Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
அந்த கிராமத்து மனிதர்கள்
+3
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
செய்தாலி
7 posters
Page 1 of 1
அந்த கிராமத்து மனிதர்கள்
நகரத்திலிருந்து சுமந்துவந்த பேரூந்து
இறுதியில் இறக்கி சென்றது
அடையாளம் தெரியாத சிற்றூரில்
ஊரின் பெயரெழுதிய திசைகாட்டி
அதனருகே பிரியும் ஒத்தையடிபாதை
தார்சாலை விலக்கப்ட்ட கிராமம்
பச்சை வயலின் நடுவே
வெட்கப்பட்டு நெளிந்தபடி பாதை
நிழல்களை போர்த்திநிற்கும் மரங்கள்
வளைந்து நெளிந்து நீளும்பாதை
பழைய பாடல்களை கக்கியபடி
பாதையோரத்தில் சிறு தேநீர்விடுதி
வானம்பார்க்கும் முறுக்கு மீசை
முரட்டுவிளியும் கரடுமுகமும்
நாற்காலியில் ஒய்யாரமாய் ஊர்வாசிகள்
அந்த வீட்டுக்கு போகவேண்டும்
அடையாள முகவரி வினவல்
அறிமுகம் தெரியாத மனிதர்கள்
ஏன் எதற்கு எங்கிருந்து
பெயரென்ன யாரைப் பார்க்கணும்
அவர்களிடம் முளைத்த வினாக்கள்
விழிகளால் களவாடபட்டுது முகம்
பதிலுரைத்த இதழின் சொற்களை
பதிவு செய்தார்கள் அகத்தில்
புதிதாய் நுழையும் மனிதர்கள்
கிராமத்தின் தொடர் எல்லையில்
விசாரிக்கப் படுகிறது அடையாளங்கள்
விபரங்களை சேகரித்த அவர்கள்
கைநீட்டி திசை காட்டினார்கள்
கொஞ்சம் தூரத்தில் அந்தவீடு
சாயா தண்ணி குடிக்கிறீங்களா
கபடமற்ற அவர்களின் உபசரிப்பு
அருந்திய தண்ணீரில் குளிர்ந்துஅகம்
அவருக்கு வீட்டை காட்டு
அங்கு விளையாடிய சிறுவனை
அனுப்பினார்கள் வழித் துணையாக
எத்தனை நல்ல மனிதர்கள்
சல்லடை இட்டு அரித்தாலும்
நகரங்களில் காண்பது அரிது
கானல் இரவல் புன்னகை
சாயமும் முகமூடியும் முகத்தில்
நகரங்களில் நாகரீக மனிதர்கள்
முகத்தில் பயக்கும் கோபம்
அகத்தில் கனியும் நண்மைகள்
மாறாத கிராமத்து மண்வாசனை
மனதில் எண்ணங்களின் ஓட்டம்
இயற்கையை ரசித்தபடி நடைபயணம்
ஊரை அடைந்து வந்தபாதை
வீடுவரை வழிகாட்டிய சிறுவன்
கிராமங்களில் இன்னும் இறக்கவில்லை
பச்சையான மண்வாசனை மனிதர்கள்
Last edited by செய்தாலி on Sun 12 Jun 2011 - 16:38; edited 1 time in total
Re: அந்த கிராமத்து மனிதர்கள்
கிராமத்து மண் வாசனை உங்கள் கவிதையிலும் வீசுகிறது வாழ்த்துக்கள் கவிதை அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அந்த கிராமத்து மனிதர்கள்
நண்பன் wrote:கிராமத்து மண் வாசனை உங்கள் கவிதையிலும் வீசுகிறது வாழ்த்துக்கள் கவிதை அருமை
மிக்க நன்றி
Re: அந்த கிராமத்து மனிதர்கள்
சாதிக் wrote:கண்முன்னே காட்சி தந்த அந்தக்கிராமத்து கவிதை அபாரம் வாழ்த்துகள்
மிக்க நன்றி
Re: அந்த கிராமத்து மனிதர்கள்
:!+: :!+: :!+:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அந்த கிராமத்து மனிதர்கள்
அழகிய வரிகளில் கிராமத்து மண் வாசனை வீசுகிறது வாழ்த்துகள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அந்த கிராமத்து மனிதர்கள்
செய்தாலி wrote:
பச்சை வயலின் நடுவே
வெட்கப்பட்டு நெளிந்தபடி பாதை - அருமையான கற்பனை ... வளைந்து நெளிந்த பாதையை பெண்களின் கூந்தலுக்கு ஒப்பிடுவார்கள்... ஆனால் பாதையே வெட்கப்பட்டு நெளிந்ததாய் முதல் முதல் கூறும் கவிஞர் நீங்களாகத்தான் இருப்பீர்கள் செய்தாலி... வாழ்த்துக்கள்.... மிக்க அழகு இந்த கற்பனை....
நிழல்களை போர்த்திநிற்கும் மரங்கள் - வெட்கப்பட்ட பாதையைப் பார்த்து ரசித்து முடியுமுன் அடுத்த அழகு... நிழல்களை போர்த்திப் பாதுகாக்கிறதென நிழலுக்கு நிஜத்தை போர்வையாக்கிய உங்கள் கற்பனைக்கு என்ன வார்த்தை சொல்லிப் பாராட்டுவது? (இதுவே போதும் இக்கவிதைக்கு...இதற்குமேலும் நான் படிக்க வேண்டுமா என்ன? ))
வானம்பார்க்கும் முறுக்கு மீசை மழையை எதிர்பார்த்து வானம் பார்க்கும் பூமி...இங்கு எதை எதிர்பார்த்து முறுக்குமீசை வானம் பார்த்துக்கொடிருக்கிறது செய்தாலி ? என்ன ஒரு வித்யாசமான கற்பனை தங்களுக்கு .....? மிகவும் ரசித்தேன் இதை ...
முரட்டுவிளியும் கரடுமுகமும்
நாற்காலியில் ஒய்யாரமாய் ஊர்வாசிகள்
அந்த வீட்டுக்கு போகவேண்டும்
[[color=red]
[b]கைநீட்டி திசை காட்டினார்கள்
கொஞ்சம் தூரத்தில் அந்தவீடு
சாயா தண்ணி குடிக்கிறீங்களா
கபடமற்ற அவர்களின் உபசரிப்பு
அருந்திய தண்ணீரில் குளிர்ந்துஅகம்
அவருக்கு வீட்டை காட்டு
அங்கு விளையாடிய சிறுவனை
அனுப்பினார்கள் வழித் துணையாக
எத்தனை நல்ல மனிதர்கள்
அறிமுகம் இல்லா மனிதர்கள் முரட்டுத்தனமான குரலில்... கரடுமுரடான முகத்துடன் முகவரி விசாரித்து அடையாளமும் காட்டிவிடுகிறார்கள் நம் தேடுதலின் எல்லையை . முகம் தான் கரடு முரடு... குரலில் காட்டுக்கத்தல்... ஆனால் .. உள்ளமோ அன்பால் நிறைத்திருக்கிறார்கள் .தேடிக்களைத்தவனுக்கு சாயா.. தண்ணீர் உபசரிப்பு... "அவர்கள் கொடுத்த தண்ணீரைக்குடித்து அகம் குளிர்ந்தான்" .வழிகாட்டியதோடு வேலை முடித்துவிடவில்லை ... சென்றடையும் வரை வழித்துணையையும் கூடவே அனுப்பிவைக்கும் அக்கறை .... கிராமங்களில் மனிதமும் மனிதனும் மன்வாசனையுடனே இன்னும்... வாழ்கிறார்கள்....
கானல் இரவல் புன்னகை ---ஆஹா... புன்னகை... இது கானல் புன்னகை... செயதாலி... உங்களைப்போல் ஒரு கவிதை எழுதவேண்டுமென்று எனக்கும் ஆசையாக உள்ளது... என்ன ஒரு கற்பனை... கானல் புன்னகை... புன்னகைபோல் இருக்கும் ஆனால் அருகில் சென்றால் அது புன்னகையில்லை... முகமூடியுடன் நகரத்து மனிதர்கள்.... :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: (எழுந்து நின்று கைதட்ட வேண்டும் இந்த வார்த்தைக்கு... கானல் புன்னகை... அருமை அருமை!)
வீடுவரை வழிகாட்டிய சிறுவன்
கிராமங்களில் இன்னும் இறக்கவில்லை
பச்சையான மண்வாசனை மனிதர்கள்
அழகாகச் சொல்லிவிட்டீர்... நகரத்தில் மனிதர்கள் இருக்கிறார்கள்.... கிராமத்தில் மனிதர்கள் வாழ்கிறார்கள்...
அருமையான கவிதை செயதாலி... ஒருகவிதைக்கு மற்றகவிதை சளைக்கவில்லை... அடுத்த கவிதையை மனம் எதிர்பார்க்கச் செய்கிறீர்கள்... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!
தங்களின் வித்தியாச வரிகளைப் படிக்கும் ஆவலுடன்... வாழ்த்துகிறேன் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அந்த கிராமத்து மனிதர்கள்
*சம்ஸ் wrote:அழகிய வரிகளில் கிராமத்து மண் வாசனை வீசுகிறது வாழ்த்துகள் தோழரே
மிக்க நன்றி உறவே
Re: அந்த கிராமத்து மனிதர்கள்
யாதுமானவள் wrote:செய்தாலி wrote:
பச்சை வயலின் நடுவே
வெட்கப்பட்டு நெளிந்தபடி பாதை - அருமையான கற்பனை ... வளைந்து நெளிந்த பாதையை பெண்களின் கூந்தலுக்கு ஒப்பிடுவார்கள்... ஆனால் பாதையே வெட்கப்பட்டு நெளிந்ததாய் முதல் முதல் கூறும் கவிஞர் நீங்களாகத்தான் இருப்பீர்கள் செய்தாலி... வாழ்த்துக்கள்.... மிக்க அழகு இந்த கற்பனை....
நிழல்களை போர்த்திநிற்கும் மரங்கள் - வெட்கப்பட்ட பாதையைப் பார்த்து ரசித்து முடியுமுன் அடுத்த அழகு... நிழல்களை போர்த்திப் பாதுகாக்கிறதென நிழலுக்கு நிஜத்தை போர்வையாக்கிய உங்கள் கற்பனைக்கு என்ன வார்த்தை சொல்லிப் பாராட்டுவது? (இதுவே போதும் இக்கவிதைக்கு...இதற்குமேலும் நான் படிக்க வேண்டுமா என்ன? ))
வானம்பார்க்கும் முறுக்கு மீசை மழையை எதிர்பார்த்து வானம் பார்க்கும் பூமி...இங்கு எதை எதிர்பார்த்து முறுக்குமீசை வானம் பார்த்துக்கொடிருக்கிறது செய்தாலி ? என்ன ஒரு வித்யாசமான கற்பனை தங்களுக்கு .....? மிகவும் ரசித்தேன் இதை ...
முரட்டுவிளியும் கரடுமுகமும்
நாற்காலியில் ஒய்யாரமாய் ஊர்வாசிகள்
அந்த வீட்டுக்கு போகவேண்டும்
[[color=red]
[b]கைநீட்டி திசை காட்டினார்கள்
கொஞ்சம் தூரத்தில் அந்தவீடு
சாயா தண்ணி குடிக்கிறீங்களா
கபடமற்ற அவர்களின் உபசரிப்பு
அருந்திய தண்ணீரில் குளிர்ந்துஅகம்
அவருக்கு வீட்டை காட்டு
அங்கு விளையாடிய சிறுவனை
அனுப்பினார்கள் வழித் துணையாக
எத்தனை நல்ல மனிதர்கள்
அறிமுகம் இல்லா மனிதர்கள் முரட்டுத்தனமான குரலில்... கரடுமுரடான முகத்துடன் முகவரி விசாரித்து அடையாளமும் காட்டிவிடுகிறார்கள் நம் தேடுதலின் எல்லையை . முகம் தான் கரடு முரடு... குரலில் காட்டுக்கத்தல்... ஆனால் .. உள்ளமோ அன்பால் நிறைத்திருக்கிறார்கள் .தேடிக்களைத்தவனுக்கு சாயா.. தண்ணீர் உபசரிப்பு... "அவர்கள் கொடுத்த தண்ணீரைக்குடித்து அகம் குளிர்ந்தான்" .வழிகாட்டியதோடு வேலை முடித்துவிடவில்லை ... சென்றடையும் வரை வழித்துணையையும் கூடவே அனுப்பிவைக்கும் அக்கறை .... கிராமங்களில் மனிதமும் மனிதனும் மன்வாசனையுடனே இன்னும்... வாழ்கிறார்கள்....
கானல் இரவல் புன்னகை ---ஆஹா... புன்னகை... இது கானல் புன்னகை... செயதாலி... உங்களைப்போல் ஒரு கவிதை எழுதவேண்டுமென்று எனக்கும் ஆசையாக உள்ளது... என்ன ஒரு கற்பனை... கானல் புன்னகை... புன்னகைபோல் இருக்கும் ஆனால் அருகில் சென்றால் அது புன்னகையில்லை... முகமூடியுடன் நகரத்து மனிதர்கள்.... :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: (எழுந்து நின்று கைதட்ட வேண்டும் இந்த வார்த்தைக்கு... கானல் புன்னகை... அருமை அருமை!)
வீடுவரை வழிகாட்டிய சிறுவன்
கிராமங்களில் இன்னும் இறக்கவில்லை
பச்சையான மண்வாசனை மனிதர்கள்
அழகாகச் சொல்லிவிட்டீர்... நகரத்தில் மனிதர்கள் இருக்கிறார்கள்.... கிராமத்தில் மனிதர்கள் வாழ்கிறார்கள்...
அருமையான கவிதை செயதாலி... ஒருகவிதைக்கு மற்றகவிதை சளைக்கவில்லை... அடுத்த கவிதையை மனம் எதிர்பார்க்கச் செய்கிறீர்கள்... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!
தங்களின் வித்தியாச வரிகளைப் படிக்கும் ஆவலுடன்... வாழ்த்துகிறேன் !
நான் எழுதிய வரிகளுக்கு நிஜத்தில் உயிர் இருக்கிறது என்று உங்களின் பின்னூட்டம் உணர்த்துகிறது
உங்களின் ரசனையை எப்படி பாராட்டவேண்டும் என்று எனக்கு எதிரியவில்லை
இந்த மாதிரி பின்னூட்டம் வாசிக்கையில் புத்துணர்ச்சி பெறுகிறேன்
காரணம் இருக்கு என் எண்ணத்தில் உதித்த ஒரு சிந்தனையை என் சார்ந்த பாஷையில் எழுதுகிறேன்
அது உங்களைப்ன்ற சிலரிடம் ரசனையுடன் ஆழமாக பதிகையில் உண்மையில் அகம் மகிழ்கிறேன் தோழி
நல்லா இருக்கு ,அருமை,என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை
வாசித்த வரிகளின் நிறையும் ,குறையும் எடுத்துரைக்கப் படவேண்டும்
அப்போதே அந்த வரிகள் முழுமையாக உயிர்பெறுகிறது
அந்தவகையில் உங்களின் பின்னுட்டம் என்னை என் சிந்தனையை உயர்த்துகிறது
மழையை எதிர்பார்த்து வானம் பார்க்கும் பூமி...இங்கு எதை எதிர்பார்த்து முறுக்குமீசை வானம் பார்த்துக்கொடிருக்கிறது செய்தாலி ?
கௌரவம் ,வீரம் ,கம்பீரம் இதன் அடையாளமாக அந்த காலத்தில் கிராமத்து மனிதர்கள் முறுக்கு மீசையை வைத்து இருந்தார்கள்
உங்கள் ரசனைக்கு சல்யூட் தோழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum