சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Today at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41

» மோர்க்களி
by rammalar Today at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

வெள்ளை மாளிகைக்கு முன் புகைப்படம் எடுப்பதால் எதுவும் நிகழ்ந்துவிடாது: பிள்ளையான் _ Khan11

வெள்ளை மாளிகைக்கு முன் புகைப்படம் எடுப்பதால் எதுவும் நிகழ்ந்துவிடாது: பிள்ளையான் _

Go down

வெள்ளை மாளிகைக்கு முன் புகைப்படம் எடுப்பதால் எதுவும் நிகழ்ந்துவிடாது: பிள்ளையான் _ Empty வெள்ளை மாளிகைக்கு முன் புகைப்படம் எடுப்பதால் எதுவும் நிகழ்ந்துவிடாது: பிள்ளையான் _

Post by முனாஸ் சுலைமான் Tue 1 Nov 2011 - 12:33

வெள்ளை மாளிகைக்கு முன் புகைப்படம் எடுப்பதால் எதுவும் நிகழ்ந்துவிடாது: பிள்ளையான் _ Sivanation_4அடைய முடியாத இலக்கினையும் சாத்தியமற்ற விடயங்களையும் பேசிக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு முன்னால் நின்று புகைப்படம் எடுப்பதால் இலங்கையில் ஒன்றும் நிகழ்ந்துவிடப்போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் வைபவம் நேற்று திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதிபர் பி. கிருஸ்ணபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இப்பொழுதெல்லாம் நடைமுறைக்குச் சாத்தியமற்ற பல விடயங்களைப் பேசி வருகின்றனர். அண்மையில் கூட இவர்கள் வெளியிட்ட கருத்து வேடிக்கையாக இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்ட பிச்சைதான் முதலமைச்சர் சந்திரகாந்தனின் வருகை என்று அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். நான் இந்த சந்தர்ப்பத்தில் பகிரங்கமாகக் கேட்கிறேன் எதிர்வரவிருக்கும் மாகாண சபைத் தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்று ஆட்சியமைக்க முடியுமா என்று, முடியவே முடியாது ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் ஒன்று சேர்ந்து வாக்களித்தால் கூட அவர்கள் ஆட்சியமைக்க முடியாது. வேண்டுமானால் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்ள முடியுமே தவிர வேறொன்றும் செய்ய முடியாது. எதிர்க்கட்சியில் அமர்ந்து தமிழ் சமூகத்திற்கு எந்தவிதமான நன்மையையும் பெற்றுக் கொடுக்க முடியாது.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையும் மூன்று சமூகங்களும் தற்போது ஒற்றுமையுடன் செயற்படுகிறார்கள். இவ் ஒற்றுமையான தன்மை கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது ஆட்சியமைக்கும் சக்தியைத் தீர்மானிக்கவுள்ளது. கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தினை கைப்பற்றும் தரப்பினர் ஆட்சியாளர் தரப்பில் இருந்தால்தான் எமது மாகாணத்தை அபிவிருத்தி செய்யக்கூடிய அத்தனை உதவிகளும் எமக்குக் கிடைக்கும். இல்லாவிட்டால் பல தடங்கல்களுக்கு மத்தியில் போதிய அபிவிருத்தியோ வேலை வாய்ப்புக்களோ கிட்டப் போவதில்லை.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வெள்ளை மாளிகைக்கு முன் புகைப்படம் எடுப்பதால் எதுவும் நிகழ்ந்துவிடாது: பிள்ளையான் _ Empty Re: வெள்ளை மாளிகைக்கு முன் புகைப்படம் எடுப்பதால் எதுவும் நிகழ்ந்துவிடாது: பிள்ளையான் _

Post by முனாஸ் சுலைமான் Tue 1 Nov 2011 - 12:34

1923 ஆம் ஆண்டு மிக முக்கியமான தமிழர் ஒருவர் சொல்லியிருந்தார் இலங்கையில் தமிழர்களுக்கான தமிழீழம் பெற்றுக் கொடுக்கப்படவேண்டுமென்று. ஆனால் இன்றுவரை அந்த விடயம் சாத்தியமற்றதாகவே உள்ளது. தமிழீழம் பெறப்படுமாக இருந்தால் எமக்கும் சந்தோசம்தான். ஆனால் அது சாத்தியமற்ற விடயம் என்பது நன்கு புலப்படுகின்றது. சாத்தியமற்ற விடயங்களைப் பேசிப் பேசி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்களைக் குழப்புகின்றனர். மக்கள் இவர்களின் வீண் பேச்சுக்கு இடம்கொடுக்காமல் எமது முன்னேற்றத்திற்கும் எமது சமூகத்தின் வளர்ச்சிக்கும் ஏதுவான விடயங்களை செய்யக்கூடியவர்களின் வழியில் செல்ல வேண்டும்.

கனடாவில் தற்போது 4 இலட்சத்து 50 ஆயிரம் பேர் தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களில் 3 இலட்சத்து 25 ஆயிரம் பேர் வடபகுதி தமிழர்கள். இவர்கள் அங்கிருந்து தொடர்ச்சியாக அனுப்பும் நிதிகளைக் கொண்டு அப்பகுதி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அவர்களது நிதியினையும் வட பகுதிமக்களின் வாக்குகளையும் தன்வசப்படுத்தி நடைமுறைக்குச் சாத்தியமற்ற விடயங்களைப் பேசி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்பகுதிகளில் அரசியல் காய்நகர்த்துகின்றனர். இந்த நிலைப்பாடு தொடருமாக இருந்தால் எமது சமூகத்திற்காக எதனையும் பெற்றுக்கொடுக்க முடியாமல் போய் விடும்.

இன்றைய கால கட்டத்தில் போட்டி மிக்க அரசியல் சூழ்நிலை கிழக்கில் காணப்படுகின்றது. கருத்துக்களை முண்டியடித்துக் கொண்டு வெளிப்படுத்துபவர்கள் நன்கு சிந்தித்து நடைமுறைக்கும் யதார்த்த வாழ்விற்கும் எதிர்கால சந்ததியின் நன்மைக்கும் ஏற்றாற் போல் நன்மையான கருத்துக்களை வெளியிட வேண்டும். சாத்தியமற்ற விடயங்களுக்காக போராடி பல உயிர்களை பரிதாபமாக மாய்த்தவர்கள் நாம் இனியும் எமக்கு அமெரிக்காவோ, இந்தியாவோ உதவி செய்யும் என்று நினைத்துக் கொண்டிருக்க முடியாது. இவையெல்லாம் பகற்கனவு போல் பயனற்றுப் போகுமே தவிர பிரயோசனம் எதுவுமில்லை.

இன்றைய சூழலில் ஒரு சாரார் இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரென்று. உண்மையில் அவர் கொல்லப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் தமது சொந்தக் கருத்தை சொல்கிறார்களே தவிர இதில் எவ்வித உண்மையுமில்லை. அப்படியே பிரபாகரன் உயிருடன் இருந்தாலும் அவர் எமது சமூகத்திற்கு எதைப் பெற்றுத்தருவார் என்று சிந்தித்துப் பாருங்கள். வலுவிழந்த பின்னர் எதைப் பெற்றுத் தருவது?

எமது சமூகம் இழந்த பல விடயங்களை பெற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தால் எமது சமூகத்து இன வயது மாணவர்கள் சிறப்பாக கல்வியினைக் கற்றுக் கொள்ள வேண்டும். கல்வி மூலம் நாம் பல விடயங்களை பெற்றுக் கொள்வது மட்டுமல்லாது சாதனைகளையும் ஏற்படுத்த முடியும். சிறந்த கல்வியினைப் பெறுபவர்கள் செயற்பாட்டில் மாற்றத்தினைக் கொண்டு வர வேண்டும். எமது சமூகத்தின் உற்பத்திகளையும் பொருளீட்டல்களையும் அபிவிருத்தி செய்ய அறிவுடன் தொழில்நுட்ப ரீதியான அறிவினையும் பெற்று செயற்படவேண்டும். அப்போது அவ்வப் பிரதேச உற்பத்திகளை பெருக்கி அப்பிரதேசத்தவர்களும், அச்சமூகத்தினரும் உயர முடியும்.

நாம் எதிர்காலத்தில் பலமான சமூகமாக மாறவேண்டுமாக இருந்தால் கல்வியை சிறப்பாக கற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்கள் எம்மிடம் உள்ள வளங்களை பயன்படுத்தி உச்ச பயனை அடைந்து கொள்ள வேண்டும். மாறி வரும் பொருளாதார மாற்றத்திற்கு முகம் கொடுப்பதற்கு ஏற்றாற் போல் எம்மில் கல்வி வளர்ச்சி ஏற்பட வேண்டும். எம்மால் இயன்ற உட்கட்டமைப்பு வசதிகளை நாம் தற்போது ஏற்படுத்தி வருகின்றோம். அவற்றை சாதகமாகப் பயன்படுத்தி மாணவர்கள் கல்வியில் உயர வேண்டும்" என்றார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» வெள்ளை மாளிகைக்கு குடியேறும் சர்ச்சை மன்னன்!
» வங்கிக் கொள்ளை: 100 மில்லியன் நஷ்டஈடு கோரும் பிள்ளையான்!
» வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்காக முஸ்லிம் தனி அலகு கொடுக்க TNA தயாராகி வருகிறது-பிள்ளையான்
» அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் அமெரிக்க-கனடிய தமிழர்களின் போராட்டம்
» எங்கும் வெள்ளை எதிலும் வெள்ளை சேனையில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum