சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Today at 20:03

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15

» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06

» பல்சுவை
by rammalar Today at 2:19

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07

» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02

» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55

» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48

» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57

» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45

» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

வேர்...................! Khan11

வேர்...................!

Go down

வேர்...................! Empty வேர்...................!

Post by ஹம்னா Thu 3 Mar 2011 - 17:08

வேர்...................! Story-1


நேற்றின் ஞாபகங்கள் எப்போதுமொரு சுகமான ஒத்தடங்களை கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. அடித்து செல்லும் காலவெள்ளத்தில் மிதக்கும் ஒரு சருகாய் நானும் மிதந்து கொண்டிருக்கிறேன்.

அது ஒரு சராசரியான இரவு பத்து மணி நான் மட்டும் வாசலில் அமர்ந்திருக்கிறேன். தெருமுனையிலிருக்கும் அரசமரம் அதன் கீழிருக்கும் பிள்ளையார்.... இருட்ட்டாய் இருந்ததால் அந்த நாள் அமாவசையாய்தானிருக்கும் என்று நானே நினைத்துக் கொள்கிறேன் ஆனால் அது பெளர்ணமிக்கு முந்தைய நாள்.

தூரத்தில் ஒரு நாய் குலைக்கும் சப்தம் தெளிவாய் கேட்டதில் இரவின் அடர்த்தி என்ன என்று மனதுக்கு பட்டது. கிராமங்கள் பெரும்பாலும் இரவு 9 மணிக்கு எல்லாம் அடங்கி விடுகின்றன......! ஆள் அரவமற்ற தன்மையின் வீரியத்தை பிள்ளையார் கோவில் அரசமரத்தின் சருகுகள் கீழே விழும் காட்சி கூர்மை உணர்த்தியது.

மனிதர்கள் இருந்தால் நாம் எப்போதும் அவர்களைப் பற்றியே சிந்திப்போம். யாருமற்றுப் போனால் சிறிய சிறிய ஈ, எறும்பு, இலை, மரம், என்று நம்மைச் சுற்றி உயிர்ப்போடு ஓராயிரம் விசயங்களை கவனிக்க ஆரம்பிப்போம். வெற்றுடம்புடன் ஒற்றை துண்டோடு அமர்ந்திருந்த என்னுள் ஒரு இறுக்கம் பரவ காரணம் இருந்தது.



ஆமாம்... வீட்டினுள் என் அப்பத்தா... தனது அந்திமத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறாள். எதிர் வீடான அத்தை வீட்டில் அப்பா, அம்மா, தம்பிகள் எல்லாம் உறங்கியே போய் விட்டனர்....அப்பா மட்டும் போய் படுடா தம்பி என்று சொல்லி விட்டு அவரும் உறங்கிப் போனார். நானமர்ந்து இருந்த என் பூர்வீக பிரமாண்ட வீட்டின் நடு ஹாலில் என் அப்பத்தா மட்டும் தனியே...

சற்று முன் அவளின் அருகில் அமர்ந்திருந்தேன்.....அவளின் கண்களின் மிரட்சியில் வாழ்ந்த வாழ்க்கைப் பற்றிய ஏக்கமும், என்ன நிகழ்கிறது அவளுக்கு என்று புரிந்து கொள்ளமுடியாத விரக்தியும் சேர்ந்தே தெரிந்தது...82 வயது வாழ்க்கை அவளை
கிழிந்த கந்தல் துணி ஆக்கி வைத்திருந்தது.


சம்சாரி..... அவள்..... 6 பெண் பிள்ளைகளும் ஒரு ஆணும் பெற்று 15 வருடத்துக்கு முன்பே தாத்தவை பறிகொடுத்து.. எல்லோரையும் கட்டிக் கொடுத்து எல்லோரு ம் பேரன் பேத்திகளும் பிள்ளைகள் பெற்றதை கண்டு பூரித்து வாழ்ந்த சம்சாரி அவள்.

தாத்தா வயலில் உழும் போது ஒரு நாள் காலில் ஏதோ ஒன்று கிழித்து விட...அவரை அமரச் சொல்லிவிட்டு வயலில் இறங் கி மாடு ஓட்டியவள். கணீர் குரலுக்கு சொந்தக்காரி...ஏலேய்......சின்னையாயாயா யாயாயாயாயாயா அவள் குரலெடுத்து கூப்பிட்டால் அந்த கிராமம் மட்டுமல்ல...3 மைல் தூரத்துக்கு எல்லோருக்கும் கேட்கும்.....! அவளின் நடை பற்றி அவளே சொல்லக் கேட்டு இருக்கிறேன்.


வேர்...................! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வேர்...................! Empty Re: வேர்...................!

Post by ஹம்னா Thu 3 Mar 2011 - 17:15

தாத்தாவிற்கு இரண்டு ஊர் விவசாயம். பருத்திக் கண்மாயில் கொஞ்சம் நிலங்களும் அங்கு போனால் வந்தால் தங்குவதற்கு ஒரு வீடும் உண்டு. அங்கே உழவு நடக்கும் நேரத்தில் வீட்டிலிருந்து 4 மைல் இருக்கும் அந்த ஊருக்கு நடந்தே செல்வாளாம் அப்பத்தா....!

காலையில் தாத்தாவிற்கு சோறு எடுத்துக் கொண்டு... மதியத்துக்கு இங்க இருக்குற புள்ளக்குட்டியளுக்கு சோத்த அடுப்பில ஏத்தி வச்சிட்டி பருத்திக் கண்மாயிக்கு போயி உங்க அய்யாவுக்கு சோறு கொடுத்துட்டு உலைய இறக்கி வைக்க திரும்பி வந்திடுவேன்ல....அவளின் வேகம் மெலிதாய் பிடிபடும்.

உங்க அய்யா கம்மா கரையில் குளிச்ச்சிட்டு அவுக தலை முடியை சிக்கெடுத்து கிட்டே வருவாக...காதுல வைர கடுக்கண் சொலிக்கும் பாரு.....சொல்லும் போதே பள பளக்கும் அவளின் கண்கள் காதலை அப்பட்டமாய் வெளிப்படுத்தும்.



திடமான பெண்மணி அவள்...! வீட்டில் ஒரு நாள் திருடன் வந்துவிட...அவனை தனியே விரட்டிப்பிடித்து......மல்லுக்கு நின்று...ஆட்களை கூச்சலிட்டு அழைத்து அவனை நையப்புடைக்க வைத்தவள்.

இன்று சுருங்கிப் போய் கிடக்கிறாள்...மெல்ல மீண்டும் உள்ளே சென்று பார்க்கிறேன்... பிரமாண்ட ஹாலின் ஓரத்தில் 60 வால்ட் மஞ்சள் பல்ப் வெளிச்சத்தில்..அந்த வீட்டின் மகாராணி...கிழிந்த துணியாய்...!

சிரமமில்லாமல் இருப்பதற்காக மொட்டையடித்து வளர்ந்த வெள்ளை வெளிர் தலை முடி..! எவ்வளவு வனப்பானவள் என் அப்பத்தா? பழையப் போட்டோக்களில் பார்த்திருக்கிறேன்....

அழகுச் சிலை அவள். அவளின் அழகிற்கு கூடுதல் அழகாக அந்த ஒற்றை மூக்குத்தி இன்னும் வசீகரம் கொடுக்கும்.....ம்ம்ம்ம்ம் காலம் எல்ல வடுக்களையும் அவள் மேல் ஏற்றி அவளின் உருமாற்றி....எல்லாம் தின்று விட்டு... எச்சத்தை போட்டதை போல அந்திமத்தில் கொண்டு வந்து கிடத்தி விட்டு காத்திருக்கிறது...மொத்தமாய் கொண்டு செல்ல...


அவள் அருகினில் செல்கிறேன்....கண்களை மூடிய பாவனையில் இருந்தவள் அரவம் கேட்டு மெல்ல விழிக்கிறாள்....ஏதோ சொல்ல முற்படும் விழிகள்...சொல்ல முடியாமல் கண்ணீராய் வழிகிறது வார்த்தைகள். கலங்கும் என் கண்களோடு கைக்கொண்டு துடைக்கிறேன்....அவளின் கண்களை....!

நான் கிளைத்து வளர...
விதை கொடுத்த மரம்...
பட்டழிந்து போகும் முன்னே...
பசுமையான என்னைக் கண்டு....
என்னவெல்லாம் நினைத்ததோ...!
என் தகப்பனை எனக்கு....
தருவித்த தெய்வமே...
எங்களின் கண்ணெதிர் மூலமே.....!
என் குலம் சுமந்த கோவிலே....
என்னவென்று சொல்வேனடி..
வேடிக்கை வாழ்க்கைப் பற்றி....?


என்னால் தாங்க முடியாத அந்த அழுகை வெளிப்பட்டு அவளுக்கு பீதியை மேலும் கொடுக்க விரும்ப வில்லை என் மனது.

" அப்பத்தா......லைட்ட அமர்த்தவா....தூங்குறீங்களா நீங்க....? கேட்டேன். " வேம்பாபாபா.. வேம்பாபா....வேம்பா (வேணாம்பா)..... பமக்குபா.. பமக்குபா...பமக்குபா..(பயமாயிருக்குப்பா...)...வாய்குழறி ஏதேதோ சொன்னாள்....

அழுத்தமாய் வாழ்கையை வாழ்ந்தவள் அவள். மரணத்தை எதிர் கொள்ளவே முடியாமால் மருகிப்போயிருக்கிறாள். இன்னும் ஆடு மாடுகள் கட்டியதையும், சம்சாரியாய் நின்று பொறுப்புகளை வகித்ததையுமே மனதில் கொண்டு அடுத்த கட்ட நகர்வை எதிர் கொள்ள முடியாமல் தவிக்கிறாள்.



வேர்...................! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வேர்...................! Empty Re: வேர்...................!

Post by ஹம்னா Thu 3 Mar 2011 - 17:22

அன்று மதியம் வீட்டு வாசலில் எல்லா உறவுகளும், அவளது எல்லா பிள்ளைகளும் அவளது மரணத்திற்காக எங்கெங்கோ இருந்து வந்து காத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் வெவ்வேரு சூழ் நிலைகள் பிரச்சினைகள் இருப்பதால்... அவர்கள் இந்த இறப்பை கூட எதிர்ப்பார்க்கிறார்கள்....கல்யாண சாவு என்று பேசிக் கொள்கிறார்கள். கூட்டத்தை விட்டு சற்று தூரத்தில் இருந்தேன் அவர்களை கவனித்துக் கொண்டு...

"ஏம்பா.. பெளர்ணம வருதுப்பா.. அது வரைக்கு தாங்காதுப்பா...." பெரிய அத்தை....அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். " ஏம்பா தம்பி..சும்மா மச மசன்னு நிக்கிறியே...ஆளுகள விட்டு வெறகு வெட்டிப் போடச் சொல்லுப்பா...ஆளுப் பேரு வந்த பொங்கிப் போடணும்ல" இது...சின்ன அத்தை...." அப்படியாக்கா சரி.. இந்த பழசோலிய வர சொல்லியிருக்கேன் நாளைக்கு வெட்டச் சொல்றேன் விறக..." இது என் அப்பா........!

ஒரு கட்டத்தில் பெற்ற பிள்ளைகளே முடிவு செய்கின்றனர்.....தாயாய் இருந்தாலும் போய்ச்சேரட்டும் என்று...! காரணம் இப்போது அவர்கள் காண்பது வேறு உருவம்... குழந்தைப் பருவத்தில் பார்த்த “ஆத்தா” இல்லை....! ஒரு வேளை காலம் உருவை மாற்றுவது இது போன்ற நிகழ்வுகளை தாண்டிப் போவதற்குதானோ...என்று நினைத்தேன்...

மதிய நினைவுகளில் இருந்து வெளியே வந்தேன்........! அப்பத்தா இப்போது என் கையை பிடித்துக் கொண்டிருந்தாள்...அழுத்தமாக.... நான் அவள் தலையில் கைவைத்து தலையை வருடிக்கொண்டிருந்தேன்...........உஷ்ணம் அதீதமாக இருந்தது.

மனசுக்குள் அவளோடு பேசினேன்...." அப்பத்தா இப்போ உங்களுக்கு வேறு ஒரு அனுபவம் கிடைக்கப் போகுது. தயவு செஞ்சு பழசு எல்லாம் அழிச்சுடுங்க.....இனி வேறு விதம்...அது எப்படின்னு எனக்கு தெரியாது.....உங்களை எது இங்க கொண்டு வந்துச்சோ அது பாத்துக்கும். நீங்க வரும்போதும் யாரும் இல்ல...போகும் போதும் யாரும் இல்ல...ப்ளீஸ் எதுவும் உங்களது இல்லை.....இல்லை ...இல்லை...." சொல்லி முடித்து மணி பார்த்தேன்..அது அதிகாலை 1 மணியை தொடப்போனது.

அவளது கையைப் பிரித்து விட்டு......திணைக்கு வந்து படுத்திருத்த அத்தையிடம் நான் தூங்கபோறேன்ன்னு நீங்க...பாத்துக்கோங்க னு சொல்லிட்டு....வெளியில் கிடந்த மாட்டு வண்டியில் தலை சாய்த்து கண்களை மூடும் முன் ஒரு முறை அப்பாத்தா இப்போ என்ன நினைச்சு கிட்டு இருப்பாங்க? என்று நினைத்தேன்

உறக்கம்...என் அனுமதியின்றி...என்னை இழுத்துச் சென்றது............

............
............
.............
..........
...........


சப்தம் கேட்டு எழுந்தேன்...........கூக்குரல். ஒப்பாரி...எல்லோரும் வீட்டுக்குள் கதறவும்...எதிர்வீடு பக்கது வீடுகள் அரக்க பறக்க ஒடி வரவும்.......அந்த அதிகாலையில் ஒரே....பரபரப்பு.....மெல்ல நடந்து வீடு நோக்கி வந்தேன்.......அப்பா என்னை கட்டியணைத்து.....

" அப்பத்தா நம்மளை விட்டுட்டு போயிருச்சுப்பா" கதறினார்.

மெல்ல அவரை ஆசுவாசப்படுத்தி விட்டு.....பின்புறம் இருக்கும் தோட்டத்துக்கு வந்தேன்.....வானம் மெல்ல வெளுக்கத் தொடங்கியிருந்தது......

யாரோ இரவு முழுதும் உறங்காத ஒரு குழந்தைக்கு.........தூரத்தில் தாலாட்டு பாடிக்கொண்டிருந்தது.....லேசாய் காதில் வந்து விழுந்தது......

" ஆராரோ ஆரிராரோ.....என் கண்ணே நீயுறங்கு......"

அப்பத்தா கண் முன் வந்தாள்... புரிஞ்சுதுப்பா...புரிஞ்சுதுப்பா.....சிரித்துக் கொண்டே.....சொல்வதைப்போல தோன்றியது.....

நான் திடமாய் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்...!


வேர்...................! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வேர்...................! Empty Re: வேர்...................!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum