சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

வெள்ளை மாளிகைக்கு குடியேறும் சர்ச்சை மன்னன்! Khan11

வெள்ளை மாளிகைக்கு குடியேறும் சர்ச்சை மன்னன்!

Go down

வெள்ளை மாளிகைக்கு குடியேறும் சர்ச்சை மன்னன்! Empty வெள்ளை மாளிகைக்கு குடியேறும் சர்ச்சை மன்னன்!

Post by rammalar Wed 9 Nov 2016 - 15:05

வெள்ளை மாளிகைக்கு குடியேறும் சர்ச்சை மன்னன்! T0kjq5SQB677Q1ZDXTpw+First-Debate-03-1200_13245
--
அமெரிக்காவின் அதிபர் தேர்தல் களத்தில் குடியரசுக் கட்சி 
சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
ஆனால், இவர் நம்மூர் அரசியல்வாதிகள் மாதிரி சர்ச்சைக்குரிய 
கருத்துக்களை பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தவர்; 
-
அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறையில் ஜாம்ப வானாகவும், 
ஊடகங்களில் பிரபலமானவராகவும் இருந்தவர் இன்று 
அமெரிக்காவின் அதிபராகி வெள்ளை மாளிகைக்கு குடியேற உள்ளார்.
டொனால்ட் டிரம்ப் 

ரியல் எஸ்டேட் டு அரசியல்! 


டொனால்ட் ஜான் டிரம்ப்... இதுதான் ட்ரம்ப்-ன் முழுப் பெயர். 
1946-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி பிறந்த டிரம்ப்-க்கு இப்போது 
69 வயது. இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர், 
எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சிப் பிரபலம், டிரம்ப் 
நிறுவனத்தின் தலைவராக உள்ளார். 

இவருடைய நிகர சொத்து மதிப்பு 4.5 பில்லியன் டாலர்
(இந்திய மதிப்பில் சுமார் ரூ.30,000 கோடி.)
டொனால்ட் டிரம்ப், தனது தந்தையின் மூலம் ரியல் எஸ்டேட் 
தொழிலுக்கு வந்தவர். தந்தை எட்டடி பாய்ந்தால், மகன் 
பதினாரடி பாய்கிற மாதிரி அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தை
மிகப் பெரிதாக வளர்த்தெடுத்தவர். 

இன்று அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறையில்
ஜாம்பவானாகவும், ஊடகங்களில் பிரபலமானவராகவும் 
இருந்து வருகிறார் ட்ரம்ப்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24325
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வெள்ளை மாளிகைக்கு குடியேறும் சர்ச்சை மன்னன்! Empty Re: வெள்ளை மாளிகைக்கு குடியேறும் சர்ச்சை மன்னன்!

Post by rammalar Wed 9 Nov 2016 - 15:06

ஹில்லாரி vs டிரம்ப்!

ஜனநாயக கட்சியைப் பொறுத்தவரை, முன்னாள் 
வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் 
அந்தக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். 

குடியரசு கட்சியில் மெகா கோடீஸ்வர தொழிலதிபர் 
டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 
நடைபெறுகிறது. மெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக
போட்டியிட மூன்று அடிப்படை தகுதிகள் அவசியம். அந்த 
நாட்டின் சட்டபூர்வ குடிமகனாகப் பிறந்திருக்க வேண்டும். 
குறைந்தபட்சம் 35 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். 
அமெரிக்காவில் 14 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். 
இவை அடிப்படை விதியாக இருந்தாலும், அவ்வளவு எளிதாக 
யாரும் அதிபர் வேட்பாளராக முடியாது.


சர்ச்சை மன்னன்!


அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பே அதிபராவதற்கான 
வாய்ப்புகள் அதிகம் உள்ள வேட்பாளராக பேசப்பட்டவர் 
டொனால்ட் டிரம்ப். ஆனால், இவர் அவ்வப் போது, 
சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து விமர்சனங்களை 
தேடிக்கொள்வதிலும் நிகரில்லாதவராக விளங்கியவர்.


‘நான் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றால் 
வெளிநாட்டில் இருந்துவந்து அமெரிக்காவில் சட்டத்துக்குப் 
புறம்பாக குடியேறியுள்ளவர்களை வெளியேற்றுவேன்.

ஈரானுடன் அமெரிக்கா செய்துள்ள அணு ஒப்பந்தம் என்னும் 
பேரழிவை உடனடியாக ரத்து செய்வேன். 

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சண்டையிட 
சவுதி ராணுவ தரைப்படையை சவுதி அரேபியா அரசு அனுப்பி 
வைக்க வேண்டும். 
இல்லாவிட்டால், நான் அமெரிக்க அதிபரான பிறகு சவுதியில் 
இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவேன்’ 
என பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கொஞ்சமும் 
தயங்காமலும் யோசிக்காமலும் தினமும் சொல்லி வந்தவர் 
ட்ரம்ப். 
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24325
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வெள்ளை மாளிகைக்கு குடியேறும் சர்ச்சை மன்னன்! Empty Re: வெள்ளை மாளிகைக்கு குடியேறும் சர்ச்சை மன்னன்!

Post by rammalar Wed 9 Nov 2016 - 15:06


இந்தியாவுக்கு எதிராக..!

இதுமட்டும் இல்லாமல் வேலைவாய்ப்பு பற்றிய பிரசாரம் 
அமெரிக்க மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி 
இருப்பதை தெரிந்துகொண்ட டொனால்ட் டிரம்ப் அது 
பற்றியும் பேசி மாட்டிக் கொண்டார். 

“இந்தியா, சீனா, ஜப்பான், மெக்சிகோ போன்ற நாடுகள் 
அமெரிக்கர் களின் வேலை வாய்ப்பை தட்டிப் பறித்துள்ளன. 
இந்த வேலை வாய்ப்புகளை மீட்டு, அமெரிக்க மக்களுக்கு 
வழங்குவேன். மெக்சிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் 
இடையே எல்லைச் சுவர் எழுப்புவேன்’’ என சர்ச்சைக்குரிய 
கருத்துக்களை தெரிவித்து பெரும் விமர்சனத்துக்கு 
உள்ளானார்.

காந்தியின் பொன்மொழி! 

பல இடங்களில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் மக்களின்
எதிர்ப்பை சந்தித்துவந்த டிரம்ப், யாரோ கூறிய ஒரு வாசகத்தை 
தனது பிரசாரத்துக்கு பயன்படுத்தும் நோக்கத்தில் காந்தியின் 
பொன்மொழி என்று குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

‘முதலில் உன்னைப் புறக்கணிப்பார்கள். பிறகு உன்னைப் 
பார்த்து சிரிப்பார்கள். பின்னர் உன்னோடு சண்டையிடுவார்கள். 
கடைசியாக நீதான் ஜெயிப்பாய்’ என்று காந்தியின் 
பொன்மொழி என்று தவறாக குறிப்பிட்டு பேசினார். 

யாரோ சொன்னதை எல்லாம் காந்தி சொன்னதாக டொனால்ட் 
டிரம்ப் உளறி வருகிறார் என இவரை கிண்டலடித்து, கேலி செய்து 
விட்டனர் நெட்டிசன்கள்.

சொந்தச் செலவில்..!


அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்கள் தேர்தல் 
செலவுக்காகப் பெரும் தொகையைத் திரட்டி வந்தனர். 
இதில் தொழிலதிபர்கள் பலரும் பெரும் தொகையை 
நன்கொடையாக அளித்து வந்தனர். இந்த நிலையில், தமது
சொந்தப் பணத்தையே தேர்தலில் செலவு செய்தவர்தான் 
டொனால்ட் டிரம்ப். 

நன்கொடை அளிப்பவர்கள், பிரதிபலனை எதிர்பார்ப்பார்கள். 
அதனால் சொந்த செலவிலேயே அதிபர் தேர்தலில் போட்டியிடப் 
போவதாக அறிவித்தார் டொனால்ட் டிரம்ப். 

ஆண்டுக்கு ரூ.2,600 கோடி வருவாய் ஈட்டுகிறேன். தேர்தலில் 
ரூ.6,500 கோடி செலவானாலும் அதற்கு தாம் தயார் என கூறியவர்தான் 
டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்க அதிபர்!


இந்த நிலையில் ஹில்லாரி கிளின்டனை விட அதிக வாக்குகளை 
பெற்று டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகியுள்ளார். 
'இந்தியா தட்டிப் பறித்துள்ள வேலைவாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கு 
மீண்டும் பெற்றுத் தருவேன்’ என்பது உள்பட அமெரிக்க 
குடிமகன்களுக்கு சாதகமான பல கருத்துக்களை தெரிவித்த 
டிரம்ப் ரியல் எஸ்டேட் ஜாம்பவனாக இருந்து, இப்போது அமெரிக்காவின் 
அதிபராகி வெள்ளை மாளிகையில் குடியேற உள்ளார். 

பொறுத்திருந்து பார்ப்போம்.
-
----------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24325
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வெள்ளை மாளிகைக்கு குடியேறும் சர்ச்சை மன்னன்! Empty Re: வெள்ளை மாளிகைக்கு குடியேறும் சர்ச்சை மன்னன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum