சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Today at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை  Khan11

தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை

2 posters

Go down

தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை  Empty தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை

Post by ஹம்னா Thu 7 Apr 2011 - 19:41

தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை  Large_196388

விளை பொருள்களுக்கு கட்டுபடியாகாத விலை, இடுபொருட்கள் விலை உயர்வு, வறட்சி என்ற பன்முனை தாக்குதலால், தென் மாவட்டங்களில் விவசாயம் நசிந்து வருகிறது. விவசாயம் செழிக்க, விளை நிலங்களை பிளாட்களாக மாற்றுவதை தடுக்க வேண்டும். விவசாயம் செய்ய தகுதியற்ற நிலங்களில் மட்டுமே, மனைகள் கட்ட அனுமதிக்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில்கள் துவக்கினால், மக்கள் இடம் பெயர்வதை தவிர்க்க முடியும்.

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில், பெரியாறு பாசனப்பரப்பு ஒருபுறம். ஆற்றுப்பாசனமே இல்லாத மானாவாரி நிலம் ஒருபுறம். விருதுநகர் கந்தக பூமி. “பெய்தே கெடுக்கும் மழை, பெய்யாமல் கெடுக்கும் மழை’ மற்றொரு புறம்.நெல் நடவு செய்து, அறுவடை செய்யும் வரை, ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. விதை கிலோ 30 முதல் 180 ரூபாய், யூரியா 257, பொட்டாஷ் 519, காம்ப்ளக்ஸ் ரகத்திற்கேற்ப 400 ரூபாய் முதல் விற்பனையாகிறது. இவற்றின் விலை கடந்த ஆண்டை விட 20 சதவீதமும், பூச்சி மருந்து விலை 30 சதவீதமும் அதிகரித்துள்ளது.விவசாயத்தில் நடவு முதல் அறுவடை வரை, இயந்திரங்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. டிராக்டர் உழவு ஏக்கருக்கு 1,000 ரூபாய், அறுவடைக்கு ஒரு மணி நேரத்திற்கு 1,200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இவ்வளவையும் கடன் வாங்கி, நிலத்தில் போட்டால், ஏக்கருக்கு 4,000 ரூபாய் கூட மிஞ்சுவது கடினம் தான்.

மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் ஒருவருக்கு 100 ரூபாய் வரை கூலி கிடைக்கிறது. விவசாய வேலையின் போது தான் கண்மாய், குளங்கள் தூர்வாரப்படுகிறது. இதனால்,விவசாயப் பணிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறி விளைநிலங்கள் பாழாகின்றன.இதனால், நெடுஞ்சாலைகளுக்கு அருகிலுள்ள விளைநிலங்கள் பிளாட்களாக மாறி வருகின்றன. இரண்டாம் நிலை நகரங்களுக்கு அருகில் ஒரு சென்ட் 30 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய், புறநகரங்களில் 5 லட்ச ரூபாய் வரை விலை போகிறது.அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழில் புரிவோர் தங்கள் கையிருப்பை நிலத்தில் முதலீடு செய்கின்றனர்.மேலும் சிலர், கிடைக்கும் பெருந்தொகையை விவசாயிகளுக்கு கந்துவட்டிக்கு விடுகின்றனர் அல்லது வங்கியில் முதலீடு செய்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுகின்றனர். பலர் குடும்பத்துடன் கோவை, திருப்பூர், சிவகாசி, கேரளாவிற்கு இடம் பெயர்கின்றனர். இதனால், விவசாய துணைத் தொழிலான கால்நடை வளர்ப்பு குறைந்துள்ளது.

மதுரை மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் தேவராஜன் கூறியதாவது:அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் விவசாயிகளுக்கு 80 முதல் 90 சதவீதம் மானியம் அரசே வழங்குகிறது. இங்கு, வர்த்தகர்களுக்கும் ஏற்றுமதி, இறக்குமதிக்கும் அரசு மானியம் தருகிறது. ஆனால், விவசாயிகளுக்கு விதை, உரத்திற்கு மானியம் கிடையாது.முப்போகம் விளையும் பெரியாறு – வைகை பாசன பகுதியிலும் இதேநிலை தான். விவசாயம் நடக்காத நேரங்களில் 100 நாள் வேலையை செயல்படுத்த வேண்டும். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு தேவராஜன் கூறினார்.

மதுரை விவசாயக் கல்லூரி முதல்வர் வைரவன் கூறியதாவது:விவசாயம் பற்றி எல்லாருக்கும் அக்கறை தேவை. விளை நிலங்களை பிளாட்களாக மாற்றுவதை தடை செய்ய, அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். விவசாயம் செய்ய தகுதியற்ற நிலங்களில் வீடுகள், தொழிற்சாலைகள் அமைக்க அனுமதிக்க வேண்டும். விளை பொருள்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் நிலைவர வேண்டும்.மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்ற வேண்டும். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மிளகாய் அதிகம் விளைகிறது. அங்கு மிளகாய் பவுடர் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கலாம். தேனியில் பழங்கள் அதிகம் உற்பத்தியாவதால், பழக்கூழ் தயாரிப்பு தொழிற்சாலைகள் அமைக்கலாம்.மதுரையில் மல்லிகைப் பூ விளைச்சல் அதிகம். தற்போது கிலோ 1,500 முதல் 2,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இங்கு சென்ட் தொழிற்சாலை அமைக்கலாம்.துல்லிய பண்ணை திட்டத்தின் மூலம், காய்கறிகள் உற்பத்தியை பலமடங்கு பெருக்கலாம். விளை பொருள்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும். கரும்பு ஏக்கருக்கு 100 டன் உற்பத்தி செய்ய முடியும். இதனால் 1.20 லட்ச ரூபாய் வருவாய் கிடைக்கும்.இவ்வாறு வைரவன் கூறினார்.

நன்றி-தினமலர்



தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை  Empty Re: தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை

Post by நேசமுடன் ஹாசிம் Thu 7 Apr 2011 - 20:03

##*


தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை  Empty Re: தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை

Post by ஹம்னா Thu 7 Apr 2011 - 20:28

:];: :];:


தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை  Empty Re: தென் மாவட்டங்களில் விவசாயம் செழிக்க என்ன வழி?விளைநிலங்களை பாதுகாக்க சட்டம் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum