சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Today at 20:10

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Today at 20:03

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15

» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06

» பல்சுவை
by rammalar Today at 2:19

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07

» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02

» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55

» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48

» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57

» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45

» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Khan11

மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள்

Go down

மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Empty மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள்

Post by rammalar Sun 14 Feb 2016 - 18:47

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பது போல சூரியன் – புதன் சேர்க்கையை ஜாதகத்தில் பெற்றவர்கள், இளம் வயதிலேயே அபாரமான மூளை பலத்தோடு இருப்பார்கள். நிர்வாகத் திறனோடு கூர்மையான புத்தியும் சேர்ந்திருக்கும். சூரியன் – புதன் சேர்க்கை என்பது, எதிலுமே நிபுணத்துவத்தைக் கொடுக்கும் அமைப்பாகும். குறிப்பாக லக்னத்திலும், நான்கு, ஏழு, எட்டு மற்றும் பன்னிரெண்டாம் இடங்களிலும் இந்த இரு கிரகங்கள் அமரும்போது இன்னும் நன்றாக இருக்கும்.

மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் 24
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24604
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Empty Re: மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள்

Post by rammalar Sun 14 Feb 2016 - 18:48


இவர்கள் சூரியனின் ஆளுமையும், தலைமைக் குணமும், புதனின் நுட்பமான புத்தியும், நிபுணத்துவமும் பெற்றுத் திகழ்வார்கள். நாடாளும் யோகமும், மக்களிடம் மதிப்பும் இயல்பாகக் கிடைக்கும். கஷ்டப்படாத ஜீவனமும், சுகமான வாழ்க்கையும் வாழ்வார்கள். சிறிய வயதிலேயே தனித்துச் செயல்படுவார்கள். பாடநூலைத் தாண்டி நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்வார்கள். இளம் வயதில் நூலகமே கதி என்று கிடப்பார்கள்.
-
இந்த அமைப்பானது ஏதேனும் ஒரு முயற்சியை அளித்துக் கொண்டேயிருக்கும். எதையாவது சாதிக்கும் வைராக்கியத்தோடு வலம் வரச் செய்யும். அநியாயத்தை தட்டிக் கேட்கத் தயங்க மாட்டார்கள். மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு சிந்திப்பார்கள். புதனும், சூரியனும் இணைந்தால் எதிலுமே தீவிரமாக ஈடுபடுவார்கள்.
மிதுன லக்னத்தின் அதிபதியான புதன், லக்னத்திலேயே சூரியனுடன் சேர்ந்து நிற்பது சிறப்பு. சேவகாதிபதி சூரியனுடன் புதன் சேர்ந்திருப்பது என்பது எதிலும் ஒரு நுணுக்கத்தை கொடுக்கும். புத்தி சாதுர்யமும், தைரியமும், சுறுசுறுப்பும்  கொடுத்து வழி நடத்தும். பல்வேறு விதமான திறமைகளோடு இவர்கள் விளங்குவார்கள். இளைய சகோதரர்கள் மிகவும் அனுசரணையோடு இருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து தொழில், வியாபாரம் தொடங்குவார்கள். பளிச் தோற்றத்தோடும், அனுபவ முதிர்ச்சியான முகக் களையோடும் பொலிவோடு இருப்பார்கள்.
-
கடக ராசியான இரண்டாம் இடத்தில் புதனுடன் மூன்றுக்குரிய சூரியன் சேர்ந்திருந்தால், பேச்சால் ஏதேனும் ஒரு பிரச்னை வந்தபடி இருக்கும். சூரியன் இங்கு பகை பெற்றிருப்பதால், கண்வலி மற்றும் கண்ணில் ஏதேனும் தொந்தரவு இருந்த படியே இருக்கும். கண்ணில் சிறு பிரச்னை என்றாலும் உடனே கவனிக்க வேண்டும். சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு பல்லில் பாதிப்பு உண்டாகும். அரசால் ஏதேனும் ஆபத்து வரும். தேவையற்று வீண்பழிகளையும் வழக்குகளையும் சந்திக்க நேரும். சிறுவயதில் படிப்பு தடைபட்டு, பிறகு உயர்கல்வி நன்றாக அமையும்.  சிலருக்கு ஐந்து வயது வரை பேச்சு திக்கி, பிறகு சரியாகும். இவர்கள் பெரியோர்களை மதிக்க வேண்டும். வீண் செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஒருபோதும் கூட்டுத் தொழிலில் ஈடுபடக் கூடாது.
-
மூன்றாம் இடமான சிம்மத்தில் சூரியனும் புதனும் சேர்ந்திருந்தால், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். இளம் வயதிலேயே வீடு, மனை வாங்கி செட்டில் ஆகி விடுவார்கள். சூரியன் இங்கு சிம்மத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் எளிதாக அரசுப் பதவியில் அமர்வார்கள். மிகச் சிறந்த ஆலோசகர்களாகவும் வழிகாட்டிகளாகவும் திகழ்வார்கள்.

நீண்ட ஆயுள் உண்டு. பலர் சுய தொழில் தொடங்கி முன்னேறுவார்கள். மக்கள் செல்வாக்கு இருப்பதால் அரசியலிலும் சிலர் ஈடுபடுவார்கள். போகத்தில் மிகவும் ஈடுபாட்டோடு இருப்பார்கள்.
கன்னி ராசியில் லக்னாதிபதியான புதன் உச்சம் பெறுகிறார். அப்படி உச்சம் பெற்ற புதனோடு மூன்றாம் இடத்திற்குரிய சூரியன் சேருகிறார். இந்த அமைப்பு உள்ளவர்கள், மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தாலும் நல்ல நிலைக்கு முன்னேறுவார்கள். தாயார் ஜீனியஸாக இருந்து வழிநடத்துவார்கள். இவர்கள் அன்னையைப் போற்றுவார்கள். தங்களைச் சுற்றியிருப்பவர்களிடமிருந்து வித்தியாசப்படுவார்கள். சொந்தத் தொழிலோ, வேலையோ, எதுவாக இருந்தாலும் சிரமமின்றி கிடைக்கும். புத்தகம் எழுதுவதில் மிகவும் ஆவலோடு ஈடுபடுவார்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு எப்போதும் உண்டு. பயணங்களை சுகமாக மேற்கொள்வார்கள்.
ஐந்தாம் இடமான துலாம் ராசி, சூரியனுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம். இங்கு லக்னாதிபதியும், சுகாதிபதியுமான புதனுடன் மூன்றுக்குரிய சூரியன் அமர்கிறார். இந்த இடத்தில் சூரியன் நீசமாகிறார். இதனால் இவர்கள் எப்போதும் பதற்றமாகவே இருப்பார்கள். சொந்த பந்தங்களுக்கு எவ்வளவு நல்லது செய்தாலும், கெட்ட பெயரே மிஞ்சும். பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினைகளால் பிரச்னைகளும், பாரபட்சமும் இருக்கும். இவர்களுக்கு குழந்தை பாக்கியம் சற்றே தாமதமாகக் கிடைக்கும். பெண் குழந்தைகளால் விசேஷமான அதிர்ஷ்ட பலன்கள் கிட்டும். கனவுத் தொல்லைகளால் அவதிப்படுவார்கள். உறக்கமின்மையும் தொடரும். சொந்த ஊரிலிருந்து வெளியூருக்கு வந்தால் இன்னும் நன்றாக முன்னேறலாம்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24604
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Empty Re: மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள்

Post by rammalar Sun 14 Feb 2016 - 18:50

ஆறாம் இடமான விருச்சிகம், லக்னாதிபதியான புதனுக்கு பகை வீடாகும். ஆனால், சூரியனுக்கு விசேஷமான வீடு. லக்னாதிபதி ஆறாம் வீட்டில் இங்கு சூரியனோடு சேர்க்கை பெற்று மறைவதால், இவர்கள் சரியான அவசரக் குடுக்கையாக இருப்பார்கள். கல்விப் புலமையும் அறிவுக் கூர்மையும் மிகுந்திருக்கும். ஆனால் இடம், பொருள், ஏவல் அறிந்து பேசத் தெரியாது. ஆட்சி மட்டத்தில் செல்வாக்கோடு திகழ்வார்கள். சைனஸ் தொந்தரவு எப்போதும் இருக்கும். கழுத்து வலி, எலும்புத் தேய்வு என்றெல்லாம் சிரமப்படுவார்கள். சூரியன் ஆறாம் இடத்தில் இருப்பதால், நான்கு ரூபாயை வைத்துக்கொண்டு நானூறு ரூபாய் பொருளை விலை பேசுவார்கள். இவர்களுக்கு எதிரிகளே இவர்கள்தான். இவர்களே ஏதாவது சொல்லி மாட்டிக் கொள்வார்கள். பொருளாதாரத்தில் ஏதேனும் ஏற்ற இறக்கங்கள் இருந்தபடி இருக்கும். தனுசு ராசியில் லக்னாதிபதியான புதன் அமர்ந்து கொண்டு ஏழாம் பார்வையாக மிதுன லக்னத்தைப் பார்க்கிறார்.
-
அதே சமயம், மூன்றாம் இடத்திற்கு அதிபதியான சூரியன் ஏழாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். ஏழு என்பது வாழ்க்கைத்துணைக்குரிய ஸ்தானமாகும். இங்கு இவ்விரு கிரகங்களும் அமரும்போது வாழ்க்கைத்துணையோடு ஏதேனும் கருத்து வேறுபாடு வந்தபடி இருக்கும். வாழ்க்கைத்துணைக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்னைகள் இருந்தபடி இருக்கும். கண்களில் சிறிய பிரச்னை என்றாலும் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. கூட்டுத் தொழில், வியாபாரம் சரிவராது. மற்றபடிக்கு இந்த இடமும் சாதகமான பலன்களையே தரும். பணவரவோ, செல்வாக்கோ கொஞ்சம் கூட குறையாது.  விட்டுக் கொடுப்பதன் மூலமாக சில விஷயங்களை சரிசெய்து கொள்ளலாம் என்பதை நன்கு உணர்ந்தாலே போதுமானது.
-
எட்டாம் இடமான மகர ராசியில் லக்னாதிபதியான புதனும், சூரியனும் சேர்ந்து இருப்பது நல்லதுதான். வாழ்க்கை பிரச்னை இல்லாமல் நகரும். நல்ல விஷய ஞானம் இருக்கும். ஏதேனும் ஒன்றில் நிபுணத்துவமும் இருக்கும். ஆனால், எல்லாம் காலம் கடந்த பின்னரே கிட்டும். இவர்கள் எப்போதும் அலைச்சல், டென்ஷன் என்றுதான் இருப்பார்கள். கடந்து போன விஷயங்களை நினைத்தே வருந்துவார்கள். இதனாலேயே எதிலும் திருப்தியுற மாட்டார்கள். எல்லா விஷயத்தைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பார்கள். சகலகலா வல்லவர்களாக விளங்குவார்கள். ஆனால், என்ன… எவ்வளவு பணம் இருந்தாலும் வீண் செலவு செய்துவிட்டு வெறுங்கையோடு விழிப்பார்கள்.
-
ஒன்பதாம் இடமான கும்ப ராசியில், பிதுர்க்காரகனான சூரியனோடு, லக்னாதிபதியான புதன் அமர்ந்தால் தந்தையோடு நெருக்கமாக இருக்க மாட்டார்கள். ஏதேனும் கருத்து மோதல் இருந்தபடியே இருக்கும். தந்தையைவிட தான் வித்தியாசப்பட வேண்டும் என்று முயற்சித்து அப்படியே இருப்பார்கள். திடீர் பயணங்கள் செய்தபடி இருப்பார்கள். அலைச்சலால் லாபம் உண்டு. நான்கு இடம் அலைந்துதான் சம்பாதிக்க முடியும். ஆனால் சேமிப்புகள் அதிகம் இருக்காது.
-
பத்தாம் இடமான மீன ராசியில் புதன் நீசமாகிறார். இங்கு சூரியன் புதனோடு சேர்க்கை பெற்று அமர்வதால், பொதுவாக ஜீவகாருண்ய சிந்தனை மேலோங்கியிருக்கும். உதவி என்றால் முதல் ஆளாக நிற்பார்கள். எதிலும் தடாலடியாக முடிவெடுப்பார்கள். அரசியலில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். எம்.எல்.ஏ., எம்.பி. என்று ஆவார்கள். பலர் சி.ஏ. படித்துவிட்டு ஆடிட்டர் ஆவார்கள். அதேபோல ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறும் திறமையும் இவர்களுக்கு உண்டு. அந்த அளவிற்கு இங்கு கிரகங்கள் வலிமையாக நின்று பலன்களை அள்ளித் தரும்.
-
மேஷத்தில் சூரியன் உச்சம் பெற்று அமர்கிறார். அதாவது மூன்றுக்குரிய சூரியன் உச்சம் பெறுவதால் இளைய சகோதரர்களால் எப்போதும் நன்மை உண்டு. இது 11ம் இடமாகவும் அமைவதால் மூத்த சகோதர, சகோதரிகளாலும் நன்மைகள் அதிகமுண்டு.  இவர்கள் எந்தத் தொழிலைத் தொடங்கினாலும் அதில் எப்பாடுபட்டாவது முன்னேறுவார்கள். துணிவும் ஈடுபாட்டுணர்வும் இவர்களோடு பிறந்தது.
-
ரிஷபமான பன்னிரெண்டில் சூரியனும் புதனும் இடம்பெற்றிருந்தால் சகல துறைகளைக் குறித்த ஞானமும் இவர்களிடத்தில் நிரம்பியிருக்கும். அரசாங்க அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்றாலும், இவரைத் தேடி வந்து ஆலோசனை பெற்றுச் செல்வார்கள். ஆத்மகாரகனான சூரியனோடு புதனும் சேர்ந்தால் எங்கேனும் தீர்த்த யாத்திரை சென்றபடி இருப்பார்கள். ஆன்மிகப் புத்தகங்களை எழுதிக் குவிப்பார்கள். மகான்களின் ஜீவசமாதிகளை தரிசித்தபடி இருப்பார்கள்.
-
பொதுவாகப் பார்த்தால், இது ஒரு நல்ல அமைப்புதான்.
ஆனால், கிரகங்கள் நீசமோ அல்லது பகையோ பெறும்போது
பாதிப்புகள் ஏற்படும். அப்படியான பாதிப்புகள்தான் மிதுன
லக்னத்தை மையமாகக் கொண்ட சூரியன் – புதன் சேர்க்கை
ஏற்படும்போதும் நிகழ்கிறது. இந்த பாதிப்பிலிருந்து மீண்டெழ,
மதுரைக்கு அருகேயுள்ள திருமோகூரில் அருள்பாலிக்கும்
காளமேகப் பெருமாள் ஆலயத்திலுள்ள பெருமாளையும்,
இத்தலத்தின் மிகவும் விசேஷ தெய்வமான சக்கரத்தாழ்வாரையும்
தரிசியுங்கள்.
-
-----------------------------
ஓவியம்: மணியம் செல்வன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24604
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள் Empty Re: மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum