சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

ஆல்ப்த்தென்றலில்.... பயணங்கள் முடிவதில்லை....போவோமா ஊர்க்கோலம்! Khan11

ஆல்ப்த்தென்றலில்.... பயணங்கள் முடிவதில்லை....போவோமா ஊர்க்கோலம்!

4 posters

Go down

ஆல்ப்த்தென்றலில்.... பயணங்கள் முடிவதில்லை....போவோமா ஊர்க்கோலம்! Empty ஆல்ப்த்தென்றலில்.... பயணங்கள் முடிவதில்லை....போவோமா ஊர்க்கோலம்!

Post by Nisha Sun 10 Jan 2016 - 1:04

போவோமா ஊர்க்கோலம்  
பூலோகம் எங்கெங்கும்


ஆல்ப்த்தென்றலில்.... பயணங்கள் முடிவதில்லை....போவோமா ஊர்க்கோலம்! DSCF0041_zpse7ad2002

பயணங்கள் முடிவதில்லை எனும் தலைப்பில்   மகிழ் நிறை -மைதிலி அவர்கள் ஆரம்பித்து வைத்திருக்கும் பதிவைத்தொடர்ந்து  தேன்மதுரத்தமிழ்- கிரேஸ் பயணத்தினை தொடர  என்னை அழைத்திருக்கின்றார்!

பத்து முத்தான கேள்விகளோடு பத்துக்குள் எம் பதிலைகளையும்  தர கிடைத்த வாய்ப்பைத்தந்தமைக்காக இருவருக்கும் நன்றி!. பத்துக்கேள்விகளுக்கும் விரிவாக பதில் சொன்னால்  தனித்தனி பதிவே ஆகி விடும் எனினும் இயன்ற வரை  என் பயண அனுபவங்களை உங்களோடு பகிர முடிந்ததில் மகிழ்ச்சி.

1.பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
இலங்கையில்  ஏழு எட்டு வயதில் மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ரயிலில் பயணம் சென்றதாய் ஒரு குட்டி நினைவு!  ரயிலில் ஏறும் போது என் தங்கை அணிந்திருந்த செருப்பு தண்டவாளத்தில் விழுந்து விட மற்றயதையும் கழட்டி கீழே போடு என நான் சொன்னதும்... ஏன் அப்படி என கேட்டதற்கு  நமக்கு அந்த செருப்பு திரும்ப கிடைக்காது எனும் போது ஒத்தையை வைத்து நமக்கும் அதை
எடுப்பவருக்கும் பிரயோசனம் இராது  என்பதால் அங்கே ரயில்
நிலையம் கூட்டிக்கொண்டிருந்த  ஏழைஆண் தான்  எடுத்து பயன் பெறுவார் எனும் நிச்சயத்தில்  அவருக்கு பயன் படட்டுமே என சொன்னதாயும்....கூட இருந்த ஆண்டி என்னை பாராட்டியதும்  தெளிவில்லாமல்  கலங்கலாய் வரும் ப்ளாஸ்பேக்காய்..!

ஆனாலும்  என் நினைவில் நிற்பது.. பதினைந்து வயதில் இறுதியில் ஆஸ்திரியாவில்  பெல்கிரேட்டிலிருந்து சுவிஸ்  போர்டர் வரை புறப்பட்ட ரயில் பயணம். எங்களுக்கு முதல்  ஐரோப்பிய ரயில் அனுபவம், ஆறு பேர் அமரும் கூபேயில்  வெள்ளைக்காரர் ஒருவர் புகை பிடிக்கும் போது என் கூட வந்தவர்களும் அவரை பார்த்து புகை பிடிக்க.... டிக்கட் பரிசோதகர்  வருவதை அவதானித்து  அவர்  புகையை அணைத்து விட்டு அமைதலாயிருக்க இவர்கள் தெம்பாய் விரலிடுக்கில் சிகரட்டோடு  டிக்கட்டை நீட்ட ... செக்கர்  புகைத்தல் தடை எனும் குறியிட்டைக்காட்ட  இவர்கள் அவரை காட்ட..... மீதி என்ன பைன் தான்!

2.மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?
பெரும்பாலான பயணங்கள் மகிழ்ச்சிக்குரியதாய் தான் இருக்கும். மனதில் மகிழ்ச்சி இல்லை எனில் பயணத்தினை தவிர்த்து விடுவேன்!

சுவிஸிலிருந்து ஜேர்மனுக்கும் பிரான்ஸுக்கும்  ஆயிரம் கிலோ மீற்றர்கள் தூர பயணங்கள் பல தடவை பயணித்திருந்தாலும்  நாங்கள் நான்கு பேரும் ஆறு வருடம் முன்னால் எவ்வித திட்டமும் இல்லாமல் எங்கள் காரில் சுவிஸிலிருந்து போர்த்துகல் புறப்பட்டதை மறக்கவே முடியாது.

சுவிஸ் டூ போர்த்துகல்
சூவிஸ்,பிரான்ஸ், ஸ்பெயின் , போர்த்துகல் என  நான்கு நாடுகள்
மொத்தம்  2500 கிலோ மீற்றர்கள்!

அதிகாலை நான்கு மணிக்கு புறப்பட வேண்டும் என திட்டமிட்டு ஐந்தரைக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு மறு நாள் அதிகாலை ஆறரைக்கு  போர்த்துகல்லில் செல்லுமிடம் சென்று சேர்ந்த சாகச பயணம். அத்தனை தூரமும் வண்டி ஓட்டியது என்னவர் என்பது கூடுதல் தகவல். அதிகாலைஐந்தரைக்கு புறப்பட்டு சுவிஸில் பிரேக் பாஸ்ட், பிரான்சில் லஞ்ச், ஸ்பெயினில் டின்னர் என ஒரே நாளில் மூன்று நாடுகள்!

இடையிடையே குட்டி குட்டி பிரேக் எடுத்து பயணம் செய்து விடிகாலை போர்த்துக்கல் சென்றடைந்தோம். அருமையாய் இருந்தது. மீண்டும் ஒரு தடவை செல்ல வேண்டும் என விருப்பப்படும்  படி மறக்க முடியாத பயணம் அது!

எங்கள் பயணத்திட்டமிடல் ரெம்ப வித்தியாசமானதுப்பா.. இங்கே தான் தங்க வேண்டும் எனும் திட்டமிடல் இருக்காது. வண்டியில்  குட்டி ரைஸ்குக்கர், காஸ் ஸ்டவ், பால் காய்ச்ச ஒரு குட்டி சில்வர் பாத்திரம், பொரியல் செய்ய ஒரு நான்ஸ்டிக் பாத்திரம், குட்டி டப்பாக்களில் உப்பு முதல் தேவையான மசாலாக்கள், வெங்காயம், புளி முதல் சின்னகத்தியும் வெட்டுவதற்கு தயாராக சின்ன பலகையுடன் தரையில் விரிக்க  நம்மூர் பிரம்புப் பாய், ரப்பர் சீட்,போர்வை , வெயில் குடை எல்லாம் தயாராகி விடும்.

கடற்கரை பிரதேசம் எனும் இலக்கை வைத்து புறப்படுவோம். கடற்கரைக்கு 20 கிலோ மீற்றர் தூரமிருக்கும் போதே உள்ளூருக்குள்  நுழைந்து ஹோட்டல்களில் ரூம் இருக்கா என கேட்போம் அனேகமாக கிடைத்து விடும். பிரேக் பாஸ்ட் வித் ரூம்.காலையில் ஆறுதலாக எழும்பி  நல்லா பிரேக்பாஸ்ட் சாப்பிட்டு விட்டு, வண்டியில் ஏறினால் கடலோரமாய் வண்டியை பார்க் செய்து விட்டு  நாள் முழுக்க கடல் நீருக்குள் தான். மதிய உணவை சிந்திப்பதில்லை எனினும்  மதியத்துக்கு பின்  மாலையானதும் அங்கே என்ன கிடைக்குதோ அதை வாங்கி சமைக்க முடியும் எனில் குட்டி குக் ஆரம்பிப்பேன்!கடலோர நகர் என்பதால் பிரெஷ் மீன்கள் மலிவாக கிடைக்கும்.  உடனே வாங்கி சுத்தப்படுத்தி  பொரியல், குழம்புன்னு  கலக்கிருவோம். இப்படி சமைத்து சாப்பிடும் போது கிடைக்கும் சுவை எங்கேயும் கிடைக்காது என்பேன்.

காஸ் ஸ்டவ்வில்  பல காய்ச்சி மினரல் வாட்டர் சேர்த்து டீயும் குடித்துக்கொள்வோம். லாங்க் ட்ரைவ் போகும் போது ஹைவேக்களில் நிறுத்தி இந்த மாதிரி டீ  உடனே போட்டு குடிக்க ரெம்ப பிடிக்கும்.

பெரும்பாலும் பயண நேரத்தில் ஹோட்டல்களில் பாஸ்ட் பூட் உணவுகளை தவிர்த்து விடுவோம். ஒரு நாள் பிள்ளைகளின்  விருப்பத்துக்கு கேட்டு அழைத்து சென்றாலும் மகன் பெரும்பாலும் தவிர்த்து விடுவார். காலை உணவு தவிர நாங்களே தயார் செய்து உண்பது தான் எமக்குப்பிடிக்கும்.

3. எப்படி பயணிக்கப் பிடிக்கும்?
ஐன்னலோரமா தலையை சாய்த்துகொண்டே தூங்கிட்டு  பயணம்
செய்ய பிடிக்கும். இன்னும் கொஞ்சம் இந்த பயணம் நீளாதா என கேட்கவும் வைக்கும். ஹாஹா!

4.பயணத்தில் கேட்க விரும்பும் இசை
உண்மை சொன்னால் பயண நேரம் இசை கேட்க பிடிக்காது!  கூட வருபவர்களுடன் அரட்டையாய் பேசிட்டு வரத்தான் பிடிக்கும்! அல்லது அமைதியாக  என்னை கடந்து போகும் மலைகள், மரங்கள், கட்டடங்கள் என பார்த்து ரசிக்க பிடிக்கும்,  இசைகளில் ரெம்ப அதிர வைக்காத அமைதியூட்டும் எந்த இசையானாலும்  தனியே இருக்கும் போது மட்டுமே கேட்க பிடிக்கும். ஆட்கள் இருக்குமிடங்களில்  மியுசிக் போடுவது ம் கேட்பதும் எப்பொழுதுமே பிடிக்காது!

5.விருப்பமான பயண நேரம்
அதிகாலையும் மாலை நேரமும் விருப்பமான பயண நேரம், நள்ளிரவும் நடுப்பகலும் பயணம் செய்வதை தவிர்த்து விடுவேன்!

6. விருப்பமான பயணத்துணை.
வாழ்க்கையில் முழுமைக்கும் முடிந்த பின்னும்  என் கணவர் மகன் மகள் கொண்ட நான்கு பேரும் சேர்ந்தே இருக்கணும்.. தனித்து நெடுந்தூரம் பயணம் செய்யும் சூழல் வரவே கூடாது!

7. பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?
காரில் பயணம் எனில்  எதையும் படிக்க மாட்டேன்! ரயிலில் எனில் தொடர்கதை அல்லாத வார இதழ்கள் எதுவானாலும்  கைப்பையில் சில புத்தகங்கள் வைத்திருப்பேன். நாவல்கள்  வீட்டில் இருக்கும் போது தான் படிப்பதுண்டு.

8.  விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?
அறிமுகமான யாருமில்லாத புதிய இடம், கடற்கரையோடு சூழ்ந்த சூழல். தேடி எந்த முன்னேற்பாடும் இல்லாமல் தீடிரென பயணம் செய்ய பிடிக்கும்.

9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?
அந்த நேரத்தில் எதை விரும்பி கேட்டிருக்கின்றேனோ அப்பாடலை முணுமுணுப்பேன்!
பெரும்பாலும்......
ஒவ்வொரு பூக்களுமே சொல்கின்றதே!
நண்பனே நண்பனே ஆருயிர் நண்பனே!
காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா?



விண்ணில் செல்லத்தான் ஒரு சிறகுகள் தருவாயா?
இந்த பாடல் சுவிஸர்லாந்தில் எங்கள் பகுதியில் எடுக்கப்பட்டிருக்கின்றது என்பது கூடுதல் தகவல்

10. கனவுப் பயணம் ஏதாவது ?
செவ்வாய்க்கிரகம் போக முடியல்லன்னாலும் நம்ம பக்கத்திலிருக்கும் மூன்னுக்கு ஒரு வாக் போய் வரணும் என நீண்ட நாள் ஆசை! எப்போது தான் நிறைவேறுமோ?

போவோமா ஊர்க்கோலம் பூலோகம் எங்கெங்கும்!
பயணத்தில் என்னுடன் தொடர.........

பூவைப்பறிக்க கோடரி எதற்கு எனக்கேட்கும் கில்லர்ஜி!
வசந்த ஊஞ்சலாடும் மனசு குமார்  
காணாமல் போன கனவுகளுக்கு சொந்தக்காரியாம் ராஜி  



அவர்களிடம்  கேட்கவே இல்லை. ஆனால் பதில் சொல்லி விடுவார்கள் என நிச்சயம் நம்புகின்றேன். நம்பிக்கை தானே வாழ்க்கை!  என் நம்பிக்கையை காப்பாத்துங்க மக்களுக்கு மக்களே!

http://alpsnisha.blogspot.ch/2016/01/blog-post_34.html


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்த்தென்றலில்.... பயணங்கள் முடிவதில்லை....போவோமா ஊர்க்கோலம்! Empty Re: ஆல்ப்த்தென்றலில்.... பயணங்கள் முடிவதில்லை....போவோமா ஊர்க்கோலம்!

Post by நண்பன் Sun 10 Jan 2016 - 10:38

மறக்க முடியாத மகிழ்ச்சியான உங்கள் சுற்றுலா பற்றிய கட்டுரை படித்தேன் அருமையாக உள்ளது அத்தோடு பயணத்தின் போது உங்களுக்கு பிடித்த வற்றையும் படித்தேன்  சூப்பர் 

3. எப்படி பயணிக்கப் பிடிக்கும்?
ஐன்னலோரமா தலையை சாய்த்துகொண்டே தூங்கிட்டு  பயணம் 
செய்ய பிடிக்கும். இன்னும் கொஞ்சம் இந்த பயணம் நீளாதா என கேட்கவும் வைக்கும். 
எங்க போனாலும் தூங்க நினைக்கும் உங்களுக்கு தூங்கு மூஞ்சி என்று பெயர் சூட்டாமல் என்னவென்று சூட்டுவது ஹி ஹி 


பயணித்தில் கூட நமக்குப் பிடித்தவர்கள் வந்தால் தூங்கவே பிடிக்காது பயணம் முடியும் வரை பேசிட்டே வருவோம்  அட சீக்கிரமே பயணம் முடிந்து விட்டதே என எண்ணவும் தோணும் அந்தப் பயணம் சூப்பரா இருக்கும்  


தனித்து நெடுந்தூரம் செல்லும் பயணம் பிடிக்காது என்று சொன்னீர்கள் அது சூப்பர் வாழ்த்துக்கள்
நன்றியுடன் நண்பன் 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆல்ப்த்தென்றலில்.... பயணங்கள் முடிவதில்லை....போவோமா ஊர்க்கோலம்! Empty Re: ஆல்ப்த்தென்றலில்.... பயணங்கள் முடிவதில்லை....போவோமா ஊர்க்கோலம்!

Post by rammalar Sun 10 Jan 2016 - 11:17

பயணக் கட்டுரை சுவைபட இருந்தது...
-
ஆல்ப்த்தென்றலில்.... பயணங்கள் முடிவதில்லை....போவோமா ஊர்க்கோலம்! 27-traveltips2
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23974
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஆல்ப்த்தென்றலில்.... பயணங்கள் முடிவதில்லை....போவோமா ஊர்க்கோலம்! Empty Re: ஆல்ப்த்தென்றலில்.... பயணங்கள் முடிவதில்லை....போவோமா ஊர்க்கோலம்!

Post by சே.குமார் Mon 11 Jan 2016 - 6:17

ஆஹா.... நல்ல பயணம்....
சூப்பர் அக்கோவ்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ஆல்ப்த்தென்றலில்.... பயணங்கள் முடிவதில்லை....போவோமா ஊர்க்கோலம்! Empty Re: ஆல்ப்த்தென்றலில்.... பயணங்கள் முடிவதில்லை....போவோமா ஊர்க்கோலம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum