சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

காமன்வெல்த் போட்டி. Khan11

காமன்வெல்த் போட்டி.

Go down

காமன்வெல்த் போட்டி. Empty காமன்வெல்த் போட்டி.

Post by ஹனி Sun 12 Dec 2010 - 12:23

காமன்வெல்த் போட்டி. Commonwealth-games
பிரிட்டனும் பிரிட்டனிடம் அடிமையாக இருந்த நாடுகளும் சேர்ந்த கூட்டமைப்பே காமன்வெல்த் எனப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சி நடந்த நாடுகளில் விடுதலை கோரி போராட்டங்களும் கிளர்ச்சிகளும் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், அந்தந்த நாட்டு மக்களிடம் பிரிட்டிஷ் அரசு மீது நல்லெண்ணத்தையும் நட்புறவையும் ஏற்படுத்துவதற்காக ஒரு நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என்ற எண்ணம் 1891-லேயே பிரிட்டனில் ஏற்பட்டது. அது ஒவ்வொரு கட்டமாக வளர்ந்து, 1930-ஆம் ஆண்டு கனடாவில் பிரிட்டிஷ் எம்பயர் விளையாட்டுப் போட்டிகள் என்ற பெயரில் நடத்தப்பட்டது. 1954-இல் பிரிட்டிஷ் எம்பயர் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என பெயர் மாற்றம் பெற்றது. 1970-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என அழைக்கப்பட்டது. 1978 முதல், தற்போதைய பெயரான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என்ற பெயரில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஒலிலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போலவே காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி களும் நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படு கின்றன. கடந்த முறை (2006) ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்தது. அடுத்தப் போட்டிகள்(2014) ஸ்காட்லாந்தில் நடைபெறுகின்றன. 2010-ஆம் ஆண்டுக்கான 19-வது காமன்வெல்த் போட்டிகளை நடத்திய இந்தியா பெரும் போட்டிக்கிடையேதான் இந்த வாய்ப்பைப் பெற்றது. யார் போட்டியை நடத்துவது என்பதில் கடைசிவரை, கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இழுபறி இருந்து வந்தது. காமன்வெல்த் நாடுகளின் கூடுதல் ஆதரவைப் பெற்று இந்தியா இந்த வாய்ப்பைப் பெற்றது. 1982-ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு டெல்லிலியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான மிகப்பெரிய விளையாட்டுப் போட்டி இதுதான். ஒலிலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும் என்பது இன்றுவரை கனவாகவே இருந்து வருவதால் காமன்வெல்த் போட்டிகளை சிறப்பாக நடத்துவதன் மூலமாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் கனவு நனவாகும் என்ற நம்பிக்கை ஆரம்பத்தில் ஏற்பட்டது. ஆனால், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தொடங்கிய போதே, ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிப்பட்டு, சர்வதேச அளவில் இந்தியா விமர்சனத் திற்குள்ளானது.


காமன்வெல்த் போட்டி களுக்கான ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவராக இந்திய ஒலிலிம்பிக் சங்கத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் கல்மாடி நியமிக்கப்பட்டார். சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை இந்தப் போட்டிகளை நடத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதுமட்டுமின்றி, ஒருங் கிணைப்புக் குழுவுக்கு மத்திய அரசு 1600 கோடி ரூபாய் கடனுதவியும் அளித்தது. இந்த நிதி அனைத்தையும் கையாள வேண்டிய பொறுப்பில் சுரேஷ் கல்மாடி இருந்தார். பணிகளை நிறைவேற்றும் பொறுப்பு டெல்லிலி மாநில அரசுக்கும் டெல்லிலி மாநகராட் சிக்கும் இருந்தது.

பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதாகவும், அதன் தரம் சந்தேகத்திற்குரியதாக இருப் பதாகவும் அதனால் குறித்த தேதியில் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகத்தை காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் மைக் ஃபென்னல் எழுப்பினார். விளையாட்டு அரங்கங்கள் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களின் செயல்பாட்டுத்தன்மை, அமைக்கப்பட்ட அரங்குகளின் தரம், புதிதாக உருவாக்கப்பட்ட விளையாட்டு கிராமத்தில் கட்டப்பட்ட வீடுகளின் தரம் மற்றும் பாதுகாப்பு, வாடகைக்கு வாங்கப்பட்ட விளை யாட்டுப் பொருள்களுக்கான கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களிலும் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சுரேஷ் கல்மாடி, டெல்லிலி முதல்வர் ஷீலா தீட்சித், அரசு அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் படிந்தன. இத்தகைய குற்றச் சாட்டுகளால் போட்டியில் கலந்துகொள்ள பலநாட்டு வீரர்களும் தயங்கினர். பாதுகாப்பு குறைபாடுகளும் இதற்கு காரணமானது. போட்டியில் பங்கேற்கும் அனைத்து நாடுகளுடனும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்புகொண்டு அவை பங்கேற்க சம்மதிக்க வைத்தது. “போட்டிகளை நல்ல முறையில் நடத்தியபிறகு , உரிய விசாரணை நடத்தப்படும்’ என அறிவித்தார் பிரதமர் மன்மோகன்சிங்.

இதனையடுத்து, 2010 அக்டோபர் 3-ஆம் தேதி 19-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை இந்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிலிக்கும் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள்- அணி வகுப்புகளுடன் இங்கிலாந்து இளவரசர் சார்லசும், இந்திய குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீலும் டெல்லியில் தொடங்கி வைத்தனர். 54 நாடுகளைச் சேர்ந்த 71 காமன்வெல்த் அணிகளின் 6081 வீரர்கள் இதில் பங்கேற்றனர். ஷெரா என்கிற புலிலி பொம்மை இப்போட்டிக்கான சின்னமாகத் தேர்வு செய்யப்பட்டது. ஆஸ்கர் விருதுபெற்ற தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான , ஜியோ உத்தோ படோ ஜீட்டோ என்ற பாடல் மைய நோக்குப் பாடலாக இசைக்கப்பட்டது.

நீச்சல், வில்வித்தை, தடகளம், இறகுப்பந்து, குத்துச்சண்டை, சைக்கிள் ஓட்டுதல், ஜிம்னாஸ் டிக்ஸ், ஹாக்கி, லான் பவுல்ஸ், வலைப்பந்து, ரக்பி செவன்ஸ், துப்பாக்கிச்சுடுதல், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம் உள்ளிட்ட 17 விளையாட்டுகள் இதில் இடம்பெற்றன. அறிமுக விளையாட்டாக கபடி இடம்பெற்றது. நீண்ட முயற்சி மேற்கொள்ளப் பட்டும் கிரிக்கெட் இடம் பெறவில்லை.

காமன்வெல்த் போட்டிகள் என்றாலே ஆஸ்திரேலிலியா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள்தான் ஆதிக்கம் செலுத்தும். டெல்லியில் அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் ஆஸ்திரேலியா 74 தங்கம், 55 வெள்ளி, 48 வெண்கலம் என 177 பதக் கங்களுடன் முதலிலிடம் பிடித்தது. இரண்டாவது இடத்தை, இந்திய வீரர்களும் வீராங்கனைகளும் 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என 101 பதக்கங்களுடன் நமது நாட்டுக்கு கிடைக்கச் செய்தனர். மூன்றாமிடத்தை இங்கிலாந்தும், நான்காம் இடத்தை கனடாவும் பெற்றன.

இந்திய அணி காமன்வெல்த் போட்டிகளில் இத்தனைப் பதக்கங்களைக் குவித்திருப்பது இதுவே முதல் முறை. சொந்த மண்ணில் நடந்தப் போட்டிகளில் தங்கள் திறமையைக் காட்டி டென்னிஸ், குத்துச்சண்டை, மல்யுத்தம், இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், துப்பாக்கிச்சுடுதல், வில்வித்தை போன்றவற்றில் அதிகப் பதக்கங்களை அள்ளினர். இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியில் நமது அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வெற்றியைப் பறிகொடுத்து, இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. இந்திய வீரர்-வீராங்கனைகளின் பதக்க வேட்டை விளையாட்டு ரசிகர்களைப் பெருமை கொள்ள வைத்திருக்கிறது.

சர்வதேச அளவில் அடுத்தடுத்து நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஒலிலிம்பிக் போட்டிகளில் இந்திய அணியினர் குறிப்பிடத்தக்க அளவில் பதக்கம் பெற, காமன்வெல்த் போட்டிகள் ஊக்கமளித்துள்ளன. இந்திய அரசின் விளையாட்டுத்துறை அதற்கேற்ற வகையில் வீரர்-வீராங்கனைகளுக்கு பயிற்சி, பரிசுத்தொகை, விளையாட்டுக் கள வசதிகள் ஆகியவற்றை உருவாக்கித் தரவேண்டும். ஆனால், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 7000 கோடி ரூபாய் ஊழல் என்கிற முதல்கட்ட விசாரணைத் தகவலும், முழு ஊழலையும் விசாரிக்கும் பொறுப்பு சி.பி.ஐ. அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதும் இந்தியாவில் விளையாட்டுத் துறை மேம்பாடு அடையுமா என்ற சந்தேகத்தையே அதிகரிக்கச் செய்கிறது.

ஊழலுக்கென உலக அளவில் விளை யாட்டுப் போட்டி நடத்தப்பட்டால் இந்தியர் களுக்குத்தான் அதிகத் தங்கப்பதக்கம் கிடைக்கும். அது கிடைப்பதற்கும், எப்படி ஊழல் செய்யலாம் என்பதை அரசு இயந்திரங்களும் அதிகார வர்க்கமும் யோசித்து வைத்திருக்கும்.













ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Back to top

- Similar topics
» காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்: 14-வது வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்தது
» காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக மேலும் 10 புதிய வழக்கு சி.பி.ஐ. அதிரடி திட்டம்
» காமன்வெல்த் போட்டி ஊழல் புகார்: ஷீலா தீட்சித் பதவி விலக தேவையில்லை; காங்கிரஸ் அறிவிப்பு
» சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
» காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum