சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Today at 8:21

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Khan11

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?

2 posters

Go down

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Empty சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?

Post by ஹம்னா Tue 1 Mar 2011 - 16:57

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  2831364

'இந்த உலகம் மனிதனுடையது அல்ல. மனிதன் இயற்கையின் ஓர் அங்கமே. அதைச் சார்ந்துதான் மனிதன் வாழ முடியும். பூவுலகில் இந்த மகத்தான வாழ்வியல் வலையாகப் பின்னப்பட்டிருக்கிறது. இந்த வலையை மனிதன் பின்னவில்லை. மனிதன் இந்த வலையில் உள்ள சிறிய நூலிழை மட்டுமே.மனிதனின் பேராசைமிக்க செயல்கள், வெறும் புதைகுழிகள் நிறைந்த பாலைவனமாக பூமியை ஒரு நாள் மாற்றிவிடும். பூமித்தாய்க்கு என்னவெல்லாம் நிகழ்கின்றனவோ, அவையனைத்தும் அவனது குழந்தைகளுக்கும் நிகழுமல்லவா? இந்த வாழ்க்கை வலைக்கு எதிராக அவன் என்ன செய்தாலும், உண்மையில் அவற்றைத் தனக்குத்தானே செய்து கொள்கிறான்.


-அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஃபிராங்க்ளின் பியர்ஸ், செவ்விந்திய சமுதாயத்தினரிடம் நிலங்களை ஒப்படைக்குமாறு 1854ம் ஆண்டு இட்ட உத்தரவுக்கு பதிலாக சியாட்டில் என்ற நகரில் வாழ்ந்த செவ்விந்திய தலைவர்களில் ஒருவர் தெரிவித்த கருத்து.


சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Empty Re: சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?

Post by ஹம்னா Tue 1 Mar 2011 - 17:06

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Glo12


உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று புவி வெப்பமடைதல். புவி வெப்பமடைதல் பிரச்சினை இன்று பூதாகரமாகி வருகிறது.
வெப்பநிலை அதிகரிப்பு,
கடல்மட்ட உயர்வு,
தண்ணீர் பற்றாக்குறை,
நோய்கள் அதிகரிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகள் இதனால் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசுபடுவதே புவி வெப்பமடைவதற்கு முக்கிய காரணம்.

சுற்றுச்சூழல் சீர்கேடும், புவி வெப்பமடைதலும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புள்ள சிக்கல்கள். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், புவி வெப்பமடைவதை குறைக்கவும் நமது வாழ்க்கை முறைகளில் மாற்றம் தேவை.ஒர் அறையைவிட்டு வெளியேறும்போது, அந்த அறையில் உள்ள விளக்குகள், ஃபேன் உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களையும் அணைப்பதில் இருந்து இந்த நடவடிக்கைகளை நாம் தொடங்கலாம்.

மின்சாதனங்கள் கீழ்க்கண்ட வகையில் ஒரு யூனிட் மின்சாரத்தை செலவிடுகின்றன:


சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Ac


ஏ.சி. பெட்டி ஒரு மணி நேரம் இயங்க, ஹீட்டர் ஒரு மணி நேரம் இயங்க, பிரிட்ஜ் 7 மணி நேரம் இயங்க, டிவி பெட்டி 10 மணி நேரம் இயங்க, ஃபேன் 15 மணி நேரம் ஓட, விளக்கு 29 மணி நேரம் எரிந்தால்.



சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Empty Re: சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?

Post by ஹம்னா Tue 1 Mar 2011 - 17:16

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Fridge


ஹீட்டர், வாஷிங் மிஷின், ஏ.சி., பிரிட்ஜ் போன்றவை அதிக மின்சாரத்தை செலவு செய்கின்றன. ஏ.சி., பிரிட்ஜ் போன்ற குளிர்மைப்படுத்தும் கருவிகள், ஹீட்டர்களை குறைந்த அளவீடுகளில் வைத்து பயன்படுத்துங்கள். ஒரு டிகிரி செல்சியஸ் குறைத்தால்கூட பெருமளவு மின்சாரம் சேமிக்கப்படும்.


சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Computer


டிவி, டிவிடி பிளேயர் போன்ற எந்த நவீன மின்சாதனத்தையும் 'ஸ்டாண்ட்பை' நிலையில் வைக்க வேண்டாம். இதனால் மின்சாரம் தேவையின்றி விரயமாகும். பயன்படுத்தாத நேரத்தில் கம்ப்யூட்டர் மானிட்டர்களை அணைத்து வைக்கலாம். தேவைப்படாத மின்சாதனங்களை எப்பொழுதும் அணைத்துவிட வேண்டும்.

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Bulbs


குண்டு பல்புகளில் 90 சதவிகித மின்சக்தி வெப்பமாக மாறி வீணாகிறது. அதேநேரம், சாதாரண குண்டு பல்பு எரிய செலவிடும் மின்சக்தியில் 20 சதவிகிதம் மட்டுமே சி.எப்.எல். விளக்கு எரியத் தேவைப்படுகிறது. எனவே, குண்டு பல்புகளை மாற்றிவிட்டு, சி.எப்.எல். விளக்குகளை பொருத்தினால் மின்செலவு குறையும், மின்கட்டணமும் குறையும். சி.எப்.எல். விளக்கு ஒன்று அதன் வாழ்நாளில் 7,000 மணி நேரம் எரியக்கூடியது.
சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Mafate_Marla_solar_panel_dsc00633


மின்சாரத்தை குறைவாகச் செலவு செய்யும் மின்சாதனங்களை தேர்ந்தெடுத்து வாங்கலாம். மின்சாதனங்களை சிறப்பாக பராமரிப்பதன் மூலம் மின்செலவை குறைக்கலாம்.


சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Empty Re: சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?

Post by ஹம்னா Tue 1 Mar 2011 - 17:27

யாரும் செய்யலாம்:


சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Close-up_Traffic_Signal9563


சிக்னலில் நிற்கும்போது வாகன எஞ்சினை அணைத்து வைக்கலாம்.

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Bus


கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் 80 சதவிகித சாலைகளை அடைத்துக் கொள்கின்றன. ஆனால் அந்த வாகனங்களில் பயணம் செய்வோரது எண்ணிக்கை 22 சதவிகிதம் மட்டுமே. அதேநேரம் 75 சதவிகித சாலைப்பயணிகள் பஸ்களில்தான் செல்கின்றனர். எனவே, போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கவும், அதனால் வெளியிடப்படும் புகையால் உருவாகும் நோய்களில் இருந்து தப்பவும் பஸ்களை பயன்படுத்துவோம்.

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Train


சென்னையில் வாழ்பவர்கள் மின்ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துலாம். நீண்டதூர பயணங்களுக்கும் ரயில்களே சிறந்தவை. விமானங்களில் செல்வதைவிட ரயிலில் செல்வது 10 மடங்கு குறைவான எரிசக்தியையே செலவழிக்கிறது.

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Everybody-rides-325

அருகிலுள்ள காய்கறி கடை, மளிகைக் கடை, பால் வாங்க சைக்கிளிலோ அல்லது நடந்தோ செல்லலாம். சைக்கிள் ஓட்டுவது, நடைப்பயிற்சி உடலை சிறப்பாகப் பராமரிக்கும். நோய்கள் பெருகிவிட்ட நகர வாழ்வில் இந்த இரண்டும் ஆரோக்கியத்துக்கு அவசியம்.


சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Empty Re: சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?

Post by ஹம்னா Tue 1 Mar 2011 - 17:34

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Save+wa


தண்ணீரை சேமிக்க எளிதான வழி தேவைப்படாத நேரத்தில் குழாய்களை அடைப்பது, ஒழுகும் குழாய்களை சீரமைப்பது.




தண்ணீரை நாம் எப்படி வீணாக்குகிறோம் என்பது பற்றி சந்தேகம் இருந்தால், ஒரு நாளில் எத்தனை முறை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை நிரப்புகிறோம் என்றும், பயணங்களின்போது குடிநீல் பாட்டில்கள் எத்தனை வாங்குகிறோம் என்றும் கணக்கிட்டுப் பார்க்கலாம்.

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Wash%2520food
காய்கறி கழுவும்போது, பல்துலக்கும்போது, ஷேவிங் செய்யும்போது குழாயை திறந்துவிட்டுக் கொண்டே வேலை செய்ய வேண்டாம். வாளி அல்லது கப்-பில் எடுத்து பயன்படுத்துங்கள். வாளியில் தண்ணீர் நிரப்பி குளியுங்கள். ஷவரில் குளித்தால் எவ்வளவு நீர் பயன்படுத்துகிறோம் என்றே தெரியாது, தண்ணீர் தேவையின்றி வீணடையும்.


சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Watering1
ஆங்கில கழிப்பறைகளுக்கு பதிலாக, இந்திய கழிப்பறைகளையே பயன்படுத்துங்கள். அதில் மிகக் குறைவாகவே தண்ணீர் செலவாகிறது. வாகனங்களை கழுவ, செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற ஹோஸ் பைப்பை பயன்படுத்தாதீர்கள். வாளியில் பயன்படுத்தும் போது குறைவாகவே தண்ணீர் செலவாகும்.




சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Empty Re: சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 1 Mar 2011 - 17:52

##*


சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Empty Re: சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?

Post by ஹம்னா Tue 1 Mar 2011 - 17:57

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Hove_guest_house_rear2


வீட்டு சுற்றுப்பாதைகள், வெளிப்புறப் பகுதிகள், மரங்களைச் சுற்றி சிமெண்ட் தளம் அமைக்காதீர்கள். மழைநீர் பூமிக்குள் சென்றால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயரும். சமையலறையில் வெளியேறும் தண்ணீரை தாவரங்களுக்கு பாய்ச்சுங்கள்.

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Drinking-bottled-water-001

பயணங்களின்போது போதுமான அளவு தண்ணீரை எடுத்துச் சென்றால், செலவு மிச்சம். பிளாஸ்டிக் பாட்டில்கள் வீணாவதும் குறையும்.


இந்தியாவில் 17 கோடி பேர் குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். வளரும் நாடுகளில் இறந்துபோவோரில் 80 சதவிகிதம் பேர் தண்ணீர் சார்ந்த நோய்களால் பலியாகின்றனர். இப்படி ஒரு நாளைக்கு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 20,000.

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Water
தண்ணீர் அமிழ்தம் என்றார் ஒரு விஞ்ஞானி. எனவே, அளவோடு பயன்படுத்தாவிட்டால் அந்த அமுதும் நஞ்சாகும், அதாவது தீர்ந்து போகும்.




சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Empty Re: சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?

Post by ஹம்னா Tue 1 Mar 2011 - 18:07

வயிற்றுக்கு கொஞ்சம்

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Ingredients_healthy_food
வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு, பச்சை காய்கறிகள், பழங்களை சாப்பிடலாம்.


சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Fr

பருவகாலத்துக்கு ஏற்ப கிடைக்கும் உள்ளூர் காய்கறி, பழங்களையே வாங்குங்கள். இது சத்தானது, உடலுக்கு உகந்தது, செலவு குறைந்தது. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட, பூச்சிக்கொல்லிகள் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட காய்கறி, பழங்களை வாங்குங்கள். வெளிமாநிலம், வெளியூர்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறி, பழங்கள் பயணம் செய்யும்போது அதிக மாசு வாயுக்களை வெளியிடுகின்றன.

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Asian_fruit_Mart


சங்கிலித் தொடர் கடைகள் மற்றும் பழமுதிர் நிலையங்களில் விற்கப்படும் அயல்நாட்டுப் பழங்கள், காய்கறிகள் நெடுந்தொலைவு பயணம் செய்து நம்மை அடைகின்றன. நீண்டகாலம் சேமித்து வைக்க வசதியாக அவற்றின் மீது பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன.

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Say-no-to-plastic-bag


பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர்கள். காகித பயன்பாட்டை குறையுங்கள். கடைகளுக்குச் செல்லும்போது துணி அல்லது சாக்குப் பைகளை எடுத்துச் செல்லுங்கள். ஹோட்டலுக்கு உணவு வாங்கச் செல்லும்போது பாத்திரம் எடுத்துச் செல்லுங்கள்.

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Paper-pile-lg


கம்ப்யூட்டர்களில் பிரிண்ட் அவுட் எடுக்கும்போது, இரண்டு பக்கமும் பயன்படுத்துங்கள். குறிப்புகள் எழுத ஒரு பக்கம் அச்சிடப்பட்ட தாள்களை பயன்படுத்துங்கள். பரிசுப் பொருள்களை சுற்றிவரும் காகிதங்கள், கடித உறைகளை மறுபடி பயன்படுத்துங்கள்.


சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Empty Re: சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?

Post by ஹம்னா Tue 1 Mar 2011 - 18:14

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  -Plastic-Cup


வெளியே செல்லும்போது, சுற்றுலா செல்லும்போது பையில் உங்களுக்கென ஒரு டம்ளரை எடுத்துச் செல்லுங்கள். மக்காத பிளாஸ்டிக் கோப்பைகள், காகித கோப்பைகள் விரயமாவதை இதன் மூலம் தடுக்கலாம்.

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Recycling_separate_litter_taiwan_q


வீட்டில் மறுசுழற்சி செய்யத்தக்க, மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை பிரியுங்கள். பிளாஸ்டிக், பேப்பர், கண்ணாடி, உலோக பொருட்களை மீண்டும் பயன்படுத்தலாம். காய்கறி, உணவு போன்ற மக்கும் கழிவுகளை மண்புழு உரமாக்கி, வீட்டுத் தாவரங்களுக்கு இடலாம்.


மூன்று 'ஆர்'. (Three-R)

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  329x329px-ll-greenhalloweenrecycle+copy


எந்தப் பொருளையும் குறைவாக பயன்படுத்த வேண்டும், மறுபடி பயன்படுத்த வேண்டும், மறுசுழற்சி செய்ய முயற்சிக்க வேண்டும். இவை 'மூன்று ஆர்' என்று அழைக்கப்படுகின்றன. தேவைப்படும் பொருட்களை மட்டும் வாங்கினால், மறுபடி பயன்படுத்தவோ, மறுசுழற்சி செய்யவோ தேவை இருக்காது. பேஸ்ட், சோப்பு உள்ளிட்ட 'பேக்' செய்யப்பட்ட அனைத்து பொருட்களையும் விற்பனைக்குக் கிடைக்கும் அளவில் பெரிதாக வாங்குவதன் மூலம், குப்பைகளை குறைக்கலாம். செலவும் குறையும்.


சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Empty Re: சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?

Post by ஹம்னா Tue 1 Mar 2011 - 18:22

உயிர் இயந்திரங்கள்


சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Can-Reforestation-Save-the-Planet_large
மாசுபாடுகளை மறுசுழற்சி செய்யும் மரங்களை வளர்க்கலாம். ஒரு மரம் தன் வாழ்நாளில் 1000 கிலோ கார்பன் டைஆக்சைடை உறிஞ்சிக் கொள்கிறது. கார்பன் டைஆக்சைடுதான் புவி வெப்பமடையக் காரணம். குறைந்த தண்ணீரே தேவைப்படும் உள்ளூர் மரங்களை வளர்க்கவும். மரங்கள் நிழலையும், தென்றல் காற்றையும் தரும். மரம் வளர்க்க முடியாதவர்கள், தொட்டிகளில் செடி வளர்க்கலாம். இது மனதிலும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.
கருத்துகளை விதைத்தல்



சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  UN_Committee_on_the_Exercise_of_the_Inalienable_Rights_of_the_Palestinian_People_2004_meeting


சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றியும், அதில் தனிமனிதர்களின் பங்கு பற்றியும், விளைவுகளையும் மற்றவர்களிடம் கூறுங்கள். எந்த வகையான மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் இதைத் தடுக்க முடியும் என்பதை விளக்குங்கள். பசுமை வாழ்க்கைமுறையை மேற்கொள்ள வலியுறுத்துங்கள்.

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  20307439530127229501610


ஒரு பழத்திலே இருக்கும் புழுவைப் போல, மனிதன் தன்னுடைய செயல்பாடுகளை நியாயப்படுத்திக் கொண்டே தன்னுடைய ஒரே வாழ்விடத்தை கொறித்து உள்ளே தள்ளிக் கொண்டிருக்கிறான் என்றொரு சூழலியல் அறிஞர் கூறினார். இனிமேலும் நாம் அப்படிப்பட்ட ஒரு புழுவாக இருக்கலாமா? புழுவாக இருக்கிறோமா, வண்ணத்துப்பூச்சியாக மாறி பசுமையை பரப்புகிறோமா என்பது நம் கைகளில்தான் இருக்கிறது.


சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Empty Re: சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?

Post by ஹம்னா Tue 1 Mar 2011 - 18:27

சிகரம் wrote: ##*
:];: :];:


சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?  Empty Re: சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum