சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

பழமொழிகளின் விளக்கம் -  Khan11

பழமொழிகளின் விளக்கம் -

Go down

பழமொழிகளின் விளக்கம் -  Empty பழமொழிகளின் விளக்கம் -

Post by rammalar Mon 1 Apr 2019 - 13:20

1. அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமட்டான்


இப்பழமொழியைச் சொல்லிக்கொண்டே தவறு செய்யும் 
தம் குழந்தைகளை அடித்து நொறுக்கும் அம்மாக்களைப் 
பல இடங்களிலும் காணலாம். 


ப்பழமொழியைத் தவறாக உணர்ந்து கொண்டதன் விளைவு. 
இன்று தமிழ் மக்களின் பண்பாட்டில் ஒரு சீரழிவு ஏற்பட்டுள்ளது. 
குழந்தைகளை அறிவுறுத்தி, அவர்களை நெறிபடுத்த 
முயலாமல் தமிழக நாட்டுப்புறங்களிலும் 
இன்று அடிக்கும் அம்மாக்கள்! அலறும் குழந்தைகள்! அவலம்!
--
இங்கு "அடி" என்பது இறைவனுடைய திருவடியைக் 
குறிக்கிறது. இறையடி, திருவடி அருள் உதவுவது போல 
அண்ணன் தம்பி உதவமாட்டார் எனும் பொருண்மை 
இதன் முற்கால பொருண்மை எனலாம். 


அல்லது பெரியவர்களின் வாழ்த்தை வேண்டி அவர்களுடைய 
திருவடிகளில் விழுந்து வணங்குவதை இது குறிக்கிறது எனலாம்.
-
---------------------------------------------


2. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?


ஆற்றைக் கடக்க வேண்டியவன் மண் குதிரையிலா 
கடப்பான்? மனிதனுக்கு அறிவில்லையா? அதுவும் 
பண்டைத் தமிழருக்கு அறிவில்லை எனல் பொருந்துமா? 
அறிவில்லாமலா சொல்லி வைத்திருப்பார்கள் என்று 
எண்ணிப் பார்க்க வேண்டும்.
--
இதில் வரும் குதிர் - மண்மேட்டைக் குறிக்கிறது 
ஆற்றில் மண்/மணல் மேடுகள் இருக்கும். 
ஆற்றைக் கடப்பவன் அதில் நின்று தப்பித்துக் கொள்ளலாம் 
என்று நினைத்தால் ஆற்று வெள்ளம் அவனை அடித்துக் 
கொண்டு போய்விடும். 


குதிரில் கால் வைத்தால் தீடீரென்று கால் உள்ளே போய்விடும். 
எனவே ஆற்றைக் கடக்க நினைப்பவன் மண் குதிர் - ஐ 
நம்பக்கூடாது. எனவே இப்பழமொழியின் மூலவடிவம் 
மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா என்று இருந்திருக்க 
வேண்டும்.
-
--------------------------


3. வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, 
போக்கத்தவனுக்குப் போலீஸ் வேலை.
---------------
நல்ல மனிதர்களை உருவாக்குவது ஆசிரியர் பணி. 
நல்ல மனிதர்களைக் காக்கத் தீயவர்களைச் சிறைபடுத்துதல் 
"போலீஸ்" என்கிற காவலர்களின் கடமை. நிலைமை 
இவ்வாறிருக்க, அவர்களை வக்கற்றவர் போக்கற்றவர் என 
எவ்வாறு கூறல் இயலும்?


"வாக்குக் கற்றவனுக்கு வாத்தியார் வேலை:
போக்குக் கற்றவனுக்கு போலீஸ் வேலை"


வாக்குக் கற்றல் - அறிந்து கொண்ட செய்திகளை 
மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும் திறம் போக்குக் கற்றல் - 
திருடன் தன்னைத் தேடி வந்த காவலர் போய் விட்டார் என 
நினைத்து வெளியில் வரும்போது, அவனைப் பிடிப்பதற்கு 
ஏதுவாக போய் விட்டது போல் போக்கு காட்டி, சிறிது தூரம் 
சென்று மீண்டும் வந்து திருடனைப் பிடிப்பார் என்று 
சொல்லிப் பார்த்தாலே பழமொழியின் பழம்பொருள் 
விளங்குகிறது. நம் முன்னோர்களின் முதிர்ந்த அறிவு 
புலனாகிறது.
-
-----------------------------------------
முனைவர் வை. சோமசுந்தரம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23971
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பழமொழிகளின் விளக்கம் -  Empty Re: பழமொழிகளின் விளக்கம் -

Post by rammalar Mon 1 Apr 2019 - 13:21

4. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
கேட்பதற்கே வேடிக்கையாய் இருக்கிறது. கல்லையும் புல்லையும் மணம் செய்து கொண்டு பெண்கள் என்ன செய்யமுடியும்?
"கல்லான் ஆனாலும் கணவன்
புல்லான் ஆனாலும் புருஷன்"

கல்வி அறிவு அற்ற படிக்காதவராக இருந்தாலும் புல்லாதவராக அன்பற்றவராக இருந்தாலும் கணவன் என்று ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் எனும் வாழ்க்கையறிவை விளக்குகிறது இப்பழமொழி.
5. களவும் கற்று மற.
திருடக்கற்றுக்கொள்; பிறகு மறந்து விடு என்ற பொருளில் இன்று இப்பழமொழி வழங்கப்படுகிறது.
"களவும் அகற்று; மற"
சொல்லிப் பார்த்தால் பண்டை மக்களின் பழம்பெருமை விளங்கும்; தமிழர்கள் திருடச் சொல்லிப் பழமொழி கூறியிருக்க வாய்பில்லை.
6. "சேலை கட்டிய மாதரை நம்பாதே"
இப்பழமொழி மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் சேலை கட்டிய மாதரை நம்பக்கூடாது. சுடிதார், ஜீன்ஸ், பாவாடை, தாவணி போட்டிருக்கும் பெண்களை நம்பலாம் என்பது போல் தோன்றும்; உண்மை அதுவன்று.
சேல் அகட்டிய மாதரை நம்பாதே சேல் போன்ற கண்களை அகட்டி, அகட்டி ஆடவரைத் தேடும் இழிகுணம் உடைய பெண்களை நம்பாதே என்பதுதான் இதன் உண்மைப்பொருள்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23971
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பழமொழிகளின் விளக்கம் -  Empty Re: பழமொழிகளின் விளக்கம் -

Post by rammalar Mon 1 Apr 2019 - 13:22

7. "சிவபூசையில் கரடி நுழைந்தாற் போல்"
சிவபூசை வீட்டிலோ, கோயிலிலோ நடைபெறும். அப்பொழுது எப்படி கரடி நுழைய வாய்ப்பிருக்கும்? சிவபூசை பொருத்தமான இன்னிசை அருள் பாடல்களோடு இன்னியம் முழங்க நடைபெறுவது; அப்போது ஒலிச்சீர்மை அற்ற ஓசை சத்தம் கேட்டால் பூசையில் ஈடுபாடு வருமா? கரடியை எனும் ஒலிக்கும் கருவி அதைத்தான் செய்யும்.
சிவபூசையில் கரடிகை ஒலித்தாற் போல என்ற பழமொழியே சிவபூசையில் கரடிகை நுழைந்தாற்போல என மாறி வழங்குகிறது.
8. "ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்."
இதன் பொருள் முரண்பாடாகத் தோன்றுகிறது. பண்டைத் தமிழர் ஆயிரமாயிரம் மூலிகை, அதன் வேர்கள் பற்றி அறிந்தவர்கள். மூலிகை மருந்துகள் தயாரித்தளித்து நோய்களை நீக்கினர் மருத்துவர்கள் அதற்கு அதிக எண்ணிக்கையில் வேர்களைப் பயன்படுத்தினார்கள்.
"ஆயிரம் வேரைக் கொன்றவன்
அரை வைத்தியவன்"
என்று பழமொழியின் பொருளைப் புதுமைப்படுத்தினால் பழம்பொருள் விளங்கும்.

9. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது
இது கூட தெரியாதவர்காளகத் தமிழர்கள்? இது தெரியாமலா இப்படிச் சொல்லி வைத்திருப்பார்கள்?
ஓட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
சதைப்பகுதி, ஓடு எனப் பிரித்தறியக்கூடிய முற்றிய சுரைக்காய் ஓட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது அவர்கள் சொல்லி வைத்த உண்மை. ஓட்டுச் சுரைக்காய் குடுவைக்கு ஆகும்; கறிக்கு அகாது.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23971
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பழமொழிகளின் விளக்கம் -  Empty Re: பழமொழிகளின் விளக்கம் -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum