Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
சீனப் பெண்ணை மணக்கும் மதுரை இளைஞர்: ‘டைட்டானிக்’- காதலை விஞ்சிய உருக்கம்
2 posters
Page 1 of 1
சீனப் பெண்ணை மணக்கும் மதுரை இளைஞர்: ‘டைட்டானிக்’- காதலை விஞ்சிய உருக்கம்
பிரபல ெஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய உலகப் புகழ்பெற்ற ‘டைட்டானிக்’ திரைப்படப் பாணியில் இத்தாலி கப்பலில் பணிபுரிந்தபோது சீனப் பெண்ணை காதலித்த மதுரை இளைஞர் கலாச்சாரம், மொழி, நாடு கடந்து அவரை வரும் 24-ம் திகதி தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்ய உள்ளார்.
மதுரை அய்யர் பங்களாவைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் ராக்பெல்லர் என்ற பார்த்தீபன் (29). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பிடிஎஸ் சுற்றுலா அறிவியல் மற்றும் எம்பிஏ ஹோட்டல் ெமனேஜ்மெண்ட் படிப்பை முடித்துள்ளார். தற்போது இவர் சீனாவில் ஷாங்காய் மாநகரில் உள்ள தனியார் ஹோட்டல் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் பணிபுரிகிறார். இவரும், சீனாவின் ஷாங்காயை சேர்ந்த லீயூஜியும் (27) கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
தற்போது பெற்றோர் சம்மதத்துடன் இவர்களது திருமணம், வரும் 24-ம் திகதி மதுரையில் பப்பிஸ் ஹோட்டலில் தமிழ் கலாச்சார முறைப்படி நடைபெறுகிறது. பார்த்தீபன், லீயூஜியை முதன்முதலில் இத்தாலி கப்பல் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது சந்தித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மலர்ந்த காதல், தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.
தமிழக இளைஞர்கள், வெளிநாட்டுப் பெண்களை காதலித்து திருமணம் செய்வது புதிதல்ல என்றாலும், பார்த்தீபன் - லீயூஜி காதல் திருமணம் புதுமையானது என்கிறார் அவரது நெருங்கிய நண்பர் மதுரையைச் சேர்ந்த பாக்கியராஜ்.
நண்பர் பார்த்தீபனின் காதல் திருமணம் பற்றி, அவர் மேலும் கூறியதாவது: நான் ஏர்செல் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஆரம்பத்தில், மதுரையில் தனியார் ஹோட்டலில் வரவேற்பு மேலாளராகப் பணிபுரிந்தேன். 2004-ம் ஆண்டு என்னிடம் பயிற்சிப் பணிக்காக பார்த்தீபன் வந்தார். ஹோட்டல் நிர்வாகத் துறையில் அவருக்கு இருந்த நுட்பமான அறிவைக் கண்டு வியந்தேன். நான் அவரிடம், இந்த துறையில் வருங்காலத்தில் கண்டிப்பாக நீ பெரிய ஆளாக வருவாய் என்றேன். அதுபோல, பயிற்சி முடித்தவுடன் பார்த்தீபனுக்கு இத்தாலி கப்பல் நிறுவனத்தில் வேலை கிடைத்து அங்கு சென்றார். அங்கு அவருடன் லீயூஜியும் பணிபுரிந்துள்ளார். ஒருமுறை கப்பல் நடுக்கடலில் சென்றபோது ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் சிக்கிய லியூஜியை பார்த்தீபன் காப்பாற்றி உள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நல்ல புரிதலாக மாறி காதலாக மலர்ந்துள்ளது. அவர்களுடைய காதலுக்கு பெற்றோர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தது.
இந்த சூழ்நிலையில், ஒருமுறை விடுமுறைக்காக சீனா சென்ற லீயூஜி மீண்டும் இத்தாலிக்கு திரும்பவில்லை. லியூஜியின் பெற்றோர், அவரை திருப்பி அனுப்பவில்லை. பார்த்தீபனால் லீயூஜியின் காதலை மறக்கவும் முடியவில்லை. அவரை பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.
காதலிக்காக இத்தாலியில் கப்பல் நிறுவன வேலையை உதறிய பார்த்தீபன், சுற்றுலா விசாவில் சீனாவுக்கு சென்று, ஷாங்காயில் உள்ள லீயூஜியை சந்தித் தார். அவரோ, பெற்றோரின் எதிர்ப்பை மீறி என்னால் உங்களை திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத் துள்ளார்.
பார்த்தீபன், அவரிடம் பெற்றோரை நான் சம்மதிக்க வைக்கிறேன் என ஷாங்காயிலேயே ஒரு ஹோட்டல் நிறுவனத்தில் வேலை தேடிக்கொண்டு காதலிக்காக அங்கேயே தங்கிவிட்டார். வெளிநாடுகளில் பொழுதுபோக்குக்காக நெருங்கி பழகிவிட்டு, கொஞ்ச நாட்களில் அதை மறந்து பிரிந்துவிடும் இளைஞர்களுக்கு மத்தியில், இத்தாலியில் பழகிய நட்பை மறக்காமல் சீனாவுக்கே தன்னைத்தேடி வந்த பார்த்தீபனுடைய உண்மையான அன்பும், காதலும் லீயூஜியை மிகவும் கவர்ந்து விட்டது. சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் வேலைபார்த்த பார்த்தீபன், லீயூஜியின் பெற்றோரை சந்தித்துப் பேசியுள்ளார்.
லீயூஜியின் பெற்றோர் அவரிடம் நாடு கடந்து கலாச்சாரம் மாறி செய்யும், திருமணம் கடைசி வரை நீடிக்காது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஒருகட்டத்தில் பார்த்தீபனின் நெருக் கடியால் லீயூஜிக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் சீனாவைச் சேர்ந்த மணமகனை பார்த்து நிச்சயம் செய்தனர். தமிழகத்தில் பார்த்தீபன் வீட்டிலும் அவருக்கு பெண் பார்க்கத் தொடங்கினர். அதிர்ச்சியடைந்த இருவரும் தங்கள் பெற்றோர்களிடம் மிகுந்த போராட்டத்துக்கு மத்தியில் பேசி, அவர்களுடைய உண்மையான அன்பு, காதலை வெளிப்படுத்தி உள்ளனர். கடைசியில் அவர்களுடைய உருக்கமான காதலை பெற்றோர் ஏற்றனர். தமிழ் கலாச்சார முறைப்படி மதுரையில் வரும் 24-ம் திகதி இருவருக்கும் திருமணம் நடக்கிறது என்றார்.
காதல் உண்மையாக இருந்தால் நாடு, சாதி, மதம், கலாச்சாரம் கடந்தும் வெற்றிபெறும் என்பதற்கு பார்த்தீபன் - லீயூஜி காதல் ஒரு உதாரணம்
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சீனப் பெண்ணை மணக்கும் மதுரை இளைஞர்: ‘டைட்டானிக்’- காதலை விஞ்சிய உருக்கம்
நலம் வாழ வாழ்த்துவோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» டொல்பின் மேல் வந்து காதலை வெளிப்படுத்திய சீன இளைஞர்
» டொல்பின் மேல் வந்து காதலை வெளிப்படுத்திய சீன இளைஞர்(வீடியோ இணைப்பு)
» டொல்பின் மேல் வந்து காதலை வெளிப்படுத்திய சீன இளைஞர்(காணொளி இணைப்பு)
» ஒளியை விஞ்சிய வேகம்
» ஒளியை விஞ்சிய வேகம்
» டொல்பின் மேல் வந்து காதலை வெளிப்படுத்திய சீன இளைஞர்(வீடியோ இணைப்பு)
» டொல்பின் மேல் வந்து காதலை வெளிப்படுத்திய சீன இளைஞர்(காணொளி இணைப்பு)
» ஒளியை விஞ்சிய வேகம்
» ஒளியை விஞ்சிய வேகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|