிவர், சத்தியவதி பூப்படையறதுக்கு முன்னாலேயே, கட்டிப் பிடிச்சு கர்ப்பமாக்கினாரே... வேதவியாசர் அப்படி பொறந்தவர் தானே...' என்றும், "கல்யாணமாகறதுக்கு முன்னால, குந்தி, கர்ணனை பெற்று, ஒரு பொட்டியில வெச்சு, ஆத்துல போட்டாளே... அது பேர் என்ன?' என்று கேட்டதும், என் உடம்பெல்லாம் வியர்த்து விட்டது. என்ன சொல்ல வருகிறாள் இவள்... நான் போதித்த புராணக் கதைகள், எனக்கு எதிராக, அணி திரண்டு நிற்பதைப் கண்டு, திகைத்தேன்.

"நீ...நீ....என்ன சொல்ல வருகிறாய்?' என்று, திக்கி திணறிக் கேட்டேன்.
"பாட்டி நீ புலம்புற மாதிரி காலமும் கெடலை; கலியும் முத்தலை. மன்னர் ஆட்சி காலத்துல, மன்னர் குடும்பத்துல இருந்தவங்க தப்பு செய்தாங்க. இப்போ, மக்களாட்சியில மக்கள் தப்பு செய்றாங்க. அவ்வளவுதான் வித்தியாசம். சும்மா புலம்பாதே...' என்றாள். நெத்தியடியாய் இருந்தது எனக்கு. அப்போ... உங்களுக்கு?

நன்றி - வாரமலர் — வசந்தாலட்சுமி நாராயணன். வியாசர் நகர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Empty Re: சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 19:56

பெண் குழந்தைகளின் மனம்!
---------------
இரண்டு இளம் பெண்களுக்கு தாய் நான். என் கணவரின் குணம், நடவடிக்கைகள், தீய பழக்கங்களால், எங்களுக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றியது. அவரும் முரட்டு குணமுடையவர் என்பதால், அடி, உதை, திட்டு சகஜம். அப்போதெல்லாம், நானும், "ச்சே... கல்யாணமே செய்யாமல் இருந்திருக்கலாம்...' என, சலித்துக் கொள்வேன்.

என் மகள்கள் இருவரும், இதை கவனித்து, திருமணத்தின் மீதே வெறுப்பை வளர்த்துக் கொண்டுள்ளனர். என் மூத்த பெண்ணுக்கு, திருமண ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்த போது, அவள், "வேண்டாம்' என, மறுப்பு தெரிவித்தாள். அதையும் மீறி, திருமணம் செய்து வைக்க, முதலிரவிலேயே கணவரைக் கண்டு பயந்து, நடுங்கி, அழுது, கலவரப்படுத்தி விட்டாள்.

தற்போது, மனோதத்துவ நிபுணரிடம் அழைத்து சென்று, சிகிச்சை அளித்து வருகிறோம். "கணவருடனான கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவுகள், மகள்கள் முன்னிலையில் நடந்ததால், ஏற்பட்ட விளைவு தான் இது...' என, மனோதத்துவ நிபுணர் கூறினார்.
பெற்றோரே... வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் கலந்தது தான். குடும்பம் என்றால், பிரச்னைகள் இருக்கத் தான் செய்யும். அதை எல்லாம் எதிர் கொண்டு, சமாளித்து, வெற்றி பெறுவது தான் வாழ்க்கை. உங்கள் குழந்தைகளுக்கு, இந்த உணர்வை, சிறு வயதிலிருந்தே ஊட்டுங்கள். பெரியவர்களின் பிரச்னைகளும், சச்சரவுகளும், குழந்தைகளின் மனதை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

நன்றி - vaaramalar— சி.ரங்கநாயகி, கோவை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Empty Re: சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 19:57

"சீன்' மட்டும் போதுமா? தெளிவு வேண்டாமா...
----------------------

சமீபத்தில், நானும், என் அம்மாவும், திருநெல்வேலி செல்வதற்காக, கோயம்பேடு பஸ் நிலையம் சென்று, அரைமணி நேரத்திற்கும் மேலாக, பஸ்சில் அமர்ந்திருந்தோம். சில நிமிடங்கள் கழித்து, எங்கள் அருகில் வந்த ஒரு தம்பதியர், அது, அவர்களது இருக்கை என்று கூறி, எங்களை எழுந்திருக்கச் சொல்லி, வாக்குவாதம் செய்தனர். மெத்தப் படித்த மேதாவி என்பதைக் காட்ட, ஆங்கிலத்தின் நடுவே, தமிழைக் கலந்து பேசினர்.

அவர்களது டிக்கெட்டிலும், எங்கள் டிக்கெட்டில் குறிப்பிட்டிருந்த, இருக்கை எண் ஒரே மாதிரியாக இருந்ததால், குழப்பத்தில் ஆழ்ந்தோம். "அதெப்படி... கண்டக்டர் வரட்டும்' என்று, காத்திருந்த எனக்கு, திடீரென ஞானோதயம் உதிக்கவே, அவர்களின் டிக்கெட்டை, மீண்டும் வாங்கிப் பார்த்தேன்; அப்போது தான் தெரிந்தது, அவர்கள், அடுத்த நாள் வருவதற்கு பதிலாக, ஆர்வக் கோளாறில், முதல் நாளே வந்திருந்தது.

அதேபோல, கடந்த ஆண்டு, நாகர்கோவிலிலிருந்து, சென்னை நோக்கி ரயிலில் திரும்பிக் கெண்டிருந்தோம். அப்போது, ஜீன்ஸ் - டீ ஷர்ட் அணிந்து, அசின் போல காட்சியளித்த ஒரு பெண்ணை, டிக்கெட் பரிசோதகர், கண்டபடி திட்டி, பைன் போட்டார்.
விசாரித்த போது, அந்தப் பெண், நாகர்கோவில் - சென்னை மார்க்கத்திற்கு பயணிக்க, சென்னை - நாகர்கோவிலுக்கு டிக்கெட் எடுத்திருந்தது தெரிந்தது. அப்பெண்ணிடம் கேட்டதற்கு, அவளது நண்பன், "ஆன் - லைனி'ல் புக் செய்து கொடுத்ததாகக் கூறினாள். இந்த அதிபுத்திசாலி, சாப்ட்வேர் இன்ஜினியர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்தில், "சீன்' போட தெரிந்த, இப்படிப்பட்ட மெத்தப் படித்த மேதாவிகளை, என்னவென்பது? இவர்களைப் போல மாட்டிக் கொண்டு முழிக்காமல், நாம் கவனமாக இருப்போமே!

நன்றி - vaaramalar— ஆஞ்சலா ராஜம், சென்னை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Empty Re: சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 19:59

மருமகளை குற்றம் சுமத்தலாமா?
--------------

சில குடும்பங்களில், குழந்தைகள் மீது காட்டும் பாரபட்சமான பாசமும், கவனிப்புமே, பிளவுக்கு வழி வகுக்கிறது. தங்கள் தவறை உணராத பெற்றோர், குடும்பம் சீர்குலைய, வீட்டிற்கு வந்த மருமகள் தான் காரணம் என்று, யோசிக்காமல், குற்றம் கூறி விடுகின்றனர். மூத்தவனுக்கு அதிகப்படியான சலுகைகள் அல்லது கடைக்குட்டிக்கு அபரிமிதமான செல்லம் என்று, பாரபட்சம் காட்டும் சூழ்நிலையில், இடைப்பட்ட குழந்தைகள், தத்துக் குழந்தைகளோ என்ற ரீதியில் தத்தளிக்கும்.

சிறுவர்களாக இருந்த போது, கவனத்தில்படாத இந்தக் குறை, அவர்கள் வளர்ந்து, குடும்பஸ்தர்களாக மாறும் சமயம், விஸ்வரூபம் எடுத்து, குடும்பத்தில் பெரும் பிளவை ஏற்படுத்தி விடுகிறது. குடும்ப ஒற்றுமையை கட்டிக் காப்பதில், மருமகள் தான் ஈடு கொடுக்க வேண்டும் என்று வரையறுக்காமல், அனைவரும் பொறுப்பு ஏற்று நில்லுங்கள். இதற்கு, அஸ்திவாரத்தை பலமாகப் போட வேண்டியது, பெற்றோரின் கடமை.

நன்றி : வாரமலர் — எம்.தேவராஜன், விழுப்புரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Empty Re: சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 20:00

தேவை பொது இடத்தில் மருத்துவசேவை!

-------------
சமீபத்தில், என் தோழியின் திருமணத்திற்காக, ராஜபாளையம் செல்ல வேண்டியிருந்தது. அதற்காக, என் ஊரில் இருந்து கிளம்பி, திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் இறங்கி, அடுத்த பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தேன். அப் போது, 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், திடீரென்று மயக்கம் போட்டு, கீழே விழுந்து விட்டார்.

உடனே, பொதுமக்கள் சிலரும், பணியில் இருந்த ஒரு காவலரும், அவரை சுற்றி கூடி விட்டனர். அந்த செய்தியை, 108க்கு தகவல் சொல்லி, ஆம்புலன்ஸ் வரும் வரை, அனைவரும் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனரே தவிர, யாரும் அவருக்கு முதலுதவி செய்யவில்லை. இக்காலத்தில், இது ஒரு சாதாரண விஷயம் என்றாலும், அவ்வளவு பெரிய பஸ் நிலையத்தில், மக்களின் நன்மைக்காக, ஏன் மருத்துவ சேவை மையம் ஒன்றை அமைக்க கூடாது? பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிறிய அளவிலாவது மருத்துவ சேவை மையம் இருந்தால், இதுபோன்ற எதிர்பாராத நிகழ்வுகளில், பொதுமக்களுக்கு முதலுதவி செய்ய முடியுமே!
அரசாங்கம், இதுபோன்ற மையங்களை, முக்கியமான இடங்களில் நிறுவலாமே!

நன்றி : வாரமலர் — சரவணன், மார்த்தாண்டம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Empty Re: சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 20:01

பெண்ணுக்கு பெண்ணே எதிரியா?

சமீபத்தில், என் நண்பர், தன் பெண்ணிற்கு, பி.காம்., படித்து முடித்தவுடன் வேலை கிடைத்து விட்டது என்று, சந்தோஷத்துடன், அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். சில நாட்களுக்கு முன், அவரது வீட்டிற்கு செல்ல நேர்ந்தது. நண்பர் மிகவும் சோகமாக இருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், மனதை அதிர வைத்தது.

நண்பரின் மகள், முதல் வகுப்பிலிருந்து கல்லூரி வரை, பெண்கள் பயிலும் கல்வி நிறுவனத்திலேயே படித்துள்ளார். இதை தெரிந்து கொண்ட, அவரது சக பெண் ஊழியர்கள், "அய்யே... உனக்கு ஒன்றுமே தெரியாதா... ஏதாவது மாலுக்கு போயிருக்கிறாயா... மாமா, மாமா பையன் போன்றவர்களுடன், "பைக்'கில் வெளியில் சென்றுள்ளாயா...' எனக் கேட்டும், யூ-டியூபில் மோசமான வீடியோவை போட்டுக்காட்டி, "இது போல பார்த்திருக்கிறாயா, உன் அண்ணனின் நண்பர்களை தொட்டு பேசியிருக்காயா...' எனக் கேட்டு, சீண்டி, கிண்டல் செய்துள்ளனர்.

இதை விட கொடுமை, சில பெண்களின் தாயாருக்கு, தங்கள் பெண்ணுக்கு ஆண் நண்பர் உள்ள விவரம் தெரியுமாம். மேலும், அம்மாவிடம் சொல்லிவிட்டே சினிமாவிற்கு செல்வதாகவும் கூறியுள்ளனர்.

இதனால், மிகவும், "அப்செட்' ஆன அந்தப் பெண், பெற்றோரிடம் தயங்கி தயங்கி, இந்த விவரங்களை கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல், ஒரு வித தாழ்வு மனப்பான்மையுடனே இருந்துள்ளார். அவரை, மருத்துவரிடம் அழைத்து சென்று, கவுன்சிலிங் அளித்து, தற்போது குணமாகி வருவதாகவும், பத்தொன்பது வயதிலேயே, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டதாகவும், நண்பர் தெரிவித்தார். இதை கேட்டு, மிகவும் வேதனை அடைந்தேன்.

பெண்ணுக்கு பெண்ணே எதிரி என, இதனால் தான் கூறினர் போலும்!

nandri vaaramalar — ராமச்சந்திரன், பீளமேடு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Empty Re: சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 20:02

தோழி போட்ட போடு!
--------------
எம்.காம்., - ஐ.சி.டபிள்யூ.ஏ., படித்த என் தோழிக்கு, சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மாப்பிள்ளையும், பெரிய படிப்பு படித்திருப்பார் என்று எண்ணி, மாப்பிள்ளையின் படிப்பு பற்றி விசாரித்தேன். அவள் சொன்ன பதில், என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. மாப்பிள்ளை, ரயில்வேயில், நல்ல வேலையில் இருந்தாலும், பத்தாம் வகுப்பு மட்டுமே படித்தவர்!

"உன்னை விட, குறைவாக படித்தவரை மணக்க, எப்படி சம்மதித்தாய்?' என்று கேட்டதற்கு, "வருங்காலத்தில், ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், தன்னை காப்பாற்றிக் கொள்ள உதவும் ஆயுதமே படிப்பு. அவர், நல்ல வேலையில் உள்ளார். என் அளவு படிப்பில்லாவிட்டால் என்ன? என்னை கண் கலங்காமல் வைத்துக் கொள்வார் என, நம்புகிறேன். அதற்கு மேல் தகுதி வேண்டுமா...' என்றாளே பார்க்கலாம்! படித்த பெண்கள் அனைவரும், இது போல செய்யத் துணிவரா?

nandri - vaaramalar — எம்.பார்வதி, திண்டுக்கல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Empty Re: சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 20:03

பிரிட்ஜ் தயாரிப்பாளர்களே...
---------------
நண்பரின் வீட்டுக்கு, ஒரு நண்பகலில் சென்றிருந்தேன். விருந்தினரை உபசரிக்கும் பொருட்டு, அவரது வீட்டு வரவேற்பறையில் இருந்த பிரிட்ஜிலிருந்து, ஜூஸ் எடுத்து வந்தார். அந்த பிரிட்ஜின் கோலத்தைப் பார்த்ததும் பகீரென்றது. ஆம், அதன் தட்டையாக இருந்த மேற்பரப்பின் மீது, சாப்பிட்ட தட்டு, தலை வாரிய சீப்பு, தேங்காய் எண்ணெய் குப்பி, குளியல் சோப்பு, மாத்திரைகள், ஒரு கீரைக்கட்டு ஆகியவை பரப்பி வைக்கப்பட்டிருந்தன. நண்பரின் மனம் நோகக் கூடாதே என்று ஜூசை வாங்கி, ஜலதோஷம் என்று கூறி, நாசூக்காக குடிக்காமல் தவிர்த்தேன்.

குறைந்த இடவசதியுள்ள பெரும்பாலான நடுத்தரக் குடும்பங்களில், பிரிட்ஜின் மேற்பரப்பு இதுபோன்று தான் பயன்படுத்தபடுகிறது. மேற்பரப்பு அரைக்கோள வடிவத்திலோ, முக்கோண வடிவத்திலோ அமைந்திருந்தால், பிரிட்ஜின் மேற்பரப்பின் மீது தட்டுமுட்டு சாமான்கள் வைப்பது தவிர்க்கப்படும். ஸ்டெபிலைசர் வைப்பதற்கு என, ஒரு சிறிய பகுதியை மட்டும் அதில் தட்டையாக வைக்கலாம். பிரிட்ஜ் தயாரிப்பாளர்கள் கவனத்தில் கொள்வார்களா?

nandri - vaaramalar — எம்.சத்யநாராயணன், சைதாப்பேட்டை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Empty Re: சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Dec 2015 - 20:04

படிப்போம், பரிசளிப்போம்!
-----------
என் நண்பர் ஒருவர், விபத்துக்குள்ளாகி, முழங்கால் சிதைந்து, இரண்டு மாதம் மருத்துவமனையில் இருந்தார். அவரை பார்க்க ஹார்லிக்ஸ் மற்றும் பழங்களுக்கு பதிலாக, "நெப்போலியன் வரலாறு' என்ற புத்தகத்தை வாங்கிச் சென்றேன். உடன் வந்த நண்பர், "வேணாம்டா... பயன் பெறுகிற மாதிரி ஏதாச்சும் வாங்கிட்டுப் போ... அவன பத்தி நல்லா தெரியும். தினசரி பேப்பரே படிக்க மாட்டான். அவன் படித்ததே, ஒன்பதாம் வகுப்பு வரைதான். புத்தக ஆர்வம் துளியும் இல்லாதவன். அவன், இந்த புத்தகத்த குப்பையில தான் போடுவான்...' என்றார்.

சொன்னவர் கையில் ஹார்லிக்ஸ் இருந்தது. மருத்துவமனை நெருங்க நெருங்க, என் முடிவை முற்றிலும் மாற்றி விட்டார். அந்த பக்கம் பைக்கில் வந்த, என் மாமா பையனிடம், புத்தகத்தை வீட்டில் கொடுக்கும்படி சொல்லிவிட்டு, மருத்துவமனைக்கு அருகே இருந்த கடையில், ஒரு போன்வீட்டா வாங்கிக் கொண்டேன். நண்பரை சந்தித்து, நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தோம். கிளம்பும் போது சொன்னேன், "மாப்ள... உனக்கு, "நெப்போலியன் வரலாறு' புத்தகம் கொடுக்கலாமுன்னு, நெனைச்சேன். இவந்தான் வேண்டாம் கொடுத்தா குப்பையில போட்டுருவான்னு சொன்னான்...' என்றேன்.

அதற்கான பதில், அவனிடமிருந்து வரவில்லை. அவனின் மனைவியிடமிருந்து வந்தது. "மெத்த படிச்சவங்கதாண்ணே, புத்தகத்த மதிக்க மாட்டாங்க. புத்தகத்து மேல, லேசா கால் பட்டா கூட, நாங்க தொட்டு கும்புடுவோம். படிப்போட அரும உங்கள விட, எங்களுக்கு தான் நல்லா தெரியும். நெப்போலியனப் பத்தி கொஞ்சம் படிச்சுருக்கேன். முழுசா படிக்கணும்ன்னு ஆசை. இவரு படிக்காட்டி என்ன, நான் படிச்சு சொல்லிட்டு போறேன்...' என்றார்.

நம் அன்பளிப்பு, ஒரு அன்பரை நோக்கி மட்டுமே இருக்கிறது. அவரை சார்ந்தவரை பற்றி, நாம் யோசிப்பதே இல்லை.
ஒவ்வொரு வீட்டிலும், வாசிக்க விரும்புபவர்கள் இருக்கவே செய்கின்றனர். நம் கண்களுக்குத் தான் தெரிவதில்லை. உடனே வீட்டுக்குப் போய், அந்த புத்தகத்தை எடுத்து வந்து, கொடுத்த பின் தான் திருப்தியாக இருந்தது. பரிசளிக்க, புத்தகத்தை விட சிறந்தது எதுவுமில்லை.

nandri vaaramalar — சக.முத்துக்கண்ணன், தேனி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Empty Re: சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 16 Dec 2015 - 19:19

அனுபவ அட்வைஸ்
--------------

எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி, என் இரண்டு வயது குழந்தையை குளிக்கவைப்பதற்காக சின்ன ஸ்டூலின் மீது உட்காரவைத்தார். பிறகு கொதிக்கும் நீரை குழந்தை அருகில் வைத்துவிட்டு, நீரை விளாவுவதற்காக பக்கெட்டை எடுத்தார். அதற்குள் ஸ்டூல் மீது இருந்தபடியே வெந்நீரை இழுத்துவிட்டாள் குழந்தை. கொதிக்கும் நீர் உடலில் பட்டதால் இரண்டு கைகளும் கொப்பளித்துவிட, துடித்துவிட்டாள் என் மகள். 

சத்தம் கேட்டு நானும் என் கணவரும் பாத்ரூமுக்கு விரைய, என்ன செய்வதென்று தெரியாமல் விக்கித்து நின்றிருந்தார் அந்த அம்மா. உடனே குழந்தைக்கு முதலுதவி செய்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். இதுபோன்ற கவனக்குறைவான செயலை செய்யக்கூடாது என அவருக்கு எடுத்துச் சொன்னோம். சின்னக் குழந்தைகள் இருக்கும் இடத்தில் கூர்மையான பொருட்கள், மின்சாதனங்கள், மருந்து பொருட்கள் போன்றவற்றை அவர்கள் கைக்கு எட்டாத இடத்தில் வைப்பது நல்லது. இது என்ன புது செய்தியா என்று யோசிக்கலாம். ஆனால் எப்போது இப்படி கவனத்துடன் இருக்கிறோமா என்று யோசிப்பதே இல்லை. தோழிகளே, எதிலும் வரும் முன் காப்பதே நலம்தானே!

நன்றி  : நம் தோழி - அனு ஜெய், கோயமுத்தூர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்  Empty Re: சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum